Saturday 4 March 2023

இறைவனின் உதவி எப்போதும் இருக்கும்.

 யாரிடமிருந்தும் 

விலகிப்போக 


விரும்ப வில்லை..


தூர நின்று பார்க்கிறேன், 

தூரம் துயரமாகிவிடக்கூடாது 

என்ற எண்ணத்தில்....!


அவரவர்க்கு தகுந்தாப் போல 

வார்த்தைகளில் வழுக்குகிறேன் ,


மெளனாமாய்ப்போக அல்ல ...

வார்தைகள் வாதமாகிவிடும் 

என்ற அச்சத்தில்..!


 ஆனாலும் ...

விழியின் ஓவியமாய்..

தோன்றிய சிற்பங்களை 

எழுத்துளியால் 

செதுக்கி வருகிறேன்... ! 


 உணரவேண்டுமென்பதற்காக..!

                    Nidur Haja.

வலிகள் அவ்வளவு எளிதாக 

குணமடையவதில்லை ...


வலிகளுடன் போராடுவது 

சாதாரண விஷயமல்ல..


மன உறுதிக்கவசங்களோடு

வாழ்வை வாழ துணிந்தே 

பழக்கப்பட்டேன்..!


விழுந்தாலும் எழுவதும், 

முடிந்தாலும் துவங்குவதும் 

வழமையானதே என் வாழ்கை ..!


படைத்தவனைத் தவிர வேறு 

யாரையும், 

பாதுகாப்பாக நினைப்பதே 

பாவம்..!


இறைவனின் உதவி 

எப்போதும் இருக்கும்..!


அல்ஹம்து லில்லாஹ்..

No comments:

Post a Comment