Friday 24 February 2023

நான் இறக்கும் போது இது நடக்கக்கூடாது

 நான் இறக்கும் போது இது நடக்கக்கூடாது.

தயவு செய்து என்னை வெளியில் வைத்து, மக்கள் பார்க்கும்படி என்னைக் காட்சிக்கு மணிக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள் (பேஷன் ஷோ இல்லை) வெகு சீக்கிரம் அடக்கம் செய்துவிடுங்கள்.

யாராவது வெளிநாட்டிலிருந்து அல்லது தொலைவிலிருந்து உறவினர் வருவார் என்று என்னை காக்க வைக்க வேண்டாம்.வெகு சீக்கிரம் அடக்கம் செய்யப்படுவதே இஸ்லாத்தின் கோட்பாடு.

நீங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன் 

வாருங்கள் சந்தித்து மகிழ்வோம்.

நிச்சயமான மரணத்தின் போது என் கையைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

ஏனென்றால் நான் இறந்துவிட்டேன் 

நீங்கள் எனக்கு நன்மை செய்ய விரும்பினால் எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் மற்றும் என் சார்பாக தர்மம் செய்யுங்கள்.

பெண் ஒருவர்தான் இறந்து விட்டால் குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட நேரம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்

சமூக ஊடக விளம்பரங்களைத் தவிர்த்து விடுங்கள்.

இறந்த உடலை படமெடுத்து காட்டாதீர்கள்.

 நீங்கள் தனியாக 

கல்லறையில் தனியாக நுழைந்து அல்லாஹ்விடம்

எனது மறுவாழ்வுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதனை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்யலாம்.

உங்கள் பிரார்த்தனை தேவைதான் அதைவிட முக்கியம் நான் விட்டுச் சென்ற நுண்மையான பயன் தரும் காரியம்தான்.

இறைவனை நான் தொழுது அவனுக்கு நன்றி செலுத்தவே இவ்வளவு காலமும் என்னை இந்த உலகில் உயிருடன் இருக்கச் செய்தான் அல்லாஹ்.

அதுவே அவனது தனிப்பெரும் கருணை.

 எனது நல்ல பிள்ளைகள் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது

நான் செய்து வைத்த நீடித்த நல்ல சேவைகள் தொடர்வது எனக்கு பயன் தரலாம்.


----------------------------

நான் இன்று போட்ட ஒரு பதிவைப் பார்த்து எனது உறவினர்  பதற்றம் அடைந்து தான் உடல் நலமில்லா நிலையில் சிரமப்பட்டு நடக்கும் நிலையில் எனக்கு உடல்நலமில்லை என்ற நினைப்பில் என் இல்லம் வந்து கண்களில் நீர் வழிய விசாரித்ததில் நான் அதிர்ச்சியில் கலங்கிப் போனேன்.அவரை அமைதிப் படுத்த வெகு நேரம் ஆனது.அத்துடன் எங்கள் வீட்டிலும் என்மீது கோபப்பட்டு இப்படியெல்லாம் எழுதாதீர்கள் என்று கண்டித்தனர்.

நான் எழுதியது பார்த்த நிகழ்வினை வைத்து.

சமுதாயத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் மிகவும் காலம் கடத்துகிறார்கள் என்பதால் என்னையே வைத்து எழுதினேன்.

இறைவன் அருளால் உங்கள் பிரார்த்தனையால் நான் இன்ஷா அல்லாஹ் நலமாக இருக்க அல்லாஹ் அருள் செய்வான்.ஆமீன்.

https://open.spotify.com/episode/4N4AaF92eMoV0jGkKKqWwO


No comments:

Post a Comment