Wednesday 18 March 2020
போராட்டம்
பிரச்சனை பொது
போராட்டம் பலநிலையில்
பாதுகாப்பும் பொது நோக்கம் கருதி
தனித்தும் சேர்ந்தும் செயல்படுத்துவது சிறப்பு
அதுவும் காலத்தே செயல்படுத்த வேண்டும்
இருக்குபோது பார்க்க வராமல்
இறந்தபின் உடலையும் உறவினர்களையும்
பார்க்க வந்தால் அதனை நான் அறிய மாட்டேன்
இறந்தபின் நான் செய்த எல்லா தவறுகளுக்கும் பாவங்களுக்கும் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள்,
அதனை நான் இருக்கும்போது செய்தால் அனைவரும் மகிழ்வாக இருக்கலாம்
அனைத்துக்கும் காத்திருக்கும் நிலை வேண்டாம்
காத்திருப்பதில் தாமதத்தை தந்துவிடும்
ஆளுநர்போல் தாமதப்படுத்தாமல்
பெற வேண்டியதையும் கொடுக்க வேண்டியதையும்
காத்திருக்கச் செய்யாமல் கொடுத்துவிட வேண்டும்
அதுவே அனைவருக்கும் நலம் தரும்
போராட்டத்தை
மக்கள் நலம் கருதி நடத்துவதும் / ஓத்தி வைப்பதும் உயர்வு.
மக்களுக்கான போராட்டம் அதே மக்களுக்கான இன்னொரு நன்மையை கருதி மட்டுமேதான் ஒத்தி வைக்கப்படும் !
போராட்டமே வாழ்க்கையல்ல அது வாழ்க்கையில் ஒரு பகுதி.
மானத்தோடு கலந்த உயிரை அவ்வப்போது புதுப்பிக்கும் ஒரு அன்றாட நடைமுறையே... அநீதி கண்டு எழும் சினத்தின் அடையாளமாம் போராட்டம் !
போராட்டத்திலுமா பிடிவாதம்! காலம் அறிந்து செயல்பட வேண்டாமா!
உலகமே கதிகலங்க நாம் மட்டும் அலட்சியம் செய்ய முடியாது
இழப்பு வருமுன் பாதுகாப்பு அவசியம்
எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் இதுவல்ல
இறப்பது இயற்கை அது இப்போது மனித சமுதாயத்தையே அச்சப்பட
வைக்கின்றது.
இறைவனிடமே எப்போதும் போல் பாதுகாப்பு தேடுவோம்
ஓட்டகத்தை கட்டிப்போட்டு இறைவனிடம் பாதுகாப்பு தேடு
நல்லது சொல்லும்போது ஊரோடு உலகத்தோடு சேர்ந்து செயல்படுவதே சிறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment