Thursday, 31 July 2014

காதல் திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா !

திருமணத்திற்குப் பின் வரும் காதல் உயர்வானது

காதல் வெளிப்படையானதாக தூய்மையானதாக நேசத்தில் இருப்பது குறைவு
காதலில் இன ஈர்ப்புத் தன்மை மிகுந்து விடலாம்
பாலியல் திருப்தி பெற்ற பிறகு விரைவில் காமம் கலந்த காதல் கதை சில நிமிடங்களில் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது .
சோர்வும், சலிப்பும் சேர காதல் தோல்வியாக மாறுகிறது
காதலில் காமம் கலந்து விட காதலும் நேசமும் மறைந்து விடும்

காதலில் விரைவில் சந்தேகம் உதிர்வதால் கொடுமை, பொறாமை ஏற்படுகிறது.
எனவே காதலால் துன்பம், வலி வர அது கண்ணீராக மாறிவிடும்.
காதலில் இறக்கம் ,மன்னிக்கும் குணம் ,சமரசம் செய்யும் மாண்பு இல்லாமையால் காதல் வசப்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
காதலில் மிகைத்து திருமணம் செய்ய முற்பட திருமணத்திற்குப் பின் புதுமையான அனுபவங்களை அடைவது குறைவு

Friday, 18 July 2014

முக்காடிட்ட பெண்களெல்லாம் முடங்கிக் கிடப்பதில்லை


முக்காடிட்ட பெண்களெல்லாம் முடங்கிக் கிடப்பதில்லை
முக்காடிட்ட பெண்களெல்லாம் அடிமையாகவுமில்லை
முக்காடை அணிந்து பெண்கள் செல்வது
ஒரு தொடர்வழி கலாசாரத்தின் நாகரீகம்

காக்கை கருப்பென்றால்
கருப்பெல்லாம் காக்கையாகுமா
காக்கையில் கருப்பும் உண்டு
காக்கையில் வெள்ளையும் உண்டு
காம்பியாவில் வெள்ளை காக்கைகளைத்தான் பார்க்க முடியும்
காம்பியாவில் வாழும் மக்கள் கருப்பு நிறத்தவர்
(நேரில் பார்த்தது )

Wednesday, 16 July 2014

எதைச் சொல்வது ?

எதைச் சொல்வது ?
துயரத்தையா!
மகிழ்வையா !
தியாகத்தையா!

அனைத்தையும் மறைத்து விடு
அனைத்தையும் மறந்து விடு
அனைத்தும் தொடரும்
அடுத்த நிமிடமே தொடரும்
வ்ரும்பினாலும்
விரும்பாமல் ஒதுங்கினாலும்
விட மாட்டார்கள்
தொடர்வார்கள்
தொல்லைகளும் தருவார்கள்
தொல்லைகள் தந்தமைக்கு
வருத்தமும் தெரிவிப்பார்கள்
அடுத்த நாளே
அதனை தொடர்வார்கள்
அத்தனை விதமாக மக்கள்
நம்மை சூழ வாழ்கின்றோம்

Tuesday, 8 July 2014

மனது புதுமைகளை தந்துக் கொண்டே இருக்கும்

கடலில் உயிர் வாழ்பவை பல் வகை
கடலில் உயிர் போக்கியவை பல் வகை

மனதில் உதித்தவை பல் வகை
மனதோடு அழிந்தவை பல் வகை

கடலில் இருப்பதும் வாழ விரும்புகின்றது
மனத்தில் இருப்பதும் சொல்ல விரும்புகின்றது

கடலில் அழிந்தவை பயனற்றுப் போனது
மனதில் உதித்தவை பயன்படுத்தாமல் பயனற்றுப் போனது

கடல் அலையும் தொடரும்
கடல் நீரும் வற்றாது

வேலை வீண் விரயமாகக் கூடாது


குளிர் தரும் சாதனா அமைப்பு இல்லாத இடத்தில வேலை செய்யாதே
குளிர் தரும் சாதனா அமைப்பு இருந்தாலும் தொடர்ந்து அங்கு மின்சாரம் கிடைக்குமா என்பதை அறிந்து வேலைக்குப் போ
வியர்வை வர வேலை செய்து வியர்வை வாடையோடு வீட்டுக்கு வராதே
வேலை செய்யும் கட்டிடம் இடி இடித்தாலும் இடியும் தருவாய் நேர்ந்தாலும் உயிரோடு வீட்டிற்கு வர உத்தரவாதம் அரசு கொடுத்தால் வேலைக்குப் போ
வியர்வை நாற்றம் வீட்டோடு இருக்கட்டும் அதனை வெளியில் தெரியும் படி செய்து விடாதே
வேலை செய்வது நமது வாழ்வுக்கு
வேலை வாங்கி அவர்கள் பிழைத்து நம் உயிரை போக்கும் நிலை வராமல் பார்த்துக் கொள்

