அப்பா
ஏன்டா மரம் மாதிரி நிக்கிறே! கேட்கிறதுக்கு பதில் சொல்லு.
மகன்
மரம்னா உங்ககளுக்கு சாதாரணமா போச்சா ! மரமிருந்தாதான் மழை பெய்யும்,நிழல் கொடுக்கும். மரம் நடச் சொல்லி எல்லோரும் சொல்றாங்க .
அப்பா .
தனி மரம் தோப்பாகாது. மக்களோடு பழகனும் ,ஒற்றுமையா இருக்கணும் .
மகன்
நான் தனி மரமா இருக்க விரும்பவில்லை.எனக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு மரத்தையும் சேர்த்துடுங்க .அப்புறம் பாருங்க அது நல்லா வேறுன்றி செழிப்பா வளர்ந்து கிளைகள் அதிகமாகி அதன் விதைகள் வழியே பல மரங்களை உருவாக்கி தோப்பாகும் .
நீங்கள் சொன்ன இந்த தனி மரம் அடுத்த மரத்தோடு சேர்த்து வைத்த பின் பாருங்கள் உங்கள் பரம்பரையை வளர்த்து நிற்கும்
அப்பா
நான் ஒரு மரம் உன்னிடம் சொன்னேனே!
