Tuesday, 16 May 2017

அல்பயான் அரபு செய்தித்தாளில் நீடூர் நசீர் அலியின் பணி

அஸ்ஸலாமு அலைக்கும்... வரஹ்

 துபாயில் அரபி செய்தி   தாள் அல் பயான் 37 வது ஆண்டு விழா 10-5-2017 அன்று சிறப்பாக கொண்டாட பட்டது . இதில் பணி செய்த எனக்கு 33 வருடம் மிகவும் பொறுப்புடன் வேலை செய்ததால் என்னை கௌரவித்தார்கள் எல்லா புகழம் அல்லாஹ்வுக்கே
நசீர் அலி
from: Mohdali Naseer <seasons123.naseer@gmail.com>
Mohamedali Naseerali. எனது மூத்த மகன் 
- முகம்மது அலி Mohamed Ali 

Tuesday, 9 May 2017

நீட்டே சாட்சி

அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் (தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமை



அரை சட்டை போடு
புடவை கூடாது
வளையல்கள்
தொப்பி
குர்தா
பைஜாமா
இதெல்லாம் நீட் டுக்கு உகந்ததல்ல
அறிவு வெளிவர இதெல்லாம் தடையாகிவிடும்
மொத்தத்தில் அமெரிக்க உடை உகந்ததோ !
அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது 
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் 
(தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமை


-----------------------
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
-திருக்குறள் 
மு.வ : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது..

சத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது! (அல்குர்ஆன்-17:81)

Monday, 8 May 2017

ஒன்றிலிருந்து உதிர்ந்து மற்றொன்றில் உயர்வு பெற்றது



பறக்கும் பறவைக்கு
இறக்கை பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் ஓர் இறகு
தரையில் விழுந்தது
பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
விழுந்த இறகு விரும்பினாலும்
பறவையின் இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை