Wednesday 28 January 2015

எக்காலமும் பையன்களை அன்பால் மட்டும்தான் திருத்த வேண்டும்

எதையும் தாங்கும் இதயம் இல்லாமல் போனது இளைஞர்களுக்கு
எக்காலமும் பையன்களை அன்பால் மட்டும்தான் திருத்த வேண்டும்

உண்மை நிகழ்வு
மருத்துவ மனையில் கண்டது
தாய் தனது சுமார் பதினேழு மகனை கண்டித்தது
'அடிக்கடி ஏன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறாய் '
பையனுக்கு அதனை தாங்கிக்கொள்ள மனமில்லை
பையன் தன்னை மாய்த்துக்கொள்ளும் பொருட்டு 'ஏதோ' உயிரைப் போக்க குடித்து விட்டார்
இள வயது தாய் கதறும் ஒலி மருத்துவ மனையையே அதிரச்செய்தது
மனம் பதைத்தது
மருத்தவர் சேவை சிறப்பாக இருந்தது
ஓரளவு முதலுதவி செய்து நாடி நல்ல வகையில் வந்தவுடன் ஆம்புலன்சில் வேறு பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
பையன் மறுவாழ்வு பெற்றிருக்கக் கூடும்
தாயின் கதறலை தாங்க முடியாமல் வந்து விட்டேன்

நினைப்பது ஒன்று நடப்பது வேறு

மகிழ்வான நிகழ்வுகள் ஆயிரம்
சோகமான நிகழ்வுகள் குறைவு
சிலர் சோகமான நிகழ்வுகளையே
அசை போடுவதால் தானும் சிதைய
மற்றவர்களையும் சிதைய வைக்கிறார்கள்

சிறியதை விரும்பினேன்
பெரியதாக கிடைத்தது

பெரியதாக விரும்பினேன்
சிறியதும் சரியாக கிடைக்க வில்லை

எழுதக் கற்றுக் கொண்டு
எழுதியதை தேர்வில் மதிப்பிட்டு மதிப்பெண்கள் போட்டவர் ஒருவர்
முகநூலில் பதிவதை மதிப்பீடு போடுவோர் பலர்
தேர்வில் எழுதும்போது தரம்குறையாது
கேட்டதற்கு பதில் சொல்வதில் சரியாக சொல்வதில் பயம் இருந்தது
முகநூலில் பதிவு செய்வதில் தரமும் பார்ப்பதில்லை
தவறும் பார்ப்பதில்லை
பயமும் கொள்வதில்லை

பார்க்காத நபர்கள் நட்பை நாட
பார்க்காத நண்பர்கள் பாசமாக
பார்க்காத நண்பர்களில் பாசப் பிணைப்பால்
பார்க்க வைக்கும் ஆவலைத் தூண்டுகிறது முகநூல்

முகநூலைப் பார்க்காதவரை
அகநூல் களங்கமற்று இருந்தது

எத்தனை வலைப்பூக்கள்
எத்தனை வலைத்தளங்கள்
அத்தனையும் முகநூலின் வலைக்குள் மாட்டிக் கொண்டன

அகத்தின் அழகு முகத்தில்
முகநூலின் பதிவு மனதின் வெளிக்காட்டல்

அடுத்தவர் வீட்டின் தகவல்கள் தேடல். ஈர்ப்பு (attraction)
சொந்த வீட்டை சரி பார்க்கும் ஆர்வத்தை குறைய வைக்கிறது
 


Sunday 25 January 2015

அறிந்தும் அறியாததுபோல் இருப்பது

டீ விற்பதும்
டீ குடிப்பதும்
புதிய செய்தி அல்ல

இமயமலை உச்சியிலும்
மலையாளி டீ விற்றுக் கொண்டிருப்பார்
வேடிக்கையாக மலையாளிகள் உலகம் முழுதும் இருப்பார்கள்
என்பதற்கு சொல்வதுண்டு

வியாபாரம் செய்ய
அதிலும் இரு நாடுகளுக்குள்
போர் உருவாக்கி ஆயுதம் விற்க
அமெரிக்கா எங்கும் வரும்
எவ்வகையாகவும் வரும்

அமெரிக்கா மற்ற நாடுகளை
ஆசை காட்டி வலையில் விழ வைப்பது
ஆரம்பத்திலிருந்து செய்து வருவதுதான்

உலகமே வியந்து நிற்க உம் மார்க்கத்தை பின் பற்றுவோர் வியக்க வில்லை

அரசனாய் இருந்தாய் இவ்வுலகில்
ஆட்டி வைத்தாய் நாட்டின் நலன் கருதி
அதிகாரம் செய்தாய் மக்களின் உயர்வு நாடி
உயிர் உன்னை விட்டு நீங்க
உமது விருப்பப் படி
அமைதியாக அடக்கி வைத்தனர் புதை குழிக்குள்
அதைத்தான் நீயும் விரும்பினாய்
அதைதான் உன் மார்க்கமும் உனக்கு போதித்தது

உம்மை அடக்கிய விதம் காண உலகமே வியந்து நிற்க
உம் மார்க்கத்தை பின் பற்றுவோர் வியக்க வில்லை
உம்மை அடக்கிய விதத்தில் மார்க்கத்தின் முறை இருப்பதால்
எத்தனையோ ராஜாக்களும் ,நாட்டை ஆள்பவர்களும் வந்திருக்கக்கூடும்
அவர்கள் வரவேண்டுமென நீங்கள் யாரும் காத்திருக்க வில்லை
ஆனால் எங்களில் இறந்த உடலை சிலர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து வெளிநாட்டிலிருந்து ஒருவர் வருகைக்காக காத்திருந்து அடக்கம் செய்ய பல மணி நேரங்கள் இறந்தவருக்காக தங்களையும் வருத்திக் கொள்வது வேதனைதான்

Saturday 24 January 2015

உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?

உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா!
 தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...
இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் .
பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது. நொறுங்கத் தின்றால் நூறு  வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது.
நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . 

Wednesday 21 January 2015

வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான்!


  மனிதனுக்கு வேண்டியது இருக்க இடம் ,குடிக்க நீர் , சுவாசிக்க காற்று. இவைகள் அத்தியாவசிய தேவைகள் ஆனால் திருமணம் செய்தால்தான் அவனது வாழ்வு முழுமையடையும்.
  
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. 

  இக்காலத்தில் வீடு கட்டுவது அனைத்தையும் விட மிகவும் கடுமையான செயலாக இருக்கின்றது. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான் அதிலும் திருமண ஆனவுடன் பெண்களுக்கு அதில் நாட்டம் அதிகமாக இருக்கும். அதற்கு வேண்டிய முதல்படியாக இருக்கவே இருக்கின்றது 'தலையணை மந்திரம்'. ஏன் அந்த நாட்டம் வந்தது! வெவ்வேறு இடத்திலிறுந்து வந்த மருமகள்கள் குணத்தில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். சகோதரிகளுக்குள்  உள்ள ஒட்றுமை மற்ற பெண்களிடம் இருப்பது அபூர்வம். அதற்குத்தான் சிலரது வழக்கமாக இருப்பது மாமனார் வீட்டோடு மாப்பிள்ளைகள் குடியேறிவிடும் பண்பாடு.   இது கடற்கறையோரம் வாழும் மறைக்காயர்களிடம் உண்டு.

Monday 19 January 2015

வாழ்க்கைக்கு துணையாக திருமணம் செய்துக் கொள்


வாழ்க்கையை கொடுத்தவன் இறைவன்
இணை இணையாக படைத்தவனும் இறைவன்

"நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? மேலும், உங்களை இணை இணையாக (ஜோடி ஜோடியாக)ப் படைத்தோம். உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்; அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்; மேலும், பகலை உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ளும் காலம் ஆக்கினோம். உங்களுக்கு மேல், பலமான ஏழு வானங்களை உண்டாக்கினோம்; ஒளி வீசும் விளக்கை (சூரியனை)யும் அங்கு வைத்தோம். அன்றியும், கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்; அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும், கிளைகளுடன் அடர்ந்த சோலைகளை வெளிப்படுத்துவதற்காகவும்!' (அல்-குர்ஆன் 78: 6-16)

Tuesday 13 January 2015

உனக்குத் தலைவர் உனக்கு வழிகாட்டி அவருக்கு வழிகாட்டியல்ல

 
உனக்குத் தலைவர்
உனக்கு வழிகாட்டி
அவருக்கு வழிகாட்டியல்ல
அவருக்கு அவர் யாரோ

உன்னை பழி வாங்க
உன் மனதை நோகச் செய்ய
அவருக்கு விருப்பம்

அவரை நல்வழிக்கு திருப்பாமல்
உனக்கு வந்த கோபம்
உன் மதியை செயல் இழக்கச் செய்து விட்டது
அதனால் பாதிக்கப் பட்டவர் அவராக இருக்க முடியாது
அதனால் பாதிக்கப் படப் போவது உன்னைச் சார்ந்தவர்தான்

சிந்தனை செய்து
அறிவோடு செயல் பட்டால்
தவறு செய்தவரை திருத்திய நன்மை
உனக்கு கிடைத்திருக்கும்
கோபம் இருப்பவனிடதில்
இரக்கமும் இருக்காது
அறிவும் அகன்று விடும்

உனது உரிமை அடுத்தவர் உரிமையை பாதிக்கக் கூடாது


ஒரு செயலை செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்
தேர்தலில் நிற்பதாய் இருந்தாலும்
கார்டுன் படம் வரைவதாக இருந்தாலும்
பத்திரிக்கை காரர்களுக்கு மட்டும் தனி உரிமையா!
உனது உரிமை அடுத்தவர் உரிமையை பாதிக்கக் கூடாது
மனம் பாதிக்க அறிவு கெட்டு விடும்

ஒளி தரும் விளக்காய் அமைவது புரிந்துக் கொண்ட கல்வி

விவாதி
விளங்கச் செய்
கற்றுக் கொடு
விவரிப்பதை விடுத்து
அறியச் செய்

மடை திறந்த வெள்ளம் போல்
வார்த்தைகள் சொற்பொழிவுகளால் வரக் கூ டும்
திறந்து விடப்பட்டது பயன் பெற வேண்டும்
அருவிகளாய் நீர் கொட்டலாம்
அருவிகள் எவ் வகையில் பயன் பெற்றது என்பதே முக்கியம்

மார்க்க சட்டங்கள்
நாட்டின் சட்டங்கள்
நிறைந்து இருக்க
சட்டத்தின் நன்மைகளை கற்பிக்க வேண்டும்
சட்டத்தினை பேணுதல் இல்லாமல் போனவன்
சட்டத்தின் நன்மைகளை அறியாமல் போனவன்

இருப்பதும் போவதும் இதயத்தை வாட்டுகின்றது


இல்லை என்பது குற்றமில்லை இல்லாதவரை
இல்லை என்பது குற்றமாகிவிட்டது
இருப்பதை இல்லை என்று சொல்லிவிடுவதால்

இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லச் சொல்கின்றாய்
இருந்துக்கொண்டே இருப்பேன்
இரு வருகிறேனென்று சொல்லும்வரை

இயலாததையும் இயல வைப்பேன் நீ இருக்கும்வரை
இய்லாதவனாகி விடுவேன் நீ இல்லாத நிலை வர
இருந்துக்கொண்டே இரு நான் இருக்கும்வரை

Saturday 3 January 2015

பாசம் அறியா தொடர்புகள்

உன்னைக் கண்டித்து வளர்த்தேனே !
என்னைக் கண்டித்ததால்தான் கெட்டுப் போனேன்

உன்னைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினேன்
என்னைப் பெற்றதால் அது உனது கடமையானது

உனக்கு உரிமை கொடுத்து நீ காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தேனே
எனது உரிமையை தடுத்தால் உன்னை ஒதுக்கி திருமணம் செய்துவிடுவேன் என்ற பயம் உனக்கு

ஏன்! இப்படியெல்லாம் பேசுகின்றாய் !
உன் அப்பனிடம் நீ பேசியதைப் பார்த்து நான் கற்றுக் கொண்டதுதான் 
*****************************

ஆய்வு மேல் ஆய்வு செய்கின்றான் ஆகாயத்தில் அடுத்தவர் வாட காணாமல் போகின்றான்


தன்னோடு இருப்பவள் குழந்தைப் பெற தகுதி இருந்தும்
தனக்கு பிள்ளைவேண்டுமென்ற நோக்கோடு
வாடகைக்கு பிள்ளைப் பெற்றுத் தர (வாடகைத்தாய்)மற்றவளை நாடுகின்றான்

தன்னிடமுள்ள அழகை தானே அறியாமல்
பிறரிடமுள்ள அழகைக் காண அவனை விளம்பரத்திற்கு நாடி அலைகின்றான்
தன்னிலை தானே அறியாமல் அடுத்தவனைக் காண ஆர்பரிக்கின்றான்
(ஆர்பரின் -அதிருப்தியால் ஏற்படக்கூடிய பின்னடைவை சீர்படுத்த தீவிர முயற்சி)
தன்னிடமுள்ள வளத்தை வைத்து வாழ வழி வகுக்காமல்
உலகமெல்லாம் ஓடி உதவி நாடுகின்றான்
என்ன இல்லை நம் நாட்டில் என்று அறியாமல்
அடுத்தவனிடம் அடிமையாகி தன்னை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றான்

ஆய்வு மேல் ஆய்வு செய்கின்றான் ஆகாயத்தில்
அடுத்தவர் வாட காணாமல் போகின்றான்
இருப்பதைப் பெருக்கி
இல்லாதவரிடம் கொடுக்க
வையகம் வந்த மெய்மை உயர்வடையும்

நமக்காக சேர்த்தது நம்மிடமில்லை !

 
 
நீ பிறந்தது எனக்காக
நான் பூக்கள் வாங்கியதும் உனக்காக
நாம் பிள்ளைகள் பெற்றதும் நமக்காக

சொத்துகள் சேர்த்ததும் பிள்ளைகளுக்காக
மகன்கள் பிரிந்து சென்றதும்
மகன்கள் மனைவிகள் விரும்பியதற்காக

சேர்த்த சொத்துகள் நம்மை விட்டு போனதும் மகன்களுக்காக
சேர்த்த சொத்துகள் நம்மை விட்டு போனதும்
சொத்துகளை மகன்கள் பெயரில் எழுதி வைத்தமைக்காக
சொத்தோடு நகைகள் போனதும் மகன்களுக்காக வரதட்சணை வாங்கியதர்க்காக

ஒதுங்கினால் ஒதுக்கி விடுவார்கள்


ஒதுங்கினால் 
ஒதுக்கி விடுவார்கள்
பிரபலம் ஆவதும் நம்மால்தான்
பிரபலங்கள் ஆவதும் நம்மால்தான்

பிரபலங்கள் ஓரிடத்தில் நிற்காது
பிரபலங்கள் ஓரிடத்தில் நின்றால்
பிரபலமாவது தடைப் படும்
பிரபலமாவதற்கு தடையை உடைக்க வேண்டும்
போரில் ஈடுபடுபவனுக்கு
போட்டியில் ஈடுபடுபவனுக்கும்
தாழ்மை உணர்வும்
இறக்க சிந்தனையும் இருப்பதில்லை

என்னால்தான் பிரபல்மானாய் என்றால்
என்னோடு சேர்ந்ததால்தான் பிரபலமானாய் என்பர்