Monday 15 August 2016

நிம்மதியான தூக்கம்

ஆய்வின்படி விடிகாலை (பஜர் தொழுகை) நேரம் உடலுக்கு ஆரோக்யமானது
இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை
தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது
தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .
சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .

தூக்கமற்ற நிலை தொடர் கதையானது


தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது

தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது

Monday 1 August 2016

கேள்விக்கு என்ன பதில்!

மூன்று வயது குழந்தை கேட்ட கேள்வி மகிழ்வாய் இருந்தது ஆனால் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் இருந்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது.
கேள்வி கேட்க குழந்தைகளுக்கு சரியான அதன் அறிவுக்கு ஏற்றதுபோல் பதில் சொல்வது குழந்தைகளின் அறிவை வளர்க்கும்.
  குழ்ந்தை அதிகமாக கேள்வி கேட்பது அதன் தாய் அல்லது அதன் தந்தையிடமாகவே இருக்கும்.அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்க நாம் முயல்கின்றோம். ஆனால் அது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லையென்றால் பேச்சினை மாற்ற முயல்கின்றோம் . பாச்சி, பாச்சி (பால்) என்று பசியுடன் பால் கேட்கும் குழந்தையை தாய்ப் பால் இல்லாத தாய் தன் பால் கொடுக்கும் காம்பினை பூச்சி பூச்சி என்று சொல்லி குழந்தைக்கு பயத்தினை உண்டாக்குவதனைப்  படித்திருக்கிறோம். சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மறைமுகமாவது அதன் அறிவுக்கு ஏற்றது போல் சொல்லக் கூடிய அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.