அறிவுரை எப்படி இருக்க வேண்டும் ! உலகில் இனாமாக யாராலும் கொடுக்கக் கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா! அல்லது பாதிப்பினை உண்டாக்குமா. இது கேட்காமலும் கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாக மாறும்சொல்லும் நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .
மற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும் நாம் அதன்படி நடப்பதில்லை.
அறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது கேட்பவர் இப்படியும் நினைக்கலாம் .
இவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான் .
அறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.