Monday, 15 August 2016
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது
தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது
தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.Surat Ar-Rūm
30:23-அல்குரான்
முகம்மது நபி (ஸ அ) இரவின் பகுதி நேரத்தினை கண் விழித்து இறைவனை தொழுவதில் ஈடுபடுவார்கள் (See Fateh-al-Bari page 249, Vol. 1),
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment