Monday 31 March 2014

சேவையை குறிக்கோளாகக் கொண்ட தொழில்

Service- oriented business
Business oriented service


சேவையை குறிக்கோளாகக் கொண்ட தொழில்
ஆதாயத்தை குறிக்கோளாகக் கொண்ட தொழில்

மக்கள் தேவையானதை தேடி அங்கும் இங்கும் அலையாமல் மக்களுக்கு தேவையானதை சேர்த்து ஓரிடத்தில் கொடுக்கும் சேவை மனதோடு செய்யும் தொழிலில் மக்கள் கொடுக்கும் சிறிய லாபம் தொழில் செய்வோருக்கு ஆதாயத்துடன் நன்மையையும் சேர்ந்து விடுகின்றது சேவை மனது அதில் இருப்பதால் .

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”


ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர்
ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர்

மானம் போக ஆணவம் அடங்கும்
போன இடம் அறியாமல் இருளில் மூழ்குவர்

வேண்டாம் இந்த வீணான விளம்பரம்
வேண்டியவர் இருந்த இடம் விட்டு அகல்வர்

உம்மையே நீர் அறிந்தால்
உமக்கோர் உண்மை விளங்கும்

ஓரிடம் உண்மையின் உறைவிடம்
ஓதி உம்மை அறிய  ஓரிடம்

உமை ஒளி பெறச் செய்யும் ஓரிடம்
உமக்குள் உள்ளதனை நீர் அறிவீர்

என்னேரமும் இறைவனை நேசித்து
இயன்றதனை செவ்வனே செய்வீர்

Saturday 29 March 2014

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்!

இறைவன் இட்ட கடமையை நிறைவேற்றுவோம்

இறைவன் கொடுத்த மறைவழி வாழ்ந்து நிற்போம்

இறைநபி வாழ்ந்த வழி நம் வாழ்வின் வழியாகும்

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்

இறையருள் நாட நேரம் ஒதுக்க வேண்டாம்

இருக்கும் நேரமெல்லாம் இறையருள் நாடும் நேரமாகும்

இறையருள் கேட்க இறைமறை சொற்களே உய்ர்வானதாம்

இறையருள் கேட்க்கும் பொழுதினிலே இயல்பாய் இருத்தல் சிறப்பாகும்

இறையருள் கேட்க மனனம் செய்து வேண்டுதல் செயற்கையாய் இருந்துவிடும்

Friday 28 March 2014

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை

இறைவா எனக்கு மன்னிப்பை வழங்கிடு
நிறைவாய் நான் உன்னை பிரார்த்தித்து இறைஞ்சுகிறேன்

நான் என் வாழ்நாட்களில் நல்லது செய்யவில்லை
நான் உன்னை நினையாமல் நல்லது செய்ய விடுத்தேன்
நான் வேண்டுமென்றே அனைத்தும் செய்யவில்லை
நான் செய்தவைகள் அறிந்தும் அறியாமலும் செய்தவைகள்
நான் செய்தவைகள் அனைத்தும் நீ அறிந்துக் கொள்வாய் என அறியாமல் போனேன்
நான் சென்ற தவறான வழிகள் அறிந்து இறுதியாக உன் வழி நாடி நிற்கின்றேன்
நான் கேட்கும் ஒரு வாய்ப்பு நல்லது செய்ய வேண்டி
நான் வேண்டுதல் கேட்டு உன்னிடம் நிற்கின்றேன்

பாராட்டாதவன் பாராட்டப்பட தகுதி இல்லாமல் போய் விடுவான்

நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும். பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும் அது சிறிது நேரம் அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்து விட்டதாக முடிவு செய்து வெளியில் சென்று தேவையானதை முடித்து விட்டு வரவேண்டும்.

