Showing posts with label திருமண காட்சி. Show all posts
Showing posts with label திருமண காட்சி. Show all posts

Thursday, 4 July 2013

யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது?


  மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மணமகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.

 இப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான  கதை ஒளிந்துள்ளது. திருமணம்  என்பது  பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு!
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்

கல்யாணத்திற்கு முன் பரிசம் (நிட்சயதார்த்தம் ) என்ற தேவையற்ற ஒன்றுக்கு பல்லாயிரம் செலவு செய்து விருந்து கொடுப்பார்கள் .ஆனால் அவசியமான வலிமா விருந்து கொடுக்கும் பழக்கம் மறைந்து போனது

 இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும்   பேசுவார்கள் .

"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".
-திருக்குர்ஆன் 24:23