Tuesday 30 November 2021

கலைஞரின் பன்முகத்தன்மைகள்- திரு. சிவா மயிலாடுதுறை (வாஷிங்டன்)

இறைவா. எல்லாம் உன் நாட்டப்படியே நடக்கும்

 

 

                                              அப்துல் ஹக்கீம்

உமது புகழ் காலமெல்லாம் தொடரும்

 

உமது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 

நீங்கள் செய்த சேவைகள் ,மக்கள் தரும்

 

வாழ்த்துகள்

 

உமது நன்மைகளாக உம்மை

 

உமது இறப்புக்கும் பின்னும் தொடரும் .

 

அடுத்த இனத்தவரை தன் உடன்பிறவாத சகோதரராக/சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் மனம் உம்மோடு இருந்தது

 

வரலாறு படைத்த மனிதரில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்

 

நற்செயல்களுக்கு போராடும் குணம் உங்களோடு இருந்தது

 

உம்மை பலர் ஜென்டில்மேன் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பதனை நான் அறிகின்றேன்.

 

எவர் மனதையும் பாதிக்காமல் பேசும் உம் குணமும் செயலும் உயர்வானது .

 

Monday 19 July 2021

அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!







Wednesday 12 May 2021

எம் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

 எம் இனிய

ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

                       *********************** *

இந்த உலகில் எல்லாருக்கும் அருள்பாலிப்பவனும்

 மறுமையில் தன்னை நம்பி, தனக்கு அடிபணிந்து நடந்த அடியார்களுக்கு மேலதிகமாக அன்பு செய்பவனும் ஆன

வல்ல அல்லாஹ்,

தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்,

 இதயத்தில் அன்பையும்,

ஆன்மாவில் மெய்நம்பிக்கையை(ஈமானை)யும்,

சிந்தனையில் ஞானத்தையும்,

செயல்களிலே நன்மைகளையும்

செல்வத்தில் தூயவற்றையும்

வெள்ளமென வெளிப்படுத்துவானாக …

ஆமீன் ….

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே! பெருநாள் வாழ்த்துக்கள்

எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல

அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள்

காட்டிச் சென்ற தியாகத் பெருநாளில் வேண்டுவோம். அனைத்துப் புகழும்

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும்

நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: எம் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: எம் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!:  எம் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!                        *********************** * இந்த உலகில் எல்லாருக்கும் அருள்பாலிப்பவனும்  மறுமைய...

Tuesday 11 May 2021

தாய்

 

உங்கள் பெயர் என்ன? இதற்கு என்ன பதில்?

உங்கள் பெயர் கேட்டால் பல நாடுகளில் நம் பெயருடன் ஆணாக இருந்தால் தகப்பனார் பெயரும் இணைத்து சொல்ல வேண்டும் அதுவே பெண்ணாகவே இருந்தால் கணவன் பெயரை இணைக்க வேண்டும். அனைத்துக்கும் தகப்பனார் பெயர் கேட்காமல் இருக்க மாட்டார்கள். அல்லது இரண்டாவது பெயர் கேட்பார்கள். (Someone's second name is their family name, or the name that comes after their first name and before their family name.)

 

தாய் எங்கே போனால்! அவள் பெறுவதும் வளர்ப்பதும் தான்  பெற்ற குழந்தைக்காக தன்னை அற்பணித்துக் கொள்வதோடு முடிந்து விடுகின்றதா!

குழந்தையை  வளர்க்க தந்தையின் பங்கும் இருக்கலாம் ஆனால் தாயல்லவா ஒன்பது மாதங்கள் சுமந்து நம்மை உருவாக்கினாள்.ஒரு தாய் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். தாய் பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து  அக மகிழ்ந்து ஆனந்தம் அடைவாள்   தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைகின்றது. அதனால் தாயோடு தந்தையும் இணைத்து பெயர் சொல்வதே பொருத்தம்.

