Showing posts with label திறன். Show all posts
Showing posts with label திறன். Show all posts

Friday, 11 October 2013

எங்கே தட்டுவது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

கார் வாகனத்திற்கு அந்த காலத்தில் பிளசர் கார் pleasure car என்பார்கள்
பிளசர் pleasure என்றால் மகிழ்வு . காரில் செல்வது மகிழ்வாம் .
இப்பொழுது காரில் செல்வது ஆபத்தாகவும் ,தொல்லையாகவும் உள்ளது.
நான் கார் ஒட்டிக்கொண்டு போனபோது வாகனத்தில் சிறிய கோளாறு வந்து விட்டது ,
அதனை சரி செய்ய ஒரு கார் மெக்கானிக்கை அணுகினேன் .
எனக்கு கார் ஓட்டத் தெரியும் .ஓட்டும்போது அதில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய தெரியாது .
அந்த மெக்கானிக் எதையோ ஒரு தட்டு தட்டிவிட்டு நாநூறு ரூபாய் கேட்டார் .அதற்கு பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது .
என்னப்பா! ஒரு தட்டுக்கு இவ்வளவு கேட்கிறாய் என்றேன்
எங்கே தட்டுவது என்பதை நான் தெரிந்திருப்பதற்குத் தான் அந்த தொகை என்றான் .

இப்படித்தான் நம் வாழ்க்கையும் .
மகிழ்வான காலத்தில் நிம்மதியான வாழ்வு
தொல்லைகள் வந்தால் துவண்டு விடுகின்றோம் .
தொல்லைகளை சரி செயத் தெரியாமல்
வாக்குச் சீட்டை போடுகிறோம் வாக்கு போடுவதற்காக
திருமணம் செய்து கொள்கிறோம் மனைவி மற்றும் பிள்ளைகள் வேண்டும் என்பதால்

திறன் வேண்டும் தொல்லைகளை சமாளிக்க

Sunday, 15 September 2013

தேடுதலை நம் கையில் விட்ட இறைவன் நம் திறமையை வளர்க்கவே!

கற்பனைகளும் கவிதைகளும் கனவில் வருகின்றன
கற்பனைகளும் கவிதைகளும் பகலில் மறைகின்றன

நினைவில் நின்றவைகளை கவிதையாக்கவும் முடியவில்லை
செயலில் செய்ய நினைப்பவைகள் கனவாய் மறைகின்றன

செயல் படுத்தவும் ஒரு திறன் வேண்டும்
முயற்சி இன்றி பலனை நாடும் வேட்கை விரயம்

இறைவன் அனைத்து பறவைகளுக்கும் உணவு அளிக்கின்றான்
இறைவன் அனைத்து பறவைகளின் கூட்டில் உணவை போடுவதில்லை

உலகில் அனைத்தையும் பரவச் செய்தவன் இறைவன்
உலகில் உள்ளவைகளை தேடுதல் பொறுப்புகளை நம்மிடம் தந்தான் இறைவன்

அன்னை மரியம் (அலை) ஆண் துணையின்றி கருவுற்றதும் மகவைப் (ஈசா நபி) பெறச் செய்தவனும் இறைவன்