Sunday 31 May 2015

தோற்று வைத்தவன் தன் வசமாக்கிக் கொண்டான்!


நீ இறக்கவில்லை
நீ இருக்கிறாய்
நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய்

நீ இங்கு இருந்தபோது
உன்னால் பலன் அடைந்தோர்
உனக்காக இறைவனிடம் வேண்டுகின்றார்

உன் பெருமை இங்கு இருந்தபோது இருந்ததை விட
உன் பெருமை நீ இறைவன் வசம் சேர்த்தவுடன் பலவகையாய் உயர்ந்துள்ளது

ஒரு பொருள் கைவசம் இருக்கும்வரை அதன் அருமை தெரிவதில்லை
அப்பொருள் கைவசம் விட்டு நீங்க அதன் அருமை அதிகமாக அறியப்படுகின்றது

உன்னை இறைவன் உலகில் தோற்று வைத்தான்
உன்னை தோற்று வைத்தவன்
உன்னை தன் வசமாக்கிக் கொண்டான்

என்னை சில காலங்கள்
இவ்வுலகில் உலவ விட்டு
என்னையும் உன்னைப்போல்
தன வசமாக்கிக் கொண்டு
உன்னிடத்தில் சேர்த்து வைப்பான்

உன்னை இறைவன் முதலில் தன் வசமாக்கிக் கொண்டது
என்னை உனக்காக இறைவனிடம் வேண்டத்தான்

முற்றிலும் அறிந்த அவன்
முறையாகவே செயல்படுவான்

உனக்காக இறைவனை நான் வேண்ட
அவன் அருட்பெரும் கருணையுடையோன்
அவன் உன்னை உயரிய இடத்தில் சேர்த்து வைப்பான்
ஆமீன். 

No comments:

Post a Comment