வேண்டுதல்

வேண்டுபவருக்கும் தருபவன்
வேண்டாதபவருக்கும் தருபவன்

வேண்டியது கிடைத்தாலும் நன்மையின் பொருட்டே
வேண்டியது கிடைக்கவில்லை யெனினும் நன்மையின் பொருட்டே

வேண்டியது உடனேயும் கிடைக்கலாம்
வேண்டியது காலம் தாழ்ந்தும் கிடைக்கலாம்

வேண்டியதை கேட்பதும் தேவை அற்றவனிடம் இருத்தல் வேண்டும்
வேண்டாதவைகளை தவிர்க்க வேண்டி கேட்பதும் தேவை அற்றவனாக இருத்தல் வேண்டும்

வேண்டுபவன் 'வேண்டுதல் வேண்டாமை இலானான' இறைவனாகத்தான் இருக்க முடியும்

'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல'

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை தொழுபவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

இறைநம்பிக்கை அற்றவன் என்று பெருமை பேசுவார்
'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல' என்ற குறளை மேன்மையாக
பெருமை படுத்தி இயம்புவார்
#வேண்டுதல்

Thursday 27 March 2014

என் நினைவில் எப்போதும் என் தாய்


மனதில் ஒரு வலி,

இப்பொழுது எனது தாய் இறைவனிடத்தில்
இன்னும் நான் ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளை ..

காலங்கள் கடந்து விட்டன
நான் சில பிள்ளைகளுக்கு தாய்
தயாகியும் என் தாய் என் இதயத்தில்
நான் என் குழந்தைகளுக்கு கொடுத்த முதல் முத்தம் நினைவிலில்லை
எனக்குத் தெரிந்து என் தாய் எனக்கு கொடுத்த முதல் முத்தம் இன்னும் என் நினைவில்

தாயை நினைத்து மனதில் துடிப்பு
என் இதயத்தில் எப்போதும் என் தாய் நினைப்பு
என் தாயை நான் மறக்க முடியுமா !

என் நினைவில் எப்போதும் என் தாய்
என் தாயை திரும்ப என்னிடம் கொடு இறைவா என்று கேட்பதில்லை
என் தாயை சுவனத்தில் இருக்கச் செய்து நீ என்னை உன்னிடம் அழைக்கும்போது
என் தாயோடு என்னை இருக்கச் செய்து விடு என்று வேண்டாத நாளில்லை

அம்மா இருக்கும்போது அம்மாவின் அருமை தெரியவில்லை!

அம்மா இருக்கும்போது அம்மாவின் அருமை தெரியவில்லை
அம்மாவான பின் அம்மாவின் அருமை தெரிகின்றது

பிள்ளையாக இருக்கும் போது அம்மாவுக்கு கொடுத்த தொல்லைகள் தெரியவில்லை

அம்மாவான பின் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லைகள்
அம்மாவுக்கு நான் கொடுத்த தொல்லைகள் தெரிகின்றது

அம்மா இருக்கும்போது அம்மாவைப் பற்றி ஒரு வரியும் எழுதவில்லை
அம்மா இறந்த பின் அம்மாவைப் பற்றி யார் எழுதினாலும்
அம்மாவின் நினைவு மனதில் வரிகளாக பதிகின்றன

Wednesday 26 March 2014

தேர்தல் வருது! சிந்தித்து செயல்படு !

தேர்தல் வருது
தேர்தலில் நிற்கும் வாக்காளர் வருவார்கள்
தேர்தலில் நிற்கும் வாக்காளர் தாங்கள் செய்யப் போகும் செயல்பாடுகளை விளக்குவார்கள்
தேர்தலில் நிற்கும் வாக்காளர் பற்றிய குணாதியங்களை அவர்கள் முகத்தில் அறிய முடியவில்லை
தேர்தலில் நிற்கும் வாக்காளர் பற்றிய குணாதியங்களை பற்றிய மற்றும் அவர் சார்ந்த கட்சியைப் பற்றி முகநூலில் விலா வாரியாக வசைபாடியும் வாழ்த்துப் பாடியும் பலவகையான கருத்துரைகளை தந்துள்ளார்கள்.
முகநூல் நண்பர்களும் மற்றும் தேர்தலில் நிற்கும் வாக்காளர்ளும் கொடுக்கும் வாக்கு உறுதிகளும் படித்தவுடன் ,கேட்டவுடன் கனவு கலைவது போல் காணாமல் போய் விட்டது
நான் கொண்ட உறுதி என்னுள்ளே அடக்கம்
என் மனமே எனக்கு வழிகாட்டி
கடந்த காலத்தில் நான் பெற்ற அனுபவங்களும் ,ஆதாயங்களும் எனக்கு வழிகாட்டும்

