Thursday, 31 March 2016

உன் பார்வையில் நான் தெரிவதில்லை

உன் பார்வையில் நான் தெரிவதில்லை
என் பார்வையில் நீ தெரிகின்றாய்

நீ போகும் வழியில் நானும் தொடர்கின்றேன்
நான் போகும் வழியும் நீயும் பார்க்கின்றாய்

வால் வீச்சில் விழாத நான்
வார்த்தை வீச்சில் விழுந்து போனேன்

விழுந்த நான் விழுந்தபடியே கிடக்க
வேறு வழி நோக்கி கவனத்தை திருப்புகின்றாய்

மயங்கியதின் காரணம் கேட்கவில்லை
மயக்கத்தைப் போக்க நற்செயல்கள் செய்யவில்லை

Monday, 28 March 2016

கிடைத்ததை கொடுப்பார் இன்னும் கொடுப்பதில் நாட்டமும் செயலும் கொண்டவர்

அப்பெண் ஒரு புகழ் பெற்ற செல்வந்த தம்பதிகளின் ஒரே பெண் வாரிசு .
அப்பெண் ஒரு இளவரசி போல் இறைபக்தியோடு வளர்க்கப் பட்டவர் .
அப்பெண் ஞானம் பெற்ற பெண்
அமமூதாட்டி தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கண்ணியமாக. மென்மையாக பேசுபதையே தன இயல்பாகக் கொண்டவர்
அமமூதாட்டி இரவு நேரங்களிலும் ஓதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்
அவர் தஹஜ்ஜத்( பின்னிரவுத் தொழுகை)தொழுகையும் விட்டதில்லை
(இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக-குர்ஆன்:17:79.)

Thursday, 17 March 2016

கவலைப்படாதே !


வருத்தம் ஏன் ! மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .

நாம் நம்மைப் பற்றிய எண்ணுவது  ஒருபுறம் இருக்கட்டும்; மற்றவர்களைப் பற்றி சிறிது  யோசித்துப் பார்போம் !

மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என நிம்மதி கொள்.
வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க  பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர்    குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.

Monday, 7 March 2016

பெண்கள் ஏன் ஆண்கள் முன்னால் செல்லாமல் பின்னால் அல்லது பக்கத்தில் நடக்கிறார்கள் !

ஆண்கள் இயற்கையாக பெண்களை விட வேகமாக நடக்கும் சக்தி பெற்றவர்கள். அதில் சில பெண்கள் விதி விலக்கும் உண்டு.
பெண்கள் மரியாதை காரணமாக ஆண்கள் பின்னால் நடந்து செல்வதும் பண்பாடாக கருதுகிறார்கள். அது தாழ்வு மனப்பான்மையால் வந்ததாக கருதுவது தவறு.
ஆண்கள் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் இருக்க வேண்டியதும் இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதனால் ஆண்களுக்கு அந்த பொறுப்பும் உள்ளது.
மனிதன் பெண்ணுக்கு பாதுகாப்பாக வழியமைத்து செல்வதற்கு சூழ்நிலையின் அவசியமான கட்டாய கால நிலை.
ஆண்களின் பார்வை அதிகமாக பெண்கள் மீது இருக்கும் இக்கால நிலையில் பெண்களின் நிலை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
பெண்கள் வெளித் தோற்றத்தில் முக்கியம் கொடுத்து அவர்கள் உடுத்தும் ஆடைகள் பெண்களை கவர்ச்சிப் பொருளாக மாற்றி விட்டது .
அழகை கண்டு ரசிப்பது இயல்பான மனித குணம். ரசிக்கும் குணமாக இருந்து அதுவே சிலருக்கு பாதகமான எண்ணங்களை உருவாக்கி நோக்கத்தை தவறான பாதைக்கும் ஈர்த்துச் செல்கிறது மிகவும் வேதனையாக அமைந்து விடுகின்றது .

Tuesday, 1 March 2016

சேர்க்க முயல்கிறேன்

சுயநலமிகளின் வேகம்
பிரிவுகளின் நோக்கம்

பொதுநலமிகளின் தாக்கம்
ஒற்றுமையின் ஏக்கம்

முறிக்க முயல்கிறாய்
சேர்க்க முயல்கிறேன்

அடங்கா ஆசை
பிளக்காத பாசம்

ஒரு விதை
ஒரு மரம்
பல கிளை
பல பழங்கள்
சுவையில் ஒன்றுதான்
சுவையில் ஒன்று கசக்க
மரத்தையே சாய்த்தால்
பழங்களே மாய்ந்துவிடும்

நாடுவது கிடைக்கும்.ஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்.
இதில் உண்மை இருப்பதும் உண்மை.

இதில் உண்மை உண்டு என்று சொல்வோர் பலர். 

'உண்மை கிடையாது' என்று  சொல்லுமளவுக்கு சிலர்

நம்பிக்கை வைப்பதில் பலருக்கு நகைப்பை கொடுத்தாலும்
அந்த சிலர் அதில் முழு நம்பிக்கையோடு நம்புகின்றனர்.


இப்படி பல உண்மைகள் .

நாடுவது கிடைக்கும்.

பகுத்துணர்ந்து செயல்படுதல் நன்மை தரும் .

கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு .

நீருக்கு நிறமில்லை இதுவும் உண்மை .