Saturday 31 August 2013

மருத்துவரின் சேவை மரியாதைக்குரியது


பண்டைய காலங்களில் இருந்து மருத்துவர்களுக்கு மரியாதை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால் நம் உடல் நலத்திற்கு தேவையான ஆலோசனை தருகிறார்கள்.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்துகளை வாங்கி சாப்பிடக்
கூடாது , தேவையற்ற நிலையில் அடிக்கடி ஆண்டிபயோடிக் (கிருமிக் கொல்லி நாசினி )மருந்துகளை எடுத்துக் கொள்வதால் இயற்கையாக உருவாகும் உடலின் எதிர்ப்பு சக்தியை  குறைந்துவிடும் .வளர்ந்த நாடுகளில் ஆண்டிபயோடிக் மருந்துகளை மிகவும் அவசியம் கருதினால்தான் கொடுப்பார்கள்
நாம் மருதுவரிடம் 'ஊசி ' போடும்படி நாமே கேட்கிறோம் .நல்ல மருத்துவர் வியாதிக்கு தேவையானதைத்தான் செய்வார்.
மருந்து சாப்பிட முடியாதவருக்கும் ,மயக்க நிலையில் உள்ளவருக்கும் அவசர தேவைக்கும் சதை வழி அல்லது நரம்பு வழி மருந்து செலுத்துதல் அவசியமாகின்றது .
மருத்துவரிடம்  நம் உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் மறைத்துப் பேசக் கூடாது ..
மருத்துவரை தேவையில்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.
நாம் நமெக்கென ஒரு சிறந்த மருத்துவரை குடும்ப மருத்துவராக அமைத்துக் கொள்ள வேண்டும் .அவ்வாறு இருந்தால் நமது உடலைப் பற்றிய நிலைமை அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும் . இதனால் தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் குறையும்.
நம்பிக்கை மருத்துவம் செய்துக் கொள்வதற்கு அடித்தளமாக உள்ளது .
தொழிலிலேயே ஒரு உயர்வான் தொழிலாக மருத்துவத் தொழில் உள்ளது. இது சேவையின் அடிப்படையில் அமையப்பட்டது.

நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்


அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

இறைவா! நீ தனித்தவன் இதனை யாரும் அறிவார்
இறைவா! நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்
இறைவா ! நீ அருளாளன் கருணை மிக்கவன்
இறைவா ! நான் உன்னருள் நாடி யாசிக்கிறேன் ,உன் அருள் நாடி நிற்கிறேன்
இறைவா ! நான் நல்லது ,கெட்டது அறிந்துக் கொள்ளும் ஆற்றலைத் நீ தந்து விடு!
இறைவா ! ஞானத்தை தந்து நன்மையான வழியில் வாழச் செய்துவிடு
இறைவா ! நான் தவறு செய்தால் அது எனது அறியாமையால் வந்த வினை
இறைவா ! நான் நன்மை செய்திருந்தால் உன் கருணையின் வெளிப்பாடு
இறைவா ! நீ விரும்பியபோது என்னை அழைத்துக் கொள்
இறைவா ! நான் உன்னிடம் வரும்போது நன்மையுடன் வரவேண்டும்
இறைவா !அனைத்தையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! நன்மை ,தீமை பகுத்தறியும் திறனையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! தீயோர் திரண்டு நிற்கும் நின்றதால் என்னை யறியாமல் தீமைகள் என்னிடம் வந்திருந்தால் மன்னித்துவிடு
இறைவா !உன் அருள் மழைவேண்டிஇறைஞ்சுகின்றேன் .

அழகே உன்னை நேசிக்கிறேன்


அழகு மனதை சார்ந்தது .ஆழகைக் கண்டு ஆனந்தமடைவது மனித இயல்பு
ஒருவர் விரும்பும் அழகு மற்றவருக்கு அழகற்றதாக காட்சி தரலாம்
அனைவராலும் விரும்பும் அழகாக காட்சித் தருவது பெண்ணின் அழகு

ஆண் பெண்ணைப் போன்று அழகாக இருப்பதில்லையா !
கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தருகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தருவதில்லை
ஆண் கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தந்தால் பாராட்டுகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தந்தால் அதனை பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுகின்றது.