Monday 24 March 2014

தனித்துவம்

பல முகங்களை பார்க்கிறேன்
பல குணங்களை அறிகின்றேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு

அந்த சிறப்பும் நான் பெற ஆசை
அவரின் சிறப்பு நான் பெற வேண்டும்

எனக்கென்று ஒரு உருவம்
எனக்கென்று ஒரு குணம்
எனக்கென்று ஒரு தனித்துவத்தை வளர்த்துக் கொள்ளவில்லை
எனக்குள்ள ஆசை அவரைப்போல் சிறப்படைய வேண்டும்
எனக்கென்று ஒரு தனித்துவம் வளராமல் நான் எவ்வாறு அப்புகழ்வை பெற முடியும்!
#தனித்துவம்

ஒதுங்கி வாழ்ந்தால் ஒதுக்கி விடுவார்கள்

நான் அறிவது என் குடும்பம்
என்னை அறிவது என் குடும்பத்தினர்

என்னை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்
எனக்கு மற்றவர்களைத் தெரியும்

நான் மற்றவர்கள் அறிய
நான் ஏதாவது செய்ய வேண்டும்

நான் ஒதுங்கி வாழ்ந்தால்
என்னை மற்றவர்கள் ஒதுக்கி விடுவார்கள்

விவாதங்கள் விளங்க வைக்கின்றன

விவாதங்கள் விளங்க வைக்கின்றன
அறிக்கைகள் அறிய வைக்கின்றன

விவாதங்களுக்கு அறிக்கைகள் தேவைப்படலாம்
விவாதங்கள் ஆக்கப் பூர்வமாக இருப்பதுடன் உள்ளத்தை கவரக் கூடியதாக அமைய வேண்டும்

விவாதங்கள் ஒரு கருத்தைப் பற்றியதாக இருக்கும்
விவாதங்கள் ஒரு தனி மனிதனை சாடுவதாக அமையக் கூடாது

சிந்தித்து செயல்படுவோம்

நேற்று நேசித்தாய்
இன்று நேசிக்கவில்லை

இன்று ஏன் நேசிக்கவில்லை !
நேற்று இருந்தது போல் இன்று நீ இருக்கவில்லை

நேற்றுக்கும் இன்றுக்கும் என்ன மாற்றம் கண்டாய்
நாளைக்கு ஒரு சட்டையை மாற்றுவதுபோல்
நாளைக்கு ஒரு கொள்கையை மாற்றுகிறாய்

Saturday 22 March 2014

தேர்தல் வந்தால்....

தேர்தல் வந்தால் அறிஞர்கள் அறிவை அடமானம் வைக்கிறார்கள்
தேர்தல் வந்தால் துண்டுகளையும் துட்டுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்

இனங்கள்,ஜாதிகள் கண்டு அறியப் படுகின்றன
வாக்குச் சீட்டுகள் வாக்குகள் கொடுத்து வாங்கப் படுகின்றன

அமானிதமாக புதிய வாக்குகள் பதிவேட்டில் பதியப் படுகின்றன
அமானிதமாக கொடுத்த பழைய வாக்குகள் மறந்து மறைந்து போகின்றன

எந்த மனிதன் என் சமுதாய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்‍றுக் கொண்டு பின்னர் அவர்களைக் கவலைகளிலும், துன்பங்களிலும் மூழ்கடிக்கிறாரோ அந்த மனிதரின் வாழ்க்கையை இறைவா நீயும் நெருக்கடிக்குள்ளாக்குவாயாக. எந்த மனிதர் சமுதாய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்‍றுக் கொண்டு பின்னர் மக்களிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டாரோ அவரின் மீது இறைவா நீயும கருணை புரிவாயாக. அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