 

 “(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

 

 

தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)

 

தாயின்  பெயரை நாம் விடுவது மிகவும் வேதனைக்குரியது. ஏன் அவளது பெயரை யாரும் இணைப்பதில்லை? இந்த சிந்தனை இப்பொழுதும் வரவில்லையே ஏன்?

பெயரில் என்ன இருக்கிறது! என நினைக்க வேண்டாம். ரோஜாவோ, மல்லிகையோ பெயர் சொன்னால்தான் பூவின்  இனம் காண முடியும்.

 

 ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தைஎன்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

 

"தாயின் மடியில் சுவனம் உள்ளது" என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து என்பதோடு இதன் கருத்து முடிந்து விடவில்லை. மாறாக  தாய் தனது பிள்ளைகளை வழிகாட்டும் முறை அவள் பிள்ளைகளை  சுவனம் செல்ல வழி வகுக்கும் என்பதும் அடங்கும். அந்த தாயின் பெயரை நம் பெயரோடு இணைத்துக் கொள்வது நம் கடமை.

Abu Hurairah, may Allah be pleased with him, reported: A person came to Allah's Messenger (may peace be upon him) and said: Who among the people is most deserving my companionship (of a kind treatment from me?) He said: Your mother. He, again, said: Then who (is the next one)? He said: It is your mother (who deserves the best treatment from you). He said: Then who (is the next one)? He (the Holy Prophet) said: It is your mother. He (again) said: Then who? Thereupon he (The Prophet (peace be upon him)) said: It is your father.

 

அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது . அம்மாவின் அன்புதான் மகளின்  அறிவை வளர்க்கும். தாய்  மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும்  சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக  தாயின்   குணமே மகளுக்கும் இருக்கும்.  அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை  என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு  பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.ஆனால் அந்த தாய் நல்லவளாக இல்லையென்றால் அந்த குடும்பமே சீர்கெட்டுவிடும். உன் நண்பனைப் பற்றி சொல் உன்னப் பற்றி  சொல்கின்றேன்

என்பதுபோல் தாயைப்பற்றி சொல் அவள் மகளைப்  பற்றி அறிய முடியும் என்பார்கள். பெண் பார்க்க போகும்போது தாயின் குணங்களை கேட்டு அறிந்துக் கொள்வார்கள். தாயின் வளர்ப்பு முறையும் தாயின் குணமும் பொதுவாக அவள் மகளுக்கு வந்தடைய வாய்ப்பாக உள்ளது.

 

ஒரு  தாய்க்கு தன்  மகளுக்கு செய்யும்  பணி எளிமையாக  இருக்க முடியாது. தாய் மகளை அன்பு காட்டி நேசமாக வளர்ப்பதால்  இருவருக்கும் நட்பு  மனப்பான்மை உயர்ந்து நிற்கும்.இந்த நிலை தாய்க்கும் அவளது மகனுக்கும் இருப்பதில்லை. தாய்க்கு பணிவிடை செய்வதிலும் மகளே உயர்ந்து நிற்கின்றாள். பெண் பிள்ளை இல்லாத தாய் தனது இறுதிக் காலத்தில் படும் அவதி பரிதாபத்திற்குரியது.

 நபி மொழி

 தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

 

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 

 ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்;

முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். அறிவிப்பவர் : அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

மனதில் ஒரு வலி,

 

இப்பொழுது எனது தாய் இறைவனிடத்தில்

இன்னும் நான் ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளை ..

 

காலங்கள் கடந்து விட்டன

நான் சில பிள்ளைகளுக்கு தாய்

தயாகியும் என் தாய் என் இதயத்தில்

நான் என் குழந்தைகளுக்கு கொடுத்த முதல் முத்தம் நினைவிலில்லை

எனக்குத் தெரிந்து என் தாய் எனக்கு கொடுத்த முதல் முத்தம் இன்னும் என் நினைவில்

 

தாயை நினைத்து மனதில் துடிப்பு

என் இதயத்தில் எப்போதும் என் தாய் நினைப்பு

என் தாயை நான் மறக்க முடியுமா !

 

என் நினைவில் எப்போதும் என் தாய்

என் தாயை திரும்ப என்னிடம் கொடு இறைவா என்று கேட்பதில்லை

என் தாயை சுவனத்தில் இருக்கச் செய்து நீ என்னை உன்னிடம் அழைக்கும்போது

என் தாயோடு என்னை இருக்கச் செய்து விடு என்று வேண்டாத நாளில்லை

 

என் தாய் என்னை பாலூட்டி வளர்த்தது போல்

உன் தாய் உன்னை பாசமாய் வளர்க்கின்றாள்

உனக்கென்ன வருத்தம்

 

ஏன் உன் தலையை தரையில் தாழ்தினாய்

என் தாய் என்னை உதைத்தாலும்

என் தாயின் உதை எனக்கு உறுத்தாது

என் தாயினிடமே திரும்ப ஓடி நிற்ப்பேன்

என்னை பாசமாய் வளர்க்கும் உனக்கும்

என் குணம்தானே வரவேண்டும்

 

எழுந்திரு

எனக்காக எழுந்திரு

என்னோடு விளையாட

உன்னை விட்டால்

எனக்கு யார் உள்ளார்

நிமிர்ந்தெழு

உன்னை அறிந்த நெஞ்சே

உன்னை நிமிர்த்தி வைக்கும்

 

நாம்

மரங்கள் போல் வளர்ந்து

செழித்த கிளைகளை விளரவிட்டு

விதைகளை விழச் செய்து

செழுமையான பூங்காவாகி

நாடுவோர்க்கு மகிழ்வைத் தரவேண்டும்

 

முகம்மதது அலி

Mohamed Ali

 

 

தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல்  வேண்டும் .

அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன் குழந்தை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தன பிள்ளை சிறந்து விளங்க ஆசைப்படுவாள் .இதற்கு அடிப்படை தாய் கல்வி கற்றவளாய் இருப்பது இன்றியமையாதாகும் . அம்மாவிடம் அறிவின் முதிர்ச்சி இல்லையெனில் அவள் வளர்க்கும் குழந்தையின் அறிவின் வளர்ச்சிலும் முழுமை  இல்லாமல் போகும் .அறிவின் ஆற்றல் இல்லாத தாய், கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தால்  நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும் . தந்தை பொருள் ஈட்ட வீடு விட்டு நீங்கி நிற்கும் நிலையில்  தாய்தான் தன பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கும் நிலை .அறிவு பெற்ற குழந்தையாக மாற்றும் பொறுப்பு அவளிடமே உள்ள நிலையில் அந்த தாய்மை கொண்ட அம்மாவுக்கு அறிவும் கல்வியும் அவசியம் .பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று. சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய் பாசம் காட்டுவதோடு நில்லாமல் தனது பிள்ளைகள் சிறந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அந்த தாய் பெற்றிருக்கும் கல்விதான் அஸ்திவாரம்,அடித்தளம் .

 

 

கல்வி கற்பது  வேலை வாய்ப்புக்காக  அல்ல. இருட்டை நீக்க ஒளி தேவை அறியாமையினை விரட்ட கல்வி தேவை . இருட்டை நீக்க ஒளி தேவை. இருண்ட அறையில் ஒளி கிடைத்து விட்டது .அந்த அறையின் இருக்கும் அழுக்கை நீக்க செயல்பாடு தேவை .அறிவும் கல்வியும் பெற்றதோடு அதனை நல்ல முறையோடு செயல்படுத்தக் கூடிய முயற்சியும் தேவை.

 

 கல்லூரி  சென்றால் பெண் கெட்டுவிடும் வாய்பு  உள்ளது என்ற எண்ணம் தவறானது . நாம் மறுமலர்ச்சி காலத்தில் உள்ளோம். .ஒரு தவறு ஒட்டு மொத்த தவறு ஆகிவிடாது .மலரை அணிபவள்  பெண் .மலரை சுற்றி மனம் உள்ளது போல் நல்ல கல்வி கொண்ட தாயின் அறிவினை சுற்றி அறிவு  ஒளி வீசும் வாய்ப்புண்டு .

