Thursday, 27 February 2014

யாசித்தல் இறைவனிடம் மட்டும்நினைத்தது நிதர்சனம் ,
மறைக்கமுடியாத வாழ்க்கை ,
செயலில் வெளிப்படையானது;
மனதில் தெளிவானது;
கண்டவை கண்கூடு;
ஆற்றியவை அப்பட்டமானது ;
யாசகம் கேட்காத யதார்த்தம்
யாசித்தல் இறைவனிடம் மட்டும்
கடுகளவும் கபடமில்லை ,
படைத்தவனின் படைப்பை அறிந்து
ஆற்றியதில் துடிப்பு
பயன்படுத்தும் ஆர்வம் ,
தொடர்ந்து தொழுது வர நேசம் .
வாழ்வை நேசிப்பது .

செயலின் நிலையறிந்து வினையறிந்து விலகி நில்

  'என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!'

தவறு செய்தவன்
தப்பிக்க செய்வான்
தவறாக பேசுவான்

சொல்வான்
சொல்லத்தான் செய்வான்
நினைத்தான்
நடத்தி விட்டான்

Tuesday, 25 February 2014

முகநூல் மற்றும் கூகுள்+ பார்த்ததில் விருப்பம் வந்தது

லைக் என்றால் விரும்புதல்
லைக் என்றால் போன்று (ஒரே மாதிரி )

நான் இதை லைக் செய்கிறேன்
நான் இதை லைக் செய்தமையால்
எனது கருத்தும் இதில் கண்டுள்ள கருத்தும் உடன் படுகிறது

நான் லைக் செய்து விட்டேன் இதை பார்த்தவுடன் ஆனால்
நான் முழுமையாக விரும்பவில்லை அதனால்
நான் எனது கருத்துரையை இங்கே தருகிறேன்
நான் எந்த அளவுக்கு விரும்புகின்றேன் மற்றும்
நான் எந்த அளவுக்கு மாறுபடுகின்றேன் என்பதனை
நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

Monday, 24 February 2014

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்


வாய்க்கு வந்த வார்த்தைகளை
வரும் வழியில் வந்தவரிடம் சொல்லி வைத்தேன்

சொல்லிய வார்தைகள்
உண்மைக்கு புறம்பானது

தெளித்த வார்தைகள்
காற்றில் பறக்கும் இறகுகள் போல் பறந்து போயின

கேட்டவர்கள் கொளுத்திப் போட்டனர்
கொழுந்தெறியும் தீ பரவி பாதகமானது

அவதூறாக தெளித்த வார்தைகள்
அவமானத்தை பரப்பிச் சென்று பாவத்தை குவித்தன

மனதில் பட்டதை பட்டென சொல்வேன்

பெற்ற அறிவு இறைவன் தந்தது
இறைவன் தந்த அறிவை பூட்டி வைக்க மாட்டேன்
அறிவை சொல்லிக் கொடுக்க காப்புரிமை நாட மாட்டேன்
பெற்ற அறிவு கொடுக்க மற்றவருக்கு கசக்கவும் செய்யும்
பெற்ற அறிவைக் கொடுப்பதில் எனக்கு இனிக்கச் செய்கிறது
சுவை மாறுபடுவது போல்
ரசிப்பதிலும் மாறுபாடு இருக்கவே செய்யும்

Saturday, 22 February 2014

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.

(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)


தென்னகங்கண்ட அரபிக் கல்லூரிகளில் தலைசிறந்த ஒன்றாகத் திகழும் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை  இன்றைய சிறப்பிற்கு உயர்த்தி வைத்தவர்கள் அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.ஆவார்கள். இக்கல்லூரியின்  பொற்காலமான 1945 முதல் 1955 வரை  நிகரற்ற தலைவராய் விளங்கி இஸ்லாமிய கல்வித் துறையிலும், மார்க்கத்  துறையிலும் அப்பெருந்தொகை  ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நாம் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் அப்பெருமகனார் இக்கல்விக் கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பிற்காகவும்  பாடுபட்டார்கள் என்று  சொல்வது மிகையாகாது. எண்ணத்தாலும் எழில்மிகு சேவையாலும், பண்பாலும் பார்போற்றும் செய்கையாலும்    மிஸ்பாஹுல்,ஹுதா என்னும் கல்விச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்து நாடெங்கும்  ஞானஒளி பரப்பிய அப்பெருந்தலைவரின் வாழ்க்கை படித்துணரத்தக்கது. அவர்களது செயலும், செந்நெறியும்  எல்லோருக்கும்  வழி காட்டக் கூடியன. தலைவனுக்கேற்ற பெருந்தன்மையும் ஒரு சமூகத்தை நடத்திச் செல்லத் தக்க நிர்வாகத் திறமையும், தீயவைகளை துணிந்தெதிர்க்கும்  தறுகண்மையும் அல்லவை துடைத்து நல்லவை செய்யும்   நற்பண்பும், வரையாது வழங்கும் அக் வள்ளற்றன்மையும், ஒருங்கே பெற்றவர்களாதலால், இன்றைய தலைமுறையினருக்கு  அவர்களது வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகும். அவர்களது வாழ்க்கை வரலாற்றினைக் காண்போம். இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்.

தேடும் படலம் தொடர்கின்றது


குழந்தைப் பருவத்தில் விளையாட்டுப் பொருளைத் தேடினேன்
பள்ளிப் பருவத்தில் நண்பர்களைத் தேடினேன்
கல்லூரிப் பருவத்தில் அறிவைத் தேடினேன்
படித்தபின் வேலையைத் தேடினேன்
மணமுடிக்க பெண்ணைத் தேடினேன்
வளமாக வாழ பணத்தை தேடினேன்
தேடும் படலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தேடியதில் சில கிடைத்து தொடர்ந்து வந்தது
தேடியதில் கிடைத்த சில தொல்லையை கொடுத்தது
தேடாததும் சில சேர்த்துக் கொண்டது
தேடுவதில் சில மகிழ்வைத் தந்தது
தேடுவதில் சில வருத்தத்தை தந்தது
தேடவேண்டிய சிலவற்றை தேடாமல் விட்டேன்
தேடவேண்டிய நேரத்தில் தேடாமல்
தேடியது கிடைக்காமல் போனது
தேடுவதே வாழ்க்கையின் பகுதியானது
தேட வேண்டியதை தேடாத நேரமில்லை

Friday, 21 February 2014

"நாங்கள் மருத்துவராக மட்டும் இருக்க விரும்பவில்லை"

மக்கள் போரினால் ,தாக்குதலினால் படும் துயரங்களையும் பார்த்து மருத்துவ உதவியோடு சாதாரண மனிதரைப் போல் அங்கு மக்கள் படும் துயரங்களில் பங்கு கொண்டு மற்ற உதவிகளையும் செய்யக் கூடிய மனப் பக்குவமும் மருத்துவருக்கும் வரும் .

மருத்துவரும் ஒரு மனிதர்தான்.அவருக்கும் குடும்பமுண்டு ,உணர்வுகளுண்டு ,மனமுண்டு ,
மருத்துவ சேவையில் இருக்கும்போது நிலை வேறு . அப்பொழுது அவருக்கு நல்லவர் ,கெட்டவர் மற்றும் ஆண் ,பெண் என்பது தெரியாது மருத்துவ சேவை ஒன்றே தெரியும்.

"நாங்கள் மருத்துவர்கள் ஆனால் நாங்கள் மருத்துவராக மட்டும் இருக்க விரும்பவில்லை"
Dr. Mads Gilbert ( Eyes in Gaza, 2010)

"We are doctors, but we do not want to be only doctors "
Dr. Mads Gilbert ( Eyes in Gaza, 2010)


தலைவன் இறைவன் (மட்டுமே

முழுமை இறைவனுக்கு மட்டும்
முழு புகழும் இறைவனுக்கு மட்டும்

அளவுகோல் இல்லை இறைவனை புகழ்வதில்
அளவுகோல் உண்டு மனிதனை புகழ்வதில்

மனிதனை புகழ்வதில் தவறில்லை
மனிதனை புகழ்வதில் உண்மை வேண்டும்

இல்லாததைப் புகழ்ந்து
வஞ்சகமாக வலை விரிக்க
வஞ்சகப் புகழ்ச்கி யாக்கி
கெட்டவனை மேலும் கெட வைக்க
வஞ்சக மனம் கொண்டோர் இயல்பு

ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது

ஆனந்தத்தை அறுவடை செய்ய ஆளாக்கிக் கொண்டவன் நீ
துன்பத்தில் துவண்டு சுழல்பவன் நீ

சிறியதை பெரிதாக்க முயல்பவன் நீ
பெரிதானதை சிரிதாக்கியவனும் நீ

உன்னை உருவாக்கிய உயர்ந்தவனை மறந்தவனும் நீ
பணத்தை பெரிதாக நினைப்பவனும் நீ

அகங்காரத்தை தன்னகத்தே கொண்டவனும் நீ
உனைப் பெற்ற பெற்றோரையும் மறந்தவன் நீ

உனது நரம்புகள் உனது ஆணைக்கு உட்படாது
உன்னால் வந்தவர் உனை ஒதுக்கி நிற்பார்
உன்னையே நீ அறிவாய்
உனக்கு உதவ ஒருவரும் வர மாட்டார்
உழன்று பிரண்டாலும் போனது போனதுதான்

Wednesday, 19 February 2014

வேண்டாம் இந்த வீண் வம்பு என்பது அறிவுரையாகப் போனது.


ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்தபோது அந்த இடத்தில இருந்து இறந்தவர்கள், காவல் உதவியாளர்கள் மற்றும் பலரை மக்கள் மறந்து விட்டார்கள் அவர்களும் மனிதர்கள்தான்.ஒவ்வொரு உயிரும் உயர்வானது .இறைவன் கொடுத்த உயிரை மற்றவர்கள் மாய்க்க நினைப்பது தவறு.இறைவன் இயற்றிய சட்ட முறை உயர்வானது மற்றும் நாட்டின் சட்டமும் மதிக்கத் தக்கது .அவைகளை பேணி நடக்க மக்களுக்கு பாதுகாப்பும் உயர் வாழ்கையும் கிடைக்கும் .மனிதன் இயற்றிய சட்டத்தினை மனிதன் மாற்ற முடியும் .இறைவன் தந்த சட்டத்தை மனிதனால் மாற்ற முடியாது. இறைவனது நம்பிகையும் அவனது சட்டமும் மனிதனின் மாண்பில் உள்ளத்தில் இருக்க மக்கள் வாழ்வு உயர்வடையும்


இங்கு கிளிக் செய்து படியுங்கள்


இதனையும் கிளிக் செய்து படியுங்கள்
------------------------------------------------------------------------------

உன் சிரமத்தை எங்களுக்கும் கொடுத்து விட்டாயே !

கிடைத்த வேலையை ஏன் விட்டாய் ?
வேலை சிரமமாக இருந்தது அதனால் விட்டேன்
அதை விட வேலை செய்யாததால் பணம் இல்லாமல்,வருமானம் கிடைக்காததால் உன்னோடு நாங்களும் சிரமப் படப் போகின்றோம்
உன் சிரமத்தை எங்களுக்கும் கொடுத்து விட்டாயே !

- வயதான பெற்றோர்


Saturday, 15 February 2014

அது என்னுடையதுதான்


நான் விரும்புகிறேன் அதனால் அது என்னுடையது
நான் உன்னிடம் கொடுத்தேன் ஆனாலும் அது என்னுடையது

அது என்னிடம் உள்ளது அதனால் அது என் பொறுப்பில் உள்ளது
அதை உன்னிடம் கொடுத்துள்ளேன் அதனால் அது உன் பொறுப்பில் உள்ளது

நான் அதனை திரும்பவும் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்வேன்
நான் அதனை உன் பொறுப்பில் விட்டுச் சென்றதால்

அது என்னுடையதுதான்
அதை நாம் பொறுப்பாக பார்த்துக் கொண்டாலும்

நான் உன்னிடம் அமானிதமாக கொடுத்துள்ளேன்
நான் உன்னிடம் அமானிதமாக கொடுத்ததை பாதுகாப்பாக
நீ என்னிடம் ஒப்படைக்க வேண்டும் அது என்னுடையதாக இருப்பதால்

நான் நினைத்தபோது  சரியான நேரத்தில்
நான் அமானிதமாக ஒப்படைத்த பொருளை
நானே எடுத்துக் கொள்வேன்  உன்வசம் உள்ள என் அமானிதத்தை 

Thursday, 13 February 2014

நான் லைக் செய்கிறேன்

நான் விரும்புகிறேன்
நான் தொடர்கிறேன்

நான் லைக் செய்கிறேன்
நான் லைக் செய்துக் கொண்டே இருப்பேன்

நான் விரும்பியதை நீங்களும் விரும்பலாம்
நான் விரும்பியதை நீங்கள் விரும்பாமலும் இருக்கலாம்
நான் விரும்பியடி உங்கள் செயல் இருந்து விட்டது

நான் விரும்புவது நீங்கள் விரும்பவில்லையென்றால்
நான் இருக்குமிடம் நீங்கள் காட்சி தராதீர்கள்

கண்கள் கலங்க மற்றவர்களோடு பகிர்கிறாய்


நான் உதவி செய்தால் மகிழ்கிறாய்
நான் கண்டித்தால் வெறுக்கிறாய்

நான் செய்த உதவிகள் கணக்கிலடங்காதவை
நான் கண்டித்தவைகள் மிகச் சிலதே

உன் நினைவில் நிற்பது
நான் நல் நோக்கம் கொண்டு கண்டித்தவைகளே

நான் செய்த நல்லவைகளை
நீ மற்றவரிடம் சொல்வதில்லை

நான் கண்டித்தவைகளை
நீ கண்கள் கலங்க மற்றவர்களோடு பகிர்கிறாய்

இசைக் கருவிகளா?' கவிதையா!இசைக் கருவிகளா?'

(பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள்.

952. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.
Volume :1 Book :13

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.

சைத்தான் எங்கும் உள்ளான் மனதை கட்டுப்படுத்து


படம் வேண்டாம்
ஆனால்
தேவைக்கு படம் வேண்டும்
முகநூலில் போட
பாஸ்போர்ட் எடுக்க
அரசுக்கு தேவையானபோது
பேங்கில் கணக்கு தொடங்க
இப்படியாக பல

நான் போலியாக வாழ விரும்பவில்லை


நான் விரும்பியபடி நான் வாழ்கிறேன்
நான் விரும்பியது தாழ்மையானதல்ல

நான் என்னை முறைபடுத்திக் கொண்டேன்
நான் எனக்கு தேவையான கல்வியைக் கற்றேன்

நான் நீங்கள் விரும்பியபடி வாழ விரும்பவில்லை
நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன்

நான் நீங்கள் விரும்பியபடி வாழ்ந்தால் உங்களுக்கு மகிழ்வை கொடுக்கும்
நான் விரும்பியபடி நான் வாழ்ந்தால் எனக்கு மகிழ்வை கொடுக்கும்

உன்னோடு வருவது உன் செயலின் விளைவுகளே

கிடைத்தது கொஞ்சம்
கொஞ்சம் கிடைத்ததால்
அதனால் பங்கில்லை

கிடைத்தது நிறைவு
நிறைவை பகிர்ந்தால் குறைவாகிவிடும்
அதனால் பங்கில்லை

கிடைத்தது அதிகம்
அதிகமானது வாரிசுகளுக்கு மிஞ்சும்
அதனால் பங்கில்லை

வாழ்க்கை அழகானது … அது தொடரட்டும்

இன்றையே தினமே நம்மிடம் இருப்பது.
நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது.
நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.
இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம்.
இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம்

வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால்
அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம்
நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ
என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும்.

பெணகள் பெரிதாக விரும்புவதில்லை

காலம் மாறிவிட்டது பெண்ணீயம் பேசுவதால் (பெண்கள் கோபிக்க வேண்டாம் -ஆண்களுக்கு உணவு கிடைக்காது )

பெணகள் பெரிதாக விரும்புவதில்லை!

அழகான மணமகன் அதிலும் படித்த செல்வந்தன்
திருமணதிற்கு தரும் நகைகளோடு வைர மோதிரம்
திருமணத்தில் பெரிய விருந்து
திருமணதிற்கு பின் சிறிய விருந்து நட்சத்திர விடுதியில்
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் honeymoon கொடைக்கானலில்
அழகான தனி வீடு போர்டிகோ வசதியுடன்
போர்டிகோவில் நிறுத்த ஒரு உயர்ந்த கார்
அழகு சாதனங்கள் தன்னை அழகு படுத்த
தான் வேலைக்கு போனால் பிள்ளைகளை கவணிக்க மாப்பிளை அல்லது அவரது பெற்றோர்கள்
மற்றும் சமையல் வேலையும் அவர்கள் பார்த்து விட வேண்டும்
வார விடுமுறையில் நல்ல நட்சத்திர விடுதியில் விருந்து
பிறகு ஆங்கில படம்
இன்னும் பல ...

கணவன் நிலை படம் விளக்கும்


நம்மைப்பற்றி நாமே அறிந்து கொள்ள முடியவில்லை!

நம்மைப்பற்றி நாமே அறிந்து கொள்ள முடியவில்லை
நாம் அடுத்தவர் பற்றி ஆய்வு செய்கிறோம்

நம் தவறை நாம் மறைக்கிறோம்
அடுத்தவர் தவறை விளம்பரம் செய்கிறோம்

நம்மோடு இருந்த மகன் நல்லவனாய் இருக்கிறான்
நல்லவனாய் நம்மோடு இருந்ததால் பெரிய மகிழ்வு கிட்டியதில்லை

நம் மகன் நம்மை விட்டு பிரிந்து கெட்டவனாக அலைந்து
நம் மகன் நல்லவனாக நம்மை வந்தடையும் போது பெரிய மகிழ்வு கிடைகிறது

உடனிருந்த உத்தம மகனுக்கு உயர் பொருளும் விருந்தும் கொடுக்கவில்லை
ஓடுகாலியாக (Prodigal Son) இருந்த நம் மகன் ஓடிப்போய் உத்தமனாக திரும்பி வர அரவணைத்து உயர் விருந்தும் சிறந்த பொருளும் கொடுத்து மகிழ்கின்றோம் .பிரிந்தவன் நல்லவனாக வந்து சேர்ந்தமையால்.

