கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் தற்கால மக்கள் பிடிப்பில்லாமல் இருக்கின்றார்கள்.கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் வாழும் காலத்தில் ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளின் பாச உணர்வு குடும்பம் பிரிந்தாலும் ,தனித் தனியே வாழத் தொடங்கினாலும் பாச உணர்வு தொடர்வதனை நாம் அறிய முடிகின்றது.எறும்பும் தேனீக்களும் கூட்டாகவே வாழ்கின்றன. அதிலும் தேனீக்கள் தங்கள் கூட்டுக்கு அல்லது தங்களுக்கு ஆபத்து வரும்போது கூட்டாக சேர்ந்து தாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன. இந்த இனங்கள் அனைத்தும் தங்கள் தேவையை உணர்ந்து சுறு சுறுப்பாக செயல்படுகின்றன. ஒன்று ஓய்வாக இருந்து மற்றது இறை தேட செல்வதில்லை. மனிதன் மட்டும் சிலர் பொருள் சேர்க்க மற்றவர் உண்ண நினைப்பதால் கூட்டுக் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது.