Tuesday 30 April 2013

ஏமாற்றம்!மாதவி, என் தூரத்து உறவுக்காரப் பெண்.  என் முறைப் பெண்ணுங்கூட.  கல்லூரியில் பயின்று வந்த எனக்கு என் திருமணத்தில் எனது பெற்றோர் காட்டிவந்த அளவு அவசரம் தெரியவில்லை.  ஆனால் பெற்றோர் மன நிறைவோடு நடைபெறும் திருமணம் வாழ்வில் நல்லது பயக்கும் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்ட நான் ஒப்புதல் அளித்துவிட்டேன்.  மாதவி அழகி தான்.  கல்லூரியில் புதுமுக வகுப்புவரை படித்து நிறுத்திவிட்டவள்.  நான் பி.ஏ.வை இந்த ஆண்டோடு முடிக்க வேண்டும்.  மாதவியின் வீட்டில் எல்லோருக்கும் அவளை எனக்கு முடித்துவிட இஷ்டந்தான்.  ஆனால் அவள் என்னை நேசிக்கிறாளா? என்னை மணம் செய்து கொள்ள அவளது மனம் விரும்புகிறதா? இன்பமான வாழ்வு தேவை என்றால் இருவரும் விரும்பியேற்கும் மணத்தால் தான் இயலும் என்ற உண்மை, என்னை அவளது மனத்தை அறிந்து கொள்ள தூண்டியது.  தனித்து சந்திக்க சந்தர்ப்பம் கிட்டாதா என்று ஏங்கிக் கிடந்தேன்.
என் கையிலே ‘லாஸ்கி’ எழுதிய அரசியல் பாடப்புத்தகம் விரித்தபடியே இருந்தது.  கண்கள் புத்தகத்தை நோக்கியவாறே இருந்தன.  எண்ணம்  புத்தகத்தைவிட்டு மாதவியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
மாதவி மட்டும் என்னை மணக்க பூரண சம்மதம் தந்துவிட்டால் நான் தான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்.  அதோ மாதவி! ஏதோ பஸ்ஸை எதிர் பார்த்து நிற்கிறாள் போலும் நான் எதிரேயிருந்த ‘பஸ் ஸ்டாண்;டை’ நோக்கி குறுக்கே ஓடினேன்.
“கிரீச்…”
“அம்மா….”

சபலம்

மாலை நேரம்…

தங்களை அலங்கரித்துக் கொண்டு அருகே கணவன் வர மழலைச் செல்வங்களுடன் பெருமிதத்தோடு நடந்து சென்ற பெண்களைத் தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்த மாதவி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.  அவளை அறியாது அவளது கண்கள் பொல பொலவென கண்ணீரைச் சிந்தின.

“ஏம்மா! அழறே”
“ஒண்ணுமில்லேடா கண்ணு!

தான் அழுவதைக் குழந்தை பார்த்துவிட்டதைக் கண்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“அழாதேம்மா… எனக்கும் அழ வருது…” குழந்தையின் கண்கள் கலங்கின.
“இல்லேடா கண்ணு. நான் அழமாட்டேன்”.

குழந்தை தனது அரும்பு விரலை தாயின் கண்ணீரைத் துடைக்க நீட்டியது.

மாதவி குழந்தையை அள்ளி அணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

இன்று அவள் முழு உரிமையுடன் தன் குழந்தைக்கு முத்தமிடுகிறாள்.  ஆனால் அவள் கணவன் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி போட்டி தான்.

“நான் தான் என் கண்ணுக்கு முதலில் முத்தம் கொடுப்பேன்” அது அவள் கணவன்.

“முடியாது நான் தான்…” இது அவள்.

“ம்மாவுக்குத்தான்” என்று குழந்தை முடிவில்லாத போட்டியைத் தீர்த்து வைப்பான்.  அவள் கணவனுக்கு உடனே பொய்க் கோபம் வரும்.  குழந்தையைச் செல்லமாகக் கடிந்து கொள்வான்.  “சும்மா இருங்க! குழந்தை கிட்டே போய் உங்க கோபத்தையெல்லாம் காட்டாதீங்க.”

தாய் தனக்காகப் பரிவதைக் கண்ட குழந்தை அவளோடு ஒட்ழக்கொள்வான்.

“நாளையிலிருந்து உனக்கு பிஸ்கெட் வாங்கி தரமாட்டேன் போ” குழந்தை தனக்குச் சாதகமாக இல்லாததைக் கண்ட அவன் செல்லமாக மிரட்டுவான்.

“ம்மா வாங்கித் தருமே” இது குழந்தை.

“நான் உனக்கு பிஸ்கெட், பொம்மை எல்லாம் வாங்கித் தரேண்டா கண்ணு அப்பா பேச்சு “கா விட்டுடுடா” மாதவி கணவனை அழகு காட்டிக்கொண்டே குழந்தையிடம் கூறுவாள்.

“நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணி அவனைக் கெடுத்துடு” அவன் கோபத்தோடு ஆனால் செல்லமாக மாதவியின் கன்னத்தைத் தட்டுவான்.

அந்த நாட்கள்-இனிய நாட்கள் இனி இல்லாத நாட்களாகி விட்டன மாதவிக்கு.

கணவனோடு எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கனவு கண்டாள் அவள்? இளமைக் காலத்துக் கனவுகள் அவளது இதயத் திரையில் அடிக்கடி தோன்றி மறையத் தான் செய்தன.  பாழும் சாவு இளமையிலேயே அவளது கணவனைக் கொத்திச் சென்றுவிடும் என்று அவளுக்குத் தான் தெரியுமா?

ஒரு தவறு ஒட்டு மொத்த தவறு ஆகிவிடாது.


  தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல்  வேண்டும் .
அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன் குழந்தை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தன பிள்ளை சிறந்து விளங்க ஆசைப்படுவாள் .இதற்கு அடிப்படை தாய் கல்வி கற்றவளாய் இருப்பது இன்றியமையாதாகும் . அம்மாவிடம் அறிவின் முதிர்ச்சி இல்லையெனில் அவள் வளர்க்கும் குழந்தையின் அறிவின் வளர்ச்சிலும் முழுமை  இல்லாமல் போகும் .அறிவின் ஆற்றல் இல்லாத தாய், கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தால்  நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும் . தந்தை பொருள் ஈட்ட வீடு விட்டு நீங்கி நிற்கும் நிலையில்  தாய்தான் தன பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கும் நிலை .அறிவு பெற்ற குழந்தையாக மாற்றும் பொறுப்பு அவளிடமே உள்ள நிலையில் அந்த தாய்மை கொண்ட அம்மாவுக்கு அறிவும் கல்வியும் அவசியம் .பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று. சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய் பாசம் காட்டுவதோடு நில்லாமல் தனது பிள்ளைகள் சிறந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அந்த தாய் பெற்றிருக்கும் கல்விதான் அஸ்திவாரம்,அடித்தளம் .

Sunday 28 April 2013

ஒவ்வொருவரும் பொறுப்பாளியே.

  தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை  இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.

 தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன் மிக்கவராகவும்,இறை நம்பிக்கை உள்ளவராகவும்,செயல்பாட்டுத் திறமை மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
 “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது  நபி மொழி.

 சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)

 தேர்ந்தெடுத்த பின் நற்காரியங்களை நிறைவேற்றுவதில் நாம்  அவருக்கு துணை நின்று  உற்சாகம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்."

Saturday 27 April 2013

தனித்து விடப்படதாக நினைக்கும் காலம் மாறிவிட்டது.


இரு நண்பர்களுக்குள் நடந்த அன்பு விசாரிப்புகள் .

‘எப்படி இருக்கிறாய் ! நண்பர்கள் வருகிறார்களா?பொழுது எப்படி போகிறது?

நண்பன் சொல்வார் ‘ஒரு நண்பருமில்லை எல்லாம் பயணம் சென்று விட்டார்கள் , பொழுதே போவது மிகவும் சிரமமாக இருக்கிறது ‘.

‘அதுசரி நீ எப்படி இருக்கிறாய் ‘

நான் நல்லா இருக்கிறேன் .பொழுதும் மகிழ்வாக போகின்றது .நிறைய நண்பர்கள் சேர்ந்துக் கொண்டே இருக்கின்றார்கள் .ஆனால் சில நண்பர்கள் தொல்லை அதிகம். தேவை இல்லாமல் எனது இடத்திற்கு வந்து தொல்லை தருவதோடு வம்பும் செய்கின்றார்கள், அது மட்டுமில்லாமல் நான் ஏதாவது சொன்னால் அவர்கள் எனது மனது வேதனைப் படும்படி சொல்லி விடுகின்றனர்.அதுதான் மிகவும் சிரமமாக இருக்கின்றது . நமக்கு ஒத்து வராத நண்பர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு படாத பாடு படுகிறேன்’

பெண்களின் திருமண வாழ்வின் முக்கியத்துவம்

விதவையான மங்கைக்கு மறுமணம்

மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.

விதவைகளுக்கு மறுவாழ்வு
புரட்சி“மறுமணம்”
கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா. மிகக் கொடிய தென்று பட்டதண்ணே. குளிர்கின்ற வட்டநிலா”
புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது.

‘தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.
வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ!’
இது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும்.

இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்

எத்தனை வகை குழைவுகள்!

 பறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம்   அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . தேவைக்கு மேல் சேர்த்து வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க  முயல்கின்றான் அதற்காக  பலவிதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. காரியம் நடக்க  எத்தனை  வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் காண்கின்றோம்


 நாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை  காக்கை பல நாடுகளில்  உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.  .காம்பியாவில் கருப்பு   காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.
கருத்த நிறம் ஆனால் வெள்ளை மனது .அமெரிக்கர்கள் வெள்ளை நிறம் ஆனால் குறுகிய மனது. அடுத்தவர் நாட்டையே அடிமையாக்க நினைக்கும் பேராசை


Friday 26 April 2013

ஆளுமை என்னும் உந்தும் சக்தி அதிகாரத்தை தன்வயமாக்கும்

 ஆளுமை சக்தி பெற்றோர் ஆட்சிக்கு வந்த பின் பெற்ற ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தேவையானது அனைத்தும் செய்வார்கள். அவர்கள் மனதில் தொடர்ந்து ஆட்சி செய்ய ஆட்சியின் ஆசை இருந்துக் கொண்டே இருக்கும். அதன் காரணமாகவே ஊழல் உருவாகிறது. அனைத்து அதிகாரமும் ஊழல் செய்வதாக இருந்தாலும் சர்வாதிகாரம் பெற்ற ஆட்சி முழுமையாக ஊழலில் ஊறிவிடும்.அதன் இறுதி முடிவு படு மோசமாக நிகழ்ந்துவிடும். இந்நிலை ஹிடலரிடமிருந்து தொடங்கியது தற்பொழுது பர்மாவைப் போன்று பல நாடுகளில் காணத் தொடக்கியுள்ளது


சரித்திரத்தில் ஹிட்லர் ஒரு அத்தாட்சி. அந்த மகாபலம் பொருந்திய ஆளுமை சக்தியை  வைத்து  இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது ஹிட்லரின் எண்ணம்.அவரிடம்  இருந்த ஆளுமை சக்தியினால் உலகப் போர் உருவாகி  மடிந்தவர் பலர் .

 ஆட்சி போய்விடும் என்ற பயத்தில் ஆட்சி அதிகாரத்தினை தவறான செயல்களில் பயன்படுத்துவதனை நாம் பார்த்து பயந்து அடங்கி கிடக்கின்றோமே! ஏன்? நம்மில் ஒட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனம் . ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.  சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும்  சக்தி.அறிவின் அடித்தளம்.  இத்தனையும்  சேர  முயற்சி என்ற உந்தும் சக்தி  தேவை.

ஆல மரத்தின் விதை சிறுது ஆனால் அது உண்டாக்கும் மரம் பெரிது. உடலின் உருவத்திற்கும் அவன் பெற்றிருக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை .மெலிந்த மேனியும், அழகற்ற  தோற்றம் கொண்ட எத்தனையோ பேர் சிறப்பான  ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும்  நாம் பார்க்கின்றோம் .ஆள் பாதி ஆடை  பாதி என்று எண்ணி  தன்னிடம் உள்ள ஆளுமையினை குறைத்து விடக்கூடாது.
நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது  என்று நம்பி அதனை வெளிக்கொணர  செயல்படுங்கள் .உங்களைவிட தாழ்ந்தவர் உங்களை ஆட்சி செய்வதனை பாருங்கள். அந்த ஆற்றலுடம் ஆளுமை சக்தி பெற்று ஆட்சிக்கு  வந்த பின் நம்மை அவர்கள் ஆட்டி படைக்கும் வேதனையும் நாம் அனுபவிக்கவில்லையா ! அந்த ஆட்சி தொடர அவர்கள் ஈடுபடும் தவறான முறைகளில் மாட்டி அவதிப்படுவோர் பலர் .

நம்மில் இருக்கும் ஆளுமை சக்தி வெளிப்படுமானால் அது நல்ல முறையில் நல்ல நோக்குடன் செயல்பட்டால் இந்த இழிநிலை தொடராது .தொடர் முயற்சி திருவினையாக்கும்  என்று நம்புங்கள். ஆளுமை சக்தியால் கிடைத்த  அனுபவங்களும், ஆற்றல்களும் ஒருங்கிணைப்பும், உந்தும் சக்தியும் வீணாகிப் போய்விடக் கூடாது. நமது  ஆளுமை சக்தியை  வெளிக்கொணர்ந்து நல்ல நோக்குடன் அதனை பயன்படுத்தி அனைவரும் சிறப்பாக வாழ முயல்வோம்

Thursday 25 April 2013

இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதோ!

மேகம் வர மழை வருமாம்
மின்னல் வெட்ட இடி வருமாம்
மேகம் மோத இடியோசை வருமாம்
இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதோ


மழையைக் கண்டு  வருடம் தாண்டி விட்டது
தூசி மழை ஊரெல்லாம் பெய்கிறது.
குளங்கள் வற்றிக் கிடக்கின்றன .
வயல்கள் வீடாகி விட்டன
வீட்டை சுத்தம் செய்ய ஆள் இல்லை
கட்டிய வீட்டிலும் வாழாமல் வெளிநாடு வாழ்க்கை
ஊருக்குள் ஒற்றுமை குறைகிறது

பழைய இனிய மகிழ்வான பசுமை வாழ்க்கை பறந்து விட்டது
பயிர்களும் காணோம் ,வெற்றிலையைக் காணோம்
நன்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் இறைநம்பிக்கை கூடுகிறது
நீர் கிடைக்காத நிலையோ அல்லது வெயிலின் கதிர் வீச்சால் காய்ந்த மனமோ
சிலர் தவறான தண்ணீரை குடிக்கும் வேதனை

Wednesday 24 April 2013

தமிழன் அடுத்த தமிழன் எப்போது விழுவான் என ஆவலோடு எதிர் பார்ப்பான்.
 வங்கக் கடல் பகுதியில் உள்ள தமிழர் சென்றது இலங்கை ,மலேசியா, பர்மா பக்கம் . குஜராத்திகள் ஆப்ரிக்காவின் அனைத்து நாடுகளிலும் நிரம்பி இருக்கிறார்கள். இலண்டனிலும் புகுந்து நிறைய சேர்க்கிறார்கள் .அங்கிருந்து அனுப்பப் படும் தொகை குஜராத்தினை வளர்க்க உதவுகின்றது. நான் ஆப்பிரிக்க நாட்டில் பார்த்தது. முஸ்லிம்கள் வாழும் அட்லாண்டிக் கடலோரம் உள்ள சிறிய நாடு காம்பியா. அங்கும் குஜராத்திகள் தொழில் செய்கின்றனர் .அவர்களது தலைமையகம் இலண்டனில் இருக்கும் . ஒரு குஜராத்தி (அவன் இஸ்லாமியனாகவோ அல்லது வேறு இனத்தவனாகவோ இருக்கக் கூடாது ) விழுவதை அடுத்த குஜராத்தி பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். இந்த குணம் சிந்தியர்களுக்கும் உண்டு. ஆனால் சிந்தியர்கள் மற்ற இனத்தை வெறுக்க மாட்டார்கள் .ஆனால் ,தமிழன் அடுத்த தமிழன் எப்போது விழுவான் என ஆவலோடு எதிர் பார்ப்பான்.

அதனை படித்த பாவத்திற்கு என்னையறியாமலேயே நானும் உள்ளாக்கப் பட்டு விட்டேன்.

உயரிய சொல் உயர்த்திவிடும்
தகாத சொல் தாழ்த்திவிடும்
கிண்டலாக சொன்னால் கீழ்மைப் படுவாய்
கேட்பதும் சொல்வதும் உயர்வாக இருக்கட்டும்

அன்பாகச் சொல்
பணிவாகச் சொல்
பரிவாகச் சொல்
பாசத்தோடுச் சொல்

உண்மையைச் சொல்
உயர்த்திச் சொல்
உயர்ந்ததை சொல்
உயர்வடையச் சொல்

சொல்வது பட்டுபோல் இருக்க வேண்டும்
சொல்வது நெஞ்சத்தை வருடி விட வேண்டும்
சொல்வது அழும் குழந்தையை அரவணைப்பது போலிருக்க வேண்டும்
சொல்வது குறையை சுட்டிக் காட்டி சுருளச் செய்யாமல் சிந்திக்க வைக்க வேண்டும்

பெண்களைப் பற்றியோ அல்லது ஒரு மார்க்கத்தைப் பற்றியோ சிலர் எழுதும் வரிகள் மனதை பாதிக்கிறது .படிக்க மனம் வருந்துகின்றது . அது மனித சமுதாயத்திற்கு களங்கம் தருகிறது .ஒற்றுமையை உடைக்கிறது . தவறான கருத்துரையும் தராதீர்கள் தவறான வரிகளை தயவு செய்து போடாதீர்கள் ..இம்மாதிரி வரிகளை உடன் நீக்குவது நன்மை . உங்களால்தான் இதனை நான் படிக்க நேர்ந்தது .அதனை படித்த பாவத்திற்கு என்னையறியாமலேயே நானும் உள்ளாக்கப் பட்டு விட்டேன். தவறு செய்பவர்களை திருத்துங்கள்.கடினமாக திருத்த முற்பட்டால் அறிவு பூர்வமாக செயல்படுங்கள் .முள்ளை முள்ளால்தான் களையெடுக்க வேண்டும். அது முள்ளில் மாட்டிய துணியை எடுப்பதுபோல் இருக்க வேண்டும்

Tuesday 23 April 2013

இறைவன் அறிவான் இதயத்தின் ஓசையை!

