Thursday 11 March 2021

#மிஹ்ஹ்ராஜ்_அதிசயம் .../ Abu Haashima

 


Abu Haashima


இன்று மிஹ்ராஜ் தினம்.

மிஹ்ராஜ் என்றால் உயருதல் என்று பொருள்.

இஸ்லாத்திற்காக ஏராளமான இன்னல்களை அனுபவித்து வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

மன வருத்தமுற்று இருந்தார்கள்.

அதுவரை அன்பு காட்டி ஆதரித்து வந்த பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இறந்து விட்டார்கள்.

அவர்கள் இறந்த சில நாட்களிலேயே கண்ணின் மணியாய் தங்கள் காதல் மணாளராய் திகழ்ந்த கண்மணி நாயகத்தை கண்ணின் இமைபோல் காத்துவந்த நம் அன்னை கதீஜா நாயகியார் அவர்களும் இறைவனளவில் சேர்ந்து விட்டார்கள்.

பெருமானாருக்கு

தங்கள் பாசத்துக்கு உரிய உறவுகளைப் பிரிந்து பரிதவிக்கும் பரிதாப நிலை ஒருபுறம் .

தங்களை கொலை செய்வதற்கே நாள் பார்த்துக் கொண்டிருக்கும் குறைஷியரின் கொடூர நிலை மறுபுறம் .

அல்லாஹ்விடமே தங்கள் மன வேதனைகளை கொட்டி வழி காட்ட வேண்டிக் கொண்டிருந்தார்கள் நபிகள் .

அருளாளன் அல்லாஹ் நபிகளாரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டான். அவன் தன் அருட் கொடைகளால் தன் ஹபீபை ஆற்றுப் படுத்தினான்.

சேவை இறைவனது அருள்பெற இருக்க வேண்டும்

 

சென்றமுறை சிறப்பாக சேவை செய்தார் என்பதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது

இம்முறை அதற்கு தான் விரும்பியபடி தனக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால்

தவறான பாதையை கைக் கொண்டால் அவர் செய்த சேவைகள் அனைத்தும் பயனற்று போகும்

மக்கள் அவரை கொள்கையட்றவர் சுயநலவாதி என்று வெறுக்க ஆரம்பித்து விடுவார்

காலம்வருவரை காத்திருந்து செயல்படலாம் .சேவை இறைவனது அருள்பெற இருக்க வேண்டும்

சேவை செய்ய ஆட்சியில் இருந்துதான் செய்ய வேண்டுமென்பது ஏற்க முடியாது

இக்கால நிலையில் ஆட்சிக்கு வர விரும்புவரின் மனம் புகழுக்கும் பணத்திற்கும் விருப்பமுடையவர்களாகவே தோன்றுகின்றது

அன்சாரிகள் விருந்தாளிகளை நேசிப்பவர்கள் .கொள்கைக்கு முக்கியத்துவம் தந்தவர்கள் .கொள்கைப்பிடிப்புடன் தாங்கள் விரும்பிய உயர் தலைவருக்கு தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தவர்கள்

Thursday 4 March 2021

கோபம்

 

கோபம் என்றால் என்ன?

கோபம் என்பது தீமைகளை நோக்கிய மனிதனின் ரகசிய ஆயுதம், ஆனால் சில சமயங்களில் அதன் விளைவாக பல உன்னத குணங்களை அழிக்கிறது. இது மனிதனின் ஞானத்தை பறிக்கிறது, இதனால் அவர் எந்த உணர்வும் இல்லாத ஒரு மிருகத்தனமான மிருகமாக மாறுகிறார்.

கோபம் என்பது ஷைத்தானின் ஒரு சோதனை

கோபம் எல்லா தீமைகளுக்கும் மூலமாகும்.

கோபம் என்பது எப்போதும் வெடிக்கும் நெருப்பின் தீப்பொறி.

கோபம் என்பது மிகவும் மோசமான நிலை, இது இமானை  (நம்பிக்கையை )  பலவீனப்படுத்துகிறது

கோபத்தின் விளைவு ஆத்திரம் கடுமையான, அதிருப்தி, தவறான உணர்வால் உற்சாகமடைதல், இதனால் உடல் வலி,  சூடான மனநிலை உருவாகின்றது , 

இது  ஒரு வன்முறை உணர்வு.

கோபம் என்பது தீவிர அதிருப்தியால் ஏற்படும் வலுவான உணர்வு.

 உண்மையில் வீரன் என்பவர் கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நபர்தான்

ஆனால் கோபப்படுவதற்கு கோபப்படவேண்டியது அவசியமாகவும் நிலையும் உண்டு ..தன்னை யாராவது தனது மார்க்கத்தை செய்லபடாமல் தடுக்கும்போது கோபப்படுவது அவசியமும் இயல்புமாவது உண்மைநிலை 

 

யாராவது , எந்தவொரு நபருடனும் கோபம் கொள்ளும் நிலையை அடையும் போது, அவர் இறைவனிடம் வேண்டி அதனிடமிருந்து விடுபட முயலவேண்டும் . அவ்வாறு செய்யும்போது அவர் அமைதியடைந்து விடுவார்

கோபத்துடன் இருப்பவர் : "நான் சாத்தானில் தீய செயலிருந்து இருந்து அல்லாஹ்விடம் அல்லாஹ்விடம் உதவி நாடுகின்றேன் ."என்று வேண்டவேண்டும் .

கோபம் ஏற்படும் போது


அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

 

இதன் பொருள் :

 

ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282

 

அல்லது

 

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

 

என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115