Thursday 30 January 2014

ஒற்றுமை படாத பாடு படுகிறது


ஒற்றுமை படாத பாடு படுகிறது

நான் ஜப்பான் போயிருந்தபோது ஒருவரை சந்திதேன்
அவர் ஆங்கிலத்தில் கேட்டார் நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்துள்ளீர்கள்?

நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன்
இந்தியாவில் எப்பகுதி
இந்தியாவில் தென்னாடு
தென்னாட்டில் எந்த ஸ்டேட்
தென்னாட்டில் தமிழ்நாடு
தமிழ்நாடு என்றதும் அவர் தமிழில் பேசினார்

தமிழ்நாட்டில் எந்த ஜில்லா (அப்பொழுது அப்படித்தான் சொல்வார்கள் )
தஞ்சை ஜில்லா (அப்பொழுது எங்கள் ஊர் தஞ்சை ஜில்லா.இப்பொழுது நாகப்பட்டினம், மயிலாடுதுறை அருகில் உள்ள நீடூர்)
நானும் தஞ்சையை சேர்ந்தவன்தான் .
நெருக்கம் அதிகமானது

ஒரு மொழி பேசினால் அல்லது ஒரு ஊர்காரன் என்றால் வெளிநாட்டில் ஒற்றுமை கிளை விடுகிறது.

ஆனால் இங்கு ஒரு ஊரை சார்ந்தவன் ,ஒரு மொழி பேசுபவன் , ஒரு மார்க்கத்தை பின்பற்றுபவனாக இருந்தாலும் ஒற்றுமை இல்லை . அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை இல்லை .மனித நேயமுமில்லை
---------------------------

Monday 27 January 2014

நான் என்ன செய்வேன்!

நான் பெற்ற குணம் தனித்தன்மை பெற்றது
நான் பெற்ற அறிவு மற்றவர்களோடு மாற்றமாக உள்ளது

அவர்களை ஒரு கோணத்தில் பார்த்தால்
அவர்கள் சொல்வது சரியாக தெரிகிறது

அவர்களை மற்றொரு கோணத்தில் பார்த்தால்
அவர்கள் சொல்வது சரியாக தெரியவில்லை

அவர்களின் செயல்பாடுகள் எனக்கு நிறைவாக தெரியவில்லை
அவர்கள் என்னை அறியாதவர்களாய் இருந்து
அவர்கள் என்னை அறியாதவன் என்கிறார்கள்

இறைவனின் மகிமையால் மனதில் நிம்மதி நிறைந்து விடட்டும்

சில முல்லாக்களின் முரண்பாடுகள் முட்டிக் கொள்கின்றன
சிலர் கல்லாக் கட்டி காசுகளை கணக்கு பார்க்கின்றனர்

அப்பாவி மக்கள் அலைபாய்கின்றனர்
எப்பக்கம் உண்மை உறைந்துள்ளது
என்பதை அறியாது தடுமாறுகின்றனர்

தடுத்து நிறுத்த அரசுக்கு உரிமை உண்டு

கூட்டம் போடுவோர்
கூடி அழைக்கட்டும்
கூடுவதற்க்கு அனுமதி பெறட்டும்
கூடுவதற்க்கு ஆட்கள் சேர்க்கட்டும்
விரும்புவோர் விரும்பி போகட்டும்
விரும்பாதோர் விலகி நிற்கட்டும்
வேதனையும் சோதனையும் வந்து சேரட்டும்
அனுபவத்தால் அறிவு பெறட்டும்
அரசு அனுமதி பெற்று கூடுவது
அவர்களது உரிமை
அவரைப் போல் ஆசைப் படுவது
அனைவருக்கும் உரிமை உண்டு
உன் கருத்தை நீயும் கூட்டம் போட்டு
உன் கருத்தைச் சொல்
அது உனக்கு கொடுக்கப் பட்ட உரிமை
உன் உரிமை
என் உரிமையை பாதிக்க
அரசுக்கும் உரிமை உண்டு
அதனை தடுத்து நிறுத்த

Saturday 25 January 2014

. 'நான் பணம் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்'.

ஒரு நாள்  ஒரு பூ வியாபாரி முடிதிருத்தகம்  சென்றார். முடி வெட்டிய பிறகு   பூ வியாபாரி முடிதிருத்துபவரிடம் பணம் கொடுத்தார் . 'நான் பணம் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்'.என்றார் அந்த நாவிதர்.


அடுத்த நாள் காலை, முடி திருத்தும் கடை திறக்க சென்ற போது ஒரு வாழ்த்து  அட்டை 'நன்றி' என்று எழுதி  இருந்தது மற்றும் ஒரு டஜன் ரோஜாக்கள் ஒரு பையில் இருந்தது

அன்று ஒரு மளிகை கடைக்காரர் முடி வெட்டிக்கொள்ள வந்திருந்தார். முடி வெட்டி முடிந்தவுடன்  மளிகை கடைக்காரர்  முடிதிருத்துனரிடம் அதற்குரிய பணம் கொடுத்தார் அதற்கு அந்த நாவிதர் 'மன்னிக்கவும் நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்' அதனால் தயவு செய்து பணம் கொடுக்க வேண்டாமென்றார்.  அதற்கு மரியாதை கொடுத்து மளிகை கடைக்காரர்  நன்றி சொல்லி விட்டு சென்றார் . அடுத்த நாள் முடித்திருத்தகம் திருக்கும்போது 'தயவுசெய்து எனது அன்பான அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன் ஒரு  வாழ்த்து அட்டையுடன்  ஒரு பை நிறைய மளிகை பொருள்களும் இருந்தன.

Friday 24 January 2014

வெற்றியாளனாய் இருக்க தவறான நண்பர்கள் தேடி வருவார்கள்!

விவாதித்தோம், விவரித்தோம்
விளையாடின வார்த்தைகள்
வார்த்தைகள் வாதமாகின
இருவருக்குள் நடந்தவைகளை
பலருக்கு பகிர்ந்தாய்
பகிர்ந்ததில் பாதியை பகிர்ந்தாய்
மீதியை உனக்குள் முடக்கினாய்
பாதியை பகிர்ந்தது பாதித்தது என்னை
மீதியை பகிராமல் முடங்கிப் போனாய்

Thursday 23 January 2014

அன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள்

அன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள்


கருத்து வேறு! தகவல் வேறு!

View
கொள்கைக்காக விவாதம் விரோதம் !

View
அளவுக்கு அதிகமான நம்பிக்கை !

View
நாம் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது .....

View
சிந்தனையிலிருந்து பிறப்பது சிறப்பு .

View
மன நிறைவு நிறைவான வாழ்வைத் தரும்

View
ஆளுமை சக்தி !

View
வேண்டவே வேண்டாம் விரக்தி !

View
அரசியல் நடத்தும் மனிதர்களின் பண்பும் உயர வேண்டும்

View
இறைவன் மன்னிப்பானா!

View
சிறப்பு அறிதல் சிறப்பு

View
பிரபலங்களில் பலவகைகள்

View
இரத்தக் கண்ணீர்

View
தனிமை

View
உருவாகும் என்ணங்கள் உயர்வாய் இருக்கட்டும்

View
தேர்தல் காலத்திலும் நிகழலாம்

View
புன்னகை

View
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்

View
'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். ..

View
பயணத்தில் பார்வை

View
இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை

View
என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன் !

View
நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை!

View
யார் அறிவார் நம் நிலை

View
தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்...

View
விருப்பமும்(லைக்கும்) கருத்துரையும்

View
விதி

View
வா! வந்து பார் ! வர்ணித்தது போதும்.

View
தங்கத்தில் தரம் காண வேண்டும்

View
சட்டமும் , விதியும் , மார்க்கமும் நகைத்து நிற்கின்றன

View
குடும்பம்

View
நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

View
எதிலும் அவசரம்

View
சேவைக் கொள்கை வாகை சூடட்டும்

View
பிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு

View
பிறப்பும் இறப்பும்

View
சொல்லிவிட்டேன் !

View
வாழ்வை ரசிக்க வேண்டும்

View
அறிவைத் தேடு ஆண்டவனை அறிய

View
போராட்டமே வாழ்வாகிவிட்டது

View
உன் ஆணைக்கு நான் அசைகிறேன்!

View
முழுமை எதில் உள்ளது !

View
நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,

View
இனாமுக்கும் மதிப்பு இல்லாத நிலை!

View
முன்னால் போ, பின்னால் வருகிறேன்.

View
அறியாமையின் நிலை மோசமான நிலை

View
பெண் என்றால் பேயும் நடுங்கும்

View
உன் மவுனம் சம்மதமானால்!

View
சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை

View
திருமண விருந்தில் தரப்படும் சிறந்த உணவு பிரியாணியே

View
ஒரு காரணமுமின்றி ஒன்றையும் இறைவன் படைக்கவில்லை.

View
அடிமையாய் இருப்பதில் சுகம்

View
கிடைத்த நாட்கள் உயர்வானவை

View
திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல.

View
தன்னை உயர்த்திக் காட்டி நிற்பதல்ல சேவை

View
நெஞ்சில் ஓர் இறுக்கம் இருப்பதனை இருத்தி வைத்தால்.

View
வேற்றுமையில் ஒற்றுமை

View
சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு

View
சொல்வது உன்னதாய் இருக்கட்டும்

View
பிரயாணம் தந்த பாடம்

View
தவறான ஆசைகளை ( Nafs ) அடக்க வேண்டும்

View
கற்பின் உயர்வு

View
வெட்கப்படுவதற்கு வெட்கப்படு.

View
நான்

View
சீனாவின் வளர்ச்சி

View
திருமணம்

View
கனவுகள் கவித்துவம் பெறவில்லை

View
கவிதையைப் பற்றியது கவிதையல்ல !

View
நீ என்னோடு நான் உன்னோடு

View
இதுதான் கொலை உலகம் !

View
தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்..

View
பெண்ணே நீ செய்த குற்றமா !

View
எங்கிருந்தோ வந்தாய் !

View
தொடங்கி விட்டது பரபரப்பு !

View
பிரியாணி ....

View
அரசியல்

View
நீ தான் என் நிழல்

View
செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்

View
சொல்ல விரும்புவது

View
மறை ஓதி மறை வாழ்வு வாழ்தல் உயர்வு

View
வேத வழி நாடாத வாழ்க்கை !

View
நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (+playlist)

View
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013

View
சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியில் பூத்த ரோஜா மலர்

View
கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்

View
"எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்"

View
Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது

View
இந்த கொள்கை உயர்வைத் தரும் _ எது உண்மை ?

View
ஆடையில் ஒரு இழை குறைந்தாலும் ஆடை சிறப்பாகாது

View
உணர்வுகள் உணர்சிகள்

View
அருமையான தத்துவங்களை உள்ளடக்கிய காதல் கவிதைகளைக் கண்டால் .....

View
எங்கே தட்டுவது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

View
சீதனம் கேட்டதால் (வரதட்சனையால்) இழந்தது

View
கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்!

View
மன உளைச்சல் மறையும்

View
தனிப்பட்ட ஒழுக்கம் நடத்தை

View
புனித மக்கா - நேரலை. The Holy Makkah Live Telecast.

View
நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது ...

View
மனித மனம் மற்றவரோடு ஒவ்வாமையாக இருக்க...

View
நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா?


View 

Monday 20 January 2014

கருத்து வேறு! தகவல் வேறு!

கருத்துகள்

கருத்து வேறு!
தகவல் வேறு!

கருத்துகள் கொடுக்கிறோம்
தகவல் தருகிறோம்!
செய்திகளை சொல்கிறோம்

தகவலும் செய்தியும் உண்மையின்
அடிப்படையில் அமைதல் வேண்டும்

பொய்யான செய்திகள்
பொய்யான தகவல்கள்
மெய்யாகவே கேடுதான் தரும்

கொள்கைக்காக விவாதம் விரோதம் !


ஒருவர் நம்மிடம் விவாதம் செய்யவில்லை அதனால் நாம் சொல்வது சரிதான் என்று நினைப்பது சரியாக இருக்க முடியாது.

ஒருவர் நாம் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதால் நாம் சொல்வதை அவர் விரும்பிக் கேட்கிறார் என்றும் ஆகி விடாது.

நான் முறையற்ற முறையில் பேச அவர் பொறுமை கையாள்கிறார் என்பதால் அவர் கோழையல்ல

அளவுக்கு அதிகமான நம்பிக்கை !



நம்பிக்கை நன்மைகள் தரலாம்

சில நேரங்களில் அதீத நம்பிக்கை பயன்தரலாம்.

அதீத நம்பிக்கையால் வாழ்க்கையை தீவிரமாக்கிக் கொண்டு வாழ்வைப் பற்றியே  தேவையில்லாமல் சிந்தனையால் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதும் உண்டு .

வாழ்க்கையை லட்சியமற்றதாக பொருபற்றதாக்கிக் கொண்டு பல இழப்புகளையும் அடைவதும் உண்டு

தன்னைப் பற்றி நினைக்காமல்,தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்! என்பதே சிலரது நினைப்பில் இருந்துக் கொண்டே இருக்கும். இதனால் செயல்கள் நடைபெறாமல் போகலாம்.

Thursday 16 January 2014

நாம் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது .....

நான் ஒன்றை சிந்தித்தால்.....
நான் சிந்திக்கும் சிந்தனை முதல் சிந்தனையை மறக்கடிக்கிறது
நான் ஒன்றை எழுத நீண்ட நேரம் ஆகிறது .....

நாம் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது
.....
நாம் ஒருவருக்கொருவர் பார்த்தே நீண்ட காலமானது
நான் பார்பவைகள் அனைத்திலும் நீ இருப்பதாய் தோன்றுகிறது .....

Monday 13 January 2014

சிந்தனையிலிருந்து பிறப்பது சிறப்பு .

சிந்தனையை கருவாக்கி
கருவினை கட்டுரையாக்கி
கட்டுரையை மற்றவர்க்கு பகிர்ந்து
மற்றவர் பலனடைய
நாமும் பயன் பெறுகிறோம்.

எழுத்துக்கு எதற்கு காப்புரிமை
எழுதும் ஆற்றலை தூவிவிட்ட இறைவன்
எழுதும் ஆற்றலை தேடி பொறுக்கிக் கொண்டவர் நாம்
பொறுக்கியதை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பை நம்மிடம் கொடுத்தான்
கொடுத்ததை பகிர்ந்துவிட மாண்பை அடைகின்றோம்.

மன நிறைவு நிறைவான வாழ்வைத் தரும்

நமக்குள் ஆயிரம் பிரச்சனை
நமக்குள் இருக்கும் பிரச்சனை விலக வேண்டும்

நம் பிரச்சனை விலக விளக்கம் தேவை
நம் பிரச்சனை விலக முயற்சி தேவை

ஒரே உருவம் படைத்தோர் அறிது
ஒரே கருத்தும் கொண்டோர் குறைவு

இருண்ட அறையில் அழுக்கு
அழுக்கை அறிய ஒளி தேவை
ஒளி கிடைத்த பின் அழுக்கை அகற்ற தொடப்பம் தேவை
அனைத்தும் கிடைத்த பின் நம் உழைப்பு தேவை

ஆளுமை சக்தி !

ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர். சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும் சக்தி. அறிவின் அடித்தளம். இத்தனையும் சேர முயற்சி என்ற உந்தும் சக்தி தேவை.

ஆல மரத்தின் விதை சிறுது ஆனால் அது உண்டாக்கும் மரம் பெரிது. உடலின் உருவத்திற்கும் அவன் பெற்றிருக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை .மெலிந்த மேனியும், அழகற்ற தோற்றம் கொண்ட எத்தனையோ பேர் சிறப்பான ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும் நாம் பார்க்கின்றோம் .ஆள் பாதி ஆடை பாதி என்று எண்ணி தன்னிடம் உள்ள ஆளுமையினை குறைத்து விடக்கூடாது.
நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது என்று நம்பி அதனை வெளிக்கொணர செயல்படுங்கள் .

வேண்டவே வேண்டாம் விரக்தி !

