Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, 25 September 2013

மனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது!


 அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம். நான் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் எனக்கு ஆனந்தன் என்ற பெயர் எனக்கு வைத்திருப்பாளோ!

  நான் குழந்தையாக இருக்கும்போதே எனது அப்பா இறந்து விட்டதால் அப்பா வைத்திருந்த பொட்டிக் கடையை தானே தொடர்ந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து என்னை படிக்க வைத்தாள். பாவம் அம்மாவுக்கு ஒரு கண்தான்,  மற்றொரு கண் இருக்குமிடம் பள்ளமாக  இருக்கும்.  ஒரு கண் பார்வையோடு வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு கடையையும் கவணித்துக் கொள்வாள் . 

 சிறிய வருமானத்தைக் கொண்டு அரசாங்க உதவிப் பணமும் பெற்று பொறியாளர் படிப்பு வரை என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தாள். என் சிறுவயதில் அம்மாவின் அழகான முகத்தில் எனக்கு குறை தெரியவில்லை. ஒற்றைக் கண்ணுடன் இருப்பதால் அம்மாவின் முகம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்ற  மனம் எனக்கு வந்தது உடன் படிக்கும் மாணவர்கள்  ' உங்க அம்மாவுக்கு ஒரு கண் பார்வைதானே! ' என்று கேட்டதிலிருந்து.  கல்லூரிக்கு அம்மாவை என்னை பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி விட்டதிலிருந்து அவள் என்னைப் பார்க்க கல்லூரிக்கு வருவதில்லை.

Sunday, 14 April 2013

நாட்டைப் பற்றியது அதனால் நீங்கள் நாடவேண்டும்

குழந்தைகளுக்கு கதை கேட்பது பிடிக்கும்
குழந்தையான முதியோருக்கு கதை சொல்ல பிடிக்கும்

பொழுதை ஓட்டுபவர்களுக்கு கதையளக்க பிடிக்கும்
தேர்தலில் ஒட்டு கேட்பவருக்கு கதையடிக்கப் பிடிக்கும்

நடந்ததை கதையாக சொல்பவர்கள் வெளிநாடு சென்று வந்தவர்கள்
நாங்கள் வந்தால் நல்லது நடக்குமென்று கதை விடுவார்கள் அரசியல் வியாபாரிகள்

இத்தனை கதையை கேட்டு அலுத்துப் போனவர்களுக்கு
இரத்தினக் கதையை சொல்வேன் கேட்டு விட்டுப் போங்கள்
------------------------------------------------------------------
கதை நாட்டைப் பற்றியது அதனால் நீங்கள் நாடவேண்டும்
-------------------------------------------------