Showing posts with label செயல் படு. Show all posts
Showing posts with label செயல் படு. Show all posts

Saturday, 23 August 2014

போய் விடு! பொருத்தமானால் வந்து விடு!



உன் இதழ்கள் புன்னகை பூக்க விரியவில்லை
உன் நாக்கு புரளவில்லை பேசுவதற்கு
உன் மனம் கசியவில்லை பாசத்திற்கு
உன் உடல் அசைவு தரவில்லை தேவையானதிற்கு

உன்னை இனியும் இங்கு இருக்கச் சொல்லவில்லை போய் விடு
உன்னை அழிக்க விரும்பவில்லை போய் விடு
உன்னை உயர்வாக்கிக் கொள்ள இங்கிருந்து போய் விடு
உன்னை பாதுகாத்ததாக நிறைவு கொள்கின்றேன் போய் விடு

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர
இரு மனங்கள் ஒன்று சேர
இயல்பாய் இங்கிருக்க
இவ்விடம் வந்து விடு
இணைந்து செயல் படுவோம்