அவனது ஆக்கங்கள் அளவிலடங்கா
அவனது ஆக்கங்களை அவன் அறிவான்
அவனது ஆக்கங்களில் நானும் ஒருவன்
அவனது ஆக்கங்களை அவன் மறப்பதில்லை
அவனை அடிக்கடி நான் மறந்து விடுகிறேன்

நினைத்தது முடிந்தால் நம் திறமையின் விளைவு
நினைத்தது முடியவில்லையெனில் நம் விதியின் விளைவு
மகிழ்ச்சி வர வல்ல இறையோன் நினைவில்லை 
மகிழ்ச்சி மறைந்து துன்பம் துவட்ட இறைவனின் நினைவு

Sunday 21 April 2013

'தலையணை மந்திரம்' அனுபவத்தால் அறியும் அறிய கலை

'தலையணை மந்திரம்' தெரியாமல் தலைவனை தன் வசமாக்கமுடியவில்லை
'தலையணை மந்திரம்' தாய் சொல்லிக் கொடுத்தும் அறிந்தபாடில்லை
'தலையணை மந்திரம்' தாரக மந்திரமாய் குடும்பங்களைப் பிர்த்ததுமுண்டு
'தலையணை மந்திரம்' அறிந்தமையால் தலைவன் தறிகெட்டுப் போகாத நிலையுமுண்டு
'தலையணை மந்திரம்' அறிய பாடம் நடத்த முடியுமோ!
'தலையணை மந்திரம்' தானே அறியும் அறிய கலை
'தலையணை மந்திரம்' சொல்லித் தெரியாத அறிய கலை
'தலையணை மந்திரம்' அனுபவத்தால் அறியும் அறிய கலை
'தலையணை மந்திரம்' வாரிசுகளை வளர்த்து விடும்

'தலையணை மந்திரம்' தனை கவிதையாய் தர தனித் திறமை வேண்டும்   
'தலையணை மந்திரம்' தங்கத் தாரகைகள் மட்டும் அறிந்த அறிய மந்திரம்
'தலையணை மந்திரம்' அறிந்தவர்கள்  சாதனைப் பெண்கள்
'தலையணை மந்திரம்' ஆண்களுக்கு சூடு போட்டாலும் வராது

வெளிச்சம் போடவில்லை வெளிச்சம் தருகிறோம்


வெளிச்சம் போடவில்லை
வெளிச்சம் தருகிறோம்
பதுமையாய் இருந்த காலம் கழிந்தது
புதுமையாய் நிகழும் காலம் வந்தது
அருமையாய் செய்து நிலையாய் தருவோம்
நிறைவாய் மனதில் இருக்கச் செய்வோம்
சேவையை மனதில் கொண்ட தொழில்
தொழிலை மனதில் நிறுத்திய சேவையல்ல
தொழ வைக்கும் வேலை
தொழ வைப்பதில் நிறைவுமுண்டு
தொழ வைத்ததால் இறையருளுமுண்டு
தொழ வைக்க சம்பளமாக சன்மானமுண்டு
தொழ வைக்க நன்மையை நாடி குர்ஆனை மனனம் செய்வதுண்டு
தொழ வைக்க குர்ஆனை ஓதி பொருளீட்டும் நோக்கமல்ல
தொழில் செய்வதும் மக்கள் நலம் நாடியே
பொருள் தேடி மக்கள் அலையாமல் ஓரிடத்தில் சேர்த்து வைத்தோம்
பொருள் பெற்றவர் சன்மானமாக தந்ததே லாபமானது
தொழில் தொடர்ந்து நடக்க மக்கள் சன்மானமாக தந்த லாபம் தொழிலை வளர்த்தது
தொழில் வளர சேவையும் நன்மையும் சன்மானத்தோடு சேர்ந்து வந்தது
குர்ஆனை அச்சிட்டு விற்பதும் பொருள் சேர்க்கும் நோக்கமல்ல
குர்ஆனை அச்சிட்டு விற்பதும் மற்றவர் குர்ஆனை ஓதி நன்மை பெறவே

Saturday 20 April 2013

எத்தனை முறை ஏமாற்றப்படுவாய்


எத்தனை முறை ஏமாற்றப்படுவாய்
அத்தனை அளவு நேசித்த மானிடரால்
நாட  வேண்டிய நாயகனை நாடவில்லை
நாடியவன் நேசிக்க நாயகன் ஏமாற்றுவதில்லை

அத்தனை முறை உன்மனதில் ஏற்றி வைத்தாள் தாய்
அத்தனையும் பாசத்தால் வந்த பரிந்துரைகள்
அம்மாதானே சொன்னாள் என்ற அலட்சியம்
அனுபவம் அம்மாவின் வாக்கை உயர்வாக்கிக் காட்டியது


Friday 19 April 2013

திருமண காட்சிக்குப் பின் ஒரு விசித்திரமான கதை ஒளிந்துள்ளது.

 
மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மணமகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.

 இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான  கதை ஒளிந்துள்ளது. திருமணம்  என்பது  பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு!
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்

 இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும்   பேசுவார்கள் .

Thursday 18 April 2013

முதுமை அடைந்த பின் முழுமையாக அறியலாம்.

 ஆண் துணையின்றி  பெண்ணால் வாழ முடியும் .பெண் துணையின்றி ஆணால் வாழ்வது கடினம்.  இதனை முதுமை அடைந்த பின் முழுமையாக அறியலாம்.

 நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த அருள் என்பது உண்மையாக இருந்தாலும் கணவனாகி காலத்தோடு அவளோடு ஒன்றி இணைந்த நாம் அவளது மனதை அறிந்து செயல்பட்டோமா ! என்பது அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றுதான் . முதுமை வந்தபோதுதான் அவள் நமக்காகவும் குடும்பத்திற்காகவும் ஆற்றிய சேவையை அறிய முடிகின்றது . அறிந்தபோது அதனை அவளிடம் சொல்லி மன வேதனையை வெளியிட்டால் 'அதனை இப்பொழுது நினைத்து ஆவப் போவது என்ன! நம் குழந்தைகள் நல வாழ்வு பெற்றால் போதும் அதற்கு இறைவனை வேண்டுவோம்' என்ற ஆறுதல் பதில்தான் வரும். 

 முதுமையின்   காரணமாக    உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய   சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள், கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ. முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே ...இப்படி பல எண்ணங்கள்   எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே  இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள்  லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .

Wednesday 17 April 2013

யாருக்கும் தங்கமான மனிதர் என்ற பாராட்டு கொடுக்காதீர்கள் !

தங்கமான மனிதர் என்று நல்ல மனம் கொண்ட மனிதரைப் பார்த்து சொல்வார்கள்.
அவர் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் என்றால் குற்றம் காண முடியாத ஒழுக்கமுடையவர்,பண்பானவர் என்ற பொருள்பட ஒருவரை உயர்வாக மதிப்பிட்டுச் சொல்வார்கள்.
தங்கத்திற்கு அவ்வளவு மதிப்புண்டு .அதன் மதிப்பு உயர்ந்துக் கொண்டே செல்லும்.

தங்கத்தின் மதிப்பு தடுமாறுகின்றது . அதன் விலையும்  வேகமாக குறைகின்றது .
தங்கம் சேர்த்து வைத்தால் தேவைக்கு விற்க முடியும் அதுவும் வாங்கியதைக் காட்டிலும் விற்கும் போது கூடுதலான தொகை கிடைக்கும் என்பதால் பலர் பணம் இருக்கும் போது தங்கம் வாங்கி சேர்த்து வைப்பது தொன்று தொட்டு தொடர்ந்து வரும் செயல்.

தங்கமான மனிதர், பத்தரை மாற்றுத் தங்கம் போன்று குறைகளற்ற மனிதர் என்று சொல்லி ஒருவரை உயர்வாக சொல்லும் காலம் போய் விட்டது போல் தங்கத்தின் நிலையும் வந்து விட்டது. உயர்வான தங்கம் என்று சொல்லி மிகப் பெரிய விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்படும் தங்கமும் குறை உள்ளதாக இருக்கின்றது. தங்கமான மனிதர் தரம் கெட்டவராக மாறுவதுபோல் உயர்வாக நினைத்து வாங்கிய தங்கம் தரம் கெட்டதாக இருக்கும் 22 கேரட் தங்க நகை  இருபது கேரட் நிலையில் நாம் அந்த தங்கத்தை விற்கும்போது அதனை வாங்குவோர் மதிப்பிடும் போது நம் மனம் உடைத்து விடுகின்றது . தங்கத்தை விற்கப் போனால் பணம் தரமுடியாது, அதற்கு பதிலாக புதிய நகை வாங்குங்கள் என்றும் சொல்வார்கள். பண்ட மாற்று செய்யும்போது, பழைய நகையின் எடையில் 10% முதல் 25% வரை குறைப்பார்கள் தங்க நகைகள் வைத்துள்ள இடத்திற்கும் எந்த விதமான பாது காப்பும் இல்லை என்பதுதான் உண்மை. அரசும் தங்கத்தினை அடகு வைக்கும் போதும் பணம் கொடுப்பதனை குறைவாகவே கொடுக்கின்றது.

Monday 15 April 2013

பசுமையான பிரயாண அனுபவங்கள்

 உலகில் மிகவும் செயல்பாடு விமானதளத்தில் ஹாங்காங் முக்கிய இடம் வகிக்கின்றது நான் சைகொனிலிருந்து  ஹாங்காங் சென்ற  போது பிரயாண அன்பவம்  மறக்க முடியாதது அதனை அனுபவித்தேன் .

விமான பிரயாண  அனுபவத்தில் வானத்தில் விமானம் பறக்கும் போது விமானம் குலுங்கியது .விமானத்தில் பல உணவு பொருள்கள் சிதறி  கொட்டின . எனது உடல் சில நொடி மேல் நோக்கி இறங்கியது . காற்றில்லா வெற்றிடத்தில் விமானம் பறக்க முடியாதாம் .மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது .மறக்க முடியாத அனுபவம்.

 நான்  பல நாடுகள் பார்த்து வர சுற்றுலா சென்றபோது  பாரிசிலிருந்து லண்டனிலிருந்து செல்வதற்கு விசா வாங்க பாரிசில் உள்ள லண்டன் விசா வாங்க லண்டன் விசா தரும் அலுவலகம் சென்றேன் . விசாவிற்கான தொகையை முதலிலேயே கட்டி விட வேண்டும் .விசா கிடைக்க வில்லையென்றால் கட்டிய பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதனை   அறிவிப்புப் பலகையில் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

எனது முறை வந்ததும் நான் விசா வழங்கும் அதிகாரியை சந்தித்தேன் .
அவர் கேட்ட முதல் கேள்வி " எதற்காக லண்டன் போகிறீர்கள்"
'லண்டன் சுற்றிப் பார்க்க செல்கின்றேன்' எனது பதில்.
' உங்கள் நாட்டில் இந்தியாவிலேயே விசா வாங்கி வந்திருக்கலாமே'
'நான் பாரிஸ் வந்தது எனது உறவினரைப் பார்க்க ஆனால்  பாரிஸ் வந்த பின்தான் லண்டன் அருகில் இருப்பதால் லண்டனையும்  போய்  பார்ப்போம் என்ற ஆர்வம் வந்தது' .
அவர்களது எண்ணம் லண்டன் வருபவர்கள் அங்கேயே வேலை செய்ய தங்கி விடுவார்கள் என்பதுதான்.

தலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா


அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் அனைவரையும் வியக்கவைக்கும் .
அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு இருந்தது.
சென்னை லயோலா கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்வு.

அன்றைய காலக்கட்டங்களில் கல்லூரிகளில் அரசியல் பேச அனுமதிக்கப்படுவதில்லை.

சென்னை கிருஸ்துவக் கல்லூரி மாணவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை மேடையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.
எங்களுக்கும் அழைப்பு வந்திருந்தது, நாங்களும் சென்றோம்.
“எந்த தலைப்பில் பேச வேண்டும்? என்று அறிஞர் அண்ணா அவர்கள் வினவ,
அதற்கு மாணவர்கள், “தலைப்பு எதுவும் இல்லை. உங்கள் விருப்பமான தலைப்பில் நீங்கள் பேசலாம் என்றார்கள்.
மேடை ஏறிய அண்ணா அவர்கள் தலைப்பு இல்லை என்பதால் “தலைப்பு இல்லை” என்பதையே தலைப்பாக வைத்து பேசுகிறேன்” என்று கூறி ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார்கள்.
மாணவர்கள்களின் மகிழ்வும், கைதட்டலும் அரங்கு முழுதும்
எதிரொலித்தது.

                                                                முகம்மது அலி

வேதனையான நிகழ்வுகள்!

வேதனையான நிகழ்வுகள்
சோதனையின் பதிவுகளாய்

விழிகளில் நீர் வடிகிறது
விழிகளின் பாவையிருக்க
விழிகள் பார்க்க பார்வை விழுந்த இடத்தில ஒளியில்லை
ஒளியற்ற இரவால் காலத்தை மிஞ்சிய குற்றங்கள்
ஓரிரு திங்களில் தடையற்ற மின்சாரம் மிகையாகிவிடும்
குறையின்றி வாழலாம் கொடுத்த வாக்கு
காற்றோடு காற்றாய் மறைந்தது
கறைபடிந்த படிந்த இரவுகளாய் தமிழகம்
-----------------------------------------------------------------------
தயவு செய்து இதனை சொடுக்கி வேதனையான நிகழ்வுகளைப் படியுங்கள் 

Sunday 14 April 2013

நாட்டைப் பற்றியது அதனால் நீங்கள் நாடவேண்டும்

குழந்தைகளுக்கு கதை கேட்பது பிடிக்கும்
குழந்தையான முதியோருக்கு கதை சொல்ல பிடிக்கும்

பொழுதை ஓட்டுபவர்களுக்கு கதையளக்க பிடிக்கும்
தேர்தலில் ஒட்டு கேட்பவருக்கு கதையடிக்கப் பிடிக்கும்

நடந்ததை கதையாக சொல்பவர்கள் வெளிநாடு சென்று வந்தவர்கள்
நாங்கள் வந்தால் நல்லது நடக்குமென்று கதை விடுவார்கள் அரசியல் வியாபாரிகள்

இத்தனை கதையை கேட்டு அலுத்துப் போனவர்களுக்கு
இரத்தினக் கதையை சொல்வேன் கேட்டு விட்டுப் போங்கள்
------------------------------------------------------------------
கதை நாட்டைப் பற்றியது அதனால் நீங்கள் நாடவேண்டும்
-------------------------------------------------

ஒளிமயமான வாழ்வை அடைய

  குழந்தை மனதில் களங்கம்  இருக்காது. குழந்தைக்கு கற்பிக்கும்போது அச்சமுட்டி எச்சரிக்காமல் அன்பு காட்டி நாம் சொல்லித்தரும் அறிவுரைகளை அது நேசித்து விரும்பி விளங்கும் வகையில் கற்பிக்க வேண்டும்.
 கட்டாயத்தின் மேல் செயல்படுத்தப் படும் திட்டம் வெற்றி பெற்றதாக தோன்றினாலும் அது நிலைத்து நிற்காது. கட்டாயப்படுத்தி குழந்தையை மனனம் செய்யச் சொல்லி நாம் எதிர்பார்த்தபடி முழுமையாக, நிறைவாக மதிப்பெண்கள் பெற்றாலும் வாழ்க்கை பாடத்தில் தோல்வியை அடைந்து விடும். விளங்க வைத்து நல்லதை கற்பிக்க அனுபவ அறிவும் பெற வெற்றிபாதையை நோக்கி நடைபோட்டு ஒளிமயமான வாழ்வை அடைய முடியும்      
  இறைவனை தொழுவது (வணங்குவது) ஒரு கடமையாக இருந்தபோதும் அது ஆழ் மனதில் இறைநேசம்  என்ற எண்ணம் இருக்க வேண்டும். இறைவன் தடுத்த செயலை செய்ய மாட்டேன் என்ற மனம் வர வேண்டும்.  நம்பிக்கையற்ற நிலையில் எவருக்கும் உண்மையான,நேசமான ஈடுபாடு கொள்ள முடியாது.

Saturday 13 April 2013

பேஸ்புக் (முகநூல் ) ஒரு ஈர்ப்பு சக்தி பெற்றது

அன்பு நண்பா,
தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

ஒன்று கூடுமிடம் .உயர்வான இடம் . உயர்ந்தோர் மற்றும் சிறியோர் முதல் மூத்தோர் வரை வந்து ஆண் பெண் அனைவரும் சங்கமமாகி மனதில் உள்ளதை கொட்டி தன்னை உருவாக்குமிடம்.அதுவே சிலருக்கு உருப்படாமல் போக வழி வகுக்குமிடம் . நாடுவது கிடைக்கும் .துன்பமும் துயரமும் ,மகிழ்வும் அறிவும் இனாமாக இடைக்குமிடம் .கிடைப்பது அனைத்தும் அவரவரது நோக்கத்தைப் பொருத்து அமையும்

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(- ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் :1)

பேஸ்புக் நமக்காக நல்ல மனதோடு ஓர் இடம் தந்துள்ளது (ஃபேஸ்புக் பணம் ஈட்டுவது அதன் தொழில்) அந்த இடத்தை நேரம் கிடக்கும்போதேல்லாம் உள்ளத்தின் உணர்வுகள் உந்தப்பட்டு மனதில் உள்ளதைக் கொட்டி இதய பாரத்தைக் குறைக்க முற்படுகின்றோம்.நேரில் பேசும்போது வாக்குவாதம் வந்துவிடும் அதனால் ஃபேஸ்புக்கில்   பேசலாமென்றால் இங்கும் எனக்காக உள்ள  இடத்தில்   நீ மனதை புண்படுத்தும் படியாக எதாவது உன் மனம் போன போக்கில்  எழுதி வைத்து உனது கருத்தை வெளிப்படுத்துகின்றாய். நண்பன் என்றால்  உதவிக் கரம் கொடுப்பவர்,உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும். நான் எழுதுவது உன் கருத்துக்கு உடன்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் ஒரு 'லைக்' போடு அல்லது மனம் புண்படாமல் உன் கருத்தை எழுதிவிடுவதுதான் சிறப்பு, அதை விடுத்து  என் மனதை நோகச் செய்ய முற்படாதே! உன் இடத்தில போய் நீ விரும்பியதை எழுதிவிட்டுப் போக உனக்கு அனைத்து உரிமையும் உனக்கு உண்டு. உன் உரிமை என் உரிமையை பாதிக்காமல் பார்த்துக்கொள். உனக்கு குடை பிடித்துப் போக உரிமையுண்டு ஆனால் அது என் மூக்கில் குத்தாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை .  நட்புக் கரம் நீ நீட்டும்போது உன்னை நான் நண்பனாக ஏற்று கொண்டேன் . நட்பை மறுப்பது கூடாது என்பதுதான் அடிப்படைக் காரணம் . உன்னை எந்த விதத்திலும்  தனிப்பட்ட முறையில் நான் எதையும் எழுதுவதில்லை என்பதனை நீ அறிவாய் . மற்ற எனது கருத்துகள் உனது கருத்தோடு ஒன்றிப்போக வேண்டிய அவசியமும் இல்லை அதனை நீ அவ்விதம் எதிர்பார்ப்பதும்  முறையல்ல என்பதனை நீ அறிய வேண்டும்.
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க.

'அதற்கு நான் இல்லை சென்று வாருங்கள் '

மன்னரின் ஆட்சி மிகச் சிறப்பாக இருந்தும் மன்னரின் மனதில் மகிழ்வில்லை.ஞானம் பெற ஞானியை தேடிச் சென்றார் . தம் மனதில் மகிழ்வில்லை அதற்கு நல்வழி சொல்லுங்கள் என ஞானியிடம் விரும்பிக் கேட்டார்
'அதற்கு நான் இல்லை சென்று வாருங்கள் ' என ஞானி சொல்லிவிட்டு அந்த இடத்தை வீட்டு அகன்றார் .
மன்னர் மனதில் விரக்தி வர இவ்வளவு தூரம் வந்து இவருக்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்து வந்து பார்த்தோம் முறையாக அறிவுரைக் கொடுக்காமல் சென்று விட்டாரே என்ற வருத்தத்தோடு தனது அரண்மனைக்கு திரும்பினார். அவர் மனதில் அது உறுத்திக் கொண்டிருக்க தனது மந்திரியை அழைத்தனுப்பி மன்னர் தன் வருத்தத்தை தெரிவித்தார்.

Friday 12 April 2013

கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் சிறப்பு.

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் தற்கால மக்கள் பிடிப்பில்லாமல் இருக்கின்றார்கள்.கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் வாழும் காலத்தில் ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளின் பாச உணர்வு குடும்பம் பிரிந்தாலும் ,தனித் தனியே வாழத் தொடங்கினாலும் பாச உணர்வு தொடர்வதனை நாம் அறிய முடிகின்றது.எறும்பும் தேனீக்களும் கூட்டாகவே வாழ்கின்றன. அதிலும் தேனீக்கள் தங்கள் கூட்டுக்கு அல்லது தங்களுக்கு ஆபத்து வரும்போது கூட்டாக சேர்ந்து தாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன. இந்த இனங்கள் அனைத்தும் தங்கள் தேவையை உணர்ந்து சுறு சுறுப்பாக செயல்படுகின்றன. ஒன்று ஓய்வாக இருந்து மற்றது இறை தேட செல்வதில்லை. மனிதன் மட்டும் சிலர் பொருள் சேர்க்க மற்றவர் உண்ண நினைப்பதால் கூட்டுக் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது. 

Wednesday 10 April 2013

உனை நினைத்து இறைஞ்சுகின்றேன் ஏணையோர் போல்.


ஒருவனாயிருந்து உயர்வான பெயரைப் பெற்றாய்
ஒரு பெயருக்கே பல விளக்கங்கள் இருக்க
துணையின்றி தனியொருவனாய் நீயிருக்க
பல பெயர்கள் உனக்கு துணைப் பெயராய் உன் புகழ் பாடி  வந்து சேர்ந்தன
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாய் நீயிருக்க
அத்தனைப் பெயரும் உன் புகழ் பாடும்

உன் பெயர் சொல்லி அழைக்க யாரையும் நீ பெறவுமில்லை
உனை யாரும் பெற்று நீ பிறக்கவுமில்லை
உன்னால் உருவாக்கப்பட்ட அனைத்தும் உன் பெயர் சொல்லி
உன் பெயர் சொல்லி உன்னை துதி பாடுகின்றன

உனைத் தேடுபவருக்கும் தேடாதவருக்கும் உதவுகின்றாய்
உனைத் தேடிவருபவரை தேவையற்றவனாயிருந்து அருள் செய்கின்றாய்
உனக்கு நிகர் யாருமில்லை உனக்கு நிகர் நீயே

துவங்குவதும் தொடர்வதும் உன் பெயரைச் சொல்லி புகழ்பாடியே
துயருற்ற போதும் துயில் கொள்ள செல்லும் போதும்
நிகழ்வதற்கும் நடந்ததற்கும் நடை பெற இருப்பதற்கும்
நின் நினைவோடு உன் திருநாமம் நாக்கிலும் உள்ளத்திலும் உருள்கின்றது

கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் உன் வசமிருக்க
கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் நன்மையாய் யிருக்க
உன்னருள் நாடி  விழிகளில் நீர் வடிய
உனை நினைத்து இறைஞ்சுகின்றேன் ஏணையோர் போல்.
யாஅல்லாஹ் ஈடில்லா ஏகாந்தன் நீயே...
அன்பு மயமாக இவ்வுலகை ஆளும் யாஅல்லாஹ் 
  ஹபீபி - உன்னை நேசிக்கிறேன்!
 பிறப்பதும் இறப்பதும் உன் செயலாலே..

அற வழியில் ஆசைப்பட்டு அடுத்த அடி தொடரு...

ஆசை வேண்டும் அது நிறைவேற வேண்டும்
ஆசை வேண்டும் அது நிறைவேற வழி தேட வேண்டும் .
ஆசை வேண்டும் அது பேராசையாக இருக்காமல் இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அடுத்தவர் பொருளை அபகரிக்காமல் இருக்கும் நிலை வேண்டும்
ஆசை வேண்டும் விரும்பிய பொருள்  தனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காமல் இருக்க வேண்டும்
ஆசை வேண்டும் அது ஆண்டவன் அருளை நாடி இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அது நிராசையானால் மனம் தளரா உள்ள உறுதி வேண்டும்
ஆசை உண்டாக்கி ஏமாற்றும் மனம் பெறாத ஆசை வேண்டும்

ஆசைப் படுவது மனித இயல்பு .ஆசையற்றோர் முன்னேற்றம் அடைய வழியேது.
ஆசையற்றோர் நிலை தேக்கம் காணும் .ஆசை துன்பத்தை வரச் செய்யும் என்போர் வாழ்கையை விளங்கிக் கொள்ளாதவர். தனி மரம் தோப்பாகாது .தனித்து வாழ விரும்புவோர் தனித்து விடப்படுவார் . அது அவருக்கும் பயன்தராது அவரால் மற்றவரும் பயனடைய மாட்டார் .
ஆசைப்பட்டதால் சமுதாயம் வளர்ந்தது. ஆசை உள்ளத்தோடு இளவயதிலேயே தொடங்கியது. முதல் மனிதர் ஆதம் அவ்வா மேல் ஆசை கொள்ள வைத்தது இறைவனின் நாட்டம் . அது முதல் தொடங்கிய காதலின் ஆசை உலகம் இருக்கும் வரை நீடிக்கும் அதனால் சமுதாயம் பெருகும் .
மரணிப்பதை நேசிக்காதே ,கொள்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது,தற்கொலையை
நாடுவது பலவீனத்தின் அறிகுறி. கொள்கை மீது நம்பிக்கை அற்ற நிலை.
நம்பிக்கை இல்லாத கொள்கை விரயம். கொள்கை .உயர்வானதாக இருத்தல் அவசியம். நினைத்ததை முடிக்கும் வரை நம்பிக்கையை நிலை நிறுத்தி போராடு. அதற்கு வாழ்வை நாடு. .நினைப்பது நடந்தே தீரும் என்ற நம்பிக்கை வேண்டும் அது வரும்போது வரட்டும் .கொள்கை பிடிப்பும் அந்த கொள்கை உயர்ந்த கொள்கையாக மட்டும் இருப்பது மிகவும் அவசியம்

Monday 8 April 2013

காதலித்துப் பார் கடமையில் மூழ்கிடுவாய்!