ஆர்வமும் ஆற்றலும் இணைய செயல்திறன் உருவாகும்

சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்
சொல்லியதை செயல்படுத்த முடியவில்லை

சொல்லியதை கேட்பவர் கேட்டுவிட்டார்
சொல்லியதை கேட்டவர் செயல்படுத்திவிட்டார்

சொல்லத் தெரிந்தது செயல்படுத்தத் தெரியாமல் போனது
சொல்லத் தெரிந்ததில் உள்ள ஆற்றல் செயல்படுத்தலில்லை

ஆர்வமும் ஆற்றலும் இணைய செயல்திறன் உருவாகும்
செயலற்ற ஆர்வம் கனவோடு முடிந்துவிடும்

சொற்களால் ஒன்றும் உருவாவதில்லை
செயல்களால் ஒன்று உருவாகின்றது

ஒன்றோடு ஒன்றை சேர்த்து வைத்தார்
ஒன்றோடு ஒன்று சேர்ந்தது செயலிழந்து நின்றது

செயலற்ற சேர்க்கை இணையமுடியவில்லை
செயல் சேர்ந்த சேர்க்கை மற்றொன்றை உருவாக்கியது
#செயல்பாடு

Friday 21 March 2014

முகமன் சொல்லி அளவளாவி அகமகிழ்தல் வாழ்வின் சுவையை கூட்டும்

பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு .
புதுமை நாடுவதில் வாழ்வில் ஒரு உந்து சக்தி கிடைக்கும் .
பழமையை விரும்பி புதுமையை நாடாமல் இருத்தல் தேக்கத்தை உருவாக்கும்
பழைய நல்ல நினைவுகளை அசைபோடுதல் மகிழ்வுதான்
பழைய உறவுகள் தொடர புதிய உறவுகள் வர வாழ்வில் பிடிப்பு உண்டாகும்
நான்கு சுவற்றுக்குள் அடைக்கபடாமல் நான்கு திசைகளிலும் சென்று வர அறிவும் பெருகும்
முகநூலில் முடிச்சு போட்டவர்களை முறிச்சுப் போடாமல் நேரில் பார்த்து முகமன் சொல்லி அளவளாவி அகமகிழ்தல்
வாழ்வின் சுவையை கூட்டும்

கண்ணுக்கு கண் நோக்கி

கண்ணுக்கு கண் நோக்கி
பெண்ணுக்கு கண் கீழ நோக்க
பெண்ணுக்கு பெண்மை பெருமைத் தர
ஆணுக்கும் வெட்கம் வந்து சேர
வார்த்தைகள் வராமல் தவிக்க
மனதில் மகிழ்ச்சி பொங்க
கண்கள் சுரந்த நீர்
இமைகள் திறந்து மூடியதால்
கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட
வழியும் நீரை துடைக்க மறந்து
இறுகக் கட்டி அணைத்ததால்
நெஞ்சில் இருந்த சூடு
உடலிலும் பரவ
வழிந்த கண்ணீர் காய்ந்து போனது

உன்னாலும் முடியும்

உன்னாலும் முடியும்
உறவினரை உயர்த்தி விடு
உயர்வாய் வாழ்ந்து காட்டு
கடந்த காலம் கடந்தவை
நிகழ்காலம் நல்லதாக்கி
வரும் காலத்தை சிறப்பாக்கு

நல்லதைப் பார்
நன்றாக செயல் படு
நம்பிக்கையோடு செயல்படு
நன்மையாக விளையும்

Tuesday 18 March 2014

இறைவனை இறைஞ்சு இன்ஷா அல்லாஹ் இனியவை நிகழும்

எல்லா நிலைகளிலும் இன்னிலையில் இருக்கப் போவதாக நினைக்கிறாய்
இல்லா நிலையிலிருந்து இன்னிலைக்கு உருவாக்கியவனை நினைக்க மறந்தாய்

எவ்வழியில் போவதென்றும் அறிந்தவனாய் இல்லை
எவ்வழியிலிருந்து வந்தவனென்று அறிந்தவனாய் இல்லை

உயிர்பெற்று விழும்போது கதறினாய்
உயிரற்று விழும்போது கதறுவார்கள்

உயிரோடு விழும்போது தாங்கிப் பிடித்தது பூமி
உயிரற்று விழும்போது விழுங்க வைத்து மூடி விடுவர் பூமியில்

ஆத்மா நிலையிலிருந்து ஆன்மா நிலைக்கு மாறினாய்
ஆன்மா நிலையில் உனை உயர்வாக்கிக் கொள்ள
ஆத்மா நிலையில் உயர் நிலையில் வாழ்ந்து விடு
ஆன்மாவும் ஆத்மாவும் இறைவன் அருள் பெற உயர்வாகி விடும்

Monday 17 March 2014

இறைவனது அருள் நாடி நிற்கும் த்ம்பதியர்

உச்சிதனை முகர்ந்து
உள்ளத்தின் பாசத்தை செலுத்தி
உடலின் விலா எலும்பினைப் பகிர்ந்து
இழையால் பின்னப் பட்ட ஆடையாய் பிணைந்து
இணைபிரியா இனிய இல்லதில் இனிமையாய் வாழ
இறைவனது அருள் நாடி நிற்கும் த்ம்பதியர்

உலகத்தின் மையம் உன்னிடத்தில்

தனியே ஒரு ரோஜா
மனதை மயக்கிய ரோஜா
தனியே ஒரு காதல்
தெவிட்டாத அந்த காதல்
வாழ்வெல்லாம் தொடரும் காதல்
ரோஜாவின் இதழ்களைப் போல் மென்மையானது
பாசத்துடன் மேன்மையாக மென்மையாக பாதுகாப்பேன்

இவன் ஆட்சி செய்தால் நாட்டில் ஏது வெளிச்சமும் ஒற்றுமையும்

கூரை வீடு
ஒட்டு வீடு
மாடி வீடு
வீட்டின் தோற்றம் மாறியது
வெளியூரிலிர்ந்து குடி வந்து
வருடங்கள் பல ஆகின .
வீட்டின் தோற்றமும் மாறின
வெளியூரிலிர்ந்து குடி வந்ததால்
வீட்டிற்க்கு உரிமையாளர் ஒரு பெயர் சூட்டினாலும்
இருக்கும் ஊர்  மக்கள் அனைவரும்
வந்த ஊரின் பெயரை சொல்லி பட்டம் சூட்டிஅழைக்கின்றனர்

Saturday 15 March 2014

நோக்கத்தை வைத்தே அறுவடையின் பலனும்

நோக்கத்தை வைத்தே செயலின் தேடல்
நோக்கத்தை வைத்தே செயலின் முடிவும்

நாட்டை விட்டு போனான் நாலுகாசு சேர்க்க
நாட்டை விட்டு போனவனுக்கு வீட்டு நினைவு வர

தொடுத்த நோக்கம் தொலைந்து விட
யெடுத்த செயலில் தொய்வு விழுந்தது

கல்வி கற்க சென்றவன் கசடை அள்ளி வந்தான்
பொருள் சேர்க்க சென்றவன் பொருளை விட்டு வந்தான்

மரம் வெட்ட போனவன் மனிதனை வெட்டி வந்தான்
நோக்கம் அற்று போனவன் நேயத்தை அழித்து வந்தான்

Thursday 13 March 2014

ஒன்றோடு ஒன்றை சேர்த்து வைத்தனர்

நான் உன்னை ஒன்றை நினைக்கச் சொல்கின்றேன்
நான் உன்னை நினைக்கச் சொல்வதனை நினைக்க மறுக்கிறாய்

நான் உன் உணர்வை தூண்டுகின்றேன்
நான் உன்னை தூண்டிய உணர்வு உன்னை நினைவிழக்கச் செய்கிறது

