Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Saturday, 13 December 2014

வேண்டியதை வேண்டிக்கொள் முடிவு செய்பவன் முற்றும் அறிந்தவன்!

 மழை
பெய் யென்றாலும் பெய்யாது
நில் யென்றாலும் நிற்காது

அப்பக்கம் பெய்யும்
இப்பக்கம் பெய்யாது

வேண்டியவர் வேண்டியும் பெய்யாது
வேண்டாதவர் வேண்டாமலும் பெய்யும்

பெய்வதற்கு காலமும் உண்டு
பெய்யாததற்கு காரணமும் உண்டு

ஒருவருக்கு வேண்டியது
மற்றொருவருக்கு வேண்டாததானது

பெற்ற மகள் இருவேரிடத்தில் வசிக்க
ஒரு மகள் தந்தையை வேண்டினாள்
பெய்யாமல் இருக்க இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்தால் அறுவடை விரயமாகுமென்றாள்

மற்றாரு மகள் வேறிடத்தில் இருந்து தந்தையை வேண்டினாள்
பெய்ய இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்யாமல் போனால் செடிகள் வளர்ச்சியற்று வாடிப் போகுமென்றாள்

தந்தை இருவருக்கும் மனமிரங்கி ஒப்புதல் தந்தார்
தந்தை இறைவனிடம் வேண்டினார்
இறைவா !
நீ முற்றும் அறிந்தவன்
நீ கருணையாளன்
நீயே பாதுகாவலன்
இறைவா !
எது நல்லதோ அதைச் செய் என்று இறைவனை வேண்டினார்

Friday, 27 December 2013

இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை

மின்னல் போல் மகிழ்வுகள் வரும்
மழை போல் சோகங்கள் கொட்டும்

மின்னலைக் காண விழிகள் மூடும்
மகிழ்வுகள் வர தன்னிலை மறக்கும்

மின்னலும் நீடிப்பதில்லை
மகிழ்வுகளும் நீடிப்பதில்லை

மின்னல் வரும் முன்னே
இடி வரும் பின்னே

Monday, 23 September 2013

வண்ணத்துப் பூச்சி போல் பறக்கும் மனம்


 சில நேரங்களில் வண்ணத்துப் பூச்சி போல் பறக்க நினைக்கிறேன்
பல நேரங்களில் மனமும் பட்டாம்பூசசி போல் பறந்து, பறந்து போகும்

போராட்ட மனது திசை அறியாது முதலில் தேங்கி நிற்கும்
மேகத்தின் மோதல் இடியாய் ஒலியெழுப்பி வருவதற்குள் முதலில் மின்னலாய் ஒளி வருவதுபோல்

வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ண நிறங்களில் பறந்து திரிவதைக் காண
படபடத்த மனதும் போராட்ட மனதை மறந்து பறந்து போகும்

ஓசை யெழுப்பும் காற்றே உன்னோடு யென்னையும் உயரமாக தூக்கிச் செல்
ஓசை எழுப்பாமல் உன்னோடு உயர வருகின்றேன்

இருந்த இடம் மறையும் வரை தூக்கிச் செல்
பறந்து செல்லும் பனி உறைந்த மேகத்தில் விட்டு விடு

Thursday, 25 April 2013

இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதோ!

மேகம் வர மழை வருமாம்
மின்னல் வெட்ட இடி வருமாம்
மேகம் மோத இடியோசை வருமாம்
இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதோ


மழையைக் கண்டு  வருடம் தாண்டி விட்டது
தூசி மழை ஊரெல்லாம் பெய்கிறது.
குளங்கள் வற்றிக் கிடக்கின்றன .
வயல்கள் வீடாகி விட்டன
வீட்டை சுத்தம் செய்ய ஆள் இல்லை
கட்டிய வீட்டிலும் வாழாமல் வெளிநாடு வாழ்க்கை
ஊருக்குள் ஒற்றுமை குறைகிறது

பழைய இனிய மகிழ்வான பசுமை வாழ்க்கை பறந்து விட்டது
பயிர்களும் காணோம் ,வெற்றிலையைக் காணோம்
நன்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் இறைநம்பிக்கை கூடுகிறது
நீர் கிடைக்காத நிலையோ அல்லது வெயிலின் கதிர் வீச்சால் காய்ந்த மனமோ
சிலர் தவறான தண்ணீரை குடிக்கும் வேதனை