Friday 30 May 2014

நான் யார் என்பது முக்கியமல்ல

நீங்கள் யார் என்பதை நான் அறிய விருப்பம்

நீங்கள் யார் .? என்பதை அறிய உன் கருத்தைச் சொல்

நீங்கள் யார் ?என்பதை அறிய உன் கருத்தே காட்டும்

நீங்கள் என் பக்கம் வருவது நமக்குள் நட்பை வளர்க்கும்

நீங்கள் என் பக்கம் வருவதால் என்னைப் பற்றி நீங்கள் அறிவாய்

நீங்கள் என் பக்கம் வருவதால் என் நண்பர்களை உனதாக்கிக் கொள்ளலாம்.!

தேடி அலைவதோ முழுமையை நாடி

என் முகத்தைப் பார்க்கிறாய்
என் உருவத்தைப் பார்க்கிறாய்
என் ஆடையைப் பார்க்கிறாய்
என் உள்ளத்தை அறிந்துக் கொள்ள முடியாமல்
ஒவ்வொருவராக தேடி அலைகிறாய்
ஒவ்வொரிட்டதிலும் ஒரு குறையை காண்கிறாய்

ஏற்றம் வருவது கடினம் இறக்கம் வருவது எளிது

உயர இருப்பதால் பாதுகாப்பு அவசிய மாகின்றது
உயர வந்ததால் பாதுகாப்பின் சிறையில் முடக்கப் பட்டாய்

உன்னையும் பாதுகாத்துக் கொள்ள
மற்றவரையும் பாதுகாக்க கீழே வந்தாக வேண்டும்

ஏற்றம் வருவது கடினம்
இறக்கம் வருவது எளிது

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு செய்வார்
ஒற்றுமையற்ற மனம் கொண்டிருப்பார் தன் நிலை வெளியே தெரியா வண்ணம்

தங்களுக்குள் தானே முற்றும் அறிந்தவன்
தங்களோடு இருப்போர் தன்னை விட குறைந்த அறிவு பெற்றவர் என்ற அகம்பாவம்

ஒத்த அறிவு பெற்றோர் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை
அறிவின் அகம்பாவம் அவர்களை ஆட்டி வைக்கின்றது

Tuesday 27 May 2014

மனதில் தோன்றிய எண்ணங்கள் மின்னூல் இறைவனின் திருப் பெயர் சொல்லி ஆரம்பம் செய்கின்றேன்
இறைவன் அருளால் நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்

                   மனதில் தோன்றிய எண்ணங்கள் 
முஹம்மது அலி
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை

மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License..


இறைவன் அருளால் என்னால் முடிந்த அளவு நான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றேன்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே.அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

ஒதுக்கப் படும் மாகாணங்கள் ஒன்று பட்ட இந்தியாவில்

இந்தியா ஒரு பகுதியை மட்டும் சேர்ந்ததல்ல .
கூட்டமைப்பு நாட்டில் சில விதவைகள் போன்று காட்சியளிக்கும் மாகாணங்கள்
தங்கள் கட்சியை சார்ந்த தோற்றவர்களையெல்லாம் மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கும் பிரதமர் மோடிக்கு தங்கள் கட்சி வெற்றி பெறாத மற்ற  மாநிலங்களும் இந்தியாவில்தான் உள்ளது என்பதை நினைவு படுத்த விட்டு விட்டார்கள் .முழுமையான இந்தியாவை இந்த மோடி மந்திரி சபை நிறைவு படுத்தவில்லை .குறிப்பாக மேற்கு வங்காளம் ,தமிழ்நாடு ,கேரளம்  மற்றும் சில மாகாணங்கள்
----------------------------------------------
மக்கள் மனதை திசை திருப்ப