நீ என் வழி தொடர என் சொற்கள் பயனற்று போயின
நீ என் வழி தொடர என் செயல்கள் உயிர்பெற்று உறவாடின

வார்தைகள் வழியைச் சொல்லும்
செயல்கள் சேர்த்து வைக்கும்

சொற்களால் ஒன்றும் உருவாவதில்லை
செயல்களால் ஒன்று உருவாகின்றது

ஒன்றோடு ஒன்றை சேர்த்து வைத்தனர்
ஒன்றோடு ஒன்று சேர மற்றொன்று உருவானது

Wednesday 12 March 2014

தொடர்வேன் தொழுகையை இறைவனுக்கு நன்றி பாராட்டும் நோக்கத்தோடு

உடல் நலமில்லை உண்ண முடியவில்லை
உணவை வாயில் வைத்தால் கசக்கிறது
உணவு உண்ணமுடியாமல் உடலில் வாட்டம் வருகிறது
உண்ண முடியாவிட்டாலும் உண்பதை நிறுத்தி விடவில்லை
தொடர் முயற்சி தொல்லைகளை நீக்கி வைக்கும் என்ற நம்பிக்கை

இறைவனை தொழும்போது மனதின் கசடுகளால்
மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லை
மனதை ஒருநிலைப் படுத்த முடியாவிட்டாலும்
இறைவனை தொழுவதை நிறுத்த வில்லை
தொடர்ந்து இறைவனை தொழுவதால்
இறைவன் என் மனதை அவன் நினைவில் என்னை ஒருமைப்படுதுவான் என்ற நம்பிக்கை

Sunday 9 March 2014

மனிதனின் மாற்றமும் மனதளவில் ஏற்புடையதே !

தீவில் ஒருவன் தனியே இருக்க முடியாது .
தீவாக இருந்தாலும் பார்க்க முகம் வேண்டும் .அந்த முகம் மிருகத்தின் முகமானாலும் அதனுடன் மனிதன் நட்பை நாடுவான்.
முகமும் ,உருவமும் உள்ளத்தை விட உயர்வாகின்றது தனித்து விடும்போது.
முகம் மனிதனின் உணர்வுகளை காட்டும் .
மகிழ்வான முகங்கள் மற்றவர்களயும் மகிழ்விக்கும் .
மிருகமாய் இருந்தாலும் நம் முக மலர்ச்சி மிருகத்திற்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும் .

சமுதாயத்தின் ஒரு அங்கமே தனி மனிதன்
சமுதாயத்தின் உயர்வு தனி மனிதனையும் உள்ளடக்கியதுதான்
கொள்கைகளும் பிரிவுகளும் சமுதாயத்தின் மாற்றங்களை உருவாக்குகின்றன.
இனமும் ,மதமும் ஏற்றத் தாழ்வுகளை குறைக்க முடிவதில்லை
இல்லாதவனும் இருப்பவனும் ஒன்றிப் போவதுமில்லை
உள்ளத்தின் உணர்வுகளை முகம் காட்டி விடுகின்றது
முகத்தின் மாற்றங்கள் போல் சமுதாய மாற்றங்கள் வருவது இயல்பு
முக மாற்றம் வருவதால் நாம் முகத்தை மாற்றிக் கொள்ளவோ ,சிதைத்து விடவோ விரும்புவதில்லை
சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழும் போது சமுதாயத்தையே சிதைக்க முற்படுவதில்லை

Wednesday 5 March 2014

கவலைப் படுவதில் கவலைபடாதே

கவலைப் படுவதில் கவலைபடாதே
கவலேயே மனதில் இறைவனை நிறுத்தச் செய்யும்.

மகிழ்ச்சி தன்னையும் மறந்து இறைவனையும் மறக்கச் செய்யும்
நடுநிலை தன்னிலை அறியச் செய்யும்

கவலைகள் கற்பனை வளத்தை வளர்க்கும்
கவலைகள் உந்து செய்தியை உருவாக்கும்
இவைகள் தன்னைப் பற்றி சிந்திக்கத் தெரிந்தவனுக்கு பொருந்தும்

குர்ஆனை மனனம் செய்து தொழ வைப்போர் தன்னிலை மறப்பார்
இறைவன் சிந்தனை மட்டும் அவர் மனதில்
தொழ வைக்கும் போது யாரேனும் அவர் முதுகில் குத்தினாலும் அவருக்கு அந்த வலி தெரியாது என்று ஒரு ஹாபில் சொல்லி கேள்வி

சில நேரங்களில் மழை கொட்டும்
சில நேரங்களில் மழை தூரல்களாய் விழும்
சில நேரங்களில் மேகம் அற்று வெறும் நிலை
மனதில் தோன்றும் எண்ண அலைகளுக்கும் இந்த அலை நிகழும்

அம்மா பெருமையாக சொல்லவில்லை

அம்மா அனைத்தும் கொடுத்தாள்
அம்மா கொடுத்தததை
அம்மா பெருமையாக சொல்லவில்லை

அப்பா சிலவற்றை செய்து கொடுத்தார்
அப்பா அதனை பெருமையாக பேசுவார்
அப்பா பெருமையாகப் பேசுவது
அம்மாவுக்கு பிடிக்காது
'உங்க கடமையை செய்தீர்கள் அதனை பெருமையாக பேசுவதற்கு என்ன இருக்கிறது'
என்று அம்மா கோபமாக கடிந்து பேசுவாள்

இஸ்லாம் நல்லது முஸ்லிம்களில் சிலர் கெட்டவர்கள்.

மதம் என்ற போர்வை அதைப்பற்றி கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு குளிர் காக்க உதவுகிறது /

எனக்கு வகாபிசமும் தெரியாது பைஜிசமும் தெரியாது

நான் ஒரு முஸ்லிம் ,

இஸ்லாம் நல்லது முஸ்லிம்களில் சிலர் கெட்டவர்கள்.அது இயல்பு .அவரும் நல்வழி பெற வேண்டும்

குர்ஆன் விளக்கத்துடன் படிப்பேன் , நபிமொழியும் அறிவேன் .அவைகளை அறிவது இப்பொழுது மிகவும் சுலபம் ,கணினி மிகவும் உதவுகிறது
இறைவன் அருளால் வாழ்வதற்கு நமது முயற்சியும் ,இக்லாஸ்( உளத்தூய்மை). ,இறைவனது அருளும் வேண்டும்

இங்கே அங்குள்ள தொந்தரவு நீக்கம்

இங்கும் பேட்டி
அங்கும் பேட்டி

இங்கும் விளம்பரம்
அங்கும் விளம்பரம்

பெயரில் மாற்றம்
கொள்கையில் மாற்றம்

கொடுப்பதில் இணைந்தவை
பெறுவதிலும் இணைந்தவை

தமிழில் தொலைக்காட்சி
களித்திட தொலைக்காட்சி

அறிவைப் பெருக்க அயல் நாட்டு காட்சி
மாற்றிப் பார்க்க அவசியம் தொலை கட்டுப்பாடு கையில்

கணினி விதவையாய் வாழ்வை இழந்து நிற்கிறது

ஓர் அறையில் அமைதியாய் கணினியில் கண்ட உலகம் மறைந்து போனது
ஓராயிரம் கோடி செலவு செய்து ராக்கட்டை விடுகின்றனர்

ஒளியை, நீரை கொடுக்க முடியாமல் பெருமை பேசுகின்றனர்
ஒளி கொடுக்க நீர் கொடுக்க தொழில் செய்கின்றனர்

செய்யும் தொழிலிலும் தேவையற்ற ஊழல்
சேவை செயயவே வந்தோர் செயலற்று நிற்கின்றனர்

பெண்களுக்கு சின்ன சின்ன ஆசை!


அழகிய கணவன் அமைய ஆசை
சீர் வரிசை விரும்பாத கணவன் கிடைக்க ஆசை

பணம் கேட்காத மாப்பிள்ளை வீட்டார் வர ஆசை

மணமகன் செலவிலேயே நடக்கும் திருமண விருந்தும் நடக்க ஆசை

திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் விரும்பும் கணவன் வர ஆசை

வெளிநாட்டில் வெண்ணிலவு கொண்டாட ஆசை

வைர கல் மோதிரம் கணவன் பரிசாக கிடைக்க ஆசை
அழகிய குழந்தை பெற ஆசை

குழந்தை வெண்ணிலவில் உண்டாக ஆசை

குழந்தை ஆங்கில பள்ளிக்கூடத்தில் (கான்வென்டில்) படிக்க வைக்க ஆசை
குழந்தையை அழைத்து செல்லும் பொறுப்பான கணவன் வர ஆசை

கணினி வேலையில் பெரிய சம்பளம் வாங்கி சேமிக்கும் மாப்பிள்ளை வர ஆசை

ஸலாம் (முகமன்)

காலை வணக்கம்
மாலை வணக்கம்
இரவு வணக்கம்
பிரியும் போது குட் பை
நமஸ்தே இன்னபிற

இத்தனயும் ஒன்று சேர
அத்தனையும் விட உயர்வு

இறைவன் அருளால் உங்கள் மீது இறைவன் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என வாழ்த்துதல்
முஸ்லிம்கள் அதன் பொருளாக உலகமெங்கும் சொல்வது 'அஸ்ஸலாமு அலைக்கும்'

சிலரது வேள்வி ! விருப்பம் ! இப்படியும் தோன்றும் !

சிலரது வேள்வி !

பொருள் சேர்க்க பலமுறை பயணம் செய்யலாம்
பாவத்தை கழிக்க ஒருமுறை யாத்திரை போதும்

பொருள் சேரும் செலவழியும்
பாவத்தை கழிக்க பலமுறை யாத்திரை செய்ய
பாவம் சேர்ந்தால் யாத்திரை செய்து பாவத்தை கழிக்கலாம்
பாவம் செய்வதின் மீது பயம் அற்றுப் போகும்

தெரியாமல் செய்த பாவம்
அறியாமல் செய்த பாவம்
அறிந்து செய்யும் பாவச் செயல்கள்
ஒருமுறையோடு அழிந்து விட வேண்டும்
அது தொடர் செயலாக் இருப்பின்
பாவச் செயல் அவனை தொடரச் செய்யும்
பாவத்தை கழிக்க பலமுறை யாத்திரை செய்வதும்
அவனுக்கு அந்த யாத்திரை மகிழ்வை நாடும் யாத்திரையாக அமைந்து விடும்

பாட்டினால் மாற்றம் பெற்று உயர்வடைய பாடு

பாடு நண்பனே!
பாடுவது நல்ல பாட்டாய் பாடு
பாடுவது என்னைப் பற்றி பாடு
பாடுவதை என்னைப் புகழ்ந்து பாடு
பாடுவது புகழ்ச்சியாய் இருக்க
பாட்டினால் மாற்றம் பெற்று உயர்வடைய பாடு
பாடுவதை ஒரு பாடாக நினைத்து பாடாதே
பாடியவர்கள எல்லாம் என்னை ஏசியே பாடினர்

வாழ்வெல்லாம் வசை மொழிகள்
நல்லவனாக்க நல்ல வார்த்தைகள் சொல்லவில்லை
வசைமொழிகள் மனதை தைத்தது
வசைமொழிகள் நல்லதை நாடவில்லை
வசைமொழிகள் வீம்பாக செயலை நாடியது
குடும்பத்தில் உள்ளவரே குறை கூறி ஊரெல்லாம் பரப்பினர்
தன் மகனே ஆனாலும் தனியே அறிவுரை தரவேண்டுமென்ற
உயர் நோக்கு அறியாமல் போயினர்
அன்பு இருக்குமிடத்தில் அறிவு மங்கிப் போனது