Monday 31 December 2018
வாழ்த்துங்கள்.
வாழ்த்துகள மகிழ்வை தருகின்றது
வாழ்த்துகள வயதை உயர்த்துகின்றது
வாழ்த்துகள பண்பட வைக்கின்றது
வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது
இறைவனை வாழ்த்திதான் வேண்டுகின்றோம்
இல்லங்களில் வாழ்த்திதான் வரவேற்கின்றோம்
இயலாதவனயும் வாழ்த்தும்போது வாழ்கையை விரும்புகின்றான்
Saturday 29 December 2018
வாழ்க்கையை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.
.
பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் வெற்றிக்கான வாய்ப்பு இல்லாத விருப்பங்களை விட குறைவாகவே இருக்கின்றன.
உண்மையில், சராசரியாக ஒரு சில வாரங்களுக்குள் அவர்களின் தீர்மானம் பற்றி மறந்து விடுகின்றனர்
இலக்குகளை அமைப்பது ஒரு சக்தி வாய்ந்த செயலாகும், ஆனால் சரியாக செய்தால் மட்டுமே.
ஆசைகளின் பட்டியலைச் செய்வதை விட அதிகமாக செய்ய வேண்டியது அமையும்,
Monday 10 December 2018
மிகச் சிறிய நல்ல செயலை செய்வதால் யாராலும் அதனை உயர்வான செயலாக மாற்ற முடியும்.
வாழ்க்கையைப் பற்றி யோசித்து , மக்களை கவனித்து, புத்தகங்களைப் படித்த்து, இறுதியில் என்ன விஷயங்களைத் தெரிந்துகொள்வது மற்றும் அவ்வளவு நேரத்தில் என்னவெல்லாம் உணருவது ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை அறிந்து ஞானத்திற்கு எந்தவிதமான கூற்றுக்களையும் செய்யவில்லை,
ஆனால் ...
ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்திற்காக இங்கே இருக்கிறோம்;
நமது நோக்கத்தை உணர்ந்து, நேரத்தையும் நேர்மையையும், நம்மைப் பற்றிய அறிவையும், உலகத்தைப் பற்றிய அறிவையும் அறிய வேண்டும்.
Sunday 2 December 2018
தனிமை ஒரு தனித்துவமான விளைவாக இருக்கக்கூடும்,
குடும்பம் மற்றும் சமூக உறவுகளின் சிதைவு, நகரங்களுக்கான இடம், தொலைபேசி,தொலைக்காட்சி மற்றும் வானொலி, மற்றும் எல்லாவற்றிற்கும் இடையில் உள்ள அனைத்தும். வெறுமனே நாம் தனிமைப்படுத்தப்படுவதற்கு அப்பால், நாம் அதிகரித்துவரும் கலாச்சார சிக்கல் நிறைந்த ஒரு உலகில் வாழ்கிறோம்.
சேவை இருண்ட இடத்தில இருப்பதல்ல
சேவை மக்களோடு சேர்ந்திருப்பது
தன்னை உயர்த்திக் காட்டி நிற்பது பனைமரம்
தன்னை பரப்பிக் காட்டி நிழல் தருவது ஆலமரம்
தனி மரம் தோப்பாகாது
தனிமை மகிழ்வை தராது
இணையத்தில் உள்ள ஒரு உலகத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒவ்வொரு கலாச்சாரமும் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு தருணத்திலும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. தனித்தன்மை வாய்ந்த வேறுபாடுகளை உருவாக்கும் கலாச்சாரங்களை கலக்கும் மற்றும் பொருந்தக்கூடியதாக இருப்பதோடு, தனிநபர்களிடமும் அவற்றின் வெளிப்பாடுகளிலும் ஒரு இணைப்பு இருக்கிறது
நமது சுய உருவம், நமது அடையாளங்கள், நாம் ஒரு உலகத்தில் வளரும்போது, நுட்பமான மற்றும் வெளிப்படையான வழிகளில் மற்றவர்களிடமிருந்து நம்மை மிகவும் வித்தியாசப்படுத்துகிறது.
நம்மை புரிந்து கொள்ள விரும்புவதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
தனிமை ஒரு தனித்துவமான விளைவாக இருக்கக்கூடும், அதேநேரத்தில், நமது நவீன கலாச்சாரம், ஒருவருக்கொருவர் நம் மனோபாவத்தை நம்மால் பிரித்தறிய முடியாததுடன், அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ள ஒரு உலகில் நம்மால் உணரப்படும் தனிமை,
சிறிதாக இருக்க நிறைவாக இருக்க விரும்புகிறோம்
நிறைவாக இருந்தது நம்மை விட்டு அகல
சிறிதாக கிடைத்தாலும் போதும் என்று நினைக்கிறோம்
நிறைந்தவர்கள் இருக்க அவர்கள் அருமை தெரிவதில்லை
நிறைந்தவர்கள் நகர நம் நிலை அறிகின்றோம்
தனித்து விடப்பட்டபோது
தனிமையை வெறுக்கிறோம்
Saturday 1 December 2018
காவலாளிகள் இல்லாமல் பயணிக்கிறாரா?
பாதுகாப்பு இல்லாமல் பயணம்? அனைவருக்குமே கேள்விகுறியாகிவிட்டது ?
முக்கியமான நபர்கள் தனியாக வெளியேறுவதன் மூலம் அபாயத்தில் தங்களைத் தாங்களே அனுமதிக்க மாட்டார்கள், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு பாதுகாப்பு அவசியமாகின்றது நாட்டின் நிலை அப்படி இருப்பதால்
அனைத்து பெண்களும் ராணிகள் மற்றும் இளவரசிகளாக உள்ளனர்! இருப்பினும் அவர்களுக்கும் கணவன் அல்லது உறவினர் பாதுகாப்பு அவசியமாகின்றது வீட்டை விட்டு வெளியில் செல்ல
வேலியே பயிரை மேய்வதும் நிகழும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன
இந்திராகாந்திக்கு பாதுகாவலரே துயரத்தை விளைவித்தார்
உங்கள் நாள் மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்ற வழிகள்
“எல்லா நாட்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இதுவே” என்ற உறுதி எப்பொழுதும் வேண்டும் .
இன்று விடுமுறை நாள் என்ற நினைவோடு தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் .
விடிகாலையில் எழுந்து சூரிய உதயத்தை அனுபவிக்க வேண்டும் .
காலையில் மெதுவாக தியானம், பிரார்த்தனை ஒன்றுகூடி இறைவனைத் தொழுவது இறைவனுக்கு புகழ்பாடுவது, மிகவும் அர்த்தமுள்ளது .,
எழுதுதல், உடற்பயிற்சி, முதலியன இந்த காலை நேரத்தை பயன்படுத்தவும்
ஒரு நடைப்பயணத்திற்கு சென்று இயற்கையை அனுபவிக்கவும். ஒரு பூங்காவில் உட்கார்ந்து பறவைகள் எழப்பும் ஓசைகள் . கடற்கரைக்கு சென்று அங்கு கிடைக்கும் ஓசோன் காற்றும் வீசும் அலைகளின் ஒலிகளையும் கேட்கவும்.
முன்னுரிமை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிக முக்கியமான காரியங்களைச் செய்ய நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் உடனடி கவனத்திற்கு அழைக்கும் எல்லா காரியங்களுடனும் சண்டை போடாதீர்கள்.
உங்கள் மனதில் எழும் ஆழ்ந்த கேள்விகளுக்கு பதில்களைப் சிந்தியுங்கள்.