உனையறிந்தால் உன் கடமையை செய்வாய்
உன் கடமையச் செய்ய மார்க்கத்தை தேடுவாய்

சுவனத்தின் ஆரம்பம் ஆதம் அவ்வா நேசத்தில்
சுகம் தரும் நேசம் நாட நம் விழிகள் திறக்கும்
விழிகள் திறக்க நெஞ்சத்தில் ஈரம் சுரக்கும்
ஈர இதயம் மார்க்கத்தைத் தேடும்
மார்க்கம் மனதில் வந்தடைய மனித நேயம் பிறக்கும்
மனித நேயம் வாழ்வை சிறப்பாக்கிவிடும்
வாழ்வின் சிறப்பு மார்க்கத்தின் ஒளிவிளக்கு
மார்க்கம் இறைவனை தேடவைத்து மார்க்கத்தின் மகிமை அறிய வைக்கும்
மார்கத்தின் மகிமையால் இறையோனை இறைஞ்ச வைத்து உள்ளம் உயர்வடையும்

Sunday 7 April 2013

சுமப்பதில் உயர்வான சுகம்

சுமப்பதில் உயர்வான சுகம்
சுமையாக நினைக்காத சுமை
சுமை வளர்வதில் வரவேற்ப்பு
சுமையை  சுமையாக நினைக்காத சிறப்பு
சுமைக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம்
சுமையைச் சுமக்க தன் நலத்திலும் கவனம்
சுமை சுமப்பதில் காலக் கணக்கு
சுமந்த சுமை தானே குறித்த காலத்தில் சுமையைக் குறைத்துவிடும் சிறப்பு

வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது.   மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள்.   இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும்  நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.

பெண்கல்வியின் அருமை

 பெண் குழ்ந்தை வேண்டாம் என்ற காலம் மறைந்து வரும் காலம். அதற்கு முக்கிய காரணமாய் இருப்பது ஆண் மகனுக்கு திருமணம் செய்விக்க பெண் கிடைப்பது முன் மாதிரி இப்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை.முன்பெல்லாம் வரதட்சணை கொடுமை வாட்டி எடுத்தது. தம்பதிகளுக்குள் உறவு முறை சரியாக இல்லையென்றாலும் அடங்கிப் போகும் கட்டாயம். கணவன் இறந்தாலோ அல்லது மணமுறிவு நிகழ்ந்தாலோ பெண்ணின் நிலை சீரழிந்த நிலை. மறுமலர்ச்சி காலத்தில் அடியெடுத்து வைத்து விட்டோம் . அவசியமானால் மறுமணமும் வந்துவிட்டது மற்றும் வரதட்சணை கொடுமையும் ஒழிந்து வருகின்றது. எங்கு போய் பெண் கேட்டாலும் ஆண் மகன் என்ன படித்திருக்கிறார்? என்ன வருமானம் அவருக்கு வருகிறது? குடும்ப கௌரவமானதா இப்படி அலசுகிறார்கள்!
பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் அவள் படிப்பு முடிந்துதான் திருமணம் செய்ய விருப்பம், இன்னும் சிலர் படித்தபின் அவளுக்கென்று உள்ள வேலையை தொடர்வாள் அதற்கு ஒத்து வருவதாக இருந்தால் பார்ப்போம். சில இடங்களில் பெண்ணே தனக்கு தேவையான கணவன் தகுதியுடையவனா? என்பதில் கவனம் செலுத்தும் ஆற்றல்

பெண்ணின் படைப்பு உயர்வானது

பெண்ணின்றேல் நாமில்லை
பெண்ணாக வந்தால் அம்மா
பெண்ணால் வந்த உறவுகள் நீடிக்கும்
பெண்ணால் வாரிசுகள் வளரும்
பெண்ணின் பணிவிடை பாசமானது
பெண்ணின்  பணிவு இயல்பானது
பெண்ணிடம் கணிவு மேன்மையானது
பெண்ணின் ஊக்குவித்தல் ஆண் வெற்றிக்கு அடித்தளம்
பெண்ணின் பெருந்தன்மை ஆண்களுக்கு அமைதியைத் தருகிறது
பெண்ணின் பெருமை ஆண்களை சிறப்பிகின்றது
பெண்ணின் பெருமை மேலோங்க பார்வையை தாழ்த்திக் கொள்வார்கள்
பெண்ணின் அழகு அவர்களது உள்ளத்தில் ஆடையில் அல்ல
பெண்ணில்லா உலகில் வாழ்வேது
பெண் பெற்ற கல்வியால் குடும்பமே உயர்வடைகின்றது
பெண்ணைப் பெற்றோர் பாசத்தைக் காட்டுவார்
பெண் பிள்ளை பெறாதவர்  பரிதாபத்திற்குரியவர்..
பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது. பணிந்து பேசும் தன்மையுடையது.வெட்கத்தோடு நளினமாகப் பேசக் கூடியது.

Saturday 6 April 2013

ஒருவரது உள்ளத்தில் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான்.

  இறையில்லங்களில் சுதந்திரமாக  தொழுகையில் ஈடுபட.நடத்தப்பட இடமளித்தல் வேண்டும் . அவற்றை தடுப்பதற்குஎவருக்கும் அதிகாரமில்லை .அதுபோன்றே வணக்கத்தலங்களில் பணிவுடன் அச்சத்துடன் நுழைதல் வேண்டும்.இறையில்லங்களை அவமதித்தல் கூடாது.
 
 பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வர தடை செய்தல் பெரிய குற்றமாகும். இந்நிலை நீடிக்குமானால் பிரிவுகளை உருவாக்குவதற்கு நாமே வழி வகுக்கின்றோம். இதனால் தேவையில்லாமல் பிரிவுக்கு ஒரு பள்ளிவாசல் உருவாகின்றது.

ஒருவரது உள்ளத்தில் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான்.  தொழுகைக்கு வருபவர் அவர் முஸ்லிமாக இருந்தால் அவரை அனுமதித்தே ஆக வேண்டும். ( தொழுகைக்கு வரும்போது (மதுவை குடித்து வரக் கூடாது. அவ்விதம் இருப்பின் அவரை வெளியேற்றலாம் மற்றும்  தொழுகைக்கு இடையூராக இருப்பவரையும் வெளியேற்றலாம்)

தொழுகைக்கு வருபவர் ஒலு செய்திருக்க வேண்டும் .   அது அவரது கடமை .ஒழு இல்லையேல் தொழுகையே  கூடாது. ஆனால் நாம் யாரிடமும் 'நீ ஒலு செய்தாயா?' என்று கேட்பதில்லை. ஆனால் மார்க்கத்தில் கடமையாக்கப்படாத ஒன்றை 'தொப்பி போட்டு தொழு இல்லையென்றால் பள்ளிவாசலுக்கு வராதே' என்பது மிகவும் தவறாகும்
 ஷியா கொள்கையை பின்பற்றும் முஸ்லிம்கள் முதல் மூன்று கலிபாக்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல மற்றும் அந்த மூன்று கலிபாக்களையும் குறைவாகவும் சொல்வார்கள் . அவர்கள் (ஷியா) பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வர நம்மால் தடை செய்ய முடியாது .காரணம் அவர்கள் குர்ஆனையும்    நபியாக முகம்மது நபி (ஸ. அ ) அவர்களை  ஏற்றுக் கொண்டவர்கள் . இதனை ஹஜ் செய்பவர்கள் பார்க்கலாம் .( தடுப்பவர்களை நீதி மன்றமே தண்டிக்கும் நினைவில்  கொள்ளட்டும் ) இந்நிலை இருக்கும் போது நாம் நம்மில் சிலரை தடை செய்கிறோம்?

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்
. குர்ஆன்  - 2:45

 10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
-குர்ஆன்  - 2:114 

விரும்பாததின் மேல் விருப்பப்படு!

 துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும்.  துன்பம்  துவள  இறைவனை  அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும் 

  நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்க்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! . நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ?  நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது, எந்த காரியமும் ஒரு நன்மைக்காகவே  இருக்கும் என்பதனை நம்பாதவனுக்கு காலம் முழுதும் கவலைதான்

  நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்வில்லை .வாடைக்குப்பின் தென்றல்  வரும் .தென்றல் முடிய கோடை வரும் . தென்றல் மட்டும் இருந்தால் கோடைகாலத்தில் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும் . நல்ல கொடையில்தான் நிலங்கள் பாலமாக வெடித்து பயிர் வளர வழி வகுக்கும் . பின்பு மழை வந்தால் செடிகள் தழைக்கும் .

 காலமே மாறி, மாறி வரும் நிலையினை நாம் விரும்பும் போது மனதில் மட்டும் மகிழ்வு மட்டும் குடி இருக்க வேண்டும்
என்ற பேராசை ஏன்? நிழலின்  அருமையை  வெயிலுக்குப் பின் அறியமுடிகின்றது . வாழ்வின் நிலையும் அதுதான் .துன்பம் வந்து மறையும்  போதுதான் மகிழ்வினை  முழுமையாக அறிய முடியும் இருளுக்குப் பின் ஒளி உண்டு.
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது-குர்ஆன் .94:5.

. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. குர்ஆன்: 94:6

 எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.குர்ஆன் 94:7.
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
-குர்ஆன் 94:8.

தலையில் தாவணியை அணிவது இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டின் தயாரிப்பா?

முஸ்லீம் பெண்கள் ஆடை இரண்டு நிலைகள் உள்ளன; முதல் முகம் மற்றும் கைகளை தவிர, அனைத்து உடலை மூடிக்கொள்ளும் முறையைக் குறிக்கிறது இது ஹிஜாப் ஆகும்.

‘ஹிஜாப்’ என்றால் மறைத்தல், தடுத்தல் என்று பொருள்படும்.

