Friday 30 June 2017

யார் அந்த தமிழ் நெஞ்சம்


அறியப்பட வேண்டிய நண்பர் தமிழ்நெஞ்சம் .

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  தமிழ்நெஞ்சம்.
தமிழ்நெஞ்சம்.அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் தமிழ்நெஞ்சம். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

Sunday 18 June 2017

பெண்ணிற்கு தோல்வியை தாங்க முடியாது.


கிளியோபாட்ரா எகிப்து நாட்டின் ஆட்சியாளராக இருந்தது கிளியோபாட்ராவின் அழகு மட்டும் காரணமல்ல .
கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் சரளமாக பேசக் கூடியவளாகவும் கணித, தொழில் வல்லமை பெற்றவளாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது.
கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் மிகவும் பிரபலமான ராணியாக இருந்தாள். அவள் அலெக்ஸாண்ட்ரியாவில் 69 கிமு பிறந்தார். அவரது சகோதரிகள் இறந்த பிறகு, அவர் அரியணை அடைந்தாள். மற்றும் தனது ஆட்சியின் போது, தனது ஆட்சி வேகமாக விரிவடைந்த ரோமானிய பேரரசாக எகிப்து இருக்க வேண்டுமென வெகுவாக விரும்பினாள் .

உதட்டில் வரி வந்து வாயை அடைக்கிறது . .

மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!
1 பெட்ரோல் விலை ஏற்றம் . ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2 கேஸ் விலை அதிகம் ஆனாலும் தேவைக்கு அது கிடைப்பதில்லை
3 பஸ் டிக்கெட் விலை அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் அது நேரத்திற்கு வந்து சேர்வதில்லை!
வந்து சேர்ந்தாலும் இடம் கிடைபதில்லை
4 ஒரு கிரிகெட்டிற்கு கோடிக்கணக்கான பணத்தைக் செலவழிப்பார்கள் ஆனால் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் விளையாட இடமில்லை.
5 உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.ஆனால் நடைபாதை நடக்கக் கூடிய பாதைகளாக இல்லை
6 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!

நோன்பு வைப்பது உடல் நலத்துக்கு நல்லது என்பதால் மட்டும் நோன்பு வைக்கவில்லை
ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டியது கடமையானது இறைவன் சொன்னதால் அதனால் நோன்பு வைக்கின்றோம்
நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!
இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் .
நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.
ஆனால் இறைவன் தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது.
இறைவன் அவசியம் என்று நம்பினால், இறைவன் உள்ளதையும் நம்ப வேண்டும்.

நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

விடியல் வருமுன்னே விழிகளில் நீர் பாய்ச்சி
வைகறையில் நீல வானத்தை நோக்கி
விழிகள் நட்சத்திரங்கள் போல் இமைக்க
வழியைப் பார்த்து புத்துணர்ச்சி பெற்று நடை போட
அவனை நேசித்து அவனுக்காக அவனில்லத்தில் தொழுதேன்.

நேற்றைய வேலைகள் இன்று நெடு நேரம் உறங்க வைக்க
விடியல் வரு முன்பே இறைவனைத் தொழுதல் கடமையாய் இருக்க
இறைவனைத் தொழுதலை தாமதிக்கச் செய்ய
இன்றைய விடியலின் அழகையும்
இயல்பான இனிய மகிழ்வையும் இழக்க நேரிட்டது

Monday 5 June 2017

எல் .கே . ஜி , அப்புறம் (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா என்னாங்க?

உங்கள் பையன்(குழந்தை) என்ன படிக்கிறான்?
எல் .கே . ஜி படிக்கிறான் .
உங்கள் பெண் (குழந்தை) என்ன படிக்கிறாள்?
யூ.கே .ஜி படிக்கிறாள்.
கிராமத்து பாட்டி கேட்க குழந்தையின் தாய் பதில் சொல்கிறாள்.

எல் .கே . ஜி , அப்புறம்  (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா  என்னாங்க?
அது இந்த காலத்திலே ஒன்னாவதுக்கு (ஒன்றாவதுக்கு) முதலில் படிப்பது.   அது உனக்கு சொன்னா  தெரியாது! (என்னமோ இவங்களுக்கு மட்டும் தெரிந்தது போல் குழந்தைகளின் தாய் சொல்கின்றாள். தாய்க்கே தெரியாது அதனை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கே தெரியாது என்பது!)

'ஏம்மா பாவம் ,சரியாக சாப்பிடவும் இல்லாமல், இவ்வளவு  பெரிய பையிலே கனமா புஸ்தகம்,நோட்டு எல்லாம் தூக்கிட்டு போறாங்க. சின்ன குழந்தை.அதிலும் பையன்  வீட்டிலே ரப்பர் போட்ட பாட்டிலே (பீடிங் பாட்டில்லே) பால் குடிக்கிறான் பள்ளிக் கூடத்திலே எப்படி சாப்பிடுவான்'?  'நான் தான் போய் கொடுக்க வேண்டும். என்பாள்  தாய்.

Thursday 1 June 2017

கருப்பு நிறமுடையவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள் .

கருப்பு நிறமுடையவர்கள் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் களையாக இருப்பார்கள் .
கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு வெப்பத்தினால் உண்டாகும் தோல் வியாதிகள் வருவது குறைவு. சாதனை செய்வதிலும் அவர்கள் குறைவதில்லை.
கருப்பு பணம் வைத்திருப்பதுதான் தவறு.
கருப்பு நிறமுடன் இருப்பது தவறில்லை.
தான் ஒரு கருப்பு நிறமுடையவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் ஒரு காலமும் வரக் கூடாது. அவ்விதம் நினைத்திருந்தால் வெள்ளையர்கள் நிறைந்த நாட்டில் ஆப்ரகாம்லிங்கனும்,ஒபாமாவும் உயர்ந்த பதவிக்கு வந்திருக்க முடியுமா!
நாம் தான் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம்.