Showing posts with label இல்லம். Show all posts
Showing posts with label இல்லம். Show all posts
Wednesday, 21 January 2015
வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான்!
மனிதனுக்கு வேண்டியது இருக்க இடம் ,குடிக்க நீர் , சுவாசிக்க காற்று. இவைகள் அத்தியாவசிய தேவைகள் ஆனால் திருமணம் செய்தால்தான் அவனது வாழ்வு முழுமையடையும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.
இக்காலத்தில் வீடு கட்டுவது அனைத்தையும் விட மிகவும் கடுமையான செயலாக இருக்கின்றது. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான் அதிலும் திருமண ஆனவுடன் பெண்களுக்கு அதில் நாட்டம் அதிகமாக இருக்கும். அதற்கு வேண்டிய முதல்படியாக இருக்கவே இருக்கின்றது 'தலையணை மந்திரம்'. ஏன் அந்த நாட்டம் வந்தது! வெவ்வேறு இடத்திலிறுந்து வந்த மருமகள்கள் குணத்தில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். சகோதரிகளுக்குள் உள்ள ஒட்றுமை மற்ற பெண்களிடம் இருப்பது அபூர்வம். அதற்குத்தான் சிலரது வழக்கமாக இருப்பது மாமனார் வீட்டோடு மாப்பிள்ளைகள் குடியேறிவிடும் பண்பாடு. இது கடற்கறையோரம் வாழும் மறைக்காயர்களிடம் உண்டு.
Subscribe to:
Posts (Atom)