இரண்டாம் நிலை கைகள் இல்லாமல் முகம் மற்றும் அனைத்து உடலையும்  மூடிக்கொள்ளும் முறையைக் குறிக்கிறது. முகத்தை மறைப்பது இஸ்லாமிய மார்க்க கடமையல்ல

 தலை தாவணியை அணிவது முஸ்லிம் சமுதாயத்தில் மட்டும் நடைபடுத்தப் படும் ஒரு செயலாக சிலர் கருதுகின்றனர். மாற்றாக பல சமுதாய மக்களாலும் நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து தொடர்ந்து வரும் பழக்கமே ஆகும்

 தலை தாவணி அணிந்த வெற்றிகரமான முஸ்லீம் பெண்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறந்த உதாரணங்கள்  உள்ளன.

தலையில் தாவணியை  அணிவது  இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டின் தயாரிப்பா?

நிச்சயமாக இல்லை.  மூன்று படங்களை பாருங்கள்

முதலில்  கன்னி மேரி , இரண்டாவது  திரேச அம்மையார்  ,மூன்றாவது முஸ்லீம் பெண். அவர்கள் மூன்று பேருக்கும் இடையே பொதுவான விஷயம் உள்ளதனைப் பார்க்கலாம்.

Friday 5 April 2013

பொறுமையும் பொறாமையும்

பொறுமை அமைதியைத் தரும்
பொறாமை கவலையைக் கொடுக்கும்

பொறுமை எனும் மனத் தூய்மை என்றும் பெருமையே தரும்.
பொறாமை எனும் மனக் குழப்பம் மனோநிலையை பாதிக்கும்

பொறுமையாக செயல்பட தவறு வருவது குறையும்
பொறாமையாக செயல்பட இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்

பொறுமையாக இருந்து  நினைத்தது நடக்க செயல்படுத்த வேண்டியதை குறித்த நேரத்தில் செயல்படுத்தாமல் போனால் நினைத்தது நடக்காமல் போய் விடும். பொறுமை தாமதமாக மாறிவிடக் கூடாது

பொறாமை நல்ல காரியங்களில் நாமும் ஈடுபட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வரலாம். பொறாமை அடுத்தவர் போல் நாமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் .

பொறாமை அடுத்தவரின் முன்னேற்றத்தை ,அழகை கண்டு வேதனையாவது மனோ வியாதியாகிவிடும் .தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைத்து விட்டதே என்று ஏங்கும் நிலை அழிவையே தரும் . எங்கேயோ உள்ளவனை நினைத்து பொறாமை வருவதில்லை அருத்தவரை நினைத்து காழ்ப்புணர்ச்சியோடு வருவது பொறாமை .

பெண்களுக்கு பொறாமை உணர்வு மேலோங்கி நின்றாலும் நேரடியாக அது அவர்களை பாதிப்பதில்லை நேரடியாக அவர்கள் செயல்படுத்த முயலாததால். அதற்கு தூதுவராக பலிகடாவாக ஆண்கள் ஆக்கப்படுகிறார்கள்

பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. இறைவனது  அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது.

இளமையும்! முதுமையும்!

இளமை உஞ்சலாட முதுமை தள்ளாடுகிறது
இளமை உலாவர முதுமை ஓய்வெடுக்கிறது
இளமை கற்பனை செய்ய முதுமை கதை சொல்கிறது
இளமை நினைவாற்றலை நிறுத்தி வைக்க முதுமை மறதியால் தேடுகிறது
இளமை சேர்க்க முயல முதுமை பாதுகாக்க நினைக்கிறது
இளமை மனைவியை காதலிக்கிறது முதுமை மனைவி மீது பாசம் காட்டுகிறது
இளமை முதுமையை மதிக்காமல் இருக்க முதுமை இளமையை இணைக்க விரும்புகிறது
இளமை களத்தை தேட முதுமை களைத்து படுக்கின்றது
இளமை பறை சாற்றும் புகழ் நாட முதுமை சரித்திம் பேசுகிறது
இளமை நினைத்தது நடக்க நடை போட முதுமை அசை போடுகிறது
இளமை வேகத்தில் தடுக்கி விழ முதுமை அமைதியை நாடுகிறது
இளமை வாதம் செய்கிறது முதுமை அடங்கிப் போகிறது
இளமை பண்மையின் பிறப்பிடம்.முதுமை உண்மையின் உறைவிடம்
இளமை துடிப்பின் வேகம் முதுமை தடுமாற்றத்தின் காட்சி .
இளமையில் வேகம் மேலோங்கும்.முதுமையில் நிதானம் வந்தடையும் .
இளமைக்கும் முதுமையுண்டு. முதுமைக்கு இளமையில்லை.
இளமையின்  முதுமையோடு காட்டும் பரிவு முதுமை வாழ்வை நீட்டிக்கிறது

முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுங்கள்,இறையருள் பெற்றிடுங்கள் ,  இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்
 -முகம்மது அலி

Thursday 4 April 2013

தகுதியைப் பெற்று உதவிக் கரம் நீட்டு.

  பொருள் உள்ளவரை போற்றுவதும் பொருள் அற்றவரை மதியா தன்மையும் மக்கள் மனதில் இக்காலத்தில் பரவி வருகின்றது . மற்றவர் மதிக்க வேண்டும் அல்லது புகழ பெற வேண்டும் என்ற மனநிலை வேண்டி நாம் செல்வம் சேர்க்க வேண்டிய நிலை வேண்டாம் .இருப்பினும் நம் நம் வாழ்கைக்கு தேவையான செல்வதை நாம் சேர்ப்பது நமக்கு அவசியமாகின்றது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் ,வாழ்வின் முதுகெலும்பு போன்றது.  அது இல்லாமல்  நாம் ஏறுநடைபோட முடியாது. பொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும் .அன்பு நெறியில் அறநெறியில்  அடையாத பொருள் அழிந்து விடும் அதனை அடைந்தவரையும்அழிந்து விடும்.செல்வம் வந்த வழியும் முறையானதாக இருக்க வேண்டும் திருடி தர்மம் செய்வது போல்  சிலர் செல்வத்தை தவறான வழியில் சேர்த்து பின்பு முறைபடுத்தி அதனை நல வழியில் செலவு செய்ய முனைகின்றனர். தவறாக பெற்ற செல்வதை வைத்து தர்மம் செய்து இறையருள் முயல்வது இறைவனால் அங்கீகரிக்கப் படமாட்டாது.   நல் வழியில் செல்வம் கிடைக்க அதனை நல்வழியில் செலவு செய்து இறைவனது அருளையும் பெறலாம். நல்ல காரியங்களுக்காக நன்கொடை அளித்து படிக்க முடியாத ஏழை மாணவர்கள் படிப்பதற்கு இயன்ற பொருளுதவி செய்து அவர்களை படிப்பதற்கு ஊக்குவிக்கலாம் .கல்வி பெறாத நாடு முன்னேற்றம் அடைய முடியாது

  நல்லவகையில் நம்மால்   நடவடிக்கைகள் சிறப்புற அமைய உதவமுன் வரவேண்டும். படிக்க முடியாத ஏழை மாணவர்கள் பலர் இருக்கலாம்.  அவர்களில் திறமையான மாணவர்கள் மேல்படிப்பிற்குச் செல்ல  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்வி மனப்பான்மையுடன் திரிவதை நாம் காண்கிறோம்.  அவர்களுக்குத் வேலைத் தேடித்தர  ஈடுபட வேண்டும்.
பணமின்றி திருமணமாகாத பெண்களுக்கு பொருள் உதவி செய்யலாம். இத்தனைக்கும் நாம் தேவையான செல்வதைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாம் பொருள் நல்வழியில்பொருள் ஈட்ட முயல வேண்டும்.அதற்கான தகுதியை நாம் பெற்றாக வேண்டும். நீரில் மூழ்கியவரை காப்பாற்ற நாம் நீந்தவும் அதற்க்கான வலுவும் பெற்றிருக்க வேண்டும். அந்த
தகுதியைப் பெறாமல் உதவி செய்ய நீரில் இறங்க நாமும் நீரோடு இழுக்கப் படுவோம்.

Wednesday 3 April 2013

யார் வெட்கப்படவேண்டும்!

 புகழ் வந்த பெரியவரைக்  கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது நமது  தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை  விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த  முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும். அவருக்கு கிடைத்த புகழுக்கு நாமும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும். நாம் ஏன் ஒதுங்கவேண்டும்!.ஒதுங்கினால் ஓரம் கட்டப்படுவோம்.

 இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும். அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம் நிமிர்ந்தல்லவா நடை வேண்டும்.

  வெட்கப்படுவது ஒரு மனோவியாதிக்கு  உட்பட்ட செயல்.  தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் முறை வேண்டாம். நம்மிடம் எதோ குறை உள்ளதாக கற்பனை செய்து நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வது ஏற்புடையதல்ல. தாழ்வு மனப்பான்மை நம்மை தாழ்த்திவிடும். நாம் தெரிந்தே தவறு செய்திருந்தால் மனம்வருந்தி திருத்திக் கொள்வது உயர்வு. திருந்தாது தவறு செய்வோர் வருத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அவரை நினைத்துதான் நாம் வெட்கப்பட்டு திருத்தமுயல வேண்டும். நம்மிடம் குறை இருப்பின் நம்மைக் காட்டிலும் கீழ்  உள்ளவரை நினைத்துப் பார்த்து அமைதியடைய வேண்டும்.