 

 "தாயின் மடியில் சுவனம் உள்ளதுஎன்பது நபி மொழி . அது தாய் குணத்தோடும் அறிவோடும் இருக்கும் நிலையில்தான் அவள் வளர்க்கும் பிள்ளைகளும் சுவனப்  பாதை நோக்கி நடை போடும் .

 

வாழ்வில் இனிய சுமை !

 

 வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. தன் குழந்தையை சுமப்பது மகிழ்வு தந்தாலும் அதைவிட பேரின்பம் தன் பேரக்  குழந்தைகளை  சுமப்பது. அதிலும் மகள் வழி பேரக்  குழந்தைகளை  சுமப்பது மிகவும் மகிழ்வு தரக் கூடியது. இவைகள் சுமைகள் அல்ல .நமக்கு மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள்.   இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும்  நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.

 

 

 "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.

நூல் : புஹாரி

 

 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடுஎன்றார்கள்.

 

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

ஆதாரம்: புகாரி

 

"ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள்.

 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

ஆதாரம் : புகாரி

 

Abu Hurairah (RA) said: A man came to Rasulullah (SAW) and said, "Oh Rasulullah, who of mankind is most entitled to the best of my companionship?". Rasulullah replied, "Your mother". He said: "Then who?" Rasulullah said: "Your mother". He said: "Then who?". Rasulullah said: "Your mother". He said : "Then who?". Rasulullah said : "Your father". ( Bukhari, Muslim )

 

 

திருமணத்திற்கு முன்பும்! திருமணத்திற்கு பின்பும் !

 

திருமணத்திற்கு முன்

 

உன்னை மிகவும் நேசிக்கின்றேன்

உனக்காக எதுவும் செய்யவேன்

உனக்காக உயிரையும் விடுவேன்

உன் மடியில் உயிர் பிரிய விரும்புவேன்.

நமக்குள் கருப்பு சிகப்பு தடையில்லை .

நம் திருமணம் உனது பெற்றோர்கள் விரும்ப நிகழும்

நம் திருமணம் நிகழ பணமோ பொருளோ தடையாகாது இருக்காது

=============

 

திருமணத்திற்குப் பின்

 

உனது செயல் சரியல்ல

உனக்கு உனது பெற்றோர்கள் மீது மட்டும் பாசம்

உனக்கு எனது பெற்றோர்கள் மீது பாசமில்லை

நீ நினைத்த போதெல்லாம் உன் தாய் வீட்டுக்கு சென்று விடுகிறாய்

நீ நினைத்ததெல்லாம் வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றாய்

நீ நான் சேர்த்த பொருளை உங்கள் வீட்டில் கொண்டு சேர்க்கின்றாய்

நீ சீராக எந்த பொருளும் அல்லது பணமும் கொண்டு வரவில்லை

நீ எனது பெற்றோர்கள் , எனது உடன் பிறந்த உறவுகளை பிரிக்க நினைக்கின்றாய்

நீ தனிக் குடித்தனம் விரும்பி அனைத்தையும் செய்கின்றாய்

நீ நினைப்பது நான் உன்னை அடிமையாக்கி விட்டேனென்று.

நீ தான் என்னை அடிமையாக்கி விட்டாய்

 

தவறு உன்னிடமிருக்க

தவறு நான் செய்வதாக குற்றம் சாட்டுகின்றாய்

உன் தவறு என்ன என்பதனை சிறிதாவது சிந்தித்தாயா!

ஆண்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று பொதுப்படையாக சொல்கின்றாய்

உன் தந்தையும் உனது சகோதரர்களும் ஆண்கள்தான் என்பதை மறந்து பேசுகின்றாய்

உன் தாய் மற்றும் நம் காதல் திருமணத்தினை விரும்பாதவர்கள்

உன் தவறை நினைத்து நீ திருந்த உன்னை சிந்திக்க விட்டு விடுவார்களா !

 

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 291

 

0