Sunday, 29 November 2020

திருமணம் எனது படிப்பிற்கு இடையூறாக இல்லை.

நான் லயோலா கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு திருமணம் செய்து விட்டார்கள். படித்து முடித்து திருமணம் செய்வதே எனது விருப்பம். இருப்பினும் திருமணம் எனது படிப்பிற்கு இடையூறாக இல்லை. நிருமணத்திற்கு பின்பு மனம் அலைபாயமல் எனது படிப்பை சிறப்பாக தொடர்ந்து சட்டம் படித்து வக்கீலாக வர முடிந்தது.




Wednesday, 11 November 2020

Dr.ராமதிலகம் gastroenterologist அவர்கள் சென்னையில் மிகவும் நேர்மையான பிரபலமான டாக்டர்.

 


Dr.ராமதிலகம் gastroenterologist அவர்கள் சென்னையில் மிகவும் நேர்மையான பிரபலமான டாக்டர்.

இவர் எனக்கு மிகவும் விருப்பமானவர்.

என் மகனின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தவர்.

நான் சில ஆண்டுகளுக்கு  முன்பு வயிற்றில் சில தொந்தரவு காரணமாக இவரிடம் வைத்தியம் பார்க்க சென்றேன். அவரிடம் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்க்க சொன்னேன் .அவர் உங்களுக்கு ஒன்றும் அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. சாதாரண Irritable bowel syndrome (IBS) தான் நன்றாக சாப்பிடவும் இந்த மருந்தை சாப்பிடச் சொன்னார். திரும்பவும் நான் ஆஸ்பத்திரியில் சேர்கச் சொன்னேன்.

அவர் நான் பணத்திற்கு அப்படிப்பட்ட வைத்தியம் பார்பவர் அல்ல எனது நேரத்தை வீண் செய்யாதீர்கள் என்று அனுப்பி வைத்தார். இறைவன் அருளால் என் உடலில் நலம் பெற்றேன்.

அதிலிருந்து இவர் எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கியமானவர் ஆகி விட்டார்.

Dr. B. Ramathilagam, Gastroenterologist in Nungambakkam 


Gastroenterologist in Anna Nagar, Chennai - Appointment .

Monday, 2 November 2020

'Third Year Syndrome,'

 

எனது அண்ணன் சென்னையில் Dr .வைத்தியநாதன்.M .D  அவர்களிடம் தனக்காக வைத்தியம் பார்த்து வந்தார் ,அவருடன் நானும் உடன் அவருக்காக போய் வருவதுண்டு .அப்பொழுது எனது அண்ணன் விருப்பத்திற்காக நானும் வைத்தியம் பார்த்துக் கொள்வேன்.அப்பொழுது நான் P.U.C படித்து முடித்து லயோலா கல்லூரியில்  இளங்கலை வகுப்பில் சேர்ந்திருந்தேன் .இதற்கிடையில்  மருத்துவம் படிக்க முயன்றேன்.அப்பொழுது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்   G.C.I.M படிப்பு நடந்தது . நான் அதில் படிக்க   Dr .வைத்தியநாதன் M .D  அவர்களிடம் G.C.I.M படிக்க சிபாரிசுக்கு உதவி நாடினேன் .அவர் மருத்துவப் படிப்பு  உனக்கு சரிவராது என்றார்.

அது படிக்கும்போதெல்லாம் அந்த வியாதி உனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வாய் என்றார்.இருப்பினும் நான் அப்படிப்புக்கு முயன்றேன்.. அது எனக்கு கிடைக்க அதிகப்படியான வாய்ப்பு இருக்க எனது நீடூர் நண்பர்  G.C.I.M படிப்புக்கு மதிப்பு கிடையாது என்று சொல்லி என் மனதை மாற்றி விட்டார் . அந்த வருடம் என்னுடன் படித்த நண்பர்கள் சிலர் அதில் சேர்ந்து விட்டனர் .ஆனால் பாருங்கள் அந்த வருடமே  G.C.I.M படிப்பை  M.B.B.S மாற்றி விட்டனர் .