Showing posts with label இரவு. Show all posts
Showing posts with label இரவு. Show all posts

Sunday, 4 August 2013

அழகாய் அருகில் அமர்ந்து அனைத்தையும் சொல்வாய் !

மனதில் சோர்வு
விழிகளில் சோர்வு
விரிப்பை விரித்து படுக்கவும் சோர்வு
விரிப்பை விடுத்து படுத்தது தரையில்
துணையற்ற தரையில் தூக்கம் தவழவில்லை
துயரங்களும் துன்பங்களும் உன் நினைவாய்
துயரத்தில் விழித்த இரவு வீணாகப் போனது

தொலை தூரம் வந்தேன் உன் நினைவோடு
தொலையாத துக்கம் தொலைந்து போகும் நீ இருந்தால்
பிரிந்து வந்தது பொருள் சேர்க்க
பிரிந்த வாழ்வு சோகத்தை சேர்கிறது

அழகாய் அருகில் அமர்ந்து அனைத்தையும் சொல்வாய்
பரிவாய் சொல்லி பாசத்தை வளர்ப்பாய்
பரிவு நெருக்கம் தந்து உணர்வுகள் கொப்பளிக்கும்
பரிமாற்றங்கள் காமப் பசியை அடக்கும்
அடங்கிய பசி அன்பாய் வளர்ந்து வாரிசில் தொடரும்
அடங்கிய பசி அயர்வை கொடுக்கும்
அயர்வு உறக்கத்தில் நிறைவு கொள்ளும்
விழித்திருந்த இரவு வீணாகப் போகவில்லை