Monday, 7 July 2014

இறைவனை மறந்த நிலை


உன்னை எனக்குத் தந்தாய்
என்னை உனக்குத் தந்தேன்
நம்மால் பலர் வந்தனர்
நம்மால் பலரும் பல பக்கமும்
பக்கங்கள் பிறழ்கின்றன ( உயர்த்தப்பட்டுப் பிறழ்கின்றன! )
பிறழ்ந்ததில் மாற்றங்கள்
மாற்றங்களில் புதுமை புகுந்தன
புகுழ்ந்ததில் மகிழ்சிகள் கை வசமாயின
கைவசம் வந்ததில் சுயலமும் புகுந்தன
புகுந்ததில் பிரச்சனையும் உருவாகின
பிரச்சனையை ஒடுக்க ஆயிரம் போராட்டங்கள்
இணைந்தது உயர்வை நோக்கி
இணைந்ததால் பிரச்சனை வந்தது இறைவனை மறந்த நிலை

அறிய நம்பிக்கை வேண்டும் உண்மையை இறைவனே அறிவான்

உங்களைப் பற்றி உண்மையானது
உங்களைப் பற்றி உண்மையானதை எழுதுங்கள்
உங்களைப் பற்றி உண்மையானதை எழுத உயர்வீர்கள்

உங்களைப் பற்றி உண்மையானதை அடுத்தவர் எழுதுவது முடியாது
உங்களைப் பற்றி அடுத்தவர் எழுதுவது
உயர்வானது மட்டும் இருக்கும் அல்லது பொய்யானது கலந்து இருக்கும்
உங்களை உயவாக்க அது உதவாது
-------------------------------
இறைவனை நம்பு
இறைவனை நம்பினால்தான்
நம்பிக்கை மீது
நம்பிக்கை உள்ளவனாகிறாய்
இறைவன் அறிவான்
இறைவன் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையை

மனிதனிடமும் நம்பிக்கையுடையவனாக நடந்துக் கொள்
மனிதர்களில் சிலர் நம் செயலின் மீது நம்பிக்கை பெறவில்லையெனில்
மனிதர்களில் சிலர் பெறாத நம்பிக்கையைப் பற்றி வருத்தப் பட்டு சோர்ந்து விடாதே
மனிதனாய் நம்மை படைத்த இறைவன் மீது நாம் நம்பிக்கை பெற முயல்வதே நம் வாழ்வின் உயர்வு

பெண்கள் ஆடை உடுத்துவது

பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு இணங்க ஆடை உடுத்துவது அவர்களது உரிமை
பெண்கள் ஆடை உடுத்தும் உரிமையை சட்ட விதியால் தடுக்க முடியாது
பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்த வேண்டுமென்றும் கட்டாயப் படுத்த முடியாது

குறையும் நிறையும்

குறையை மட்டும் காண்பது
நிறைவைத் தராது
நகர விடாது

நிறைவை மட்டும் காண்பது
குறையை அறியாமல்
தடுமாற வைக்கும்

உண்மையை அறிவது
நன்மையை நாடி நகரும்

Friday, 4 July 2014

விவாதம் செய்ய தர்க்கமானது

விவாதம் செய்ய தர்க்கமானது
விவாதம் செய்ய முகம் மாற்றமானது
தர்க்கம் செய்ய முகம் கொடூரமானது
விவாதம் ஒரு தலைப்பை பற்றி இருக்க
விவாதம் தர்கமாகியதால் தனி மனித சாடலாகியது

அது சரி இது சரியில்லை என்பது போய்
நான் சரி நீ சரியில்லை என்று மாறிப்போனது

விவாதத்தால் மாறியவரில்லை
விவாதம் காட்சிக் கூடமானது

விவாதம் நட்பை போக்கியது
விவாதம் முடிவைத் தரவில்லை

செயல் படுவோர் விவாதத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்
செயல் படுவோர் விவாதத்தை ஒதுக்கி தான் விரும்பியபடி சட்டமாக்கி விடுகின்றார்
-------------------------------

பாசங்கள் இருப்பதால் கண்கள் குளமாகின்றன

அதி காலை நேரத்தில் கண்கள் குளமாயின

ஒருவர்
"உன்னைக் காணக் காத்திருக்கிறேன்
கண்மணியே..."

மற்றொருவர்
"எங்கள் வாப்பும்மா...
மனசெல்லாம் வந்தாயே ...
அன்பை நிதம் தந் தாயே..."

பாசமானவர்கள் பிரிந்த நிலையை
பாசத்தை தந்தவர்கள் பிரிந்த நிலையை
பாசமாக நெஞ்சமெல்லாம் நினைவில் நிறுத்தி
நேசமாக நினைவு கொள்கின்றார்கள்

Thursday, 3 July 2014

இணையதளம் உருவாக்க தற்போது எளிய வழியாக உள்ளது.



                                        எல்லாம் இன்டர்நெட் மயம்! ("மாயம்")

ஒரு தனிப்பட்ட இணையதளம் உருவாக்க  தற்போது எளிய வழியாக  உள்ளது. இதனால்  நீங்கள் முழுமையாக நவீன உலகில் உங்களை  பங்கேற்க வழி வகுக்கின்றது  மற்றும் நீங்கள் விரும்பினால் அதனை  ஆதாயத்திற்காகவும்   பயன்படுத்திக் கொள்ள  வாய்ப்பினை அளிக்கும்.  ஒரு தனிப்பட்ட இணையத்தளம் உங்களது சமூக கருத்துக்களை பரப்புவதற்காக சிறந்த வழியாகவும் அமையலாம்.. தனிநபர் தளங்கள் அமைதியான  மிகவும் பயனுள்ள கருவியாக இருக்க முடியும்.

Wednesday, 2 July 2014

எதாவது நல்லது செய்ய வேண்டும்

எதாவது நல்லது செய்ய வேண்டும்

எதாவது நல்லது செய்ய நினைத்து
எதிலாவது கெட்டதில் மாட்டிக் கொள்வேனோ
என்ற நிலைதெரியாத பயம்
எதையும் செய்ய விடாமல் செய்து விடுகின்றது

நடுவீதியில் வாகனத்தில் ஒருவர் அடிபட்டுக் கிடக்க
நல்மனதுடன் வாகனத்தில் அழைத்துச் சென்று
தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க முயல
அரசு காவல்துறை அனுமதி தேவைப்படுமாம்
அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்
ஆபத்தான நிலையாக உள்ளதால்
மாநில தலைநகர் மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லுங்கள் என்கின்றனர்
அழைத்துச் செல்ல பணமும் வேண்டும்
அழைத்துச் செல்ல மற்றவர்கள் துணையும் வேண்டும்
அடிபட்டு தன்னிலை அறியாதிருபவர் உறவினர் உதவி வேண்டும்
அனைத்தும் செய்து முடித்தாலும்
மருத்துவர் மற்றும் காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு
சரியான சான்றிதழும் பதிலும் கொடுக்க வேண்டும்
ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால்
அழைத்த நேரத்திற்கு காவல் நிலையத்திற்கும்
அழைத்த நேரத்திற்கு நீதிமன்றதிர்க்கும் அலைய வேண்டும்

ஆசை ஆர்வமாகி தொய்வில்லாத முயற்சி வெற்றியைத் தந்து மகிழ்வித்தது

ஆசை கொண்டேன்
ஆர்வமாக ஆய்வு செய்தேன்
ஆய்வில் தெளிவு கொண்டேன்

கண்காணித்தேன்
முயன்றேன்
முயன்றதில் தளர்ச்சி அடையவில்லை
பிரச்சனை வரும்போது சமாளித்தேன்
சமாளிக்க சிறிது ஓய்வும் தேவையானது
ஓய்வு உத்வேகத்தை தந்தது

சந்திக்க வேண்டியவர்களை சந்தித்தேன்
சந்திப்பு சிந்திக்க வைத்தது
சிந்தனை முறையானது
முறையானது வலுவானது

Tuesday, 1 July 2014

நேயம் ஒன்று இருப்பதானால் சேர்ந்து வாழ்கின்றோம்


நீ விரும்பியதால் நான் விரும்ப முடியுமா!
நான் விரும்பியதால் நீ விரும்ப முடியுமா!

நான் இங்கு வந்தது நான் விரும்பியதற்காக
நீ இங்கு வந்தது உன் விருப்பத்திற்காக

சில நேரங்களில் சிலவற்றைப் பார்த்து நான் விரும்பப் படுகின்றேன்
சில நேரங்களில் சிலவற்றைப் பார்த்து நீ விருப்பப் படுகிறாய்