Monday 22 September 2014

எது குறைந்தாலும் எனக்கு உறக்கம் வராது

 
 
நான் நடுவில் படுத்துக் கொள்வேன்
எனக்கு இரு பக்கமும் இரண்டு பாசமானவர்கள்
நான் இவர்கள் என்னோடு உறங்குவதால் மகிழ்வடைகின்றேன்
எனக்கு இவர்கள் தரும் உணர்வுகள் நிறைவைத் தருகின்றன

ஒருத்தி இங்கும் அங்கும் அசைந்தாலும்
ஒருவர் ரீங்கார குறட்டை விட்டாலும்
அவர்கள் இருவரும் என்னை அணைத்து உறங்குவர்
இவைகள் எனக்கு பழகிப் போனது
இவைகளில் எது குறைந்தாலும்
எனக்கு உறக்கம் வராது

குழந்தையான மகளையும்
ஒன்றிவிட்ட கணவனையும்
ஒதுக்கி விட்டு என்னால் எப்படி உறங்க முடியும் !

ஸ்டேடஸ் போட வேண்டும்

நான் நிறைய பயணங்கள் செய்திருக்கின்றேன்
நான் பார்த்தவைகள் அதிகம்
நான் பார்த்ததிலிருந்து கற்றது குறைவு
குறைவை நிறைவு செய்ய முடியாது
குறைகளை நிறைவாக்க முயலலாம்
குறைவான நம்பிக்கை இல்லை
என்னை நானே சரி செய்துக் கொள்ள முயல வேண்டும்

பாணி பூரி


பள்ளிக்கூட வாசலில் பாணி பூரி விற்பவன்
பள்ளிச் சிறார்களுக்கு அதனை வாங்க நயமான வாரத்தைகள் சொல்லி அழைக்கின்றான்
செல்வந்தர் வீட்டு சிறார்கள் அதனை வாங்கி ஆசையோடு சாப்பிடுகிறார்கள்
அந்தக் கூட்டத்தில் கிழிந்த ஆடையோடு ஒரு பையன் பாணி பூரி வாங்க பணமின்றி மற்றவர்கள் சாப்பிடுவதையே பார்த்து நிற்கின்றான்
அவனது கண்களில் பான்பூரியை வாங்கி சாப்பிட முடியாத சோகம்
அவனுக்கு பசியால் அமிலங்கள் சுரக்க சிறிய வயிற்று வலி வருகின்றது
வலியை தாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகல்கின்றான்

பாணி பூரியை வாங்கி சாப்பிட்ட செல்வந்தர் வீட்டு சிறார்களுக்கு
வீடு சென்ற பின் ஒவ்வாமையால் ,செரிமானம் வராமையால் வயிற்று வலி அதிகமாகின்றது
அவர்களை அழைத்துக் கொண்டு அக் குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவரிடம் ஓடுகின்றார்கள்

Wednesday 17 September 2014

தவறாக புரிந்துக் கொள்ளும் பாசங்கள்


முதல் மகனுக்கும்
இரண்டாவது மகனுக்கும்
எப்பொழுதும் பிரச்சனைகள்தான்

முதல் மகனுக்கும்
மூன்றாவது மகனுக்கும்
அப் பிரச்சனைகள் வருவதில்லை

தாய் ஒரு குழ்ந்தை பெற்ற பின்
அந்த குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்த
அந்தக் குழந்தை மீது தான் தன் அம்மாவின் பாசம் உள்ளதாக
நினைத்து முதலில் பிறந்தது தவறாக புரிந்து
தன தாயின் மீதும் தன் குழந்தையாக உள்ள தம்பியின் மீதும்
பகை முரண்பாடுகளாக,காழ்புணற்சியாக மாற்றமடைகிறது

அது சிறிது காலங்கள் கடந்த குழந்தையாய் இருந்தால் அது வருவதில்லை
இது பெண் குழந்தைகளுக்கு பொருந்தாது
பெண்கள் எக்காலாத்திலும் சகோதரிகளுக்குள் பாசங்களை பொழிவார்கள்
பாசங்களை பெறுவதற்கும்
பாசங்களை கொடுப்பதற்கும்
சகோதரிகளுக்குள் உயர்ந்து நிற்கிறார்கள்

தவறு செய்த மகன் மனம் மாறி திரும்ப மகிழ்வுதான்

(பைபிளில் Luke) பாடமாக படித்த நினைவு
The Parable of the Prodigal Son(a person who spends money in a recklessly extravagant way.)
(இது B.A. படிக்கும் போது கல்லூரியில் பாடமாக படித்தது .நினைவு உள்ளவரை சுருக்கமாக தருகின்றேன் )

இளைய மகன் தன் தந்தையிடமிருந்து தனக்கு தர வேண்டிய சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு தந்தை மற்றும் மூத்த சகோதரனை விட்டு பிரிந்து சென்று விடுகின்றார்

தவறான முறையில் வாழ்ந்ததால் சென்ற இடத்தில இருந்த அனைத்து சொத்துகளையும் விற்று வேலை செய்யும் நிலைக்கு ஆகி மிகவும் சிரமத்திர்க்குள்ளாகி தன் தவறை உணர்ந்து .அவர் மனம் மாறி திரும்பவும் தன தந்தையை நாடி வருகின்றார்

பாசங்களை பகிர்வதில் வெளிப்படை தன்மை வேண்டும்

குழந்தைகளாக இருக்கையில்
பெற்றோர்கள் பாசங்களை
வெளிப்படையாக காட்டினார்கள்

வளர்ந்த பின்
பெற்றோர்கள் பாசங்களை
வெளிப்படையாக காட்டுவதில்லை
பாசத்த்தை மனதில் நிறுத்தி
தவறு செய்தால் தண்டித்தார்கள்

பெரியோர் ஆன பின்
பெற்றோர்கள் தண்டித்ததுதான் மிகைத்து நிற்கின்றது
குழந்தைகளாக இருக்கையில்
பெற்றோர்கள் காட்டிய பாசங்கள் மறைந்து விடுகின்றன

இரு காலங்களிலும்
பெற்றோர்கள் காட்டியது பாசங்கள்தான்
பாசங்கள் பாவாங்களல்ல பாபங்களுமல்ல

பெற்றோர்கள்
நன்மைகளை நாடி கண்டித்ததை
தவறாக மனதில் பதியப் படுகின்றன
தவறாக மனதில் நின்றமையால்
பெற்றோர்கள் முதியோர்கள் ஆனா பின்
முதியோர்களை மதியா மனம் வந்தடைகின்றது

குழந்தையானாலும்
வளர்ந்தவனாலும்
கண்டிக்கும் முறைகளை
பாசங்களை வெளிப்படையாக தெரியும் வண்ணம்
அரவணைத்து அறிவுரைகள் தந்து
நண்பனாக
தத்துவங்கள் தருபவனாக
வழிகாட்டியாக வாழ்ந்து காட்டுபவனாக
பெற்றோர்கள் எக்காலத்திலும் இறுத்தல் சிறப்பைத் தரும்

சொல்ல வேண்டியதைச் சொல்சொல்ல வேண்டியதைச் சொல்
சொல்லக் கூடாததை சொல்லாதே
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்
சொல்லக் கூடாததை
சொல்ல கூடாத தருணத்தில் சொல்லி விடாதே

செய்ய வேண்டியதைச் செய்
செய்யக் கூடாததை செய்யாதே
பதுமையாக படைக்கப் படவில்லை
வாய் உண்பதற்கு மட்டுமல்ல
வாய் பேசுவதற்கும் தான் தரப்பட்டுள்ளது
வாய் பேச
உதடுகள் அசைய
நாக்கு பிரள
இத்தனையும் ஒன்று சேர
அறிவும் அங்கு பயன் படுத்தப் பட வேண்டும்
இறைவன் நம்மை படைத்ததற்கே காரணம் உண்டு
காரணத்தை கண்டு அறிந்து
ஒவ்வொன்றும்
உபயோகப் பட வேண்டும்
அறிவைத் தேடு
ஆய்வை நாடு
அதன் சிறப்பை
மற்றவருக்கும் கொடு
இறைவனின் ஆற்றலை அறிந்திடு
இறைவனுக்கு நன்றி செலுத்து
இறைவனைத் தொழுது
சிறப்பை இரு லோகத்திலும்
பெற்றிட வாழ்வை உயர்வாக்கிக் கொள்
Mohamed Ali

Monday 15 September 2014

உன் படம் வேண்டாம்

உன் படம் வேண்டாம்
நீயே என் உள்ளத்தில் பதிந்து விட்டாய்

உனது கனிந்த கரங்களால் அணைத்துக் கொள்
உனது மென்மையான் உதடுகளால் கன்னத்தில் முத்தங்கள் கொடு
உனது உள்ளங் கைகளால் தலையில் தடவிக் கொடு
உனது மனதின் இசையால் உறங்கச் செய்து விடு

நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லி விடு
நான் உன்னைப் போலவே இருக்க விரும்புகின்றேன்

உனது அளவற்ற வாழ்த்துகள்
எனக்கு சிறப்பான வாழ்வைத் தரும்

உலகத்தில் பெற்ற அழகுகள் அனைத்தும்
உன்னால் நான் பெறப் பட்டவைகளே

அம்மா அணைத்துக் கொள்
அம்மா உன் அரவணைப்பில்
நான் உறங்க விரும்புகின்றேன்

அம்மா உன் மடியிலேயே சுவனம் உள்ளது
அம்மா உன் மடியிலேயே சுவனத்தின் சொத்துக்கள் நிறைந்துள்ளன

அம்மாவின் நினைவில் அவர்களுக்காக
அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டாத நாட்களில்லை

அம்மா மனதிலேயே உறைந்துவிட்டதால்
அம்மாவை மறந்தாலல்லவா
அம்மாவை நினைப்பதற்கு 

Wednesday 10 September 2014

இணைந்த வாழ்வையே நாடி நிற்க வேண்டும்

காட்டில் விலங்குபோல் அலைந்த மனிதன்
நாட்டிற்கு வந்ததால் சமூக விலங்கானான்

கருத்துகள் கொள்கைககள் மனிதனை வசப்படுத்துகின்றன
ரொட்டியும் வெண்ணையும் நிறைந்து கிடைக்க சித்தார்தங்கள்,கொள்கைகள் மறைந்து விடுகின்றன

மனிதன் உணர்ச்சியின் உணர்வுகளால் உந்தப் படுகின்றான்
மனிதனின் உணர்ச்சிகள் மாறுபட்டதாய் அமைந்து விடுகின்றன

Tuesday 9 September 2014

உறவும் நட்பும்

நாளாகும் நட்பை வளர்க்க
நிமிடம் போதும் நறுக்க
---------------
நட்பு தொடர தொடர்பு
இருந்துக் கொண்டே
இருக்க வேண்டும்
---------------
உறவுகளை இறைவன் தந்தான்
இறைவன் அருளால்
நல்ல நட்புகளை
நாம் தெரிவு செய்வோம்

உயிரினங்களில் உயர்வானது மனித இனம்
உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்கும் மனித இனம்
உணர்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு வந்ததால்
உறவு முறையில் விரிசல் வர தொடக்கமானது
மனித இனத்தில் மேன்மையானது உறவும் நட்பும்
உறவையும் நட்பையும் தூரமாக்குவது பணமும் பொறாமையும்

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
இதயம் கட்டிய உறவு உயிருடன் உறையும்
அன்பால் கட்டிய பாசம் நிலைத்து நிற்கும்
----------------------

Monday 8 September 2014

நம்பிக்கையற்ற நிலை

 
எதிலும் சந்தேகமும் பயமும்
------------------------------
நம்பிக்கையற்ற நிலை
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )
-------------------
சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்
----------
தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா
--------------------
உடல் நிலை குறித்து

பையன் பத்திரமாக திரும்பி வருவானா
ஓரமாக நிற்கும் குழந்தை கிழே விழுந்து விடுமோ
உடல்நிலை பாதிக்கப் பட்டதால் இறந்து விடுவாரோ
வேகமாக செல்லும் ஊர்தியால் விபத்து நிகழ்ந்து ஆபத்தாகுமோ
பிரசவம் நல்ல விதமாக நடக்குமோ
----------------------
திட்டங்கள் குறித்து

பாஸ்போர்ட் ( நம் நாட்டிலிருந்து வெளிநாடு செல்ல நம் நாடு கொடுக்கும் அனுமதி)கிடைக்குமா
பாஸ்போர்ட் கிடைத்தாலும் விசா (அடுத்த நாடு உள் நுழைய அந்த நாடு கொடுக்கும் அனுமதி) கிடைக்குமா
விசாவுக்கு கொடுத்த பணம் விரயமாகுமோ
விசா கிடைத்தாலும் அந்நாட்டில்
வேலை கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ
----------------------
கோளாறின் காரணங்கள்

அதிர்ச்சி தரும் நிகழ்வுகள்
எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்திருக்கலாம்
பரம்பரையால் வரும் குணமாகலாம்
பிரசவ நிகழ்வின் நிலையால் வரவும் வாய்ப்புண்டு

மனக்கட்டுப்பாடற்ற நிலை
தன்னிலை குறித்து தனக்கே அதிருப்தி
தேவையற்ற எண்ணங்கள்
துன்புறு நிலை
கவலையை அதிகமாக்கிக் கொள்வது
ஒன்றைப் பற்றியே சிந்தித்து அது நிகழாமல் போவது
---------------------
தீர்வு

இறை நம்பிக்கை
நடப்பதுதான் நடக்கும் என்ற நம்பிக்கை
சிந்தனையை மாற்றும் நிலை
தேவையான உடல் வேலை,மற்றும் உடற் பயிற்சி
தேவையான,. மகிழ்வான பொழுது போக்கு
மக்களோடு கலந்து பழகுதல்
இழப்பை பற்றி கவலைப் படாமல் இருத்தல்

( இந்த கட்டுரை சிறு விளக்கம் . மருத்துவரீதியான ஆய்வுக்கு உட்பட்டதல்ல,மனோதத்துவக் கட்டுரையும் அல்ல. )
(hallucination = an experience involving the apparent perception of something not present. Imaginary illness)
- முகம்மது அலி 

மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்புகொடியில் கண்ட மலரை
கூந்தலில் சூட்டியதால்
மலரின் மணம் பரவ
மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு தர
அசையாத மனதையும் அசைக்க வைத்தது

அசைந்தாடி நடந்து வரும் மாதின் நடை நளினமாக காட்சித் தந்தது
நெருங்கி வந்த மாதிடம் பேச வார்த்தைகள் வர மறுத்தது
நெருங்கி வந்த மாது காத தூரம் சென்றிருப்பாள்
குறுக்கே வந்த வண்டி அவளை சிதைத்துச் சென்றது
கசங்கிய மலராய் அவள் அழகு அழிந்துப் போனது

நானும் நீயும்

 
நீ என்னோடு இருக்க வேண்டும்
நீ என்னோடு எப்பொழுதும் இருக்க வேண்டும்

நீ இல்லாமல்
நான் இருக்க முடியாது

உன் சேவை எல்லைகளுக்கு அப்பார் பட்டது
உன் சேவை தொய்வு இல்லாதது

நான் தனியாக நிற்க முடியாது
உன் மென்மையான கரங்களால் அரவணைத்துக் கொள்

உன் தேவை வேண்டி
நீ என்னிடமில்லை

என் தேவை வேண்டியே
நீ என்னுடன் உள்ளாய்

உன்னை போக விட்டு
நான் இருக்க முடியாது

நான் போக நேர்ந்தாலும்
நீ இருந்து உன் சேவை தொடர வேண்டும்

நான் ஆற்றிய பணிகள் அனைத்தும்
நீ கொடுத்த அர்பணிப்புகள்