கண்களின் காட்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறு படுகிறதோ !
தடை போடப் படுகிறதோ !.தடை அற்ற நிலை போனால் கேடு கெட்ட அழகற்ற நிலையாகி விடுமோ!
உலகம் அழகின் இச்சையால் சுழல்வது நியதி .
இதில் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி ஏன் !

மோடி மஸ்தான்
பாம்பினைக் கண்டு நடுங்கிய மோடி மஸ்தான்
பாம்பினை மயக்க மகுடியை ஊதி பாம்பினை மயக்கினான்

மகுடி ஊதுதல் மக்களை மயக்கவும் உதுவுமோ!
மகுடி ஓசை ஒவ்வாத ஓசையாக காத தூரம் ஓடுகின்றார் மக்கள்
மோடி மஸ்தான் அறிந்தானில்லை மக்கள் பாம்பின் இனமில்லை யென்பதை

பாம்பினைக் கண்டு பயந்து ஓடுபவன்
தடியெடுத்து பாம்பினை விரட்ட மாட்டான்

பாம்பு போகிற போக்கில் போக விட்டு விடு
பாம்பு உரையும் இடம் பொந்துக்குள் தான்
பாம்பு பொந்து கொல்லைக்குள் இருந்தால்
பாம்பு வீட்டிற்குள்ளும் புகுந்து விடும்
பாம்பின் பொந்து நம் எல்லைக்குள் இருக்க வழி வகுத்து விடாதே

Friday 23 August 2013

தேடும் இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்

தேடல் தேவை
தேடலுக்கு ஓர் இடம் இது
தேடலுக்கு மனது தேவை
தேடியதும் கிடைக்கும்
தேடாததும் கிடைக்கும்
தேடிய இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்
தேடியதில் நல்லவை நம்மிடம் கிடைக்கும்
தேடியதில் தகாதவை தானே மறையும்
தேடியதில் ஒரு பொறி கிடைக்கும்
தேடிய பொறியை பெருமைப் படுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தேடிப் பயன்படுத்தியதை மற்றவர் பயன்பட வைக்க வேண்டும்
தேடிக் கிடைத்தது சிறிதுதான் அதுவே பெருமைப்பட பெரிதாக்கிவிட வேண்டும்

ஒளிந்து நின்ற உப்பு சப்பான காரண காரியங்கள் ஓடி மறைந்தன

நம் திருமண மேடையில் பார்த்தோர் நமக்காக நாம் படைக்கப் பட்டோமென்றனர் (made for each other)
நம் திருமணம் இறைவனால் நிச்சயிக்கப் பட்டதாம்

நீ ஒரு பக்கமிருக்க நான் ஒருபக்கமிருந்தோம்
நீயும் நானும் ஒன்றிணைய நாம் காரணமில்லை

நீயும் நானும் ஒன்றிணைந்து விட்டோம் திருமண உறவில்
நீயும் நானும் ஒன்றிணைந்து உறவு மேன்பட்டது

Thursday 22 August 2013

பெண்களில் உயர்வு சேமிப்பில்

பெண்களில் உயர்வு சேமிப்பில்

சேமித்த பணத்தில் உயர்வான ஆடை வாங்க ஆசை

விலையுயர்ந்த ஆடைகள் வாங்கி சேமிப்பதில் ஆசை

விலையுயர்ந்த திருமண ஆடையை திருமணத்தில் கட்டியதோடு நிறைவு

விலையுயர்ந்த திருமண ஆடையை வாழ்வெல்லாம் பாதுகாத்து சேமித்து வைப்பதில் நிறைவு

சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்

சொல்லுக்கு சில பொருள்கள்
சொல்லாமைக்கு மௌனம்
சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்
சொல்லக் கூடாததை சொல்லாமல் தவிர்க்க வேண்டும்

