Sunday, 29 November 2020

திருமணம் எனது படிப்பிற்கு இடையூறாக இல்லை.

நான் லயோலா கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு திருமணம் செய்து விட்டார்கள். படித்து முடித்து திருமணம் செய்வதே எனது விருப்பம். இருப்பினும் திருமணம் எனது படிப்பிற்கு இடையூறாக இல்லை. நிருமணத்திற்கு பின்பு மனம் அலைபாயமல் எனது படிப்பை சிறப்பாக தொடர்ந்து சட்டம் படித்து வக்கீலாக வர முடிந்தது.
Wednesday, 11 November 2020

Dr.ராமதிலகம் gastroenterologist அவர்கள் சென்னையில் மிகவும் நேர்மையான பிரபலமான டாக்டர்.

 


Dr.ராமதிலகம் gastroenterologist அவர்கள் சென்னையில் மிகவும் நேர்மையான பிரபலமான டாக்டர்.

இவர் எனக்கு மிகவும் விருப்பமானவர்.

என் மகனின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தவர்.

நான் சில ஆண்டுகளுக்கு  முன்பு வயிற்றில் சில தொந்தரவு காரணமாக இவரிடம் வைத்தியம் பார்க்க சென்றேன். அவரிடம் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்க்க சொன்னேன் .அவர் உங்களுக்கு ஒன்றும் அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. சாதாரண Irritable bowel syndrome (IBS) தான் நன்றாக சாப்பிடவும் இந்த மருந்தை சாப்பிடச் சொன்னார். திரும்பவும் நான் ஆஸ்பத்திரியில் சேர்கச் சொன்னேன்.

அவர் நான் பணத்திற்கு அப்படிப்பட்ட வைத்தியம் பார்பவர் அல்ல எனது நேரத்தை வீண் செய்யாதீர்கள் என்று அனுப்பி வைத்தார். இறைவன் அருளால் என் உடலில் நலம் பெற்றேன்.

அதிலிருந்து இவர் எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கியமானவர் ஆகி விட்டார்.

Dr. B. Ramathilagam, Gastroenterologist in Nungambakkam 


Gastroenterologist in Anna Nagar, Chennai - Appointment .

Monday, 2 November 2020

'Third Year Syndrome,'

 

எனது அண்ணன் சென்னையில் Dr .வைத்தியநாதன்.M .D  அவர்களிடம் தனக்காக வைத்தியம் பார்த்து வந்தார் ,அவருடன் நானும் உடன் அவருக்காக போய் வருவதுண்டு .அப்பொழுது எனது அண்ணன் விருப்பத்திற்காக நானும் வைத்தியம் பார்த்துக் கொள்வேன்.அப்பொழுது நான் P.U.C படித்து முடித்து லயோலா கல்லூரியில்  இளங்கலை வகுப்பில் சேர்ந்திருந்தேன் .இதற்கிடையில்  மருத்துவம் படிக்க முயன்றேன்.அப்பொழுது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்   G.C.I.M படிப்பு நடந்தது . நான் அதில் படிக்க   Dr .வைத்தியநாதன் M .D  அவர்களிடம் G.C.I.M படிக்க சிபாரிசுக்கு உதவி நாடினேன் .அவர் மருத்துவப் படிப்பு  உனக்கு சரிவராது என்றார்.

அது படிக்கும்போதெல்லாம் அந்த வியாதி உனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வாய் என்றார்.இருப்பினும் நான் அப்படிப்புக்கு முயன்றேன்.. அது எனக்கு கிடைக்க அதிகப்படியான வாய்ப்பு இருக்க எனது நீடூர் நண்பர்  G.C.I.M படிப்புக்கு மதிப்பு கிடையாது என்று சொல்லி என் மனதை மாற்றி விட்டார் . அந்த வருடம் என்னுடன் படித்த நண்பர்கள் சிலர் அதில் சேர்ந்து விட்டனர் .ஆனால் பாருங்கள் அந்த வருடமே  G.C.I.M படிப்பை  M.B.B.S மாற்றி விட்டனர் .

Saturday, 24 October 2020

அல்லாஹ்வின் உதவி பெற

 அல்லாஹ்வின் உதவி பெற


மனிதர்களாகிய, இந்த உலகில் நம் வாழ்க்கை ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளால் வகைப்படுத்தப்படுகிறது, 

இது மக்களுக்கு மகிழ்ச்சியையும் சோகத்தையும் தருகிறது. நிரந்தர ஆனந்தத்தையோ துயரத்தையோ யாரும் அனுபவிப்பதில்லை. வாழ்க்கை அதன் இயல்பால் ஒரு சோதனையாகவே உள்ளது..

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

(குர்ஆன், 67: 2)

இனிமையான மற்றும் சாதகமான நல்ல சூழ்நிலைகள் வரும்போது அல்லாஹ்வுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும், தாழ்மையுடன் இருக்க வேண்டும் 

 பாதகமான சூழ்நிலைகள் நமக்கு வரும்போது பொறுமையாக இருக்க வேண்டும், மேலும் அல்லாஹ்வின் உதவியை நாட வேண்டும்.

ஒவ்வொரு நிபந்தனையும் அல்லாஹ்வின் விருப்பத்தின் வெளிப்பாடு என்று விசுவாசிகளாக நாம் நம்ப வேண்டும். 

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

அல்குர்ஆன் 2:45


நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:153

Tuesday, 6 October 2020

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் முஸ்லீம்க...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் முஸ்லீம்க...:  ஒரு காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் முஸ்லீம்கள்  முன்னணியில் இருந்தனர் . காலப்போக்கில் முஸ்லீம் நாடுகளில் உண்ம...

Thursday, 13 August 2020

பச்சோந்திபோல் பல நிறங்கள்

 பச்சோந்திபோல் பல நிறங்கள்


இடிக்க முடியும்

கட்ட முடியாது


சேர்க்க நினைப்பாய்

சேர்க்க முடியாது


சொல்ல முடியும்

சொன்னது நடக்காது


உயிரை போக்குவாய்

உயிரை கொடுக்க முடியாது

Friday, 3 July 2020

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் எம். ஏ. முஸ்தபா( ...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் எம். ஏ. முஸ்தபா( ...: Musthafa Mohamed M A நேசிப்போம் ! வாருங்கள் ! நான் தமிழை நேசிக்கின்றேன் தமிழ் என்னை நேசிக்கின்றது நான் சமூகத்தை நேசிக்கின்றேன் சமூகம...

Monday, 15 June 2020

வீட்டை சுற்றியே நடை

பொழுது போவதே மிகவும் சிரமாக உள்ள நிலையில் வீட்டுக்குள் உள்ள வேலையை கவனிப்பதோடு வீட்டை சுற்றியே நடை வெளியே போகமுடியாததால்.மல்லிகை ரோஜா மற்றும் அழகுக்கு சில செடிகள் அத்துடன் மா மாதுளம் தென்னை வாழை கொய்யா நாரத்தம் கருவைப்பிள்ளை மரங்களை வளர்பதோடு அவைகளுக்கு
நீர் பாய்ச்சுவதோடு நேரம் ஓடுகிறது. வீட்டுக்கு எதிரிலேயே பள்ளி இருந்தும் அங்கு தொழுகை
நடக்கவில்லை. கால நிலை வீட்டிலேயே தொழவேண்டும். கையில் இந்த கைப்பேசி இருக்க அப்படியே படம் எடுத்தபடியே நடந்தேன்.

Saturday, 13 June 2020

கொரோனாவை நீக்கி - எம்மை காப்பாற்று அல்லாஹ்

கொரோனாவை நீக்கி - எம்மை காப்பாற்று அல்லாஹ்

எழுதிப் படித்தவர் M.S. Abdul Kaiyoom Baqavi Singapore

Wednesday, 3 June 2020

A kind word is a form of charity. கனிவான சொல் தர்மத்தின் வடிவம்

A kind word is a form of charity.  கனிவான சொல் தர்மத்தின் வடிவம்
..
"கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்"

ஒரு மென்மையான சொல், ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்த முடியும்.
~ வில்லியம் ஹாஸ்லிட்‎ ~

Wednesday, 1 April 2020

சீரழிவு யாரால் உருவாக்கப்பட்டன !

விண்வெளி ஆய்வு ,
ஆயுத தயாரிப்பில் போட்டி
இனப்பாகுபாடு
மதவெறி
நாட்டுக்கு நாடு போர் வெறி
இத்தனையும் செயற்கையில்
மக்களை அழிக்க முற்பட
இயற்கையிடம் தோற்றுப்போனது

பசியால் வாடிய மக்களை பாதுகாக்க முயற்சியில்லை
ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பசியால் சாவு
இயற்கையின் ஆதரவு குரோனாவின் காற்று அப்பக்கம் வீசவில்லை
ஈராக் ,லிபியா ஆப்கானிஷ்தான் காஸ்மீர் ஏமன் பர்மா
இந்நாடுகளில் ஏற்படும் சீரழிவு
யாரால் உருவாக்கப்பட்டன !

மனித நேயமற்ற செயல்பாடுகள்
உங்களுக்குள் ஒற்றுமையில்லை
தவறான ஆய்வுகள் தண்டனையாகின
முறையற்ற செயல்கள் அழிவை தேடித் தந்தன

Wednesday, 18 March 2020

போராட்டம்


பிரச்சனை பொது
போராட்டம் பலநிலையில்
பாதுகாப்பும் பொது நோக்கம் கருதி
தனித்தும் சேர்ந்தும் செயல்படுத்துவது சிறப்பு
அதுவும் காலத்தே செயல்படுத்த வேண்டும்

இருக்குபோது பார்க்க வராமல்
இறந்தபின் உடலையும் உறவினர்களையும்
பார்க்க வந்தால் அதனை நான் அறிய மாட்டேன்
இறந்தபின் நான் செய்த எல்லா தவறுகளுக்கும் பாவங்களுக்கும் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள்,
அதனை நான் இருக்கும்போது செய்தால் அனைவரும் மகிழ்வாக இருக்கலாம்
அனைத்துக்கும் காத்திருக்கும் நிலை வேண்டாம்
காத்திருப்பதில் தாமதத்தை தந்துவிடும்
ஆளுநர்போல் தாமதப்படுத்தாமல்
பெற வேண்டியதையும் கொடுக்க வேண்டியதையும்
காத்திருக்கச் செய்யாமல் கொடுத்துவிட வேண்டும்
அதுவே அனைவருக்கும் நலம் தரும்

Friday, 6 March 2020

Allahu Akbar, Allahu Akbar,/ அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர்

 Allahu Akbar, Allahu Akbar,
(God is the greatest, God is the greatest)

Allahu Akbar, Allahu Akbar
(God is the greatest, God is the greatest)
Ash-hadu an' la ilaha ill Allah,
(I bear witness that there is no God but Allah)

Ash-hadu an' la ilaha ill Allah,
(I bear witness that there is no God but Allah)

Ash-hadu ana Muhammadan Rasoolallah,
(I bear witness that Muhammad is the messenger of Allah)

 Ash-hadu ana Muhammadan Rasoolallah,
(I bear witness that Muhammad is the messenger of Allah)

Wednesday, 19 February 2020

சமூகத்தில் மாறுபட்ட வண்ணங்களை கொண்டு பிரித்து வாழ வாய்ப்புகள் கிடையாது..

 மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
-குர்ஆன் 49:13.

பன்முகத்தன்மை அல்லாஹ்வின் கருணையிலிருந்து

பன்முகத்தன்மை என்பது அல்லாஹ்வின் கருணையிலிருந்து வருகிறது, ஏனென்றால் இந்த பன்முகத்தன்மையின் மூலம் திறந்த மனதுடன் இருக்கவும், சகிப்புத்தன்மையுடனும், நம்முடைய தப்பெண்ணங்களிலிருந்தும் சார்புகளிலிருந்தும் விடுபட இறைவன் அருள்கின்றான்
 நமது சமூகத்தில்  மாறுபட்ட  வண்ணங்களை கொண்டு பிரித்து  வாழ  வாய்ப்புகள் கிடையாது..

Saturday, 15 February 2020

Mohamed Ali Jinnah / S.E.A. முஹம்மது அலி ஜின்னா


Mohamed Ali Jinnah
S.E.A. முஹம்மது அலி ஜின்னா

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur.
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. Personal Links *
please visit:
S.E.A. முஹம்மது அலி ஜின்னா Jazakkallahu Hairan நன்றிS.E.A.MOHAMED ALI JINNAH