உடனிருந்த உத்தம மகனுக்கு, தமக்கு அந்த மரியாதை கிடைக்காமல் போனதால் மனம் வருந்த

உயர்ந்த உள்ளம் தாழ்வு மனப்பான்மையை அடைகின்றது

Wednesday, 12 February 2014

நற்செயல் கொண்ட மங்கை நாணம் மிகைத்து நின்றவள்

கல்யாணமாக நடந்தது
கடிமணமாக இருந்தது
கடிக்கும் மனமானது
மணந்தவள் மனம் நோக வாழ்ந்தமையால்

பிடித்தவள் பிடிக்காமல் போனாள்
பிடித்தவள் பிடிக்காமல் போனதால்
மணந்தவளோடு வாழும் வாழ்க்கை முறிந்து போனது

விவாதம் செய்பவர் தகுதியற்றவரானால் விவாதம் விபரீதமாக முடியும்

விவாதம் செய்வதற்கு
விவரம் சேர்த்து விடு

விவரம் அறிந்தவருடன்
விவாதம் செய்ய நாடு

விவாதம் செய்பவர் தகுதியுடையவராய் இருக்கட்டும்
விவாதம் செய்பவர் தகுதியானவரானால்
தோல்வியும் வெற்றிதான் விவாதத்தில் பெற்ற அறிவினால்

விவாதம் செய்பவர் தகுதியற்றவரானால்
விவாதம் விபரீதமாக முடியும்

தகுதியுடையோரிடம் திறமையாய் வாதிடு
தகுதியற்றவரோடு விவாதம் செய்தால்
தகுதியற்றவராய் பார்பவருக்கு காட்சியளிப்பாய்
தகுதியற்றவர் யார் என விளங்காமல் போய்விடும்

உயர்வு இருப்பின் மற்றவர்களும் அந்த கொள்கையை நேசித்து இணைவார்கள்

இறைவன் ஒருவருக்கு ஒரு வழி காட்ட
அவர் தனக்கென அவவழியை தொடர்கிறார்
நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

ஒரு உயர்வழியை
ஒருவர் பின்பற்ற
மற்றவர் அவரை அல்லது
அவர் பின்பற்றிய வழியை திட்டினால்

திட்டுபவர்கள் திட்டட்டும் .
திட்டுவதனால் திட்டுபவர்களுக்கு தீமை
திட்டப்படுபவர்கள் நேர்மைமையானவர்களாக இருப்பின்
திட்டப்படுபவர்களுக்கு நன்மைகள் சேர
திட்டப்படுபவர்களைப் பற்றி மற்றவர்களும் அறிய
திட்டப்படுபவர்களின் கொள்கை பிடிப்பில்
உயர்வு இருப்பின் மற்றவர்களும் அந்த கொள்கையை நேசித்து இணைவார்கள்
தேவையற்று ஒருவரை அல்லது ஒரு சமூகத்தை
திட்டுவதால் அவர்களுக்குள்(திட்டப்பட்டவர்களுக்குள் )
ஒற்றுமையும் வலிமையும் வருவது உண்டு .
அனைத்தும் நன்மைக்கே
----------------------------------------------------
யுவன் சங்கர் ராஜாவை
இஸ்லாத்தை விரும்பி வந்ததை பலரும் பாராட்ட
அவரை பாராட்டும் நோக்கம் உயர்வாக இருக்க
சில காலம் கழித்து
அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காமல்
அவரை ஒரு பிரிவுக்குள் உள்ளடக்காமல் இருப்பது உயர்வு
(இஸ்லாத்தில் பிரிவு கிடையாது )

அவரது இசை ஆர்வத்தை குறைக்க விரும்பினால்
அவர் பாரிசுக்கு போய் சேவை  செய்ய ஆரம்பித்து விடுவார்

இறைவன் அவருக்கு நல்வழி காட்ட
அவர் தனக்கென (இஸ்லாம்) ஒரு வழியை தொடர்கிறார்
என்ற நினைவோடு இருப்போம்

மனம் ஈர்ப்பு விசை
மனம் மனிதனை  வசப்படுத்தி விட்டது

படைத்தவனுக்கும் படைக்கப் பட்டவனுக்கும்
தரகர் இல்லை தடை இல்லை

இறைவன் அனைவருக்கும்  அமைதியையும்
சமாதானத்தையும் வழங்குவானாக..

மனைவியை மகிழ்விக்க ..முக்கிய சிறு குறிப்புகள்

மனைவியை மகிழ்விக்க ..முக்கிய சிறு குறிப்புகள்

பாராட்டுங்கள்
கேட்பதை வாங்கி கொடுங்கள்
பிடித்ததை அறிந்து கேட்காமலேயே கொடுங்கள்
எங்கு போனாலும் சொல்லிச் செல்லுங்கள்
ஏன் போனாய் என்று கேட்காதீர்கள்
அடுததவர் வீட்டு சாப்பாடு ருசியாக இருந்தது என்று சொல்லாதீர்கள்
(வேறு எங்காவது விருந்து சாபிட்டு வந்து அந்த சாப்பாடு அருமையாக இருந்தது என்று வாய் தவறி உண்மையை சொல்லிவிட்டால் "ஆமா நான் சமைத்தாதான் உங்களுக்கு பிடிக்காதே" என்ற வார்த்தை வேகமாக, கோபமாக வந்து கொட்டும்.அதற்கு சமாதானம் செய்யவே நேரம் பத்தாது. )

அடிமைத்தனம் இன்னும் நாட்டில் அழிந்துவிடவில்லை
தனிமனிதன் துதி பாடுதல் இருந்துக் கொண்டே இருக்கிறது

அடுத்தவரை துதி பாடுவதை விட
அடுத்தவருக்கு அடிமையாய் இருப்பதை விட
மனைவியிடம் இருந்து விட்டால் வாழ்வில் மகிழ்வுதான்

காதலிக்காமல் நாளில்லை காலமெல்லாம் காதலர் தினம்

நினைவெல்லாம் அம்மாவின் நினைவு
காலமெல்லாம் அம்மாவின் தினம்

காதலிக்காமல் நாளில்லை
காலமெல்லாம் காதலர் தினம்

வாழ்வெல்லாம் உழைக்கின்றேன்
வாழ்வெல்லாம் உழைப்பாளர் தினம்

காதலித்து மணமுடித்து தோல்வி கண்டவன் காதலர் தினத்தை வெறுக்கிறான்
காதலிக்காது மணமுடித்தவனும் காதலர் தினத்தை வெறுக்கிறான்
காதலித்து ஓடிப்போனவர் குடும்பத்தை சார்ந்தவரும் காதலர் தினத்தை வெறுக்கின்றனர்

Monday, 10 February 2014

நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

இறைவன் ஒருவருக்கு ஒரு வழி காட்ட
அவர் தனக்கென அவவழியை தொடர்கிறார்
நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

ஒரு உயர்வழியை
ஒருவர் பின்பற்ற
மற்றவர் அவரை அல்லது
அவர் பின்பற்றிய வழியை திட்டினால்

தகுதியுடையோரிடம் திறமையாய் வாதிடு

விவாதம் செய்வதற்கு
விவரம் சேர்த்து விடு

விவரம் அறிந்தவருடன்
விவாதம் செய்ய நாடு

விவாதம் செய்பவர் தகுதியுடையவராய் இருக்கட்டும்
விவாதம் செய்பவர் தகுதியானவரானால்
தோல்வியும் வெற்றிதான் விவாதத்தில் பெற்ற அறிவினால்

விவாதம் செய்பவர் தகுதியற்றவரானால்
விவாதம் விபரீதமாக முடியும்

நற்செயல் கொண்ட மங்கை நாணம் மிகைத்து நின்றவள்

கல்யாணமாக நடந்தது
கடிமணமாக இருந்தது
கடிக்கும் மனமானது
மணந்தவள் மனம் நோக வாழ்ந்தமையால்

பிடித்தவள் பிடிக்காமல் போனாள்
பிடித்தவள் பிடிக்காமல் போனதால்
மணந்தவளோடு வாழும் வாழ்க்கை முறிந்து போனது

நட்புக்காக நாலு பேரை மனம் நாடியது
நட்பான நாலு பேரும் தீய வழியை காட்டினர்
தீய நட்பும் வேண்டாம்
தீய வழியும் வேண்டாமென நழுவினேன்

Saturday, 8 February 2014

ஆசைகள் நிறைவேற்றுப் பட்டு விட்டன

ஆசைகள் நிறைவேற்றுப் பட்டு விட்டன
ஆவியாகக் கூட இனியொரு முறை
இவ்வுலகம் வரமாட்டேன்
அவ்வுலக ஆசை அதிகமிருப்பதால்
அங்கேயே தங்கிவிடுவேன்

அவ்வுலக இடத்தை நிர்ணயிப்பவன்
அவனாக இருப்பதால்
இவ்வுலகில் நான் அனுபவித்த ஆசைகள்
அவன் அனுமதித்த ஆசைகளாகவே இருந்தன

காதலின் அறிகுறியை அறியாத தற்குறியாக நான் இருந்ததால்

உர்மிளா உனை நான் அறிவேன்
உர்மிளா உயிராய் எனை நேசித்தாய்

உனது நேசம் ஒருதலைக் காதலானது
உனை பாடச் சொன்னால்

'அத்தான் அன்புள்ள அத்தான்' என்ற
கண்ணதாசன் எழுதிய பாடலை பாடினாய்

பாடலை பாட்டாக நினைத்தேன்
நேசத்தை பாசமாக கருதினேன்

மனைவியும் Vs துணைவியும்

அன்பான மனைவி
அழகான துணைவி
அன்பும் அழகும் அமைய பேரின்பம்

மனைவி சொன்னதை கேட்பாள்
துணைவி சொன்னதை கேட்க வேண்டும்

மனைவி மற்றவளுக்கு இடம் கொடுக்க மாட்டாள்
துணைவி மற்றவளுக்கு இடம் கொடுப்பாள்

Friday, 7 February 2014

முகநூல் அறிந்து முகநூலை கொடுத்தவன் பணமாக்க அறிந்தவன்

கவலையை போக்க
கண்டதையும் கற்க
படங்களை பார்த்து ரசிக்க
நண்பர்களை சேர்க்க
சேர்த்த நண்பர்களை கண்டு கொள்ளாமல் இருக்க
சேர்த்த நண்பர்களை கழட்டி விட
காலத்தே உறங்காமல் உடலை கெடுக்க்
கடினமாக கருத்துரை வழங்க
கட்சி பிரச்சாரம் செய்ய
கட்சியை திட்டி எழுத
எதையாவது எழுத
எழுதியதை தானே படித்து மகிழ
எழுதியதற்கு யாராவது லைக் போட மாட்டார்களா என்று ஏங்க!
எதையும் தாங்கும் இடமாக இது இருக்க
இதை பலர் வெற்றியடைய முயல்
முயன்றது முயலாமல் போக
மற்றவர் கொட்டும் நல்லதையும் கெட்டதையும் பெற்று பணமாக்க அறிந்தவன் முகநூல் அறிந்து முகநூலை கொடுத்தவன்

காதல் சமையல்


தீயை தூண்டினாய்
தேவையானதை கொட்டினாய்
சிறிது கலக்கினாய்
கலக்கியதை ருசி பார்க்க வ்ரும்பினாய்
கொதித்ததை பரிமாற்றம் செய்ய நாடினாய்
உன்னவன் உனக்கே இருப்பதனை அறிந்தாய்
உனக்காக உள்ளவன் உன் ஆவலை நிறைவேற்ற
உணர்வோடு உன் ஆசையை நிறைவேற்றினான்

சமைத்தலில் சிறிது அணைத்தல் உண்டு
சமைத்தலில் சிறிது ருசித்தல் உண்டு
பரிமாறிய பின் அமுதமாய் இருப்பதும் இயல்பு
----------------------------------------------------------------------
பல்சுவை வேண்டும்
பல்வகை உணவு வேண்டும்
பல்வகை கவிதை வேண்டும்
பல்வகை கட்டுரை வேண்டும்
பல்வகை கோபம் வேண்டும்
பல்வகை நளினம் வேண்டும்
பல்வகை தேடுதல் நிறை வேற வேண்டும்

அனைத்தும் ஓரிடத்தில் வேண்டும்
அவைகள் கிடைப்பதும்
அவளிடத்தில் மட்டுமே வேண்டும்

Thursday, 6 February 2014

தேவையானதை தேடி பெறுதல் வேண்டும்


தேர்வில் எதிர்ப்பு சக்தி வளர
தேவையான் அறிவு வேண்டும்

தேவையற்ற பயம் குறைய
தேவையான மன வலிமை வேண்டும்

தேவையான மன வலிமை பெற
தேவையான இறை பக்தி வேண்டும்

தேவையான மகிழ்ச்சி பெற
தேவையான பாச மனம்  வேண்டும்

தேவையான பாச மனம் பெற
தேவையான மனித உறவு வேண்டும்

கருப்பு பணம் கண்டு பிடிப்புகள் புதிய கட்சிகள்

விழுந்தவன் நான்
தள்ளி விட்டவன் நீ
வேடிக்கை பார்க்க பலர்

கருப்பு பணம் கொண்டு வருவேன்
கருப்பு நிறம் கொண்ட பணத்தை தேடுகிறேன் கிடைக்கவில்லை

வெள்ளை பணம் வெளியில் கிடைக்கிறது
வெகு சிலரிடத்தில் மிகைத்தும் கிடக்கிறது
-------------------------

பாஸ்ட் புட் காலம்

பாஸ்ட் புட் காலம்
அவசரமாய் சமைத்து
அவசரமாய் உண்ண வேண்டும்
அவசரமாய் அலுவலகம் செல்ல வேண்டும்
அலுவலகத்தில் மெதுவாய் வேலை செய்ய வேண்டும்
அவசரமாய் வந்ததால் களைத்துப் போனதால்

அம்மாவின் பாச கண்டிப்பு

அம்மாவின் பாச கண்டிப்பு

பார்த்து போ
பார்த்து வா

கணடவனிடம் சேராதே
கண்டவனிடம் பேசாதே

கவனமாய் இரு
கவனமாய் படி

கண்டிப்பாய் வளர்த்தாள் அம்மா
கவனமாய் வளர்ந்தேன் அம்மா சொற்படி

சிறு வயதில் ஒரு தீங்கும் வரவில்லை
சிறு வயதில் ஒரு ஆபத்தும் வரவில்லை
சிறு வயதில் அம்மா பார்த்து வளர்த்ததால்
சிறு வயதில் அம்மா பொத்தி பொத்தி வளர்த்ததால்

Monday, 3 February 2014

இருக்கும்வரை

இருக்கும்வரை இருப்பது இறைவனின் அருள்
இருக்கும்வரை இறைவன் தந்த ஆற்றலை பயன் படுத்தினாயா!
இருந்தவரை உன்னால் பயன் பெற்றவர் யார்!
இருந்தவரை எத்தனை நன்மைகளை சேமித்து வைத்தாய் !
இருந்த போது நீ செய்த சேவைகள் உன் புகழ் கருதியா!
இருந்த போது நீ செய்த சேவைகள் இறைவனின் அருள் நாடியா !
இறந்த பின் இதைத்தான் இறைவன் இதைத்தான் கேட்பான்
இதற்க்கு இப்பொழுதே நன்மைகளை சேர்த்து வைத்துக் கொள்

நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு
நான் வேண்டும் உனக்கு
நமக்குள் ஆயிரம் பிரச்சனை வர வேண்டும்
நமது பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும்

நமக்குள் உள்ளதை வெளியே சொன்னால்
நமது பிரச்சனையை தீர்க்க வருவதாக சொல்லி வந்தவர்
நம்மை பிரித்து வைத்து மனதுக்குள் மகிழ்ந்து செல்வார்

'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழு' என்று சொல்வது பிரச்சனை வந்தால் ஒருவர் விட்டுக் கொடுத்தால் அனைத்தும் நல்லதாகி ஒற்றுமை கிடைத்து விடும் என்பதுதான்
------------------------------------------------

நமக்காக இறைஞ்சு இறைவனை நாம் சேர்ந்து ஓரிடத்தில் வாழ

உனக்கோர் மடல்
உனக்கோர் எளிய அர்ப்பணிப்பு
எளிய அர்ப்பணிப்பு தந்து எழுத
எனக்கு ஊக்கம் தந்தவள் நீயே

ஒவ்வொரு வரியிலும் ஒரு காரணம்
ஒவ்வொரு காரணத்திலும்
ஒவ்வொரு உணர்வுகளை சுமக்கிறது
ஒவ்வொரு சுமையும் உள்மனதின் உந்துதல்

ஒருவளாய் வந்தாய்
ஒரு பகுதியாய் ஒன்றினாய்
ஒன்றை வாரிசை கொடுத்தாய்
மற்றொன்றை வேண்டி வர நிற்கிறேன்
,

Saturday, 1 February 2014

எதிரிக்கு எதிரி நண்பன்

நேற்று என் கொள்கைக்கு
மாற்றுக் கருத்து
இன்று எதிரி கொள்கைக்கு
மாற்றுக் கருத்து

உன் கருத்தை கேட்டேன்
என் கருத்துக்கு உடன்பாடு இல்லை
இன்று என் எதிரி கருத்துக்கு
மாற்று கருத்தை சொன்னாய்
நேற்று வரை நீ விரும்பத் தகாதவர்
இன்று என் எதிரி கருத்துக்கு
மாற்று கருத்தை சொன்னமையால்
என் நண்பனாய் உயர்வு பெற்றாய்

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்! என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன் .

எல்லாம் என்னிடம் இல்லை
இல்லாததை பெற ஆசையை கொடுத்தாய்

அனைத்தும் அறியாததால்
அறிவை கற்கும் தேடலை தந்தாய்

சிரமத்தை தந்தாய்
சிரமத்தை நீக்கும் வழியை காட்டினாய்

அளவோடு கொடுத்தாய்
தேவையானதை தேடச் சொன்னாய்

வட்டத்தின் வரம்புகளில் நிற்க வைத்தாய்
முன்னேற்றத்தின் வாய்ப்புகளை உருவாக்க வைத்தாய்

களைத்து ஓயச் செய்தாய்
களைப்பை நீக்கும் வலிமையை தந்தாய்

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்
என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன்

என்னிடம் எல்லாம் இருந்திருந்தால்
உன்னருள் நாடி நின்றிருக்க நினைத்திருக்க மறந்திருப்பேன்

தேவையானது அனைத்தும் இருந்திருந்தால்
முறையான நன்றியை முழுமையாக செய்திருக்காமல் இருந்திருப்பேன்

குறைவானதை தந்து
முறையாக தேட வைத்து
நிறைவாகப் பெற்று
குறைவற்ற நன்றியை
மனமுவப்ப தரச் செய்தாய்
--------------------------------------------

பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.

கண்களுக்கு ஒளி
சுவாசப்பைக்கு காற்று
இதயத்துக்கு அன்பு
மனித நேயத்துக்கு உரிமை
பிறர் உரிமையைப் பறிப்பது குற்றம்
நமது உரிமை பறிபோவதை
நம்மால் பார்த்துக் கொண்டு இருப்பதும் குற்றம்.
"Your Liberty ends, where my nose begins"
ஒரு குச்சியைக் கொண்டு சுழற்றும் உரிமை உனக்கு உண்டு.
அது என் மூக்கின் மேல் பட்டு விடக்கூடாது.