Wednesday, 12 May 2021

எம் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

 எம் இனிய

ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

                       *********************** *

இந்த உலகில் எல்லாருக்கும் அருள்பாலிப்பவனும்

 மறுமையில் தன்னை நம்பி, தனக்கு அடிபணிந்து நடந்த அடியார்களுக்கு மேலதிகமாக அன்பு செய்பவனும் ஆன

வல்ல அல்லாஹ்,

தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்,

 இதயத்தில் அன்பையும்,

ஆன்மாவில் மெய்நம்பிக்கையை(ஈமானை)யும்,

சிந்தனையில் ஞானத்தையும்,

செயல்களிலே நன்மைகளையும்

செல்வத்தில் தூயவற்றையும்

வெள்ளமென வெளிப்படுத்துவானாக …

ஆமீன் ….

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே! பெருநாள் வாழ்த்துக்கள்

எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல

அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள்

காட்டிச் சென்ற தியாகத் பெருநாளில் வேண்டுவோம். அனைத்துப் புகழும்

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும்

நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!

பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!

இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!

பெருநாட்களின் நோக்கம்!

யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.

பெருநாள் கொண்டாட்டம்!

இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நன்மைகள் செய்யக் கூடிய நல்வாப்பாகவே பெருநாட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இறைவனை அதிகமாக நினைவு கூர்ந்து திக்ர் செய்தல், அவனுக்கு நன்றி செலுத்தல், தான தருமங்கள் செய்தல், நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளல் மூலம் இணக்கத்தையும் சகோதரத் துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், நோயாளிகளை நலன் விசாரித்தல், அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல், பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச்செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதிக்கப்பட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு இன்புற்று மகிழுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகின்றது.

உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டாடுவதற்கென்று சில தினங்கள் இருக்கின்றன அந்த தினங்களில் அந்தந்த சமூக மக்கள் தங்கள் மன விருப்பப்படி யெல்லாம் சந்தோஷமாக இருப்பார்கள். குறிப்பாக அந்த தினங்கள் பெருவாரியான மக்களுக்கு கேளிக்கைகளுக்குறிய தினங்களாகவே கழிந்து விடும். முஸ்லிம்களுக்கு மகிழ்சிக் குறிய தினங்களாக இஸ்லாம் இரண்டு தினங்களை ஏற்படுத்தியுள்ளது அதில் ஒன்று தியாகத் திருநாள் மற்றொன்று ஈகைத் திருநாள்

இறைவனை அதிகம் அதிகம் நினைவுக்கூறுவதிலும், தாளாரமாக தான தர்மங்கள் வழங்கி பிறர் மகிழ்சியில் மன சந்தோஷம் அடைவதிலும் இந்த நாளை கழிக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!

முஸ்லிம் குடும்பத் தலைவிக்கு பெருநாள் வந்தால் வேலைதான் அதிகம்!

பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான்.

ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை

மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .

பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.

ஆண்கள் தொழுதுவந்த பின் வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.

பெண்களுக்கு பொதுவாக நாள் முழுவதும் வேலைதான்

பெருநாள் அன்று சமையலறையை விட்டு வெளியே செல்ல எந்த நேரமும் முடியாது .இந்த நிலையில் அவர்கள் எப்படி பெருநாளை கொண்டாட முடியும்

.

தமிழ்நாட்டு முஸ்லீம் கலாச்சாரத்தில் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு பெண்கள் பங்கு குறைவாகவே உள்ளது . அவர்கள் புது துணி உடுத்துவதும் தங்கள் குழந்தைகளுக்கு புதுத்துணி உடுத்தி மகிழ்வதிலும் திருப்தி அடைவதோடு முடிந்து விடுகின்றது . அடுபங்கரையை விட்டு அவர்கள் வெளியே வருவதற்குள் பொழுது போய்விடும் .அதன்பின்பு தன் தாய் எம் இனிய

தமிழ்நாட்டு முஸ்லீம் கலாச்சாரத்தில் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு பெண்கள் பங்கு குறைவாகவே உள்ளது . அவர்கள் புது துணி உடுத்துவதும் தங்கள் குழந்தைகளுக்கு புதுத்துணி உடுத்தி மகிழ்வதிலும் திருப்தி அடைவதோடு முடிந்து விடுகின்றது . அடுபங்கரையை விட்டு அவர்கள் வெளியே வருவதற்குள் பொழுது போய்விடும் .அதன்பின்பு தன் தாய் வீடு சென்று தன் தாய் வழி மக்களை (அதுவும் அதே ஊரில் இருந்தால் பார்த்து மகிழ்ந்து வருவார்கள்)

பெருநாள் அன்றுதான் பெண்களின் வேலை அதிகமாகவே உள்ளது ஆனாலும் அதனை அவர்கள் மகிழ்வாக தங்களை உட்படுத்திககொள்வது சிறப்பாகத்த்தான் உள்ளது .

நாம் செயய வேண்டியது முடிந்தவரை அவர்கள் வேலையை அன்றைய தினம் குறைப்பதற்கு முயல வேண்டும் மற்றும் அவர்கள் கூட இருந்து உதவ வேண்டும் . பெண்கள் அனைவரும் ஒன்று கூடி தொழுவதற்கும் முயலவேண்டும் .

வீடு சென்று தன் தாய் வழி மக்களை (அதுவும் அதே ஊரில் இருந்தால் பார்த்து மகிழ்ந்து வருவார்கள்)

பெருநாள் அன்றுதான் பெண்களின் வேலை அதிகமாகவே உள்ளது ஆனாலும் அதனை அவர்கள் மகிழ்வாக தங்களை உட்படுத்திககொள்வது சிறப்பாகத்த்தான் உள்ளது .

நாம் செயய வேண்டியது முடிந்தவரை அவர்கள் வேலையை அன்றைய தினம் குறைப்பதற்கு முயல வேண்டும் மற்றும் அவர்கள் கூட இருந்து உதவ வேண்டும் . பெண்கள் அனைவரும் ஒன்று கூடி தொழுவதற்கும் முயலவேண்டும் .No comments:

Post a Comment