Showing posts with label ஏகத்துவம். Show all posts
Showing posts with label ஏகத்துவம். Show all posts

Tuesday, 31 March 2015

வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் !

 வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும்
இறைவனது பொருத்தத்திற்கு ஏற்புடையதா?

இதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் .ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையவராவார்  மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .

  பொதுவாக எல்லா மார்க்கமும் இந்த கொள்கையோடு ஒத்து போகின்றது . இஸ்லாத்தின் கொள்கையில் முக்கியமான அடிப்படை சிந்தாந்தம் முக்கியமானதாக உள்ளது . இஸ்லாம்  ஏகத்துவம் என்ற முக்கிய கொள்கையை அடிப்படையாக தன்னகத்தே கொண்டிருக்கின்றது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்வதோடு ஏகத்துவம் ஏன்ற கொள்கையையும் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இதயம் நன்மையான செயல்களுக்கு தூண்டப்படலாம் அது அவன் புகழை நாடி இருந்து இறைவன் அருளைப் பெறுவதற்கு இல்லாமல் இருப்பின் அது இறைவனால் அங்கீகரிக்கப் படாமல் போய்விடும் . அதே நேரத்தில் ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டு நெறி தவறிய வாழ்கை வாழ்ந்தாலும் ஒரு பயனுமில்லை. ஒருவனே இறைவன் அவன் உருவமற்றவன் அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை அவனும் யாரையும் பெறவுமில்லை மற்றும் எங்கும் நிறைந்தவன் அவனே அனைத்துக்கும் அதிபதி என்ற நம்பிக்கைத்தான் ஏகத்துவமாகும் .