உங்கள் உணவை மிகவும் மெதுவாக சாப்பிட்டு, அதை எரிபொருளாகப் பயன்படுத்துவதோடு அதை அனுபவிக்கவும்.
சாப்பிடும் போது தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்க தொலைபேசியுடன் பேசவோ வேண்டாம்.
இஸ்லாம் பற்றி தவறான கருத்துக்கள்
இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகளை பரப்பப்படுகின்றன,அதே நேரத்தில் நமது சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும் விதத்தில் செயல் படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அதனைச் சார்ந்த ஊடகங்கள் இதில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.ஆனால் அவைகளின் பொய் பிரசாரங்களை மக்கள் நம்புவதாக இல்லை. இஸ்லாம் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் மக்கள் இதனால் அதிகமாகியே வருகின்றனர். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது. நாம் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் மனதில் இந்த தவறான பொய் பிரசாரங்களை உடைத்தெரிந்து இஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒரு நாட்டம் மேற்கொள்ளவேண்டும்.
Thursday 29 November 2018
ஓய்வு நேரத்தை உயர்வாக்கிக் கொள்ளலாம்.
விரும்பியதைப் பற்றிக் கவனிக்கிற ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை முறை, உள் சுத்திகரிப்பு அடைவதற்கான சிறந்த வழி.
தனிமையான நேரங்களில் தன்னையே கண்காணிப்பது வாழ்வின் போக்கில் நடந்துகொண்டிருக்கும் அழுக்குகளை கழுவ உதவுகிறது.
ஓய்வு நேரத்தை மதிப்புமிக்கதாக்க வழி நல்ல செயல்களே.
யாருக்கும் தெரியாமல் அல்லது மற்றவர் பாராட்டும்போதெல்லாம், இறைவனின் அருளுக்காக நல்ல காரியங்களைச் செய்ய முடியும்,
நம்மைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு வாழ்வதை யாரும் விரும்புவதற்கில்லை.
நம் நாவுகள் சுமந்து செல்லும் பாரமான சுமைகளே!
இறையருள் நம் நாவை கட்டுப்படுத்தவும், அவற்றை மிகச் சிறப்பாகவும் ஞானமாகவும் பயன்படுத்தவும் உதவும்.
ஞானமுள்ள ஒரு மனிதனை தேடிக் கண்டுபிடித்து ஏழு கேள்விகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது:
(1) வானத்தை விட கனமான எது?
(2) பூமி எவ்வளவு விசாலமானது?
(3) கல்லை விட கடினமானது?
(4) நெருப்பு விட வெப்பமானது என்ன?
(5) பனிக்கட்டியைவிட குளிர்ச்சியானது என்ன?
(6) கடலை விட செல்வம் என்ன? (
7) அநாதைகளைப் பற்றி யார் மிகவும் திடுக்கிட்டார்?
Wednesday 28 November 2018
பிரிந்தவர் சேர்ந்தனர் /படமும் பாசமும் சேர்த்து வைத்தது
எனது உறவுனர் ஹன்னோயில் நம்டினில் சிறந்த வியாபாரம் செய்து வந்தார் .அதனால் அவரை நம்டின் அஜீஸ் என்று அழைப்பார்கள் ஹன்னோய் அமேரிக்கா ஆக்கரமத்திலிருந்து விடுதலையடைத்து கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வர அவர் அங்கிருந்த தனது சிறு வயது மூன்று மகன்களை அழைத்துக் கொண்டு தாய்நாட்டிற்கு இந்தியாவிற்கு தன் தாய் வீட்டற்கு நீடூருக்கு வந்து விட்டார் .ஆனால் ஹன்னோயில் திருமணம் செய்த வியட்நாம் மனைவி தன் நாட்டை பிரியமனமின்றி தான் வராமல் தான் பெற்றெடுத்த மூன்று மகன்களையும் பிரியமனமின்றி பாசத்துடன் அனுப்பி வைத்தார்
காலங்கள் கடந்தன .
தவறு செய்த மகன் மனம் மாறி திரும்ப மகிழ்வுதான்
The Parable of the Prodigal Son(a person who spends money in a recklessly extravagant way.)
இளைய மகன் தன் தந்தையிடமிருந்து தனக்கு தர வேண்டிய சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு தந்தை மற்றும் மூத்த சகோதரனை விட்டு பிரிந்து சென்று விடுகின்றார்
தவறான முறையில் வாழ்ந்ததால் சென்ற இடத்தில இருந்த அனைத்து சொத்துகளையும் விற்று வேலை செய்யும் நிலைக்கு ஆகி மிகவும் சிரமத்திர்க்குள்ளாகி தன் தவறை உணர்ந்து .அவர் மனம் மாறி திரும்பவும் தன தந்தையை நாடி வருகின்றார்
Tuesday 27 November 2018
நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளில் மட்டும் இல்லை
குர்’ஆனில் அல்லாஹ் நன்றியுடன் இருக்கும்படி அறிவுரை கூறுவதுமல்லாமல், கட்டளையும் இடுகிறான்:
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.. [அல் குர்’ஆன் 2:152]
நன்றியுணர்வைப் பற்றி ஒரு விஷயம் என்னவென்றால், அது இருப்பதை மனம் ஒப்புக்கொள்கிறது. நாம் கனவு கண்ட எல்லாவற்றையும் நாம் பெறமுடியாது, ஆனால் நமக்கு உண்மையிலேயே தேவைப்படுகிறவற்றில் பெரும்பாலானவை நன்றியுணர்வு உள்ளன, அதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அது போதும்.
சில உரிமைகளை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால், நிறுவனங்கள் மக்கள் இல்லை. மக்களிடமிருந்து அவர்கள் ஒருபோதும் ஓய்வெடுக்க மாட்டார்கள்,
அவர்கள் சோர்வாக இருப்பதில்லை, அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க முடியாது.
Tuesday 20 November 2018
Sabarimala travel சபரிமலை பிரயாணம்
இதோ வந்து விட்டது எனறு சொல்லிக்கொண்டே இருந்தார் .காரில்தான் சென்றோம்
அந்த இடம் நெருங்கும்போது இரவு வந்துவிட்டது .போகுமிடமெல்லாம் அடர்ந்த உயரமான புற்கள்
ஒருவகையான பயத்துடன் மலையேறி அவருடன் சென்றேன் .எத்தனையோ மலைகள் ஏறி இருக்கின்றேன் அந்த பயம் இதுவரை எனக்கு வந்ததில்லை
Sunday 7 October 2018
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையற்றவன் இறை நம்பிக்கையற்றவன்
தன்னம்பிக்கையும் ஆர்வமும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
ஆர்வம் உந்துசக்தியை தரும்
உந்துசக்தி முன்னேற்றத்தைத் தரும்
ஆர்வமற்றோர் செயலற்று இருப்பர்
நம்பிக்கை, ஆர்வம்,, பேராவல் முன்னேற்றத்தின் அடித்தளம்
செயலின் ஈடுபாடு முழுமையாக இருத்தல் வேண்டும்
செயலின் ஈடுபாடு வெற்றியின் திறவுகோல்
ஆசைப்படுதல் இயல்பு ஆனால் பேராசைப்படாமல் இருத்தல் வேண்டும்
முயற்சியின் விளைவில் ஏதிர்பார்த்ததும் ஏதிர்பாராததும் கிடைக்கலாம்
அதுவும் நன்மைக்கே இருக்கலாம்
தன்னம்பிக்கை பற்றி திருக்குர் ஆன்
''உங்களில் தன்னம்பிக்கை மிக்க இருபது நபர்கள் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்ளலாம். நூறு நபர்கள் இருந்தால், ஆயிரம் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.'' [அல்குர் ஆன் -8.65]
Wednesday 26 September 2018
Tuesday 18 September 2018
ஒரு பக்தனின் நன்றியுணர்வு
மழை
பனி
குளிர்
வெயில்
இவைகளுக்கு தாக்குப்பிடிக்க மட்டுமா ஆடை ?
