Monday, 30 December 2013

நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்

நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )

சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்

தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா

Sunday, 29 December 2013

'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். ..

'பாங்கு சொல்லிட்டாங்க . ஜும்மாவுக்கு போய் ஹஜ்ரத் ஹதீஸ் சொல்வார் போய் கேள் .சீக்கிரம் கிளம்பு '
-தாய்

'ஒவ்வொரு வாரமும் தான் ஹதீஸ் சொல்கிறார் .நான் கேட்கிறேன். மனதில் நிற்காமல் மறந்து விடுகிறதே. பின் ஏன் அவசரப் படுத்துகிறாய்.'
-மகன்

'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். நல்லா உண்கிறாய் அது உன் வயிரிலேயே இருந்துக் கொண்டேவா இருக்கு. அந்த உணவுதான் உன்னை உயிர் வாழ வைக்கிறது .அதுபோல் தான் . அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும், .அது உன்னை அறியாமலேயே உன்னை உயர்வடையச் செய்யும்.உனக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். அதன் அருமை உனக்கு இப்போது விளங்காமல் போகலாம். ஆனால் உன் உள் மனதில் உறைந்து நிற்பதனை காலம் வரும்போது நீ அறிவாய். '
-தாய்

பயணத்தில் பார்வை

பயணத்தில் எழைகளின் எளிய வாழ்வை பார்த்து அறிந்தது
பயணம் இனிய முறையில் முடிந்தது
பயணத்தில் கண்டது மகிழ்வைத் தந்தது
பயணம் அறிவைத் தந்தது

நம் வீட்டில் ஒரு பூனை
ஏழை வீட்டில் நான்கு பூனைகள்

நம் தோட்டத்தில் ஒரு குளம்
ஏழையின் வீட்டின் அருகில் நீர் நிற்காத ஒரு சிற்றோடை

நம் தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் காட்டுகிறது
ஏழை வீட்டின் கொள்ளையில் நிலாவும் நட்சத்திரங்களும் ஒளி தருகின்றன

நம் தோட்டத்தின் பாதுகாப்புக்கு நாற்புறமும் சுவர்கள் மற்றும் காவலர்கள்
ஏழையின் வீட்டில் சேவை ஊழியர்கள்,காவலர்கள் இல்லை
ஏழையின் வீட்டிற்க்கு உறவினர்களும் நண்பர்களும் பாதுகாவலர்கள்

நம் வீட்டு தலைவாயிலில் வளைவாக செயற்கையாக அமைக்கப்பட்டது 'போர்டிகோ'
ஏழையின் வீட்டின் அடிவானத்தில் அழகுடன் காட்சி தரும் வானவில்

Friday, 27 December 2013

இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை

மின்னல் போல் மகிழ்வுகள் வரும்
மழை போல் சோகங்கள் கொட்டும்

மின்னலைக் காண விழிகள் மூடும்
மகிழ்வுகள் வர தன்னிலை மறக்கும்

மின்னலும் நீடிப்பதில்லை
மகிழ்வுகளும் நீடிப்பதில்லை

மின்னல் வரும் முன்னே
இடி வரும் பின்னே

Wednesday, 25 December 2013

என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன் !

நீங்கள் என்னை நேசிக்க
நான் உங்களை நேசிக்காமல் போனதால்
நீங்கள் என்னை விடுத்து போனீர்கள்
நான் வெளிப்படுத்திய செயல்கள்
நான் உருவாக்கிய இழப்பு என்று இப்போது அறிகின்றேன்

நீங்கள் வெளித்தோற்றத்தில் மனத்தைக் கவரவில்லை
நீங்கள் உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
உங்கள் மடல், உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
என்னை உங்கள் மீது உருவக வழியில் உங்களை நேசிக்க வைக்கிறது
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய தாள்களை கிழித்ததை ஒன்று சேர்க்கிறேன்
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய பாடல் , கவிதை மற்றும் உரைநடைகள்
என் மனதை உருக வைத்துள்ளது
என் விழிகள் அருவிபோல் நீரைக் கொட்டுக்கின்றன
திடீரென்று ஒரு பஞ்சம் நாட்டிற்க்கு வந்ததுபோல்
திடீரென்று ஒரு தனிமை உணர்வு எனக்குள் வந்து விட்டது

என் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு
உங்கள் உருவம் அசைந்தாடுகிறது
நீங்கள் இல்லாத நிலையில்
என் உலகம் இருண்டதாக இருக்கின்றது
என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன்

Monday, 23 December 2013

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை!