அரசியல் உறுதிப்பாடு அற்ற நிலையில் எந்த நாடும் முன்னேற்றத்தை அடைய முடியாது.

இன்றைய அரசியல் நாளைய சரித்திரமாக உருவாகிறது
 ஒவ்வொருவரும் அரசியல் அறிவை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது
அடிப்படை அரசியல் அறிவைக் கூட அறியாமல் அரசியலில் ஈடுபட்டு அரசியல் அறியா மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி மன்றத்திற்கு வருவோர்களால் மக்கள் அவதிப்படுவதனை பார்க்க முடிகின்றது. இதனால் மக்களாட்சி முறையே வலுவற்றுப் போகின்றது.அரசியல் அறிவைப் பெற மக்கள் பெற்ற வாழ்க்கை அனுபவம் மட்டும் நிறைவைத் தந்துவிடாது . மக்களுக்கு போதிய கல்வியும் அதன் வழியே கிடைக்கும் நேர்மையும் ,ஒழுக்கமும் சட்டத்தை மதிக்கும் பண்பாடும்  பெற வேண்டும். ஆட்சி செய்வோர் அத்தகைய திறனைப் பெற்றவராக தெரிந்தெடுப்பதில் வாக்களிப்போருக்கு அரசியல் அறிவு அவசியமாகின்றது .

  அரசியல் உறுதிப்பாடு அற்ற நிலையில் எந்த நாடும் முன்னேற்றத்தை அடைய முடியாது. சிங்கப்பூர் அரசியல் உறுதிப்பாடினால் உயர்நிலையை அடைந்திருப்பதை நாம் அறிகின்றோம். அந்த நிலை நம் அருகில் உள்ள பல நாடுகள் பெறாத காரணத்தால் மேன்மை அடைய முடியாமல் உள்நாட்டுப் பிரச்சனையால்  சீரழிவதனைக் நாம் காண்கின்றோம்.பாக்கிஸ்தான் ,இலங்கை,பர்மா இவைகள் இதில் அடங்கும். பல  இன ஐக்கியத்திற்குப் முக்கியத்துவம் கொடுக்காத நிலையால் அந்த நாடுகள் முன்னேற்றம் அடைய முடியாமல் திணறுகின்றன
 இந்த நிலையை நம் நாட்டிலும் உருவாக்க சில அரசியல் ஊடுருவிகள் முயல்வதை அவசியம் தடுத்தாக வேண்டும். அதற்கு அரசியல் அறிவு அவசியம் தேவை.

Tuesday 2 April 2013

தாவுதலும் பெருமையாக சொல்லப்படும்!

நாணயமின்றி நம்பிக்கை ஏது ?
நாணயமும் நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கம்

நன்னம்பிக்கை நாணயத்தினரோடு
நம்பிக்கையற்ற தன்மை நாணயமற்றோடு

உண்மை ஒன்றிருக்க பொய் ஒன்றிருக்கத்தானே செய்யும்
கவிதை ஒன்றிருக்க பொய்யும் மெய்யும் கலக்கத்தானே செய்யும்

தவறு  ஒன்றிருக்க தண்டனை கிடைக்கத்தானே செய்யும்
தண்டனை குறைவாக இருக்க குற்றம் பெருகத்தானே செய்யும்

வெட்டியாய் சுற்றுகிறாயே வெட்கமில்லையா?

வெட்டியாய் சுற்றுகிறாயே வெட்கமில்லையா
வெட்டியாய் சுற்றாமாலிருக்க வேலை கொடு
வேலை செய்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்
வேலை செய்யும் தகுதியை சொல்லிக் கொடு

தகுதியே வேண்டாம் கட்சியில் சேர்ந்து விடு
தகுதி இல்லாமல் சேர்ந்தால் வேலை கிடைக்குமா
எந்த கட்சியில் சேர்வது வேலை கிடைக்க
எந்த கட்சி ஆள்கிறதோ அந்த கட்சியில் சேர்ந்து விடு

அந்த கட்சியில் சேர யாரை அணுக வேண்டும்
அந்த தொகுதி கட்சி பெரியவரை அணுகி விடு
அவரை அணுக பணம் கேட்பாரோ
அவர் பணம் கேட்டால் கொடுத்து விடு

உருவாகும் கருத்துகள் உயர்வாக இருக்கட்டும்

உருவாகும்  கருத்துகள்  உயர்வாக இருக்கட்டும்
உருவாகும்  கருத்துகள் உயர்வடைய வழி காணட்டும்
கருமேகம் கடலை நோக்கி ஓடி நீரைக் கொட்ட
கொட்டிய நீரும் கடல் நீரோடு கசந்து போகும்

கார் மேகம் காதல் கொண்டு ஒன்றோடு ஒன்று தொடர
காற்றின் குளிர் மேகத்தை சூழ அடைமழையாய் கொட்டும்
மழை கொட்டிய  காய்ந்த இடம் குளிர்ச்சியடைய
காதலர்களுக்கு சூடேற்றம் கொண்டது செடிகள் வளர்ந்தன

Monday 1 April 2013

நன்மையை ஏவு தீமையைத் தடு

சமூகச் சீர்திருத்தத்தை செய்
கடமை காத்திருக்க நழுவுவதேன்
பணி  செய்வதே நம் கடமை
செயலின் எல்லையை விரிவாக்கிக் கொள்
சேவையின் சொல்லை   நயமாக்கிக் கொள்
நோக்கம் நன்மையாகி சேவை விரியட்டும்
தனி மரம் தோப்பாகாது
தனி  மனிதன் சமூகமாக முடியாது
நாம் நிம்மதியடைய சமூகம் வேண்டும்
சமூகத்தின் நிம்மதியில் நமக்கும் பங்குண்டு
சமூகம் நமக்கு என்ன செய்தது என நினையாமல்
சமூகத்திர்க்கு நாம் அளித்த பங்கென்ன நினைத்தல் உயர்வு
சமூகத்தில்  நம் சேவையும் தேவை
சிறு துளி பெரு வெள்ளமாகும்
நாமும் அதில் ஒரு துளி

தடுக்கி விடும் கல்லை ஓரத்தில் நகர்த்துவதும்
தடுக்கி விடும் கல்லை போடவருபவரை நிறுத்துவதும்
தர்மச் சேவையில் அடங்கும்
ஆரம்பம் நம்மிடத்தில் தொடரட்டும்
மேன்மை பெரிதாக பரவட்டும்
சொலவதை சொல்
செய்வதை சொல்
சொல்வதும் செய்வதும் நன்மை பயக்கட்டும்

இலவசமாக சரிபார்க்க இணைய தள அதிகார சோதனை


உங்கள் வலைத்தளம்  மற்றும் வலைப்பூ  தரத்தை பாருங்கள்
அலெக்ஸா ரேங்க்
பேஜ் தரவரிசை mozRank இணைய தள அதிகார சோதனை மற்றும் பல

  இலவசமாக mozRank சரிபார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள் 

அமைதியும் ஆற்றலும் நம்மிடமிருக்க நட்டாற்றில் விடுபவரை நாடுவது ஏன்?

ஆயிரம் இருக்க இஸ்லாத்தின் மகிமையப் பற்றிச் சொல்ல
பாயிரம் பாடுவார் இஸ்லாத்தில் இல்லாததை இட்டுக் கட்டி
படித்ததோ மார்க்க மகிமை அறிய சொல்வதோ மந்திர மகிமை
வேதம் படித்து விளக்கம் பெற்று தன்  பை நிரப்ப திட்டம் போடுகிறார்
சூன்யம் மந்திரம் அற்புதம் அதிசியம் இதன் மேல் ஈடுபாடு
காந்தம் போல் மக்களை அதை சொல்லி இழுக்கும் நிலைப்பாடு
சிக்கலை தவிர்க்க இவரிடம்  சென்றால் மற்றொரு சிக்கலில் மாட்டிவிடுவார்

அற்புதமென்பார் அதிசியமென்பார்  அதைப்பார்க்க ஆயிரம் பேர் கூடுவார்
'அதிசியம் ஆனால் உண்மை அவரிடம் போனேன்' தொலைந்தது கிடைத்ததென்பார்
அற்புதம் தடவினார் ஊதினார் மற்றும் ஒதினார் உடல் நலம் நலமுற்றேனெபார்
அற்புதமும் அதிசியமும் அவரைக் கொண்டு நிகழுமென்பார்
 அற்புத அதிசிய மனிதரை நோக்கி மக்கள் ஓட்டம் அலைமோதும்
அற்புத அதிசிய மனிதர் தன்  நலம் பார்க்க மருத்துவரை நோக்கி ஓட்டம்

நாயகம் கொண்ட நம்பிக்கை இறைவன்மீது
இவர் கொண்ட நம்பிக்கை அதிசியத்தின் மீது
விண்மீன்கள் நகர்வது இறைவனின் நாட்டம்
விண்மீன்களை வைத்து இவர்  பணம் பண்ணுவது  அதிர்ஸ்டத்தை சொல்லி
கிரகணங்கள் நிகழ்வதால் மனிதனின் நிகழ்வுகள் மாறுமோ!
வைரத்தை வகையாகப் பிரித்து அதில் அதிர்ஸ்டத்தை புகுத்துவார்