தேவை என்றால் மறைந்து விடுகிறது சோம்பல். (laziness, lethargy or sluggishness)
உற்சாகம் குறைவதால் வருவது சோர்வு
சோர்வின் முடிவு சோம்பல்
சரியான தூக்கமின்மை சோர்வைத் தரும்
ஆர்வம் வர சோம்பலுக்கு தீர்வு கிடைக்கும்
வாழ்வின் முன்னேற்றத்திர்க்கு தடை செய்யும் சோம்பல்!
முயற்சி சோம்பலை சிதறடிக்கும்
சென்னை செல்வதற்கும் சோம்பி நின்ற மனநிலை சென்னை செல்லும் பயணத்தை தடுத்தது . தொலைபேசியில் அழைப்பு வந்தது
'நீங்கள் சென்னை வந்தால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும் ,பொருளும் தருகிறேன் 'என்று.
மனதில் ஒரு வேகம் வந்தது சோம்பல் முறிந்தது .உடன் சென்னை புறப்பட்டேன் .
சோம்பல் வர செயலில் ஈடுபாடு இருக்காது .ஓயவையே விரும்பி நிற்கும் சோம்பல். இருக்கும் இடத்தை விட்டு எழ மனமிருக்காது . தன்னையும் வருத்திக் கொண்டு தன்னை சுற்றி இருப்பவர்களையும் அந்நிலைக்கு மாற காரணமாகி விடுவார்கள். சோம்பல் வர ஓய்வு தேடி நிற்க அந்நிலைக்கு யாரேனும் இடையூராக இருப்பின் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வார்கள்.மற்றும் மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள்.
ஆரோக்கிய உடல்நிலை ,அளவான உணவு , முறையான உடற்பயிற்சி , விடி காலை நேர நடை ,செயலில் ஈடுபாடு இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்த்தல் சோம்பல் வருவதை தடுக்கும்.
சோம்பல்மிக்கவர்களுக்கு வாழ்க்கையில் வெறுப்பும், இழப்பும் வரும்.
சுறுசுறுப்பானவர்கள் வாழ்வில் வெற்றி நடை போடுவர்.
சோம்பலைப்பற்றியும் இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். ' யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.
‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)
மனசு பறக்கிறது...உடம்பு மறுக்கிறது..
ReplyDeleteவயசென்னும் மாயப்பேயை என்ன செய்ய?