இறைவா எனக்கு மன்னிப்பை வழங்கிடு
நிறைவாய் நான் உன்னை பிரார்த்தித்து இறைஞ்சுகிறேன்

நான் என் வாழ்நாட்களில் நல்லது செய்யவில்லை
நான் உன்னை நினையாமல் நல்லது செய்ய விடுத்தேன்
நான் வேண்டுமென்றே அனைத்தும் செய்யவில்லை
நான் செய்தவைகள் அறிந்தும் அறியாமலும் செய்தவைகள்
நான் செய்தவைகள் அனைத்தும் நீ அறிந்துக் கொள்வாய் என அறியாமல் போனேன்
நான் சென்ற தவறான வழிகள் அறிந்து இறுதியாக உன் வழி நாடி நிற்கின்றேன்
நான் கேட்கும் ஒரு வாய்ப்பு நல்லது செய்ய வேண்டி
நான் வேண்டுதல் கேட்டு உன்னிடம் நிற்கின்றேன்

யார் அறிவார் நம் நிலை


யார் நல்லவர்
யார் கெட்டவர்
யார் அறிவார்
யாவையும் இறைவனே அறிவான்

நல்லவரை கெட்டவரென்றால் கெட்டவராகலாம்
கெட்டவரை நல்லவரென்றால் நல்லவராகலாம்
மணலில் நல்ல விதைகளை விதைத்தால் நல்லவைகள் கிடைக்கலாம்
மனதில் நல்லதை விதைத்தால் நல்லவராகலாம்!

தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்...

தாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்
தாளாத துயரத்தில் நான் படும் பாடு நீ அறிவாயோ!
பகற்பொழுதும் கனலாய் சுடுகிறது
பனிக் கொட்டும் இராக்காலமும் அனலாய் சுடுகிறது
படிந்துள்ள தூசியை துடைத்து வைப்பாய்
படிந்துள்ள தூசி நாசியை நெருடுகிறது
உன் நினைவில் என் இமைகள் மூடுமோ!

நீ இல்லாத இராக்காலம் கனாவாய் கழிகிறது
நீ இல்லாத இருளில் சுருண்டு கிடக்கிறேன்
நீ கிளப்பிய வேகத்தை
நீ திரும்புவதிலும் வேகத்தைக் காட்டு
நீ இல்லாது மனமும் வெறுச்சோடி போனது
நீ இல்லாத இல்லமும் வெறுச்சோடி போனது
நீ இருக்கும் நேரத்தில்
பசுமையாய் சோலையாய் மனதில் நிற்பாய்
நீ இல்லாத நேரத்தில்
பசுமையற்ற பாலையாய் மனதை வாட்டுகிறாய்

பறவைகலும் மாலை நேரத்தில் கூடு திரும்பும்
பணி செய்யும் பாவையாய் வீடு திரும்பு

Sunday, 22 December 2013

விருப்பமும்(லைக்கும்) கருத்துரையும்


லைக் (விருப்பம் )ஒரு உந்து சக்தி

லைக் கொடுப்பது விருப்பத்தின் அறிகுறி
லைக் மனிதருக்கு மனிதர் வேறுபடும்
லைக் இருந்தும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது அடக்கம்
லைக் கொடுத்து மாற்றுக் கருத்து வர விரும்பாமல் இருக்கலாம்
லைக் கொடுத்தவர்க்கு நன்றி மனதளவில் வந்து மகிழலாம்
லைக் கொடுத்தவர்க்கு நன்றி சொல்ல விடுபட்டதால் லைக் கொடுத்தவர் மனது வருந்தலாம்
லைக் போட்டுத் தான் ஆக வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது முறையல்ல
லைக் ஆகும்படி எழுதுவது சிலருக்கு கை வந்த கலை
லைக் கொடுப்பது தெரிந்தவருக்கு மட்டும் கொடுக்கப் படலாம்
லைக் ஆக எழுதியதாக தானே நினைத்து மகிழலாம்
லைக் செய்தால் தான் நண்பன் எனபது நட்பின் அடையாளம் ,நண்பன் செய்வதெல்லாம் லைக் ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை
லைக் ஒரு தலைக் காதல் போன்றும் இருக்கலாம்
லைக் தனிப்பட்ட ரசனையைப் பொருத்தது
லைக் செய்யாவிட்டாலும் செய்வதனை செய்து லைக் ஆகும் வழியை முயற்சிக்கலாம்
லைக்காண வாழ்க்கை கிடைப்பது கடினம்
லைக்காண வாழ்க்கை கிடைக்க இறைவழி வாழ வேண்டும்
லைக்கான வாழ்க்கை நிரந்தர வாழ்க்கை சுவனத்தில்தான் கிடைக்கும் 

Friday, 20 December 2013

விதி

விதியில்லாதது ஏது
வீதிக்கும் விதியுண்டு
வாழ்விற்கும் விதியுண்டு
சட்டத்திற்கும் விதியுண்டு
மனிதன் போடும் சட்டத்தின் விதியை
மனிதன் நாடும் விதத்தில் மதியால்  மாற்றலாம்
இறைவன் விதித்த விதியை மாற்ற
இறைவனால்தான் முடியும்

இறைவனது விதியை ஆய்வோர்
இரண்டு கால்களையும் தூக்கி முயல்வோர் ஆவார்

வா! வந்து பார் ! வர்ணித்தது போதும்.

கனியென வர்ணித்த கன்னங்கள் குழி விழுந்தன
முத்தென வர்ணித்த பற்கள் சொத்தை விழுந்து சிதறின

கட்டான உடல் கலை யிழந்து போயின
உதிரும் முடியும் நிறம் மாறும் முடியும்
பருவ மங்கையாய் இருந்த தோற்றத்தை மாற்றின
இன்னும் இருக்குமிடத்திலிருந்து வர்ணனை செய்கிறாய்

வா! வந்து பார்!
வரி வரிகளாய் வர்ணித்தது போதும்

நாட்கள் நகர்கின்றன
ஆண்டுகள் பறந்துவிட்டன

பறந்து போன இடம் அடைக்கலமானதோ
இருந்து வாழ்ந்த இடம் நினைவை விட்டு அகன்றதோ

பெண்ணின் பொறுமையால்
என்னின் நிலை அருமை அறியாமல் போனாய்

போனது போகட்டும்
இணைந்தவள் இருக்கிறாள்
இறக்கம் கொண்டு வந்து கண்டு விடு
இணைந்தவள் இறப்பதற்குள்

Thursday, 19 December 2013

தங்கத்தில் தரம் காண வேண்டும்

தங்கத்தை பார்க்க மகிழ்வு .
தங்கத்தை வாங்க முடியாமல் விலை உயர்வு .
தங்கம் நிலவரம் அறிய திகைப்பு

தங்கமான மக்களுடன் கூடிய நட்பு சிறப்பு
தங்கத்தில் சுத்த தங்கமும் உண்டு
தங்கத்தில் கலப்படமும் உண்டு
தங்கமான நட்பாக நினைத்து கலப்படமானது
தங்கமான நட்பு கலப்படமானது அறிய கலங்கியதும் உண்டு

தங்கமான நட்பு கிடைக்க இறைவன் அருளும் வேண்டும்
தங்கமான மக்களுடன் பேசிவதில் மன நெகிழ்வு வர வேண்டும்

தங்கமான நட்பு மனதை ஊக்கு விக்கும்
தரம் கெட்ட நட்பு நம்மை தாழ்த்த நினைக்கும்

தங்கத்தில் தரம் காண வேண்டும்
நட்பிலும் தரம் அறிய வேண்டும்

நட்புக் கரம் நீட்ட தடை செய்ய மனமில்லை

Wednesday, 18 December 2013

சட்டமும் , விதியும் , மார்க்கமும் நகைத்து நிற்கின்றன

அலைகளில் மாட்டித் தடுமாறி தப்பிக்க முயல்வது போல்
அரசியல் சட்டத்தில் மாட்டிக் கொண்டவர் தப்பிக்க முயல்கின்றனர்
அரசியல் சட்டம் அறியாது பிழை புரிந்தவர்
அரசியல் சட்டம் அறியாதது பிழையென பிடி வாரண்டில் பிடிக்கப் படுகின்றனர்
அரசியல் சட்டம் அறிந்தும் பிழை செய்தவர் சட்டத்தின் ஓட்டையை பிடித்து விடுகின்றனர்
அரசியல் அறிவு அற்றோரும் அரசாட்சியில் நுழைந்து விடுகின்றனர்
அரசியல் அறிவு வேண்டாம் அனுபவ அறிவு போதுமென்கின்றனர்

குடும்பம்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .
நல்லொதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும்
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்”

நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

விடியல் வருமுன்னே விழிகளில் நீர் பாய்ச்சி
வைகறையில் நீல வானத்தை நோக்கி
விழிகள் நட்சத்திரங்கள் போல் இமைக்க
வழியைப் பார்த்து புத்துணர்ச்சி பெற்று நடை போட
அவனை நேசித்து அவனுக்காக அவனில்லத்தில் தொழுதேன்.

இல்லம் வந்து இனிய தேநீர் அருந்தி
மகிழ்வு தரும் குழ்ந்தைகளுடன் கொஞ்சி விளையாடி
நண்பர்களுக்கு முகநூல் வழி மின்னஞ்சல் செய்து
முகநூலில் அறிந்ததை எழுதி மகிழ்ந்து
சூடான சுவையான சிற்றுண்டி உண்டு
பழ சாறுகள் மற்றும் பானங்கள் அருந்தி
சூட்டோடு செய்து வர வேலைகள் முடிக்க புறப்பட்டேன்

Tuesday, 17 December 2013

எதிலும் அவசரம்

பட்டாம் பூச்சி பறப்பதில் அழகு
பட்டாம் பூச்சி நிறமும் அழகு
பட்டாம் பூச்சி கூடு கட்டுவதும் அழகு
பட்டாம் பூச்சி தன் வேலையை தானே செய்வதும் அழகு

அந்த அழகை கண்டு ரசிப்பதும் அழகு
அது கட்டிய கூட்டில் உள் நுழைவதும் அழகு
அது நுழைந்த கூட்டில் வெளி வராமல் தவித்ததில் வருத்தம்
அது நுழைந்த கூட்டிலிருந்து வெளி வர கத்தரியால் அதன் கூட்டை கத்தரியால் வெட்டி பெரிது படுத்த அது வெளிவர அதன் மீது காட்டிய பரிவில் மகிழ்வு

சேவைக் கொள்கை வாகை சூடட்டும்

தேர்தலில் கூட்டு நாட்டுக்கு கேடு
கொள்கை சேவையோடு சேரட்டும்
கொள்கை தனித்து விளங்கட்டும்
சேவைக் கொள்கை வாகை சூடட்டும்

உணவில் கூட்டு இருப்பின் பிடிப்பு
குடும்பத்தில் கூட்டு இருப்பின் பிணைப்பு
கட்சியில்  கூட்டு குழப்பம்
ஆட்சியில் கூட்டு சந்தர்ப்பம்

பிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு

குடியை தடுக்க விளம்பரம் செய்
குடிக்கும் வியாபாரம் செய்

புகை பிடித்தால் புற்று நோய் வருமென அறிவுறுத்து
புகைப் பிடிக்கும் சிகெரெட் விற்க அனுமதி கொடு
புகைப் பிடிக்கும் சிகெரெட்டுக்கு வரி கூட்டி கஜானாவை பெருக்கு

எட்ஸ் தடுக்க வழி செய்
ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க சட்டம் வர முயற்சி செய்

Tuesday, 10 December 2013

பிறப்பும் இறப்பும்

சரியான உப்புக் கலவை
சரியான காரக் கலவை
சரியான உணவு
சரியான காலத்தில் திருமணம்
சரியான காலத்தில் குழந்தை
சரியான வளர்ச்சி குழந்தை
சரியான அறிவுக் குழந்தை

சரியான குழந்தையின் கேள்வி 'யார் இறைவன்!'
சரியான புரிதல் இறைவனைப் பற்றி
சரியான புரிதலால் இறைவனை தொழுதல்
சரியான ஒளு(தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல்)
சரியான தொழுதல்

Sunday, 8 December 2013

சொல்லிவிட்டேன் !

என்
மனதுக்குள்
அழுத்தி வைத்ததை
என்னை அறியாமல்
சொல்லிவிட்டேன்.
சொல்லிவிட்டதை
எண்ணி
என் மனம் பதைக்கிறது

நெஞ்சில் உள்ளதை
நெடுநாள் நிறுத்தி வைக்க முடியவில்லை

உன்னிடம் நான் சொல்லிவிட்டேன்
உன்னிடமே உன்னைப் பற்றியதை
ஒளிக்காமல் உன்னிடமே சொல்லிவிட்டேன்
ஒளிவு மறைவின்றி உண்மையை சொல்லிவிட்டேன்

Wednesday, 4 December 2013

வாழ்வை ரசிக்க வேண்டும்

 தன் குஞ்சு பொன் குஞ்சுதான்.

வீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தால் அவர்களிடத்து பாசம் அதிகமாகும். அவர்களுக்கும் நம் மீது நேசம் மிகும். வீட்டில் இருக்கும்போது கணினியில் காலத்தை வெகு நேரம் செலவிடாமல் மனைவிக்கு உதவியாக இருக்கும்போது சமைக்கவும் தெரிந்துக் கொள்வது நல்லது. அதனால் மனைவிக்கு வீட்டு வேலை குறையும் .
சமைப்பதில் பொதுவாக பெண்கள் தங்கள் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் (அதிகமான பெண்களுக்குத்) தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் பலவகையில் சமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவர். சமையல் புதுமையாக இருப்பதால் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிடுவர்.

Monday, 2 December 2013

அறிவைத் தேடு ஆண்டவனை அறிய

ஆண்டவனை அறிந்தால் ஆண்டவன் காட்டிய வழி நடப்பாய்
ஆண்டவன் காட்டிய வழி நடந்தால் வாழ்வின் மகத்துவம் அறிவாய்

வாழ்வின் மகத்துவம் அறிந்தால் வாழ்வை உயர்வாக்கிக் கொள்வாய்
வாழ்வை உயர்வாக்கிக் கொண்டால் வாழும் வாழ்வு சிறப்பாகி விடும்

வாழ்ந்த வாழ்வு சிறப்பானால் இறைவனது நேசம் கிடைக்கும்
இறைவனது நேசம் கிடைத்தால் சுவனத்தின் வழி கிடைக்கும்

சுவனத்தின் வழி கிடைத்தால் வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாகிவிடும்
வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாக்கிவிட்டால் இறைவன் தந்த வாழ்வு நிறைவாகிவிடும்

இறைவன் தந்த வாழ்வை நிறைவாக்கிவிட்டால் இறைவனை அறிந்தவன் ஆனாய்

போராட்டமே வாழ்வாகிவிட்டது


அவர்கள் தங்கள் உயிருக்காக போராடுகிறார்கள்
அவர்கள் மற்றவர்கள் உயிருக்காக போராடுகிறார்கள்
அவர்கள் மற்றவர்கள் நலத்திற்க்காக போராடினார்கள்
அவர்கள் போருக்கு தாங்களே விரும்பி சென்றார்கள்
அவர்கள் போருக்கு கட்டாயத்தின் காரணமாக சென்றார்கள்
அவர்கள் போருக்கே போகாமல் கட்டாயமாக காரணமின்றி அடைக்கப் பட்டார்கள்

அவர்கள் மனைவியர்கள் மனதுக்குள் போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் நலமே திரும்ப வேண்டுமென்று போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் தங்களிடம் வரவேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றார்கள்

Sunday, 1 December 2013

உன் ஆணைக்கு நான் அசைகிறேன்!


உன் ஆணைக்கு நான் அசைகிறேன்
என் ஆட்டத்தை நீ கண்கானிக்கிறாய்

உனை தொழுது நான் வேண்டுகிறேன்
உனை யல்லால் யாரை நான் வேண்டுவேன்!

உயர்வானதை   சேர்க்க உன் உதவி வேண்டும்
உயர்வானதை   சேர்க்க என் கடமையை நான் செய்ய வேண்டும்