வேண்டவே வேண்டாம் விரக்தி
சூழ்நிலைகள் சுழல வைக்க வேண்டாம்
வாழும் நிலை தடுமாற்றம் தர வேண்டாம்
பாதகமான வாய்ப்புக்கள் பயம் தர வேண்டாம்
தோல்வியைக் காண துயள வேண்டாம்
துயரத்தால் உணர்வுகள் செயலிழக்க வேண்டாம்

சென்ற வாடிக்கையாளர் மீண்டும் வருவார்
செய்யும் முயற்சியை திறம்பட செய்து விடு
குறைத்துக் கேட்டால் கொடுத்து விடு
வாடிக்கையாளர் குறையாமல் செயல் படு
நெறிமுறையை நேர்மை யாக்கு
உண்மையை உரிமையாக்கு
தயாரிப்புகள் தகுதியாகட்டும்
அழைப்புகள் உயர்வாகட்டும்
அணுகுமுறை மகிழ்வை தரட்டும்
அணுகுமுறைகள் நிறை வேறட்டும்
ஆழ்ந்த நிபுணத்துவம் கையாளப் படட்டும்

Thursday 9 January 2014

அரசியல் நடத்தும் மனிதர்களின் பண்பும் உயர வேண்டும்

அரசியல் பாடம் படித்து பட்டம் பெற்றோம்.
சட்டம் படித்து பட்டம் பெற்றோம்.

அரசியலில் ஈடுபாடு உண்டு
அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கைளிலும்
அனைத்திலும் உடன்பாடு வருவதில்லை
அதனால் எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் அல்ல
அரசியலில் நாகரீகம் குறைகிறது
அரசியல் கொள்கையும் உயர்வாக இருக்க வேண்டும்
அரசியல் நடத்தும் மனிதர்களின் பண்பும் உயர வேண்டும்
அரசியலில் வாக்குப் போட ஜாதி ,மத பிரிவினை கிடையாது
அரசியலில் வாக்குப் போட படித்தவர் தான் தகுதியானவர் என்பது ஏற்புடையதல்ல
ஒருவருக்கு சமைக்க தெரியாமல் இருக்கலாம்
சமைத்த உணவை உணவை ருசி பார்க்க அவருக்கு தெரியும்
இம்முறை ஆட்சியால் அவர் பலன் அடையாமல் இருந்தால்
அடுத்த தேர்தலில் அவர் மாற்றம் தேடுவார் . இதற்க்கு கல்வி அவசியமில்லை. அனுபவ ஆய்வும் அறிவும் போதும்.

இறைவன் மன்னிப்பானா!


தவறு செய்தவர் இறைவன் மன்னிப்பு நாடி இறைவனின் தயை தேடட்டும்
தவறு செய்தவர் மற்றவருக்கு அந்த தவறை செய்தால் தவறால் பாதிக்கப் பட்டவர் மன்னிப்பது அவசியம்.
பாதிக்கப் பட்டவர் மன்னிக்கும் வரை இறைவன் மன்னிக்க மாட்டான் .
(கடன் அடைக்கப் படும்வரை ,ஒருவரை மனம் நோக பேசுதல் மற்றும் பல )

தனக்குத் தானே ஒருவர் தவறு செய்து விட்டால் இனி எந்த பாவமான தவறுகளை செய்ய மாட்டேன் என்ற
மனஉறுதியோடு இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
அது இறைவனுக்கும் அவருக்கும் தொடர்பு கொண்டது அது கடமையானதாக இருந்தாலும்.

சிறப்பு அறிதல் சிறப்பு


மானிடராய் பிறத்தல் சிறப்பு
பிறப்புக்கு காரணமானவனை தொழுதல் சிறப்பு
பெற்றோரை பேணி பாதுகாத்தல் சிறப்பு
சேவை செய்தல் பிறப்பின் சிறப்பு

சிறப்பை நேசித்தல் சிறப்பு
சிறப்போடு வாழ்தல் சிறப்பு
சிந்தித்து செயல்படுதல் சிறப்பு
செயல்படும் ஆற்றலை செயல்படுத்துதல் சிறப்பு

Monday 6 January 2014

பிரபலங்களில் பலவகைகள்

அரசியலில் பட்டா போட்டவர்கள்
அரசியல் அறிஞர்கள்
சினிமா நட்சத்திரங்கள்
உயர் கவிதைகள் தரும் மற்றும் தந்த கவிஞர்கள்

கற்பித்த ஆசிரியர்கள்
ஞானம் தந்த ஞானிகள்
தத்துவ மேதைகள்
மார்க்க மேதைகள்

பெரும்பாலான பிரபலங்கள் நமது பொழுதுபோக்குக்கு பங்களிக்கிறார்கள்!

இரத்தக் கண்ணீர்

துயரம் தாக்க
மனம் மறத்துப் போனது
நினைவுகள் சிதறிப் போயின
இதயம் கனமானது
விழிகள் நீரைக் கொட்டின
கண்கள் சிகந்த நிறமாயின
கொட்டிய கண்ணீர் குருதி நிறமாயின
இரத்தக் கண்ணீர் என்ற பெயர் பெற்றன

கண்ணீரை நிறுத்தவும் முடியவில்லை
கண்ணீரை கரைக்கவும் முடியவில்லை

இதயத்தை தாங்கும் உடல்
மன பாரத்தை தாங்க முடியவில்லை

Sunday 5 January 2014

தனிமை

சிறிதாக இருக்க நிறைவாக இருக்க விரும்புகிறோம்
நிறைவாக இருந்தது நம்மை விட்டு அகல
சிறிதாக கிடைத்தாலும் போதும் என்று நினைக்கிறோம்

நிறைந்தவர்கள் இருக்க அவர்கள் அருமை தெரிவதில்லை
நிறைந்தவர்கள் நகர நம் நிலை அறிகின்றோம்

தனித்து விடப்பட்டபோது
தனிமையை வெறுக்கிறோம்

உருவாகும் என்ணங்கள் உயர்வாய் இருக்கட்டும்

பிராண வாயு கெட்ட குருதியும்
இனிய இதய தோட்டத்தில் வந்தமையால்
இனிய இதய வழி நரம்புகளில் சுத்த குருதிகளாக மாற்றப் பட்டு
உடலை நலமாக்க வழி வகுக்கின்றது

நரம்பெனும் வேர் வழியே வந்த நல்ல குருதி
மூளையை நன்முறையில் இயங்கச் செய்து
மலர்கள் போன்ற உயர்ந்த சிந்தனையை தருகின்றது

உடலெனும் விதையை பாதுகாக்க உறுதியான இதயம் வேண்டும்
உயர்வான மூளை சிறப்படைய உயர்ந்த சிந்தனைகள் உருவாக வேண்டும்
சிந்தனைகள் சீர் கெட விழுதும்(இதயமும்), வேரும்(நரம்பும் ) கெட்டொழியும்

தோப்பில் பாய்ச்சிய கெட்ட நீர் தேங்கி நின்றதால்
தோப்பே அழியும் நிலை உருவாகும்

தேர்தல் காலத்திலும் நிகழலாம்


தவறு செய்தவன்
தவறை விரும்பியே செய்தவன்
தவறை மறைக்க விரும்புகிறான்
தவறை மறைத்தமையால்
தன்னை மக்கள் மறப்பார்கள்
தன்னை உயர்படுத்த விரும்புகிறான்
தகுந்த நேரம் பார்க்கிறான்
தவறு செய்தமைக்கு வருத்தம் தெரிவிக்க
தவறு மக்களை துன்புறுத்தியதால் வந்தவை
தவறை மக்கள் மன்னிக்காமல்
தவறை இறைவன் மன்னிக்க மாட்டான்
தவறு செய்தவனின் வருத்தம் மனதிலிருந்து வந்ததல்ல
தவறு செய்தவனின் வருத்தம் ஆதாயம் தேடி வந்தது
தவறு செய்தவனின் வருத்தம் அடுத்த தவறை நாடி நிற்கின்றது

Friday 3 January 2014

புன்னகை


நான் அறிவேன் உன் நிலையை
உன் துயரமும் உன்னை வாட்டுகிறது
உன் நம்பிக்கையும் உன்னை விட்டு நகர்கின்றது
அத்துடன் உன்னால் மகிழ்வாய்
மற்றவரைக் கண்டால் புன்னகை பூக்க முடிகின்றது
அதுவே உனது பலமாக உள்ளது
அதனைக் கண்டு நான் அதிசயிக்கின்றேன்
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லையே
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லாததினால்
நான் வாழும் வாழ்வு ஒளி தராத வாழ்வானதோ !