பாலைவனத்தில் முகம்மது நபி (ஸ.அ) அவர்களோடு நபித் தொழர்ளும் பிரயாணம் செய்துக் கொடிருந்தார்கள்.பாலைவனத்தின் வெயிலின் கொடுமை அவர்களுக்கு தாகத்தை அதிகமாக்கியது.வைத்திருந்த குடி நீர் பற்றாக்குறை. போகும் வழியில் நீர் தேக்கத்தினை கண்ட தோழர்கள் வேகமாக அந்நீரை நோக்கி ஓடினார்கள்.போகும் வேகத்தில் மக்காவாசித்(முஹாஜிரின்) தோழரின் காலை மதீனாவாசி (அன்சாரி)தவறுதலாக மிதித்து விட்டார் .அதில் கோபமடைந்த மக்காவாசி(முஹாஜிரின்)மதீனாவாசியை (அன்சாரி) அடித்துவிட்டார். உடனே அந்த அன்சாரித் தோழர் கோபமாக அடைக்கலமாக வந்த உங்களுக்கு 'நாங்கள் வீடும் உணவும் கொடுத்து உபசரித்தோம் அதனைக் கூட நினைத்துப் பார்க்காமல் அடித்து விட்டாயே' என்று சொல்லியதோடு மக்காவாசி(முஹாஜிரின்) அடித்து விட்டார் வாருங்கள் மதீனாவாசிகளே (அன்சாரி)வந்து பாதுகாப்பு கொடுங்கள் என கூவி தங்களைச் சேர்ந்தவர்களை அழைக்க அந்த இடத்திற்கு மதீனாவாசிகள் (அன்சாரிகள்)ஓடி வர இதைக் கண்டு பயந்த மக்காவாசி(முஹாஜிரின்) தங்களது மக்காவாசி(முஹாஜிரின்) மக்களை அழைத்தார் . பெரிய கூட்டமாக இருவருக்கும் ஆதரவாக கூட்டம் கூடி ஒரு பெரிய கலவரம் நடக்கும் அளவுக்கு போய் விட்டது. இது முகம்மது நபி (ஸ.அ) அவர்கள் அறிய வர அவர்கள் அவர்களிடம் மிகவும் கோபமாக சொன்னார்கள் . தவறு செய்திருந்தால் தவறின் அடிப்படையில் தண்டனை கொடுங்கள் அதைவிடுத்து இன மற்ற இடத்தினைச் சார்ந்தவர் என்பதனை வைத்து குறுகிய நோக்கம் கொண்டு செயல்படாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.
--------
'கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவனல்ல.அரபியனைவிட அரபியரல்லாதவனோ, அரபியரல்லாதவனைவிட அரபியனோ சிறந்தவனல்ல.உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள்'.-நபிமொழி