நல்லாட்சி கொடுக்க முடியாத நிலை வர
மக்களுக்கு ஆட்சி செய்வோர் மீது கோபம் வர
ஆட்சி செய்வோர் தங்கள் ஆட்ச்யை தக்க வைத்துக் கொள்ள
பல தந்திரங்கள் செய்வார்கள்
ஆட்சி செய்வதில் சிரமம் வர சமூகப் பிரச்சனையை நாட்டில் உருவாக்குவார்கள்.
ஊடகங்கள் தங்கள் வசமாக்கப் படும் மக்களை நம்ப வைப்பதற்கு
நாட்டிற்கு அடுத்த நாடால் தொல்லை வருகிறது என்ற அடாலடியான பிரச்சாரம் செய்து போர் உருவாக்கி மக்கள் மனதை திசை திருப்புவார்கள்
-------------------------------------
பதவி கிடைத்தால் தயங்காமல் பெற்றிடு
பதவி கிடைத்து பயனில்லையென்றால் வெளியேறி விடு
பதவியில் சேவை செய்ய முடியாமல் அலங்காரத்திற்கு பதவி வகிக்காதே
பணம் வந்தாலும் ,பதவி வந்தாலும் அடக்கம் வேண்டும்

உழைத்தவர்களுக் கெல்லாம் பதவி கிடைக்காது
விரும்பியவர்க் கெல்லாம் பதவி கிடைக்காது
-------------------------------------------
போரில் ஈடுபடுவோர் இறக்கம் காட்ட மாட்டார்
போட்டியில் ஈடுபடுவோர் இறக்கம் காட்ட மாட்டார்

வென்றுவிட வேண்டுமென்ற வெறி
வெறி வென்று விட்டது

பல கட்சிகள் புற்றீசல்கள் போல் புற்று நோயாய் பரவுகின்றன

வாய்ப்பு உள்ளவன் வளர்ந்து விட வழியை விடு -இது முதலாளித்துவம் (capitalism)

ஆல மரத்தின் கீழ செடிகள் வளராது
ஒருவன் பசித்திருக்க மற்றவன் கேக் (இனிப்பு )சாப்பிட அனுமதி கிடையாது
ஒருவருக்கு வீடு இல்லா நிலையில் மற்றவர் மாளிகை கட்டக் கூடாது .நிறைய வீடுகள் கட்டி ஒரு வீடை உனக்கு வைத்துக் கொள் மற்றதை வாடகைக்கு விடு . -இது பொதுவுடைமை (communism)

Saturday 24 May 2014

நம்மை நாமே ஆற்றிக் கொள்ளும் பெருந்தன்மை

துணிவு அச்சம் இல்லாமை அல்ல
துணிவு மற்றதில் உள்ள விழிப்புணர்வு

நான் தோல்வி அடைந்தால்
சிலர் வருந்துகின்றனர் சிலர் மகிழ்கின்றனர்
நான் வெற்றி அடைந்தாலும்
சிலர் வருந்துகின்றனர் சிலர் மகிழ்கின்றனர்
நான் பெரும் வெற்றியும் தோல்வியும் என்னைச் சார்ந்தது
அதனால் ஏற்படும் வருத்தமும் மகிழ்வும்
என்னைச் சார்ந்தது என்பதை யாரும் அறிந்துக் கொள்வதில்லை
வருத்தத்திலும் மகிழ்விலும் பங்கு கொள்வதாக சிலர் நினைத்து
அதனால் எனக்கு நன்மையும் மற்றும் பாதகமும் வந்து சேர்கின்றது

தோல்வியே பெறாதவர் சிறிய தோல்வி வர சுருண்டு விடுவார்

தோற்றது தேர்வு முறை
தோற்றது தேர்தல் முறை

தோற்றவருக்கும் வாழ்த்துகள்
தோற்றால்தான் நம்மைப் பற்றி
நாம் அறிந்துக் கொள்ள முடியும்

தோல்வியே பெறாதவர்
சிறிய தோல்வி வர சுருண்டு விடுவார்

என் வழி தனி வழி அல்ல

நான் இறை நம்பிக்கையாளன்
நான் இறை மறுப்பாளரை வெறுக்காதவன்

நான் சாதியை விரும்புவதில்லை
நான் சாதி பற்றுடையோரையும் வெறுப்பதில்லை

நான் கட்சி சார்ந்தவனல்ல
நான் கட்சிக்கு நற்கொள்கை வேண்டுமென நினைப்பவன்

நான் ரசிப்பவன்
நான் ரசிப்பதிலும் பண்பாடை விரும்புபவன்

Wednesday 21 May 2014

செயலோடு வளர்ச்சியும்

'நீ செய்த தவறு உன்னை தாழ்த்தி விட்டது' என்றேன்
'இல்லை. மற்றவர் செய்த தவறால் நான் தாழ்த்தப் பட்டேன்' என்றார்

செயலிழந்து இருக்க
செயலற்றவன் அல்ல
செயலில் ஈடுபட தவறும் நிகழும்
தவறு நிகழ்ந்ததால்
செயலில் ஈடுபடுவதை நிறுத்த மாட்டேன்

வளர்ச்சியை விரும்புபவன் தளர்ச்சியடைதல் சிறப்பல்ல

முயற்சியே வாழ்வை அடுத்த படிக்கு நகர்த்தும்
முயற்சி செய்ய தடுமாற்றங்கள் நிகழ்வதும் உண்டு

முயற்சி இல்லாத செயல் கிடையாது
தவறு நிகழாத செயல்பாடு கிடையாது

முழுமை எதிலும் இல்லை
முதுமை எதிலும் உண்டு

Sunday 18 May 2014

தங்களுக்குள் நினைக்கும் தாழ்வான மனம் அவர்களை விட்டு நீங்க வேண்டும்

சிறுபான்மையோர்
பெரும்பான்மையோர்
தாழ்த்தப் பட்டோர்
மிகவும் தாழ்த்தப் பட்டோர்
இவர்களுக்குள் உள்ள ஒட்றுமை சோரம் போனது
உயர்குடி மக்களின் சூட்சமத்தால் .

வேண்டாத பகை வேண்டாம்

இருந்தவருக்கும் வந்தவருக்கும் வேண்டாத பகை வேண்டாம்
போட்டவருக்கும் போடாதவருக்கும் வேண்டாத பகை வேண்டாம்

இருந்தவர் செய்த தவறோ
போட்டவர் செய்த தவறோ

வரக் கூடாதவர் வந்து விட்டாய்
வந்தவருக்கு வழி விடுதல் பண்பாடு

வந்த பின் உன்னிலை அறிவாய்
வந்த பின் என்னிலையும் அறிந்துக் கொள்

சேராத இடத்தில் சேர்ந்து செய்யத் தகாததை செய்தாய்
சேர்பிக்கப் பட்ட இடத்தில செய்வதை உயர்வாகச் செய்

Tuesday 13 May 2014

உன்னை படைத்த பின்தான் இறைவன் கால நிலையை படைத்தானோ !

பெண்ணே நீ அழகு
உனக்குள் அனைத்து கால நிலையும் அடக்கம்
சூடாகவும் இருப்பாய்
குளிராகவும் இருப்பாய்
வசந்தமாகவும் இருப்பாய்
தென்றலாய் தவழ்வாய்
உன்னை படைத்த பின்தான்
இறைவன் கால நிலையை படைத்தானோ !

பெண் கவர்சிகரமானவள்
பெண் பாலுணர்ச்சியைத் தூண்டுபவள்
பெண் தாயாக குழந்தைக்கு பால் தருபவள்
பெண்ணின் பால் தருமிடமே
பெண்ணுக்கு கவர்ச்சியைத் தருமிடமாகப் போனது

Sunday 11 May 2014

வழி விடு அவள் அவளாக வாழ வேண்டும்

அவளை விட்டு விடு
அவளை அவள் நோக்கத்திற்கு விட்டு விடு

அவள் பார்வையில் கடிவாளம் போட்டது போதும்
அவள் போகும் வழியில் வேலி போட்டது போதும்
அவளை அவள் நோக்கத்திற்கு விட்டு விடு

அவளை எத்தனை காலங்கள்தான்
அவளை உன் பார்வையோடு ஒன்றிப்போக
அவளை உன் சிறையில் அடைத்து வைப்பாய்

உன் வாழ்வை உயர்த்திக் கொள்ள
அவள் வாழ்வை உன் சிறையில் அடைத்து வைக்கிறாய்
உன் வாழ்வுக்கு எல்லை வகுத்துக் கொள்ள வில்லை
அவள் வாழ்வுக்கு எல்லை வகுக்கிறாய்

Saturday 10 May 2014

அடுப்பங்கரை வேலை அவளுக்கு அலுப்பைத் தரவில்லை

ஓயாத வேலை
ஓய்வே இல்லை

ஒன்பது பேரைப் பெற்றாள்
ஒன்பது பேரும் உட்கார்ந்து உண்ண

அடுப்பங்கரை வேலை
அவளுக்கு அலுப்பைத் தரவில்லை
அவள் பெற்ற பிள்ளைகளுக்கும்
அவள் பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போட

அவள் பெற்ற பிள்ளைகளின் மகிழ்வே
அவளது மகிழ்வாய் இருந்தது

Friday 9 May 2014

ஒருவேளை அப்படியும் நிகழுமோ !

ஓடி சேர்த்து சேமிக்கும் குணம்
ஓயாது கூடி வாழ்த்தும் மக்கள்

உயர பறந்து போகும் நிலை
உயர்ந்து சிறந்து வாழும் மனம்

உயரப் போனதால் நிறைவு
உயர்ந்து போனது
நிலையானதாக
நிற்குமா என்ற நினைவு

ஒருவரும் அற்ற நிலையாகி
அனைவரும் அகன்ற நிலையாகி
கைவிடப்பட்ட நிலையாகுமோ!
ஒருவேளை அப்படியும் நிகழுமோ !
என்று அழுதது
என் ஆத்துமா

வெற்றியும் தோல்வியும்

                                                  வெற்றியும் தோல்வியும்

கட்சி முறையில் சொன்னால்-
தோற்ற கட்சி திரும்பவும் போட்டி போட்டு அடுத்த தேர்தலில் வெற்றி அடைகிறது .
ஒரு முயற்சியில் வெற்றி தோல்வி நடைபெறுவது இயல்பு .
வாழ்வே ஒரு போர்களம் அதனை நாம் முயற்சி செய்து பொற்காலமாக ஆக்க முயல்வது நம்பிக்கை .
நம்பிக்கைதான் அடித்தளம் .
தேர்தலில் மற்றவர்கள் நம்மை தேர்ந்தெடுக்கின்றார்கள்.
தேர்வில் நம்மை உருவாக்கிக் கொள்கின்றோம் .
தேர்தலில் வெற்றி பெறவும் நாமும் நம்மை சார்ந்த கட்சியும் வெற்றி பெற உருவாக்கிக் கொள்ள வேண்டும் .
தோல்வியைக் கண்டு துவளவோ வெற்றியைக் கண்டு துள்ளுவதோ மனிதனின் மாண்பை உயர்த்தும் வழியல்ல .
கடமையைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு

ஒருவர் வேண்டியவரேன்றால் மற்றவர் வேண்டாதவறல்ல


ஒருவர் வேண்டியவரேன்றால்
மற்றவர் வேண்டாதவறல்ல

தாய் ஒருவர்
தந்தை ஒருவர்

மற்றவர் பலர்
மற்ற பலர் பலவகையில் உயர்ந்தோர்

பலரிடம் பழகிறேன்
சிலரிடம் நெருங்கிப் பழகின்றேன்

ஒவ்வொருக்கு ஒவ்வொரு குணம்
ஒவ்வொருக்கு ஒவ்வொரு திறமை

பெண்குழந்தைகள் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்

பெண் பிள்ளைகள் இல்லாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

எனக்கு இரண்டு மகன்கள்.


பெண் பிள்ளைகள் இல்லாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

எனக்கு இரண்டு மகன்கள்.

பெண் பிள்ளைகள் இல்லாமல் நாங்கள் படும் வேதனை எங்களுக்குத்தான் தெரியும்.

மருமகள்களும் ,மகன்களும் நல்லவர்கள்தான் இருப்பினும் பெண் பிள்ளைகள் பாசமும் சேவைகளும் உயர்வு!

இறைவன் அருள் செய்து பேத்தியை கொடுத்து பாசத்தை அதிகமாக்கி விட்டான்.

பெண் பிள்ளைகள் இக்காலத்தில் படிப்பில் கவனம் அதிகம் செலுத்தி நன்றாக படிப்பது மகிழ்வாக உள்ளது .

ஆண்களுக்கு மனச் சிதறல்கள்.

பெண்களுக்கு குறிகோள்கள் அதிகம்!

Tuesday 6 May 2014

இறைமறையில் இருக்கும் வரிகளை...


இறைமறையில் இருக்கும் வரிகளை
இறைமறையில் இருப்பது போல் கொடுத்து விடு

இறைமறையை மொழி பெயர்ப்போர்
இறைமறையில் ஞானம் பெற்றோராய்
இலக்கண இலக்கியத்தில் தகுதி பெற்றோராய்
மொழி பெயர்ப்பில் வல்லமை பெற்றோராய்
இறை நேசராய்
இறைவழி வாழ்வோராய் இருப்பார்கள்

Saturday 3 May 2014

செய்ய வேண்டியதை செய்ய வில்லை

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை".

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

நூல்: வாக்குண்டாம்

பாடியவர்: ஔவையார்
-----------------------------------------------------------------------

இருப்பின் அருமை அறிந்தேன்

இருப்பில் இருக்க
இருப்பின் அருமை அறியவில்லை

இருப்பு இருந்த இடம் விட்டு அகல
இருப்பின் அருமை அறிந்தேன்

இனியொருமுறை இருப்பு என்னிடம் வந்தால்
இருப்பை இறுக்கமாக பிடித்துக் கொள்வேன்

இருப்பில் இருக்கும் போது
இருப்பை உயர்வாக்க முயல்வேன்

தொழுகையின் இருப்பையும் உயர்வாக்கிக் கொள்வேன்
பொருளின் இருப்பையும் சிறப்பாக்கிக் கொள்வேன்


வந்தது அறிவிப்பின்றி வந்தது

வந்தது அறிவிப்பின்றி வந்தது
வந்ததும் உயர்வானதாய் வந்தது

சென்றதும் சொல்லிக் கொள்ளாமல் போனது
சொல்லிக் கொள்ளாமல் சென்றதும் சிறப்பற்றுப் போனது

முடித்து விடுவதிலேயே கவனம்


கடமையாக நினைத்து மகள் திருமணத்தை முடித்து விடு
மகள் வளர்ந்து விட்டாள் ஊரார் ,உறவினர் பேசுவார் திருமணத்தை முடித்து விடு
மகள் படித்து விட்டாள் படித்த மணமகனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு அழகான மணமகனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு செல்வந்தனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு பெருமை சேர புகழ் பெற்ற குடும்பத்தில் திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு திருமணம் ஆனால் அவள் சொல் பேச்சை கேட்பவனைப் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு திருமணம் ஆனபின் மகள் வீட்டுக்கு வரக் கூடியவனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகள் திருமணம் ஆன பின் தனிக் குடுத்தனம் நடத்துபவனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு நல்லொழுக்கம் கொண்டவனாய்ப் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
-------------------------------------

Thursday 1 May 2014

தர்க்கம்

தெருவில் நடந்த தர்க்கம் தெருச் சண்டையானது
தொலைகாட்சியில் நடந்த தர்க்கம் குழப்பத்தை தந்தது
வீட்டில் நடந்த தர்க்கம் குடும்பத்தை பிரித்தது
மனைவியிடம் நடந்த தர்க்கம் ஊடல் ஆனது
நண்பர்களுடன் நடந்த தர்க்கம் பிரிவைத் தந்தது
கொள்கைக்காக நடந்த தர்க்கம் பல கட்சிகளானது
விதியைப் பற்றி செய்யும் தர்க்கம் வீணர்களின் செயலானது
விதியைப் பற்றி தர்க்கம் செய்வோர் இரு கால்களையும் தூக்கி நிற்க முயன்றவரானார்
அறிஞர்களிடையே நடந்த தர்க்கம் ஆய்வைத் தந்தது
எனக்குள் நடந்த தர்க்கம் தேடலைத் தந்தது
-----------------------------------------------------

ஓதுவதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம்

படிக்கும் வரிகள் மறந்து போனது
படிப்பதற்கு பிரியம் குறைந்து போனது
பிரியம் குறையும் நிலையை முறையிட்டேன் அப்பாவிடம்

கரிவந்த பிரம்பு கூடையில் நீர் கொண்டு வரச் சொன்னார் அப்பா
இடைப்பட்ட தூரத்தில் கொண்டு வந்த நீர் கொட்டிப் போனது

மறுமுறையும் கொண்ட வரச் சொன்னார்
மறுமுறையும் கொண்டு வந்த நீர் கொட்டிப் போனது

அடுத்தடுத்து அதனை செய்யச் சொன்னார்
அடுத்தடுத்தும் அதே நிலையானது

அலுத்துப் போய் நின்ற போது கூடையின் மாற்றத்தை பார்க்கச் சொன்னார்
அழுக்கு நீங்கிய கூடையாக மாற்றம் வந்ததை பார்த்தேன்

உழைத்து ஓய்ந்தவனுக்கு ஓயாத தொல்லை


உழைத்து, உழைத்து தேய்ந்த ஓடாய் போனேன்
தேய்ந்த ஓடை உதவாத ஓடென்று தூக்கி எறிந்தனர்


தூக்கி எறிந்து விழுந்தது தெரு வீதியில்
தெரு வீதியில் விழுந்ததால்
வழியே வந்தவர் பாதத்தை கிழிக்க நேர்ந்தது
பாதத்தை கிழித்ததால்
பாதிக்கப் பட்டவர் கோபமாக எறிந்தவனை விடுத்து
'சனியனே' என எனைத் திட்டிச் சென்றார்

உழைத்து ஓய்ந்தவனுக்கு ஓயாத தொல்லையும்,திட்டுதலும்
உழைக்காது ஊரை உலை போட்டு திரிபவனுக்கு பாராட்டும் ,பண முடிப்பும்

தீவிரவாதம்

தீவிரவாதம்

தீவிரவாத
ம் என்ற மார்க்கமில்லை (மதமுமில்லை )அதை ஆதரிக்கும் மதமோ ,இனமோ ,மார்க்கமோ இல்லை
மனிதன் பிறக்கும்போது தீவிரவாதியாகவும் பிறப்பதுமில்லை .
அனைத்து பெரியோர்களும் உயர்வான வழியைத்தான் காட்டிச் சென்றுள்ளனர் .
மனிதன் நல்லவன்
மனிதனின் மனதை கேடு செய்ய தூண்டுபவர் (மக்கள்) கொடியோர்

தீவிரவாதியாக யாராக இருந்தாலும் கடுமையான சட்டத்தினால் தண்டிக்கப் பட வேண்டும்
தீவிரவாதி செயலில் எவன் ஈடுபட்டாலும் அவனது பெயரை ,ஊரை மற்றும் அவன் சார்ந்த நாட்டை அவன் செயலை ஊக்குவித்தவனை குறிப்பிடுங்கள். அவனை மதத்தின் போர்வை போட்டு இணைக்காதீர்கள்

வேதனையற்ற மனம்

இறப்பு நிகழ்ந்தது
வந்தவர் விசாரித்தனர்
வந்ததற்கு அழுதும் சென்றனர்
இழந்தவர் அமைதி காத்தார்
இழந்தவர் விழிகளில் கண்ணீர் வரவில்லை
வந்தவர் இழந்தவர் முகத்தில் வாட்டம் காணாததைக் கண்டு வியந்தனர்
இழந்தவர் முகத்தில் வாட்டம் வராத காரணம் அவரே அறிவார்
இறந்தவர் இருக்கும் போது இழந்தவரை நோகச் செய்தபோது
இழந்தவர் வருந்தி விட்ட கண்ணீர் அளவற்றது
இழந்தவர் இறப்பை நினைத்து வருந்தவில்லை
இழந்தவர் கண்களில் நீர் வற்றிப்போனதால்
இழந்ததை வருந்தி வடிக்க விழிகளில் நீர் இல்லை

by-Mohamed Ali