Tuesday 31 March 2015

வால் வீச்சும் வழி வீச்சும்

 
என் வழியில் நான் போக
உன் வழியில் நீ போனாய்

போகும் வழியை விடுத்து
பார்வையை விழியோடு மோதச் செய்வதேன்
வால் வீச்சில் விழாத நான்
விழி வீச்சில் விழுந்து போனேன்

விழுந்த நான் விழுந்தபடியே கிடக்க
வேறு வழி நோக்கி மறைந்துப் போனாய்

மயங்கியத்தின் காரணம் கேட்கவில்லை மற்றவர்கள்
மயக்கத்தைப் போக்க நற்செயல்கள் செய்தனர்

மயக்கத்தின் காரணம் கேட்டால்
சொல்வது பொய்யாகவே போகும்

வாள் வீச்சில் வீழ்ந்தால் மரணம்
விழி வீச்சில் வீழ்ந்தால் மயக்கம்

மனதை கவரும் மயக்கம் காதல்
மனதை சுண்டும் மயக்கம் மாந்தரின் விழி வீச்சு

விழி பேசும் கண்ணாடி
விழி மயங்கவும் வைக்கும்

வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் !

 வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும்
இறைவனது பொருத்தத்திற்கு ஏற்புடையதா?

இதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் .ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையவராவார்  மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .

  பொதுவாக எல்லா மார்க்கமும் இந்த கொள்கையோடு ஒத்து போகின்றது . இஸ்லாத்தின் கொள்கையில் முக்கியமான அடிப்படை சிந்தாந்தம் முக்கியமானதாக உள்ளது . இஸ்லாம்  ஏகத்துவம் என்ற முக்கிய கொள்கையை அடிப்படையாக தன்னகத்தே கொண்டிருக்கின்றது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்வதோடு ஏகத்துவம் ஏன்ற கொள்கையையும் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இதயம் நன்மையான செயல்களுக்கு தூண்டப்படலாம் அது அவன் புகழை நாடி இருந்து இறைவன் அருளைப் பெறுவதற்கு இல்லாமல் இருப்பின் அது இறைவனால் அங்கீகரிக்கப் படாமல் போய்விடும் . அதே நேரத்தில் ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டு நெறி தவறிய வாழ்கை வாழ்ந்தாலும் ஒரு பயனுமில்லை. ஒருவனே இறைவன் அவன் உருவமற்றவன் அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை அவனும் யாரையும் பெறவுமில்லை மற்றும் எங்கும் நிறைந்தவன் அவனே அனைத்துக்கும் அதிபதி என்ற நம்பிக்கைத்தான் ஏகத்துவமாகும் .

Monday 9 March 2015

ஏன் பிரிந்தார்கள்


அவங்க பிரிஞ்சிட்டாங்களா!
ஆமாம் அதுலே என்ன அதிசயம்

திரும்பி சேருவாங்களா !
சேருவாங்க ,ஆனால் சேர்ந்த பிறகு இன்னும் சிலபேரை சேர்த்துக் கொண்டு திரும்பி பிரிஞ்சிடுவாங்க.

ஏன்பா ! இவங்களுக்கு சேருவதும் பிரிவதும்தான் வேலையா அல்லது தொழிலா

இருவர் சேர்வதே இன்னொன்றை உருவாக்கத்தானே
அதுவும் சரிதான்

யாரை திருப்தி செய்வது !

கட்டிய கணவனுக்கும்
பெற்ற பிள்ளைகளுக்கும்
நிறைவு தராமல்
மற்றவர் பாராட்ட
அழகாக உடுத்துவதும்
அதற்கென உயர்வான
ஆடைகளை வாங்குவதும்
கட்டிய கணவனுக்கும்
பெற்ற பிள்ளைகளுக்கும்
நிறைவு தராமல்
சமைப்பதும்
சத்தான ருசியான
உணவைக் கொடுக்காமல்
மற்றவர் பாராட்ட
மற்றவருக்கு சிறப்பான
சத்தான ருசியான
உணவைக் கொடுத்து
பாராட்டுப் புகழை நாடுவதும்
வாழ்விப்பவரை வஞ்சகம் செய்வதாகும்