Saturday 30 January 2021
Tuesday 26 January 2021
Saturday 23 January 2021
ஆசைமேல் ஆசை
ஆசைமேல் ஆசை கடலோர கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை
பாசமாயிருக்கும் கடலோர மரக்கலராயர் கன்னியரை மணமுடிக்க ஆசை
பிரியமாய் வைத்திடுவார் மரக்கலராயர் மாமனார் வீட்டு உறவினர்
விருந்தோம்பலில் ருசிகரமாய் வயிறுநிறைய வகைவகையாய் தந்திடுவார்
உணவோடும் இருக்க இடமும் சிறப்பாக கிடைத்துவிடும்
மாமன் வீட்டுக்கே கல்யாணம் பண்ணி குடி போயிடலாம்
கல்யாணத்தன்றே கணக்குப்போட்டு தந்துடுவார் பெண்ணோடு குடியிருக்க வீட்டையும், சொத்தையும்
மாமன் சாக வேண்டுமென்றும் சொத்து கிடைக்க வேண்டுமென்று வேண்டியதில்லை
திருமணத்தன்றே பெண்ணோடு உயிலையும் கொடுத்தமையால்
நடு நிசியில் மாப்பிள்ளை களைத்திடாமல் ‘ஜாமப்’ பணியாரமும் கொடுத்திடுவார்
பெண்மக்களை போடி வாடி என அழைக்காமல் மரியாதையாக அழைத்திடுவார்
தெரியாமல் குதிரைவீரர் (இராவுத்தர்) பெண்ணை கட்டிக் கொண்டு குதியாய் குதிக்கின்றேன்
அறியாமல் வந்த என்னை அவர் குடும்பத்தார் ஆட்டிப் படைக்கின்றார்
கடிவாளம் போட்டு கட்டிப் போட்டார்
Friday 22 January 2021
திருமண வாழ்த்து
இறைவனால் உனக்கென சுவனத்தில் உறுதி செய்யப்பட்ட மணமகளை நீ அடைய
உங்கள் பெற்றோர் எடுத்த முயற்சி சிறப்பாக முடிந்தது
இறைவனின் அருளால் நீங்கள் சிறப்பாக பல்லாண்டு வாழ இனி உங்கள் மன ஒற்றுமையே இல்லற வாழ்க்கை நல்லறத்தோடு உங்கள் வாழ்வினை மகிழ்வடையச் செய்யும்
உங்களது திருமணத்தில் உங்களை உற்றார் உறவினர்கள் நல்லோர்கள் வாழ்த்தினார்கள்
அவர்களின் வாழ்த்துகள் சிறப்படைய அனைவருடன் அன்புடன் ஒற்றுமையாய் தொடர் தொடர்புகள் இருக்கச் செய்து வாழ்வினை சிறப்பாக்கிக் கொள்வது உங்கள் நல்மனதின் இருப்பிடமாக இருக்கட்டும்
இறைமறை இதயத்தில் இருக்க
இல்லறமும் நல்லறத்துடன் அமைந்துவிடும்
குறையற்ற வளங்களும்
நிறைவான நலத்துடன்
பல்லாண்டு செழிப்புகள் நிறைய
நன்மக்கள் பெற்றேடுத்து
வளமோடு வாழ்க்கை சிறப்பாகும்
Thursday 21 January 2021
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
யா அல்லாஹ்
உன்னால் தரப்பட்ட இறைவேத வார்த்தைகள் அழகானவை
திருக் குர்ஆனிலுள்ள வரிகள் கவிதை நயம் கொண்டவை
மறைவேதத்ல் சொல்லப்பட்டவை உயர்வானவனை
அதனைப்போல் யாரும் எங்கும் பார்க்கவில்லை
இறை வேதம் பொய்யை பெற்றிருக்கவில்லை
அவை பெற்றிருப்பதெல்லாம் உண்மையன்றி வேறில்லை
அதனில் கண்டபடி காலத்தின் நடப்புகளனைத்தையும் நினைத்தபடி நடத்திச் செல்கின்றாய்
நீயல்லவோ அனைத்து உயர்வுகளையும் பெற்றிருக்கிறாய்