மௌனத்திற்கு பல பொருள்கள்
மௌனம் வர வேதாந்தியாகலாம்
மௌனம் வர தனிமைப் படுத்தப் படலாம்
மௌனம் தன்னையறிதலின் வழியாக அமையலாம்
மௌனம் சம்மதத்தின் ஒப்புதலாகலாம்
மௌனம் வேண்டாமையின் தோற்றமாகலாம்
மௌனம் தேவைக்கு தகுந்த நன்மையும் பயக்கும்
மௌனம் வர நண்பனை இழக்கும் நிலையாகலாம்

பாவமான நிகழ்வு
பாசமான நண்பனை
பரிதவிக்க வைத்த
பிரியமான நண்பனின் செயல்பாடு
பிரியமான நண்பனிடம் பிரியத்தை வெளிப்படுத்தாதின் விளைவு

Wednesday 21 August 2013

தவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்

உயிரற்ற ஊர்தியால் உயிரோடு உள்ள ஒருவர் மோதிச் சென்றதால்
உயிரோடு போராடிக் கொண்டிருந்தது ஓர் உடல்

உயிரோடு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்தவர் பலர்
உயிரோடு பார்த்தவர் பார்த்தும் பாராமல் போனார்

உதவ உள்ளம் இருக்க
உதவ முற்பட உயிர் பிரிந்தால்
உதவியதால் தொல்லைகள் வரும்
தொடர்ந்து நீதிமன்றம் வரச் சொல்லி தொல்லை கொடுப்பார்
தொடரும் என் பயணம் தடைபடும் நீதி மன்றத்தால்
தாமதமாகும் தீர்ப்புக்கு தொடர் பயணம் தொல்லை தரும்
தாமதமாகும் தீர்ப்பில் நீதி மறுக்கப்படும்
"Justice delayed is justice denied" is a legal maxim
தவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்

Tuesday 20 August 2013

இதுதான் உன் முடிவா ?

இதுதான் உன் முடிவா ?
அதுதான் உன் முடிவென உன்னால் முடிவெடுக்க முடிமா !

முடிவுகளை மாற்றிக் கொள்ள முயற்சிக்க மாட்டாயா ?
முயற்சி செய்வது உன் கையில் இருக்க முடிவெடுக்க ஒருவன் உள்ளான் என்பதை மறந்தது ஏன்!

நல்லதை நோக்கி நடை போடு
அல்லவை காண அகன்று விடு

நல்லவையும் அல்லவையும் நிழல் போல் தொடரும்
தொடர்வது அனைத்தும் உன்னை தொட்டு விடாது

நல்லவை நடக்க நாயனின் உதவி நாடு
நல்லவையும் அல்லவையும் நாயன் தந்துவிடின் அதுவும் நல்லவையாகவே இருக்குமென வாழ்வைத் தொடரு

நடந்தவை முடிந்தவை
நிகழ்பவை நடப்பவை
நடக்க இருப்பவை நாயன் நினைப்பவை

நாயன் அவனே அல்லாஹ்(இறைவன்), வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, ...

Monday 19 August 2013

இறையோனது பார்வையில் உயர்த்தப் பட்டாய்

அயராத நெஞ்ஜோடு நிமிர்ந்து உலா வந்தாய்
அயர்ந்து நெஞ்சில் ஓடிய உயிர்க் காற்றை நிறுத்தி விட்டாய்

கலையாக சொல்லியதை நிலையாக செய்து வந்தாய்
நிலையாக நின்று தொழுததை இறைவன் பெய்த அருளானது

இறைதாசனாக உனை உருவாக்கிக் கொண்டாய்
இறையோனது பார்வையில் உயர்த்தப் பட்டாய்

உனை நினைத்து உருகாத மனமும் உருகும்
உனை நினைத்து உணராத உடலும் உணரும்

அலையோடிய நெஞ்சினிலே உன் நினைவால்
அலையாக நெஞ்சுருக மக்கள் வெள்ளம் உனை வாழ்த்தும்

உஹுது மலைபோல் உன் நன்மை உன்னுடன் வரும்
சஹீது ஆனதால் உன் உடன் உயர்ந்தோர் இருப்பார்

-----------------------------------------------------------------------------------------------------------------

நடுநிலையோடு செயல்படும் தொலைக்காட்சி தேவை

நடுநிலையோடு செயல்படும் தொலைக்காட்சியும் மற்ற மீடியாக்களும் உருவாக நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இதுவரை கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ மருத்துவர் என்ற பல துறைகளிலும் புகழ் பெற்ற மக்களுக்கு சேவை செய்த பெரியார் தாசன் என்ற Dr. அப்துல்லாஹ் அவர்கள் இறைவன் நாட்டப்படி இறந்த செய்தியை எந்ததொலைகாட்சிகளும் , மற்ற மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையானது .
------------------------------------------------------------------------------------

 ஜனாஸா தொழுகை காலை 9 மணிக்கு ;
++++++++++++++++++++++++++++++++++

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவரது ஜனாஸா தொழுகை இன்று (20.08.2013) காலை 9 மணிக்கு சென்னை மக்கா மஸ்ஜிதில் வைத்து நடைபெறுகிறது நடைபெறுகிறது.

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ மருத்துவர் என்ற பல துறைகளிலும் புகழ் பெற்ற மக்களுக்கு சேவை செய்த பெரியார் தாசன் என்ற Dr. அப்துல்லாஹ் அவர்கள் இறைவன் நாட்டப்படி இறந்த செய்தி அனைவருக்கும் ஆற்ற முடியாத துயரத்தை தந்தாலும் அனைத்தும் இறைவன் நாடப்படிதான் நடக்கும் என்ற மனதோடு நாம் நம் சகோதரரான பேரா.அப்துல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்குவானாக என்று அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து அருள்வானாக.....
.யா அல்லாஹ்...!
அப்துல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வாயாக,
அவர்களின் பாவத்தை மன்னித்து,கபுருடைய வேதனையை நீக்குவாயாக,,,!
அவர்களுக்கு சொர்கத்தில் மிக உயர்ந்த இடத்தை கொடுப்பாயாக,

'நான் அறிந்த இஸ்லாம் ' - பெரியார்தாசன்

Sunday 18 August 2013

உன்னிலை நீ அறிய உன் முடிவின் காலமே பதில் சொல்லும்

பண பலம் தலைக்கனமாக மாறியதோ
அறிவின் பலம் தலை கனமாகுமோ!

கற்பித்தவரை காக்க வைப்பது கர்வமா !
கற்கப்பட்டதின் நோக்கின் கர்வமா !

பெருமை பேசுவதிலும் அடக்கமாக பேசி
பெருமையாக பேசி விளம்பரம் தேடுவது முறையோ!

Saturday 17 August 2013

Madrasah மதரஸா அரபிக் கல்லூரி

முஸ்லீம்களின் உயர் கல்வி ஒரு நிறுவனம்.

 குர்ஆனை மையமாக ஒரு பாடத்திட்டமாகக்  கொண்டு இறையியல் சார்ந்த அறிவியலை கற்பிக்குமிடம் இங்கு  இஸ்லாமிய இறையியல் மற்றும் இஸ்லாமிய சட்டம், ஹதீஸ் (நபி மொழிகள்) இஸ்லாமிய வரலாறு  அரபு இலக்கணம், இலக்கியம், கணிதம், தர்க்கம், மற்றும், கூடுதலாக, இயற்கை அறிவியல்கள் ஆய்வு. கல்விகளை கற்பிக்குமிடம். குர்ஆனை
மனனம் செய்வதற்கு பயிற்சி தரப்படுகின்றது
  இந்த மதரஸாக்களில் இலவசமாக தங்கவும் , மற்றும் உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ வசதிகள்  வழங்கப்படுகிறது .
சிறந்த இஸ்லாமிய கல்வி பயிற்றுவிப்பவர்கள் தொண்டாற்றுகின்றார்கள் .

தற்காலத்தில் கணினி ,ஆங்கிலம் கற்பிகின்றார்கள்
முழுமையாக கற்று தேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இது உலகளவில் செயல்படுகின்றது . மதீனா பல்கலைக்கழகம் உலகளவில் மிகவும் சிறப்பானது .

மதீனாவில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் பல மதரஸா அரபிக் கல்லூரிகள் உள்ளன.
அதில் வேலூர் அல் பாக்கித்துஸ் ஸாலிஹாத் , நீடுர் –நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி, கூத்தாநல்லூர் மதரஸா , காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபிக் கல்லூரி இன்னும் பல அரபிக் கல்லூரிகள் மிகவும் பிரசித்தமானவை.

Wednesday 14 August 2013

நம்பிக்கையும் சுதந்திரமும்

உன் போக்குக்கு விட்டால் நீ கெட்டு விடுவாய் – அப்பா

உன் போக்குக்கு விட்டால் நீ அனைத்தையும் அழித்து விடுவாய். நீ ஒரு எல்லைக்குள் தான் மேய வேண்டும் அதனால் ஒரு நீண்ட கயிறு போட்டு ஒரு மரத்தில் கட்டி விடுகிறேன். எல்லையை மீறினால் உன்னை அந்த கயிறு கட்டுபடுத்தும் – மாட்டுக்கு உரிமையாளர்

சட்டம் ஒன்று உள்ளது அதன்படிதான் நீ செயல்பட வேண்டும். மீறினால் உன் தவறுக்கு தகுந்ததுபோல் உனக்கு தண்டனை கிடைக்கும். சட்டம் தெரியாது என்று சொல்லி தப்பிப்பதற்கு உனக்கு உரிமை கிடையாது – அரசு வகுத்த சட்டம்

Tuesday 13 August 2013

கணினியில் தமிழில் டைப் செய்ய பல வழிகள் ...

 ஆங்கிலத்தில் (அம்மாவுக்கு  amma என்று ) கணினியில் தட்டினால் இரண்டாவது கட்டத்தில் தமிழ் யுனிகோடில் தெரியும்

இங்கு தட்டினால் ஆங்கிலஒலி2யுனிகோடு  தெரியும்

 இ-கலப்பை


வாழ்வதற்கே வாழ்க்கை தரப்பட்டுள்ளது

இதயம் விடும் மூச்சில் இருப்பவர்கள் இருப்பார்கள்
இதயம் இருப்பவர்கள் உண்மையாய் வாழ்த்துவார்கள்

வற்றாத ஜீவ நதி வாழ்வை கொடுக்கும்
வற்றிய வறண்ட நதி வாழ்வை போக்கும்

இனிய இதயம் வாய்மை பேசும்
பொல்லாத இதயம் பொய்மை பேசும்

நீ விரும்பினால் நான் விரும்புவேன்
நீ விரும்பாவிட்டாலும் நான் விரும்புவேன்

நான் விரும்பினாலும் நீ விரும்புவதில்லை
நான் விரும்பாமல் போனதற்கு நீ காரணமில்லை
நான் விரும்பாமல் போனதற்கு நானே காரணமானேன்

Monday 12 August 2013

நல்வழி கிடைக்க முயற்சிக்க வேண்டும்.

இறைவனது இல்லத்தில் சிலர் தவறான வார்த்தைகள் பேச வழி விட்டு அதனை தடுக்க முடியாத உங்களுக்கு...

குத்பா நடத்தும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை உலமாவின் பிரசங்கம் நடைபெற்ற பின்பு பள்ளிவாசலுக்கு சிலர் வருகிறார்கள்.

சிலர் உலமாவின் பிரசங்கம் பிடிக்காமல் முஅல்லாவின் பள்ளியை விடுத்து வேறு பள்ளிக்கு செல்கின்றார்கள்.

அரசியல் மேடையாக மற்றும் தனி மனிதரைப் பற்றிய விமர்சனமாகவும் ,சொல்லக் கூடாத வார்த்தைகளை உயர்வான இறைவனது இல்லத்தில் பிரசங்கம் செய்வது தற்போது சில ஊர்களில் மாறி வருவது வருந்தத் தக்கதாக உள்ளது .

தொழுகை நடத்துவதற்கு முன் செய்யப்படும் பிரசங்கம் மார்க்க அறிவைத் தருவதோடு தொழுகையில் ஒன்ற வைக்கக் கூடியதாக அமைய வேண்டும் . குர்ஆன், நபிமொழி மற்றும் அதற்கான விளக்கங்கள் தந்தாலே போதுமானது . இவைகளில் காணக் கிடைப்பதே ஏராளம்.

தேவையான பள்ளிவாசல்கள் உண்டு தொழ மக்கள் வராமலிருப்பது பற்றி சிந்திப்பது

உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஊருக்கு ஒற்றுமை முக்கியம் என்பதை முன்னிறுத்தி முயற்சி செய்வது

அறிவு வளர்ந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டால் கண்டிக்காமல் அன்புக்கு முக்கியம் கொடுத்து நேசன் பாராட்டுவது

என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து செயல்பட்டு உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்ய முயற்சிக்க வேண்டாமா ?

இறைவனது அருள் அனைவருக்கும் கிடைக்க முயல்வோம் .

உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984

Thursday 8 August 2013

வாழ்வின் உயர்வு


தர்மம் தலை காக்கும்
செய் .செய்ய விடு
நல்லதை உற்சாகப் படுத்து
இடுவார் கெடுவதில்லை
சேவை வளரட்டும்
ஒற்றுமை கூடட்டும்
புன்னகை பூக்கட்டும்
அன்பு மலரட்டும்
வாழ்த்துகள் சேரட்டும்
நன்மைகள் குவியட்டும்
வாழ்வு உயரட்டும்
இறைவன் அருள் கிடைக்கட்டும்
சுவனம் கிட்டட்டும் 

துபாயில் பெருநாள் தொழுகை

---------------------------------------------------------------------------------------------------

Wednesday 7 August 2013

பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு!பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!

பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான். ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .

பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.
ஆண்கள் தொழுதுவந்த பின் வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.

Monday 5 August 2013

விட்டுக் கொடு உன்னோடு நான் சமமாக


பின்னால் வா நீ தாழ்த்தப் பட்டவன்
முன்னாள் போ நீ உயர்த்தப் பட்டவன்
சேர்ந்து வா நீ உயர்வாய் வருபவன்

பின்னால் நீ வர உனக்கு பாதுகாப்பில்லை
முன்னாள் நீ போக வழியற்றுப் போவாய்
சேர்ந்து நீ வா சிறப்பாய் நீ இருப்பாய்

முன்னாள் நீ படித்தாய் உன்னை உயர்த்திக் கொண்டாய்
உன்னால் நான் படிக்காமல் என்னை தாழ்வாக்கி விட்டாய்
உன்னால் நான் தொழிலால் பிரிக்கப் பட்டேன்
உன்னால் நான் தொழிலால் பிற்படுத்தப் பட்டேன்

உயர்வும் தாழ்வும் தொழிலில் இல்லை
உயர்வும் தாழ்வும் மனதின் உருவாக்கம்

விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை
விட்டுக் கொடு உன்னோடு நான் சமமாக

Surat Al-Qadr (The Power) - سورة القدر -சூரத் அல் -கதர் (The Power) லைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )

                                                                                                                                               
                                                                                              (Quran-97:1)
Sahih International
Indeed, We sent the Qur'an down during the Night of Decree.
Tamil NEW
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
                                                                                                                                            
                                                                                           (Quran-97:2)
Sahih International
And what can make you know what is the Night of Decree?
Tamil NEW
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
                                            
 (Quran-97:3)                                                                                                                                                                 
Sahih International
The Night of Decree is better than a thousand months.
Tamil NEW
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
                                                                                                                                              

                                                           (Quran-97:4) 
Sahih International
The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.
Tamil NEW
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
                                                                                                                             
                                                                                        (Quran-97:5)
Sahih International
Peace it is until the emergence of dawn.
Tamil NEW
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
Copyright © Quran.com. All rights reserved.
---------------------------------------------------------------------------------------------

Sunday 4 August 2013

அழகாய் அருகில் அமர்ந்து அனைத்தையும் சொல்வாய் !

மனதில் சோர்வு
விழிகளில் சோர்வு
விரிப்பை விரித்து படுக்கவும் சோர்வு
விரிப்பை விடுத்து படுத்தது தரையில்
துணையற்ற தரையில் தூக்கம் தவழவில்லை
துயரங்களும் துன்பங்களும் உன் நினைவாய்
துயரத்தில் விழித்த இரவு வீணாகப் போனது

தொலை தூரம் வந்தேன் உன் நினைவோடு
தொலையாத துக்கம் தொலைந்து போகும் நீ இருந்தால்
பிரிந்து வந்தது பொருள் சேர்க்க
பிரிந்த வாழ்வு சோகத்தை சேர்கிறது

அழகாய் அருகில் அமர்ந்து அனைத்தையும் சொல்வாய்
பரிவாய் சொல்லி பாசத்தை வளர்ப்பாய்
பரிவு நெருக்கம் தந்து உணர்வுகள் கொப்பளிக்கும்
பரிமாற்றங்கள் காமப் பசியை அடக்கும்
அடங்கிய பசி அன்பாய் வளர்ந்து வாரிசில் தொடரும்
அடங்கிய பசி அயர்வை கொடுக்கும்
அயர்வு உறக்கத்தில் நிறைவு கொள்ளும்
விழித்திருந்த இரவு வீணாகப் போகவில்லை

இறைவன் தேவையற்றவன்

இறைவன் தேவையற்றவன்
இறைவனின் அடியான் தேவையுடையவன்
இறைவனின் அடியானுக்கு இறைவனே தேவையுடையவன்
இறைவனே அனைத்தையும் படைத்தான்
இறைவனால் படைக்கப் பட்டவன் இறைவனிடத்தே யாசிப்பான்
இறைவனை யாசிப்பவன் இறைவனையே  தொழுது நிற்கிறான்
இறைவனை தொழுது நின்று யாசிப்பவன் இறைவன் அதனை ஏற்க வேண்டுகிறான்
இறைவனை அருள் வேண்டி இரவெல்லாம் தொழுது ஏங்கி நின்றாலும் இறைவனது அருள் அவன் நாடியவருக்கே கிடைக்கும்
இறைவன் இறக்கம் கொண்டவன்
இறைவனை நாடியவருக்கு இறைவன் நன்மையை தர தயங்குவதில்லை
இறைவன் தருவதும் தராமல் இருப்பதும் நன்மையாகவே அமையும்

தொடர்பை தொடர நேசம் தொடரும்


குறை கண்டால் நிறை இல்லை
நிறை கண்டால் குறை இல்லை

கிடைத்த நேரம் உயர்வானது
கடந்த நேரம் கனவானது

நாளாகும் நட்பை வளர்க்க
நிமிடம் போதும் நறுக்க

பார்வையை விட்டு அகல நேசம் மறையலாம்
தொடர்பை தொடர நேசம் தொடரும்

கடலும் மலையும் கடந்து இருந்தும் தொடர்பை சுருக்கவில்லை
கணினியும் தொலைக்காட்சி இணைப்பும் தொடர்பை நெருக்கி விட்டது

இதயம் ஒன்றிருக்க இணைப்பு ஒன்றிருக்கும்

Saturday 3 August 2013

கணினியின் மகிமை

கற்று அறிய கணினி
கற்றவர் அறிய கணினி
கற்றதைச் சொல்ல கணினி
கன்னியைப் பார்க்க கணினி
கண்ணியில் மாட்ட கணினி
காசைச் சேர்க்க கணினி
காசைப் போக்க கணினி
கவலையை மறக்க கணினி
கவலையை சேர்க்க கணினி
ஒவ்வாமை வர கணினி
உடலை வறுத்த கணினி
கணினியை கண்டவன் மேய்கிறான்
கணினியின்   ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர் - ராபர்ட் மெட்காஃப்
கணினி லிஸ்ப் (LISP) மொழியை கண்டு பிடித்தவர்  ஜான்
கணினி தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் வி.ஏ. சிவா அய்யாதுரை
கணினி  மவுஸ்சை கண்டு பிடித்தவர் டக்ளஸ் காள் எங்கிள் பாட்


Friday 2 August 2013

வார்த்தையால் பேசிவிடு! நேசத்தை காட்டிவிடு!

உந்தன் விழிகள் பேசுகின்றன
உந்தன் உதடுகள் அசையவில்லை

உனது விழிகளில் கண்ணீர் வழிகின்றது
உனது மென்மையான இதயம் கனத்திருப்பதால்

உனது இதயம் இறுக்கமான போதும்
உனது மனம் இரக்கத்தை காட்டுகின்றதோ !

உன் உதட்டின் இதழ்கள் நெருக்கமாக இருந்தும் மனதை கவருகின்றது
உன் மனதின் வலி உன் முகத்தில் தெரிய என் மனமும் வலிக்கின்றது

ரோஜாவின் இதழ்கள் நெருக்கமாக இருந்து அழகைத் தந்தாலும்
ரோஜா மலர்ந்து இதழ்கள் விரிந்தாலும் வெயிலின் கொடுமையால் சுருங்கி கொட்டிவிடும்

மலர்ந்திருக்கும் ரோஜாவை பறித்து முடியில் சூட்டிக் கொள்
மனதில் மகிழ்ச்சி வர உன் இதழ்கள் திறக்க மனம் மகிழ்வாய்

நெருக்கமாக வந்து இறுக்கமாக என்னைப் பிடித்துக் கொள்
நெருக்கத்தில் நழுவாது உன்னை அன்பால் அரவனைப்பேன்

அன்பின் ஆழம் உன் மனதின் இறுக்கத்தைப் போக்கிவிடும்
அன்பின் அரவணைப்பு உன்னை மகிழ்வாய் மாற்றிவிடும்

Thursday 1 August 2013

நீ விரும்பியபோது உன்னிடத்தில் உயர்வாய் அழைத்துக்கொள்!


ஒரே வாழ்க்கை இவ்வுலகில் தந்தாய்
ஒரே வாழ்வில் உயர்வும் தாழ்வும் மாறச் செய்தாய்

உயர்வு வரும் நிலையில் உனை மறந்தேன்
உயர்வு வருவது என் உழைப்பால் வந்ததாக கர்வம் கொண்டேன்

தாழ்வு வரும் நிலையில் விதியால் வந்த வினையாக நினைத்தேன்
தாழ்வு வந்த போது உனைநினைத்து உளமார உன்னுதவி நாடினேன்

'உயர்வு வந்த போது எனை மறந்தாயே' என என் வேண்டுதலை நீ நிகாரிக்கவில்லை
உயர்வு நிலையில் உள்ள உனக்கு சிறிய மனமில்லை

உனை நாடுவோர்க்கும் உனை நாடாதோர்க்கும் இவ்வுலகில் உன்னருள் கிட்டும்
உனை நாடி உன் வழி நடந்தோர்க்கு மட்டும் சுவனம் கிட்டும்