அனைத்துக்கும் மேலாக மானத்தை பாதுக்காக்கும் ஆடை.
ஆடை அணிவது நாகரீகத்தின் வெளிப்பாடு .
வார்த்தைகளால் சொல்வது மட்டும் நன்றி அல்லது வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமோ ?
அது வெளிப்படும் இடம் உள்ளத்தின் நாதமாக இருத்தல் வேண்டும் .
இறைவா ! உன்னை நினைத்து உருகியவனாய் நன்றியுடையவனாய் இருப்பேன் .
அதனை மறைமுகமாகவும் .வெளிப்படையாகவும்
சொற்களினால் மற்றும் செயல்களால் வெளிப்படுத்தி
உன்னிடம் இறைஞ்சி நிற்ப்பேன்
அதற்கு உனது அருளும் அங்கீகாரமும் வேண்டும்
நன்றியுணர்வு இதயத்திலிருந்து தொடங்கி நாக்கு நரம்பு மண்டலத்திலிருந்து வெளிப்படுகின்றது
Thursday 13 September 2018
தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவு
பொதுவாக மோதல்கள், வீட்டில் உள்ள அதிகாரத்தை சுற்றி சுழலும்,
தம்பதிகளுக்கு இடையே இன்னும் சுதந்திரம், உரிமை.பெற முயற்சிக்கும் போது கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் உருவாகும் .ஒவ்வொருவருக்கும் அவர்களது உரிமைகள் தெரிந்திருந்தால் மட்டுமே, மோதல்கள் முடிவடையும், திருமணத்தின் முதல் வருடம் தேனிலவு காலங்களில் அப்பொழதுக்கு மாற்றங்கள் உருவாகலாம்
Monday 10 September 2018
Friday 24 August 2018
Saturday 4 August 2018
Thursday 2 August 2018
Wednesday 1 August 2018
நம் வாழ்வின் நோக்கம் என்ன?
உடல்நலம், செல்வம், ஒரு அழகான மனைவி?
நாம் எல்லோரும் இறந்துவிடுவோம்
கடைசி மூச்சு, வாழ்க்கை கடந்திருக்கும்
மரணத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம்
மரணத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள், மரணம் ஒருபோதும் காத்திருக்காது
, எல்லாம் உருவாக்கியது
Tuesday 31 July 2018
மரணம் வரும்போது
ஒளி மங்கல்கள்
கண்களில் ஒரு பளபளப்பு இருக்கிறது''
சுற்றியிருந்தவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்
இதுதான் முடிவு
இறுதியாக ஏற்றுக்கொண்டபோது
குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு முழுமையாக விடுதலை
Monday 18 June 2018
Tuesday 12 June 2018
இறைவன் மானிடருக்கு கொடுத்த தனிப் பெரும் கருணை
ஒலி எழுப்புவத்தின் வழியாக மற்ற இனங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன.ஆனால் அவைகளுக்கு நம்மைப் போல் சிறப்பான பேசும் ஆற்றலும், சிந்திக்கும் திறனும் கிடையாது .
நாம் பேசுவதால் நன்மையும் தீமையும் விளைகின்றது. அதனால் நாம் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்.
சிலர் மௌனமாக இருப்பதையே விரும்புவார்கள் . இறைவன் தந்த பேசும் ஆற்றலையும் மற்றும் சிந்திக்கும் திறனையும் முறையாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை
உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42
Monday 11 June 2018
Thursday 24 May 2018
Sunday 20 May 2018
தொழுகை
தொழுகையின் அருமையினையும் அதனால் அடையக் கூடிய நற்பயன்களயும் மக்களிடம் எடுத்துச் சொல்பது சிறப்பாக இருக்கும் .
மனதை வருடி விடுங்கள். இக்கால மக்கள் (சிலர்) மனதில் அனைத்து வகை இன்ப துன்பங்களைக் கண்டு அலுத்துப் போய் சுவனத்தின் மாண்பினையும் நரகத்தின் வேதனைப் பற்றியும் சிந்திக்க மனமில்லாதவர்களாய் மாறிவருகின்றனர்.
தொழுகையின் சிறப்பினைப் பற்றி சொல்ல எதனையோ ஹதீஸ்களும் குரான் ஆயத்துகளும் இருக்கிறது. குடிகாரனை வெறுக்காதீர்கள் குடிப்பதை தடுக்க வழி சொல்லுங்கள் . குடிப்பவனும் தொழுகையை நாடிவிட்டால் குடிப் பழக்கம் அவனை விட்டு ஓடிவிடும் .அவரையும் அன்போடு தொழ அழைத்துச் செல்லுங்கள். இக்கால குழந்தைகளுக்கு அடித்து பாடம் சொல்லித் தருவதில்லை மாறாக கல்வி மேல் ஆர்வம் உண்டாக்கி பயிற்சி கொடுத்து வளர்கின்றார்கள்.
ஆர்வம் உண்டாக்கி தொழுகையின் அருமையினை விளங்க வையுங்கள்.
Saturday 19 May 2018
Dua After Azan பாங்கு துஆ:
‘அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்”” என்று பிராத்தனை செய்தால் அவருக்கு மறுமையில் எனது பரிந்துரை (கடமையாகிவிட்டது) கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஜாபிர் (ரலி) புகாரி
பொருள்: பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக!
“வஸீலா என்பது சுவர்க்கத்திலுள்ள ஒரு உயர்வான நிலையாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் எவராவது ஒருவருக்குத் தான் கிடைக்கும். அது எனக்காக இருக்க வேண்டும் என நான் ஆதரவும், நம்பிக்கையும் வைக்கிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஆதாரம்: முஸ்லிம்
Thursday 17 May 2018
கையூட்டை கலைவது கைக்கூடுமா!
Thursday 10 May 2018
தோகையை விரிக்கும்போது மயில் கவரும் வகையில் காட்சி
Wednesday 9 May 2018
தோல்வியையும் வெற்றிகரமாக மாற்ற முடியும்
தோல்வியையும் வெற்றிகரமாக மாற்ற முடியும்.
ஒரு கட்டத்தில் தோல்வியின் உணர்ச்சிகளை நாம் சமாளிக்க வேண்டி இருக்கின்றது
தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது
சில நேரங்களில் தோல்வி அடைந்தது கூட தெரியாது,
ஆனால் தோல்வி அடைந்த பிறகு சுயநலத்தையும் அவமானத்தையும் அது தருகிறது, ஏனெனில் அவமானத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாததினால்.
அது பின்பு இயற்கையாக உந்துதல் சக்தியை தருகின்றது
சிந்தனையை மாற்றியமைத்து, நம்முடைய தோல்விகளை வெற்றிகரமாக்க முடியும்
Monday 7 May 2018
உதிர்ந்த இறகும் உயர்வடையும்
பறக்கும் பறவைக்கு
இறக்கை பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் ஓர் இறகு
தரையில் விழுந்தது
பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
விழுந்த இறகு விரும்பினாலும்
பறவையின் இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை
விழுந்த இறகு மண்ணில்
செரித்து மறித்துப் போகவில்லை
Sunday 6 May 2018
நீட் தேர்வு மையத்தில்
சோதனைகள்
பெண்பிள்ளைகள் காட்சிகள்
வேதனை
இனி றோபோக்கள்தான் தேர்வு எழுத வேண்டும்
நீட் தேர்வு நடத்துறாங்க
சோதனை செய்றாங்க
பெண் பிள்ளைகள் படும் அவலங்கள்
இப்படி ஒரு கேவலமான தேர்வு எழுதுவதற்கு முன்பே சோதனைகள்
உலகம் காணாத கண்டுபிடிப்பு
பெண்கள் முன்னேற்றத்தை தடுக்கும்
பெண் பிள்ளைகள் மருத்துவராக வருவதற்கு முன்பே
வெட்கத்தை அழித்தொழிக்கும் முயற்சி
வெட்கக்கேடு
Wednesday 2 May 2018
Saturday 28 April 2018
ஏன் இந்த கோபம்!
அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்
இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்
இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !
நான் இருக்க நீங்கள் போவதா !
நான் விதவை என்ற பட்டத்தை சுமந்து நிற்பதா !
நான் உங்களை மடிமேல் சுமப்பதில் சுகம்
நான் விதவையான வாழ்வை விரும்பவில்லை.
Friday 27 April 2018
பேத்தி நபீளா தீனியாத் மக்தப் மதரசா பரிசளிப்பு நிகழ்வில்
அன்புடன்
வெற்றி என்ன?
1 வருட வயதில் ... * வெற்றி. *
நீங்கள் ஆதரவு இல்லாமல் நடக்க முடியும்
* 4 வயதில் ... * வெற்றி. *
நீங்கள் உங்கள் உடையை சிறுநீர் கழிப்பதில்லை,
* 8 வயதில் ... * வெற்றி .. *
வீட்டிற்கு திரும்பும் வழியை அறிய
* 12 வயதில், * * வெற்றி .. *
நண்பர்கள் இருக்க வேண்டும்.
* 18 வயதில், * * வெற்றி. *
ஒரு ஓட்டுநர் உரிமம் பெற
வாழ்க்கை
தாயும் தந்தையும் தவிர, நல்வழியில் நடத்துவதற்கு யாரும் பொறுப்பு இல்லை.
நன்மையுணர்வோர், அதை புனிதப்படுத்த வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும், மேலும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு நபர் நல்லது செய்தால், அவர் உண்மையாக இருப்பார் என்று அர்த்தமல்ல.
இந்த உலகில் இருந்தவை எதுவும் நம்மை தொடர்ந்து வருவதில்லை
இது புரியும்போது, நம்மை சுற்றியுள்ளவர்கள் இனிமேல் நமக்கு விருப்பமில்லையென்றாலும் அல்லது நாம் விரும்பியதை இழந்தபோதும் வாழ்க்கையில் நாம் எளிதாகப் போகலாம்.
Monday 23 April 2018
தாவாவும் தப்லிக்கும் !
தாவா என்றால் அறிவித்தல் தப்லிக் என்பது பரப்புதல் அதாவது இஸ்லாமிய வழிபடும் முறைகளும் மற்றும் அதன் கொள்கைகளையும் மக்களுக்கு ஏற்றி வைத்தல் என்பதாகும் . இதனை கையாளும் முறைப்பற்றி முஸ்லிம்களிடையே பல கருத்து வேறுபாடு உள்ளது . அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை .இங்கு தெரிந்த சில விளக்கம் தர விருப்பம். ஆண்டவன்தான் அதன் உண்மைநிலையை அறிவான் .
“தாவத்”- என்றால் அழைப்புப் பணியைச் செய்தல் ஆகும் . தாவத் என்பது தாவுதலாகாது .அதாவது மத மாற்றத்திற்கு செயல் படுவதாக கருதுவது மடமை, இஸ்லாம் சொல்லியபடி இறைவனை தொழும் மற்றும் அதன் நற்காரியங்களில் மற்றவர்களையும் ஈடுபட தங்கள் வசம் அவர்களயும் இணைந்துக் கொள்ளும்படி மக்களை மார்க்க வழியில்அழைப்பதுதான். இந்த தாவாவின் சிறப்பாகும் .இது நபிமார்களும் அவர்களது தோழர்களும் மற்றும் அவர்கள் வழி வந்தவர்களும் செய்த சேவையாக கருதப்படுகின்றது . முஸ்லிம் மக்களில் சிலர் இந்த தாவத் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர் , அவர்களில் மிகவும் படித்தவர்களும்,செல்வந்தர்களும் அடங்குவர் .
கவனியுங்கள்
யாரும் என்னை நினைக்கவில்லையாதலால்
ஏன் என்னை குற்றம் சாட்டுகிறார்கள்?
நான் வலியை மறைக்க சிரிக்கிறேன்
என் சிரிப்பு சத்தமாக இருக்கிறது, ஆனால் கேட்க முடியாது
மின்சாரம் கிடைக்காததால் அலுவலகம் இயங்கவில்லை
வெளிக்காற்று வீசும்போது, நான் தூங்குகிறேன்
ஏன் என்னை குற்றம் சாட்டுகிறார்கள்?
சாப்பிடுகிறேன் ஆனால் என் வயிறு நிரம்பியதில்லை
என்னைச் சுற்றியுள்ள உலகம் "ஆஹா!"
நான் "எப்படி?" அப்படி "ஆஹா!" என்றில்லை
Wednesday 18 April 2018
அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.
மின்சாரம் சொல்கின்றது .
ஃபர் துணியை அம்பர் மீது தேய்ப்பதைக் கொண்டு இரண்டுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நான் (மின்சாரம்) உண்டாவதாக பண்டைய கிரேக்கர்கள் கண்டுபிடித்ததாக என் (மின்சார) வரலாறு சொல்கின்றது .
பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்கள் எனது தந்தை என்றும் சொல்வார்கள்.
நான் உருவானதின் மாற்றங்களும் வினோதம்தான்.
ஆனால் நான் தமிழ்நாட்டில் படும் அவதியை யாரிடம் சொல்வது . நான் மலடியாம் , உரு முறையாக தங்காமல் கலைந்து விடுகின்றதாம் .நான் என்ன செய்வது !
என் கணவன் அரசு என்னை சரியாக கவணிப்பதில்லை.அவருக்கு பல வேலை. பாவம் அவர்! ஏழை, எளியமக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு,
Tuesday 17 April 2018
பயணம் சென்றதில் பெற்ற அனுபவங்கள்
பயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு மனதில் ஆழமாக பதியும்.
ஒருவர் பயணம் போகும் பொழுது ..
அவரை வாழ்த்தி அனுப்புகின்றோம்
அவரிடம் பயணத்தில் உள்ள சிலருக்கு 'சலாம்' வாழ்த்துகள்
சொல்லச் சொல்கின்றோம்
Monday 16 April 2018
Monday 9 April 2018
செல்வத்தைவிட மேலானது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
இறைவனை நேசித்து அவனை நேசிப்பவருக்கு
இறைவனது அருள் பெற்றவருக்கு மன அமைதி கிடைக்கும்
செல்வம் தீங்கிழைக்காது, அதை சரியான முறையில் பயன்படுத்துவதால்
Sunday 8 April 2018
ஸல்லல்லாஹ் பாவா
சல்லல்லா பாவாவும்(தலையில் பேட்டா) மர்ஹூம் நாஜிர் N.P.முஹம்மது இப்ராஹீம் ஹஜ்ரத் அவர்களும் தலையில் வெள்ளை தொப்பி )
***********************
ஸல்லல்லாஹ் பாவா பற்றித் தெரிந்த விவரங்கள் நிறையவே உள்ளன .ஆனால் அவர்கள் பிறந்தது வளர்ந்தது அவர்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாது
நான் அறிந்த வரை சொல்கின்றேன்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது அவர்களை பெரியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் நேசிப்பார்கள் .அவர்கள் குழந்தைகளை ஸல்லல்லாஹ் ஓதச் சொல்வார்கள் அவரது கையில் ஒரு உண்டியும் பையும் இருக்கும் .ஓதும் குழதைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்கள் .அந்த சிறிய மிட்டாய்க்கு ஸல்லல்லாஹ் பாவா மிட்டாய் என்றே பெயர் வந்து விட்டது
அவர்கள் உண்டியில் சேர்ந்த பணத்தை வைத்து சீர்காழி அருகில் உள்ள புத்தூரில் பள்ளிவாசல் கட்டி உள்ளார்கள்
அனைவரிடத்திலும் மிகவும் பாசம் அதிகம் ஆனால் தவறைக் காண கண்டிப்பாக இருப்பார்கள்
Tuesday 3 April 2018
Sunday 1 April 2018
பாரிஸ் பயணம் - Paris Trip
"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." - Kahlil Gibran quotes
"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu
"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca
"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni
You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn
The pleasant trip to Paris
Saturday 31 March 2018
இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை! இமாம் பசந்த் மாம்பழம்
இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை!
இமாம் பசந்த் மாம்பழம்
மாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்
மாம்பழத்தில் பல வகை உண்டு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.
இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும்
அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வந்து விடும்
மாம்பழத்தில் இனிப்பும் அதிகமாக இருப்பதால்
மாம்பழத்தை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வார்கள்
மயிலாடுதுறை பாதிரியார் ஒரு புது வகை மாம்பழத்தை உருவாக்கினார்
பெண்கள் அன்பையும் ஆதரவையும் மிகவும் விரும்புவார்கள் .
நாட்டில் உள்ள பல மக்களிடமிருந்து பல செய்திகளை ;தொலைக்காட்சி ஊடகங்கள் . மூலம் கிடைப்பதில் பெருமிதம் அடைகிறார்கள், அவர்களை ஊடகங்கள் ஊக்கமளிக்கின்றனர்,
ஊடகங்கள் வழியே அறிவைப்பெறுவதுடன் அதன் வழியே கற்றவர்கள் சிலர் பொருள் ஈட்டவும்
செய்கின்றனர் .அதில் மிகச் சிலர் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர் .
ஊக்கமளிக்கும் அளவுக்கு ஊடகங்களில் பங்கு பெறும் பெண்களிடம் இருந்து நிறைய செய்திகளைப் பெறமுடிகின்றன . அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று சிலர் தம் மகள்களுக்கு சொல்லும் அளவிற்கு சென்றுவிடுவார்கள்.
Thursday 29 March 2018
நல்லவை நாடி அல்லவை ஒதுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.
தவறான தனி மனிதரின் ஆய்வு தகாதது
இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி (prophet) எனும் நபர் மீதும் .பிறப்பின் மீதும் ,குடும்பத்தின் மீதும்
தரக் குறைவான விமர்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பப்பட்டதை சரித்திரம் கண்டிருக்கின்றது
அதனால் இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசிகளின் வாக்கோ அல்லது அவர்களது மதிப்போ கெட்டுவிடுவதில்லை
நம்முடன் இருப்போர் ஒருவருக்கொருவர் சண்டைப் பொண்டுக்கொண்டிருக்க அடுத்தவர் பற்றியே நாம் பேசி கொண்டிருக்கின்றோம்
Tuesday 27 March 2018
பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!
அச்சம் ,மடம், நாணம் ,பயிர்ப்பு இவை பெண்களுக்கு மட்டும் தேவையா!
தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப் படுகின்றது. அனைத்துக்கும் மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது . ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்
இருப்பும் இறப்பும்
இறந்தவருக்கு வந்திருப்பவர்கள் தெரியாது
பட்டாமணியார் இறந்தால் பத்து பேர் வருவார்கள்
பட்டாமணியார் இருக்க அவர் மனைவி இறந்தால் ஆயிரம் பேர்கள் வருவார்கள்
இறந்துவிட்டால் தவறுகளையோ பாவங்களையோ மன்னித்து விடுவீர்கள்.
இறந்தவருக்கு ஒருபோதும் அது தெரியாது.
இருக்கும்போது மன்னித்து விடுவதில்லை
ஆத்மாவின் காதல்
மையை ஊற்றிய கருத்த நிழல்களின்
பின்னணியைப் ஒத்த முடிகளின் கோப்புகள்
ஒளி வீசும் கண்கள்
குளர்ந்த பார்வை
குருதி நிறமுடைய மேனி
எளிமையின் பிரதிபலிப்பு,
இதயங்களை எரித்தல்
ஆன்மாக்களின் ஒளி
கவர்ச்சியூட்டும் அழகு,
மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது
(ஹாங்காங்
21.10. 1970.
நேரம் பகல் 12.30
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு தம்பி முகம்மது அலி எழுதுவது.
அஸ்ஸலாமு அலைக்கும் . இறைவன் அருளால் நலமே சைகோனிலிருந்து சனி மாலை ஐந்து மணிக்கு கேத்தே பசிபிக் விமானத்தில் பறப்பட்டு ஒன்பது மணிக்கு ஹாங்காங் வந்து சேர்ந்தேன். விமானப் பயணம் மிகவும் மகிழச்சியைத் தரக் கூ டியது என்பது உண்மையாயினும் அது பயங்கரமானது என்பதனையும் இப் பிரயாணத்தில் அனுபவத்தில் அறிந்துக் கொண்டேன்
Sunday 25 March 2018
மல்லிகை பூக்க மணம் வீசும்
வெற்றியெல்லாம் வெற்றி அல்ல
ஆனால் அதுதான்,
அது அப்படித்தான்.
வெற்றிக்கு தேவை
விருப்பம்
முயற்சி
வெற்றி
தொடரும் கேள்விகள் !
வெற்றி முழுமையானதா ?
வெற்றி பகுதியானதா ?
வெற்றி முறைப்படி வந்ததா ?
வெற்றி தவறான முறையில் வந்ததா ?
வெற்றி தவறான காரியத்திற்கா ?
வெற்றி நன்மையான காரியத்திற்கா ?
பிரயாணத்தில் பிரியமாயிருங்கள்.
உங்கள் பயணத்தின்போது அழகிய தோட்டங்கள் மற்றும் அழகான பச்சை புல்வெளிகளை நீங்கள் காணலாம். வீட்டை விட்டு வெளியேறி, சுற்றியுள்ளவற்றை சிந்தித்துப் பாருங்கள். மலைகளை , பள்ளத்தாக்குகள் தாண்டி, இனிப்பு, தூய நீரூற்று தண்ணீர் குடிக்கவும். அதனால்தான்,ஆன்மா, பறக்கிறதைப் போன்ற பறவையைப் போலவும், வானத்தில் நீந்திக்கொண்டிருக்கும்
உங்கள் வீட்டிலிருந்து வெளியேறி, உங்கள் கண்களில் இருந்து கறுப்புக் கயிறுகளை அகற்றிவிட்டு, அல்லாஹ்வின் விசாலமான நிலங்களைக் கடந்து, இறைவனை நினைவு கூர்ந்து அவனை மகிமைப்படுத்துங்கள்.
Friday 23 March 2018
இதயத்தை கொள்ளை கொண்டாய்
நீ தான் நம் மக்களை பாசத்தில் கொள்ளை கொண்டாய்
நீ தான் என் தவறை காணாமல் கடந்து போகின்றாய்
நான் தான் உன்னை அறிந்தும் கடிந்து பேசுகின்றேன்
நான் எங்கேயோ போக இருக்க
நீ உனக்காக என்னை ஓரடத்தில் நிறுத்தி விட்டாய்
வீட்டோடு மாப்பிள்ளை
கடல் ஓரப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களிடம் (அதாவது – மரைக்காயர்களிடம்) கணவன் தனது மனைவி வீட்டாருடன் சென்று விடுவதால், மாமனார் உறவுகளின் உதவி அதிகம் கிடைக்கும். திருமணத்தின் போதே பெண்ணுக்கு வேண்டிய அளவு (வீடு முதற்கொண்டு) வசதி செய்து தந்து விடுவார்கள் .
ஆலோசனை என்பது ஒரு இயற்கை செயல்முறை.
ஒரு ஆலோசகராக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் நம்பகூடிய ஒரு நபராக தயார்படுத்தியிருந்தால், மக்கள் தங்கள் மனதில் உள்ள பாரத்தை , இறங்கவும் செய்வதற்கு வர விரும்புவார்கள்.
ஆலோசனை கேட்பவர்கள். பிரச்சினைகள் சொல்லிக்கொண்டிருப்பதால் அவர்களது தாக்கத்தை மற்றும் அவரது தகுதியை குறைத்து மதிப்பிடாமல். கவனித்துப் பேசுதல் மற்றும் சரியான பதிலளிப்பது முறையானதாகும் ,
குழப்பமான மனதோடு வந்த நபரை அவரது சங்கடத்தை அடையாளம் கண்டு, அவரது விருப்பங்களை ஆராய்ந்து, புத்துணர்ச்சியை தரும்படி , பயனுள்ள ஆலோசனைகள் கொடுத்து உதவுவது உயர்வு .
உரையாடலின் மிகச் சிறிய விவரங்களை நினைவில் வைத்து பேசுதல் பொறுப்பாகும்.
தோல்வி
தோல்வியானதால் இன்னும் வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பது
சாதிக்கவில்லை என்பது ஏதாவது கற்று கொண்டிருப்பது
தோற்றதால் முட்டாள் அல்ல , அதுவே நிறைய நம்பிக்கை தருகின்றது .
தோற்றதால் ஏமாற்றப்படவில்லை , இன்னும் முயற்சி செய்ய உந்தப்படுகின்ற நிலையாகின்றது .
Tuesday 20 March 2018
உலகமெல்லாம் பறந்து பறந்து சுற்றி வந்தேன்
ஜப்பானில் ஓரிடம் போக ஒருவரிடம் வழி கேட்டேன் .அவர் நான் அங்குதான் போகின்றேன் வாருங்கள் என்றார் .
நீங்கள் எந்த நாடு
இந்தியா
இந்தியாவில் எங்கே
தமிழ்நாடு
இதுவரை ஆங்கிலத்தில் பேசியது
நானும் தமிழ்நாடு தான் என்பதோடு உரையாடல் தமிழில் தொடர்ந்தது
Monday 19 March 2018
படி படி என்ற ஓசைகள் ...
படிப்பதெல்லாம் பெருமைக்காகவும் தேர்வில் மனனம் செய்ததை வாந்தி செய்வதற்க்காக உள்ளது
நான் படிக்கும் காலத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதோடு சரி
படித்தாயா என்று சொல்வதில்லை
விடிகாலையில் எழுப்பி விடுவார்கள் பள்ளிக்கு தொழச் செல்ல
அது மழைக்காலமாக அல்லது குளிர் காலமாக இருந்தாலும்
அம்மாவுக்கு உள்ள பாசத்தால் குளிர் காலத்திலும் மழைக்காலத்திலும்
விடிகாலையில் எழுப்பாமல் இருந்தாலும் அத்தா விடாது
வளர்ந்த பின் பள்ளிக்கூட படிப்பை முடிக்கும் முன்பே அம்மாவும் அத்தாவும் இறந்துவிட்டதால்
Saturday 17 March 2018
தோல்வியால் துவளவில்லை
இன்னும் சாதிக்கவில்லை சாதிக்க கற்றுக் கொண்டிருக்கின்றேன்
தோல்வி முட்டாளாக்கவில்லை, அது நிறைய நம்பிக்கையை உருவாக்குகின்றது .
தோல்வி அடைந்தால் ஏமாற்றப்பட்டிருப்பதாக அர்த்தமல்ல, முயற்சி செய்ய தயாராக இருப்பதாக திட்டம்
தோல்வியால் வேறு வழியில்லை யெனபதில்லை , வேறு வழியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஊக்கம் தருகின்றது .
தோல்வியால் தாழ்ந்துவிடவில்லை , உயர்வதற்கு உந்துதல் சக்தியை தருகின்றது
Thursday 15 March 2018
உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
Thursday 8 March 2018
கதிர் வீசிடும் காலை உன் ஆணை அல்லாஹ்
கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
நீயே அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்
(அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்))
பாடல் கவிதை கவிஞர் அன்புடன் புகாரி
பாடல் பாடியவர் தீனிசைத் தென்றல்,
தேரிழந்தூர் தாஜுதீன்
தயாரிப்பு Mohamed Ali இல்லத்தில்
(முழு பாடல்கள் ஆல்பமாக மற்ற அன்புடன் புகாரி கவிதைகளுடன் விரைவில் இறைவன் நாடினால் வரும் தங்கள் வாழ்த்துகள் மற்றும் துவாவுடன்
அன்புடன் முகம்மது அலி ,அன்புடன் புகாரி
----------------------------------
Sunday 4 March 2018
புரிந்து கொண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்
வேண்டாத நாட்டோடு கூட்டமைத்தல் பாதகம்தான்
நமக்கு உதவி செய்வதற்காக பெரிய சாத்தானிடம் சென்றால்
நமக்கு நாமே நரகத்திற்கு வழி அமைத்து சென்றதாகிவிடும்
சிரிப்பு எப்போதும் கண்ணீரைப் பின்தொடர்கிறது
புரிந்து கொண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்
--------------
உத்தம நட்பால் உயர்வு பெற்றதால்
தண்ணீர் பாய்கிறது வாழ்க்கை பூக்களில்
மகிழ்வால் கண்ணீர் வழிந்திடுகின்றது
இறைவனது அருட்பெரும் கருணையால்
Saturday 3 March 2018
ஷாம் நாடு (ஸிரியா)"Syria (al-Sham)
ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்தது
நபிகள் நாயகம் இருமுறை ஷாம் (ஸிரியா)நாட்டுக்கு வியாபார நிமித்தமாக சென்றுள்ளனர்
'ரோமர்கள் ஷாம் நாட்டு அரபியர்களுக்கு கஸ்ஸானியர்களை அரசர்களாக நியமித்தனர். இவர்களது தலைநகரமாக புஸ்ரா விளங்கியது. ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு யர்மூக் போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக் கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு அடிபணிந்தார்.'
தற்கொலை செய்வது குற்றம் .
வேதனையோடு உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் மனிதனை இறக்க உணர்வுடன் எந்த மனிதனின் உயிரையும் எடுக்க(mercy killing'- the killing of a patient suffering from an incurable and painful disease.) யாருக்கும் உரிமை இல்லையென்று வளர்ந்த சமுதாயமென்று பெயரளவிற்கு சொல்லிக்கொள்ளும் நாடுகள் சொல்கின்றன
போரில் ஈடுபடும்போது இயற்க்கை வளங்களை ,பெண்களை ,அப்பாவி மக்களையும் ,குழந்தைகளையும் பாதிக்கக் கூடாது .இஸ்லாம் இதனை சொல்கின்றது .அனைத்து நாடுகளும் அதனையே சொல்கின்றன
இதை மீறுவோர் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று அறிவால் மற்றும் வளத்தால் வளர்ந்த நாடுகளே வழிகாட்டியாக சொல்கின்றன
ஆனால் இப்பொழுது நடப்பது மாற்றமாக உள்ளது
Friday 23 February 2018
ஒழுக்கமே உயர்ந்த படிப்பு
தேர்வு /பரீட்சை /என்று படிக்கும்போதே வடிகட்டினால்
கேரளாவில் அந்த காலத்திலேயே படித்தவர்கள் அதிக விழுக்காடு வந்திருக்கமாட்டார்கள் (தேர்வு வைத்தாலும் அதே வகுப்பில் தங்க வைப்பதில்லை மேல் வகுப்புக்கு கடத்தி விடுவார்கள் /அப்படி நான் கேள்விப்பட்டது )
படித்து பட்டம்பெற்ற பின் அவர்களாகவே தன்னை தயார்படுத்திக் கொள்வார்கள்
படிக்காத குடும்பத்தில் வந்த மாணவர்கள்
வசதியற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
ஒழுக்கமே உயர்ந்த படிப்பு .கல்வியில் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
Thursday 22 February 2018
யாரும் என்னை விட்டு விலகுவதில்லை
யாரும் என் அடையாளத்தை பிடுங்கவுமில்லை
அது என்னுடையது.
அது இந்தியாவின் தமிழ்நாடு நான்.
என் மலை மூலம்
என் நிலம் .மூலம்
என் மீது பாயும் ஆறுகள்
மிகச்சிறந்த, அற்புதமான
உயர்ந்த அருட்கொடைகள்
அதிகாலை இறைவனை வாழ்த்துவேன்
அருட்கொடையான அந்த பாயும் ஆறுகள்
என் வளமான பள்ளத்தாக்குகள் மீது ஜொலித்து
பாய்ந்து பள்ளங்களை நிரப்பி பாலைவனத்தை
சோலைவனமாக்கி வாழவின தொடற்சியைத் .தருவதால்
அது என் ரத்த ஓட்டம்.
அது என் மீதே ஓடுவதால்
அதனை தடுப்பதற்கு
யாருக்கும் உரிமையில்லை
Monday 19 February 2018
விருப்பங்கள் கனவு காண வைக்கின்றது ,
முயற்சி சிறிதானதால் கனவுகள் பொய்யாகின்றது
கவனக்குறைவு தடையானது
தேவையில்லாத காரியத்திற்காக அதிக நேரத்தை செலவிடுவதில் முனைப்பு
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இண்டர்நெட்டில் உலாவுதல்
பயனுள்ள ஒன்றை செய்துகொள்ளக்கூடிய நேரம் நேரத்தை எடுத்துக்கொள்வில்லை .
ஓய்வு நேரத்தில் உயர்வாக சிந்திக்கவில்லை
சிந்திப்பதோ சிரமமான காலத்தில்
விருப்பங்கள் நிறைவேற்ற முடியாதநிலை
வேணுகோபால் சர்மா அவர்கள் வரைந்து கொடுத்த எங்கள் தந்தை ஹாஜி சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்கள் படம்
திருவள்ளுவர் படம் வரைந்த வேணு கோபால் சர்மா அவர்கள் மயிலாடுதுறை மதீனா லாட்கில் தங்கி இருந்தார். அவர் எங்கள் சகோதரர் அப்துல் ஹகீம் அவர்களுக்கு நண்பர். சகோதரர் அப்துல் ஹகீம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சர்மா அவர்கள் வரைந்து கொடுத்த எங்கள் தந்தை
ஹாஜி சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்கள்
படம் .
Hajee S.E.A Abdul Kader SAhib
சில காலம் கடந்துதான் திரு.வேணுகோபால் சர்மா அவர்கள், திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார். அந்த வள்ளுவர் படம் பல தலைவர்கள் முன்பு சென்னையில் பெரிய விழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நான் அப்பொழுது சென்னை லயோலா கல்லூயில் படித்துக் கொண்டிருந்தபோது அந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.என்னுடன் நண்பர் முரசொலி செல்வம் அவர்களும் வந்திருந்தார்.
Sunday 18 February 2018
துளசேந்திரபுரம் உருவாகுதல். துளசேந்திரபுரம் பள்ளிவாசல்
கொள்ளிடத்தைச் சார்ந்த துளசேந்திரபுரம் சிறிய ஊர். அங்குள்ள முஸ்லிம்களுக்குக் குடியிருப்பு வசதிகளோ,
இறைவணக்கதிற்கு பள்ளிவாசலோ, சிறுவர் சிறுமியர்க்கு அறிவுக்கண் திறக்கச் செய்யும் ஓர் அரபி மதரஸாவோ இல்லாமலிருந்தன. அந்த ஊர் மக்கள் தங்களுக்கிருந்த அப்பெருங் குறைகளை
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களிடம் வந்து முறையிட்டனர்.
இவ்வளவு குறைகளையறிந்தும் ஹாஜியார் வாளாவிருப்பார்களா?
எவர்கள் விசுவாசம் கொண்டு கருமங்களை செய்கிறார்களோ, அவர்களை இறைவன் தன்னுடைய அருகில் புகுத்துவான். இதுவே தெளிவான வெற்றியாகும் ஜாஸியா(45:49)என்பது குர்ஆனின் மணிமொழி.
Wednesday 7 February 2018
கவர்ச்சியூட்டும் அழகு,
இனிமையான புன்னகை.
வெளிப்படையான வாழ்க்கை
நினைவூட்டுவதாக இருக்கும்
இனிமையான மெல்லிசை
ஒரு இடைவெளி தரும்
ஒத்திசைக்கப்பட்ட முத்தம்
காதல் இணக்கம்.
Tuesday 6 February 2018
போராட்டமா ?
வேண்டவே வேண்டாம் !
நிம்மதி போய்விடும்
பிரச்சனைகள் தானாக வந்தாலும் எதிர்கொள்வது எப்படி ?
அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம்
ஒரு நிமிடம் சிந்திக்கலாம்
குழந்தை போராடியே வலிமை பெற்று
நடக்க கற்று கொள்கின்றது
குழந்தை வார்த்தைகளாலும் ஒலிகளாலும் போராடியே
பேசக் கற்று கொள்கின்றது
ஒருவர் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளில் போராடவில்லை என்றால்
அவர்கள் ஒருபோதும் மனதை கூர்மையாக்க முடியாது
பாத்திரத்தை சுத்தப்படுத்த மேம்படுத்த போராடினால்தான்
பாத்திரங்களை சுத்திகரிக்க முடியும்
உடற்பயிற்சி செய்வதால்
உடல் வலுவாக வளர முடியும்
அனைவரும் ஏதோ ஒரு வழியில் ஒரு காரணத்திற்க்காக
சிரமம் பாராமல் போராடியே வெற்றி அடைய முடிகின்றது
அகங்காரம் உடைக்கப்பட வேண்டும்
அதற்க்கு விழிப்புடன் இருத்தல் அவசியம்
Monday 5 February 2018
அமைதி
அவை சொற்களிலும் விட பெரியது ....
அந்த அமைதி சில நேரங்களில்
என்னை காயப்படுத்துகிறது ...
உமது மெளனம் காதில் ஊதுகின்றது
இது நமக்கிடையே ஒரு பரந்த இடைவெளியை உருவாக்கிறது
உமது மௌனம் அச்சப்படுததுகின்றது
உமது மௌனம் நீ செயல்படுத்தாததை காட்டிவிடுகின்றது
உரத்த குரலில் தெளிவாக
உமது அமைதியை சிதறடித்து . கண்ணீர் ...விட்டு
உமது பெயரிடப்படாத அச்சங்களை உறுதிப்படுத்து ...
யாரை நீ காயப்படுத்தினாய்
யாரால் நீ காயப்படுத்தப்பட்டாய்
வேதனைகள் உனக்கா! எனக்கா அல்லது மக்களுக்கா !!
Sunday 4 February 2018
DIVIDE AND RULE
மன்னர் ஆட்சிகள் முடிவடைந்தன
மன்னர் ஆட்சிகளின் வடுக்கள் நிழல்கள் தொடர்கின்றன
ஏன் நமக்குள் பிரித்து வைக்கும் தன்மை
இன்னும் ஏன் பிரித்தாளும் சூழ்ச்சி மாறவில்லை
நாம் அவர்களிடம் இடர்படுவதை அறிகின்றோம்
அவர்கள் நம்மை பார்க்க வில்லை, அவர்கள் நம்மை பார்க்க விரும்பவில்லையா ?.
ஒரு சுவர் வேண்டுமென்றே அவர்களுக்கு பின்னால் மற்றும் நமக்கு முன் வைக்கப்பட்டது.
உனக்கு என் இதயத்தில் வலுவான ஒரு இடம் கிடைத்தது,
உன்னால் உணர்வுகளை தெளிவானதாக மற்றும் வலுவானதாக ஆக்க முடியும்
உன் தொடர்பு உறுதியானதாக உள்ளது;
உன்னைப் பற்றி நான் யோசிப்பதை நிறுத்திவிட முடியாது,
நீ என வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக இருக்கிறாய்,
நீ தேன் ஆறுகள் பாய்ச்சும் உணர்வுகளை ஏற்படுத்துகின்றாய் ,
நீ என் இதயதில் ஒரு அழகான வாசனையை உருக வைக்கிறாய்.
ஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில் ...!
நேர்த்தியான அச்சிட்டு ஒரு புத்தகம் இருக்கிறது
என் பெயர் தெரிய , இங்கே சில குறிப்புகள் உள்ளன...
அழகிய அட்டையில் மற்றும் காட்சிக்கு இனிமையாய் நன்றாக பிணைக்கப்பட்டுள்ளது
ஆனால் முஸ்லிம்கள் இதயத்தில் நான் அரிதாக காணப்படுவன் நான்!
ஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில்
நான் வரிசைப் படுத்தப்பட்டு அழகாக வைக்கப்பட்டு இருக்கிறேன்
மரியாதையுடன் அதிகமாக முத்தம் நிறைய கிடைக்கப் பெறுகின்றேன்
ஆனால் எனது முக்கியத்தினை அவர்கள் எப்போதும் இழந்து விடுவதனை பார்கின்றேன்!
Friday 2 February 2018
இசை ஒரு சிறந்த உருவாக்கம்
இசை ஒரு சிறந்த உருவாக்கம்
இடி ,மழையின் சாரலால் உருவாகும் ஒலி.சோலைகளில் காற்றின் ஊடுருவதால் உருவாகும் ஒலி இவைபோன்ற கணக்கிலடங்கா ஒலிகளும் இசைதான்
ஒவ்வொரு ஒலி தொனியில் மற்றும் ரிதம் அமைக்க எல்லாம் சக்தி வாய்ந்த மற்றும் மிக அழகான படைப்பு ஒன்றாகும்.
இசை அல்லது இறைவனின் படைப்புகள் போன்ற பாடல், இப்போது நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது,
சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படுவது அல்லது தவறாகவும் தவறாக பயன்படுத்தப் படலாம்
Wednesday 17 January 2018
குர்ஆன், காலவரையின்றி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கூட மிக முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம். வேத நூல்
குர்ஆன், காலவரையின்றி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கூட மிக முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம். வேத நூல்
குர்ஆன், காலவரையின்றி
முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கூட மிக முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம். வேத நூல்
இஸ்லாம் அனைவராலும் எக்காலமும் விசுவாசத்திற்கும் நல்லினக்கதிர்க்கும் இணக்கமான ஒன்றாகும். இஸ்லாம் அறிவார்த்தமான நம்பிக்கையுடன்
கூடிய விசுவாசத்தை
வரவேற்கிறது,
இஸ்லாம் பற்றி அறிந்து குர்ஆன் கற்றறிந்து நபியின் வாழ்வினை கவனித்து அதனால் ஏற்ப்பட்ட பிரதிபலிப்பு
மற்றும் சிந்தனை ஆகியவற்றிலிருந்து இஸ்லாம் வளர்ந்து வருகிறது,
இயற்கையோடு தொடங்கி, நம்மைச் சுற்றிலும் என்ன இருக்கிறது. என்பதையும் காணும்போது மேற்கத்தியர்களிடையே ஒரு மாற்றத்தை உருவாக்குகின்றது விஞ்ஞான ஆய்விற்கும் குர்ஆன் ஒரு உந்துதலாககவும் ஒரு கருவியாகவும்
பயன்தரக்கூடியதாக உள்ளது
பயனுள்ள அறிவை தருவதற்கும் அதனை விரிவுபடுத்துவதற்கும் குர்ஆன் கொடுக்கும் தத்துவங்கள் இஸ்லாமிய நாகரிகத்திற்கு
உதவியது. இதன் விளைவாக, குர்ஆன் இருண்ட காலங்களில் ஐரோப்பாவை மறுமதிப்பீடு
செய்து மறுமலர்ச்சிக்கு
அடித்தளத்தை அமைத்தது.
புனிதமான மற்றும் மதச்சார்பற்ற தன்மையின் கொள்கையின் காரணமாக இஸ்லாம் அனைவரையும் சிந்திக்க வைத்து வாழ்வினை அமைதியின் அடிப்படைக்கு அடித்தளம் அமைத்து தருகின்றது
இயற்கை விஞ்ஞானம், தத்துவம் மற்றும் சமூக அறிவியல். மற்றும் கலைகளை உருவாக்க இஸ்லாமிய நாகரிக செயல்பாடுகள் அமைய அதன் விளைவாக, ஐரோப்பாவில் அறிவியல் மற்றும் மார்கங்கள் இடையே ஒரு வலிமையான மாற்றங்கள் ஏற்பட்டன
குர்ஆன் ஒரு தேடலை முழுமையாக ஆராய்வதற்கு
ஒரு வழியை வழங்குகிறது. அதே சமயம், அதே காரணங்களுக்காக, விவேகத்தோடும்,
மனத்தாழ்மையோடும், மரியாதையோடும்,
மனசாட்சியோடும் முழுமையாய்ச்
சித்தரிக்கிறது.