Monday 12 June 2023

தாட்_பூட்_தஞ்சாவூர்

 Senthilkumar Deenadhayalan




  · 

#தாட்_பூட்_தஞ்சாவூர்

அது ஒன்னுமில்லீங்க. ஒரு முழு வாழையிலைய தஞ்சாவூர்ல தாட் இலைன்னு சொல்வாங்க. தஞ்சாவூர் தாட் இலைங்கிறது ரொம்ப பிரபலம். தாட் இலை போட்டு சாப்பாடுன்னா பெரிய விருந்துன்னு அர்த்தம்.  உண்மையில் அவ்வளவு பெரிய இலையையும் நிறைக்கும் அளவிற்கு நிறைய ஐட்டங்கள் உடையது தஞ்சாவூர் பாரம்பரிய சமையல். 

திருச்சி இலையையும் பிரபலமா சொல்வாங்க. வயலூர் சாலை முழுவதும் ஒரு காலத்தில் வாழைத் தோப்புகள் தான் இருந்தது. 

சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு முழு வாழை இலை தாட். இது போன்ற ஐந்து தாட் இலைகள் சேர்ந்தது ஒரு பூட். இருபது பூட்கள் சேர்ந்தது ஒரு கட்டு. இது தான் தாட் பூட் தஞ்சாவூர். 

அவன் எதுக்கு தாட், பூட்னு குதிக்கிறான்? என்று தஞ்சை பகுதியில் சொல்வார்கள். உண்மையில் தாட்கள் நிறைந்த பூட்கள் குதிக்க முடியாது. குதித்தால் இலைகள் கிழிந்து விடும். பிறகு எதற்கும் பயன்படாது. அது போல ஒன்றுக்கும் பயனில்லாமல் வெட்டியாக கோபப் படுவதைத் தான், அவன் தாட் பூட்னு குதிக்கிறான் என்பார்கள்.

No comments:

Post a Comment