'மீன் ஆனம் சரியாப் போச்சு .சொன்னா கேளுடா ! விடியல் முன்பு எழுந்து பள்ளிவாசலுக்கு சென்று தொழ வேண்டுமென்ற ஆர்வமில்லை ஆனால் ஆனத்திலே மட்டும் ஆசை உனக்கு' என்று பையனின் அம்மா சொல்கிறாள்
பார்க்க வந்த நண்பர் காதில் இந்த சொற்கள் தாக்கியது போலும் .அவர் கேட்கிறார் .
'அத்தா ,பசியாற , ஆனம் ' இவை என்ன சொற்கள் புரியலையே!
நான் சொன்னேன் நாங்கள் அதிகமாக முறையாக தமிழ் சொற்களைத்தான் பயன்படுத்துவோம்.அவை உணவைவிட முக்கியமானது எங்களுக்கு.
இறைவனை வணங்கு என்றும் சொல்வதில்லை . இறைவனை தொழு என்றுதான் சொல்கின்றோம். இறைவனை தொழ பலர் சென்று தொழுமிடத்திற்கு பள்ளிவாசல் என்றும் சொல்கின்றோம்
.
'காலை டிபன் முடிந்ததா?'
' இன்று இரவு எங்கள் வீட்டில் டிபன் என்கிரார்கள் ' இந்த வார்த்தை
ஆங்கிலேயர்கள் மாலை நேரத்தில் ஒரு சிறிய பானம் அல்லது சிற்றுண்டி நொறுக்குத் தீனி தின்பதற்கு பயன்படுத்த நாம் அவர்களிடமிருந்து அந்த 'டிபன்' சொல்லை சோற்று உணவு சாப்பிடாமல் இருப்பதற்கு மற்ற இட்லி ,தோசை,வடை போன்ற உணவுக்கு வழக்குச் சொல்லாக பயன்படுத்துகின்றோம்.