Showing posts with label ஆட்சி. Show all posts
Showing posts with label ஆட்சி. Show all posts

Wednesday, 3 April 2013

அரசியல் உறுதிப்பாடு அற்ற நிலையில் எந்த நாடும் முன்னேற்றத்தை அடைய முடியாது.

இன்றைய அரசியல் நாளைய சரித்திரமாக உருவாகிறது
 ஒவ்வொருவரும் அரசியல் அறிவை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது
அடிப்படை அரசியல் அறிவைக் கூட அறியாமல் அரசியலில் ஈடுபட்டு அரசியல் அறியா மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி மன்றத்திற்கு வருவோர்களால் மக்கள் அவதிப்படுவதனை பார்க்க முடிகின்றது. இதனால் மக்களாட்சி முறையே வலுவற்றுப் போகின்றது.அரசியல் அறிவைப் பெற மக்கள் பெற்ற வாழ்க்கை அனுபவம் மட்டும் நிறைவைத் தந்துவிடாது . மக்களுக்கு போதிய கல்வியும் அதன் வழியே கிடைக்கும் நேர்மையும் ,ஒழுக்கமும் சட்டத்தை மதிக்கும் பண்பாடும்  பெற வேண்டும். ஆட்சி செய்வோர் அத்தகைய திறனைப் பெற்றவராக தெரிந்தெடுப்பதில் வாக்களிப்போருக்கு அரசியல் அறிவு அவசியமாகின்றது .

  அரசியல் உறுதிப்பாடு அற்ற நிலையில் எந்த நாடும் முன்னேற்றத்தை அடைய முடியாது. சிங்கப்பூர் அரசியல் உறுதிப்பாடினால் உயர்நிலையை அடைந்திருப்பதை நாம் அறிகின்றோம். அந்த நிலை நம் அருகில் உள்ள பல நாடுகள் பெறாத காரணத்தால் மேன்மை அடைய முடியாமல் உள்நாட்டுப் பிரச்சனையால்  சீரழிவதனைக் நாம் காண்கின்றோம்.பாக்கிஸ்தான் ,இலங்கை,பர்மா இவைகள் இதில் அடங்கும். பல  இன ஐக்கியத்திற்குப் முக்கியத்துவம் கொடுக்காத நிலையால் அந்த நாடுகள் முன்னேற்றம் அடைய முடியாமல் திணறுகின்றன
 இந்த நிலையை நம் நாட்டிலும் உருவாக்க சில அரசியல் ஊடுருவிகள் முயல்வதை அவசியம் தடுத்தாக வேண்டும். அதற்கு அரசியல் அறிவு அவசியம் தேவை.