Showing posts with label வாழ்த்தி மகிழ்வார்கள். Show all posts
Showing posts with label வாழ்த்தி மகிழ்வார்கள். Show all posts

Thursday, 28 August 2014

மறைப்பதேன் !

 
மறைப்பதென்ன மகனே
ஒன்றுமில்லை அம்மா

கையில் ஒரு பை
பையில் ஒரு பொட்டலம்
மகனின் செயல் தாய்க்கு தெரியாதா
வாங்கியது தான் வாங்கினாய்
வாங்கியதில் கொஞ்சம் சேர்த்து வாங்கலாமே
சேர்த்து வாங்கியிருந்தால்
உனது மனைவிக்கு கொடுப்பதோடு
உனது சகோதரிகளுக்கும் சேர்த்து கொடுக்கலாமே

நீயும் உன் மனைவியும் மகிழ்வதோடு இருக்க
உங்களோடு சேர்ந்து அனைவரும் மகிழ்வார்களே

பூவும் இனிப்பும் யாவரும் விரும்பும் பொருளாக இருக்க
பகிர்ந்து கொடுக்க யாவரும் உங்களை வாழ்த்தி மகிழ்வார்கள்