Thursday 13 August 2020

பச்சோந்திபோல் பல நிறங்கள்

 பச்சோந்திபோல் பல நிறங்கள்


இடிக்க முடியும்

கட்ட முடியாது


சேர்க்க நினைப்பாய்

சேர்க்க முடியாது


சொல்ல முடியும்

சொன்னது நடக்காது


உயிரை போக்குவாய்

உயிரை கொடுக்க முடியாது


சட்டம் இருக்கும்

சட்டத்தை மதிக்க மாட்டாய்


நேர் முகமில்லை

மறைமுகம் உண்டு


பச்சோந்திபோல் பல நிறங்கள்

பச்சோந்திபோல் பல ஜாதிகள்


கலக்கும் மனம்

கலங்கிய குட்டை


தன்னை முன்னிறுத்தி விளம்பரம்

தன்னை பின்னுறுத்தி பாதகம்


வித்தகனின் சாதனை

எத்தனை எத்தனையோ !


இன்னும் எத்தனை எத்தனையோ!

இன்னும் எத்தனை எத்தனை

பாதிப்புகள் நிகழ்த்தும் நோக்கமோ!

mohamedali jinnah


No comments:

Post a Comment