திருமண வாழ்த்து துஆ.
”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
சுவனத்தில் இன்னார்க்கு இன்னாரன்று இணைய
இறைவனால் நிட்சயிக்கப்பட்டு இப்பூவுலகில் இணையும் மணமக்களே!
சுற்றோரும் மற்றோரும் பெற்றோரும் போற்றும் இத்திருமணத்தில்
எல்லாம்வல்ல இறைவனது பொருத்தத்தில்
நபிமார்கள் வாழ்துதளோடு
இறைவன்(அல்லாஹ்) உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக.
நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.
பண்பென்னும் குணத்தால்
இறை மறையின் வழிகளில் இணக்கமாகி
பெண்ணுக்கு நல்லாடை ஆணே யென்ற
பெருமானார் மொழிப்படியே பல்லாண்டு வாழ
இறைவனின் நல்லருளால் நற்பேறு பதினாறும் பெற்றே வாழ்க!
நல்லறம் பேணி நலமுடன் மணமக்கள்.
உறவுக்கே உறவாகி விளக்கமாக
ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாக...
ஒவ்வொரு பகுதிக்கும் பக்க பலமாக
வாழ்வின் எல்லா தருணங்களிலும்
இறுக்கமாய் பற்றி..நலனோடும் வளமோடும்.
மகிழ்ச்சியாக
மனநிம்மதியோடு
வாழ்க! வாழ்க! வாழ்கவே
ஒருவரின் உணர்வு
இன்னொருவரின் மதிப்பாக(புரிதலாக)
இருவரும் இணைந்து
வாழ்க்கையின் அடையாளமான
உணர்வுகள் பரிமாறிக்கொள்ள
இல்லறத்தை பகிர்ந்துக்கொள்ள
இரு மனமும் இணைந்து