Thursday, 27 February 2014

யாசித்தல் இறைவனிடம் மட்டும்



நினைத்தது நிதர்சனம் ,
மறைக்கமுடியாத வாழ்க்கை ,
செயலில் வெளிப்படையானது;
மனதில் தெளிவானது;
கண்டவை கண்கூடு;
ஆற்றியவை அப்பட்டமானது ;
யாசகம் கேட்காத யதார்த்தம்
யாசித்தல் இறைவனிடம் மட்டும்
கடுகளவும் கபடமில்லை ,
படைத்தவனின் படைப்பை அறிந்து
ஆற்றியதில் துடிப்பு
பயன்படுத்தும் ஆர்வம் ,
தொடர்ந்து தொழுது வர நேசம் .
வாழ்வை நேசிப்பது .

செயலின் நிலையறிந்து வினையறிந்து விலகி நில்

  'என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!'

தவறு செய்தவன்
தப்பிக்க செய்வான்
தவறாக பேசுவான்

சொல்வான்
சொல்லத்தான் செய்வான்
நினைத்தான்
நடத்தி விட்டான்

Tuesday, 25 February 2014

முகநூல் மற்றும் கூகுள்+ பார்த்ததில் விருப்பம் வந்தது

லைக் என்றால் விரும்புதல்
லைக் என்றால் போன்று (ஒரே மாதிரி )

நான் இதை லைக் செய்கிறேன்
நான் இதை லைக் செய்தமையால்
எனது கருத்தும் இதில் கண்டுள்ள கருத்தும் உடன் படுகிறது

நான் லைக் செய்து விட்டேன் இதை பார்த்தவுடன் ஆனால்
நான் முழுமையாக விரும்பவில்லை அதனால்
நான் எனது கருத்துரையை இங்கே தருகிறேன்
நான் எந்த அளவுக்கு விரும்புகின்றேன் மற்றும்
நான் எந்த அளவுக்கு மாறுபடுகின்றேன் என்பதனை
நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

Monday, 24 February 2014

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்


வாய்க்கு வந்த வார்த்தைகளை
வரும் வழியில் வந்தவரிடம் சொல்லி வைத்தேன்

சொல்லிய வார்தைகள்
உண்மைக்கு புறம்பானது

தெளித்த வார்தைகள்
காற்றில் பறக்கும் இறகுகள் போல் பறந்து போயின

கேட்டவர்கள் கொளுத்திப் போட்டனர்
கொழுந்தெறியும் தீ பரவி பாதகமானது

அவதூறாக தெளித்த வார்தைகள்
அவமானத்தை பரப்பிச் சென்று பாவத்தை குவித்தன

மனதில் பட்டதை பட்டென சொல்வேன்

பெற்ற அறிவு இறைவன் தந்தது
இறைவன் தந்த அறிவை பூட்டி வைக்க மாட்டேன்
அறிவை சொல்லிக் கொடுக்க காப்புரிமை நாட மாட்டேன்
பெற்ற அறிவு கொடுக்க மற்றவருக்கு கசக்கவும் செய்யும்
பெற்ற அறிவைக் கொடுப்பதில் எனக்கு இனிக்கச் செய்கிறது
சுவை மாறுபடுவது போல்
ரசிப்பதிலும் மாறுபாடு இருக்கவே செய்யும்

Saturday, 22 February 2014

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.

(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)


தென்னகங்கண்ட அரபிக் கல்லூரிகளில் தலைசிறந்த ஒன்றாகத் திகழும் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை  இன்றைய சிறப்பிற்கு உயர்த்தி வைத்தவர்கள் அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.ஆவார்கள். இக்கல்லூரியின்  பொற்காலமான 1945 முதல் 1955 வரை  நிகரற்ற தலைவராய் விளங்கி இஸ்லாமிய கல்வித் துறையிலும், மார்க்கத்  துறையிலும் அப்பெருந்தொகை  ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நாம் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் அப்பெருமகனார் இக்கல்விக் கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பிற்காகவும்  பாடுபட்டார்கள் என்று  சொல்வது மிகையாகாது. எண்ணத்தாலும் எழில்மிகு சேவையாலும், பண்பாலும் பார்போற்றும் செய்கையாலும்    மிஸ்பாஹுல்,ஹுதா என்னும் கல்விச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்து நாடெங்கும்  ஞானஒளி பரப்பிய அப்பெருந்தலைவரின் வாழ்க்கை படித்துணரத்தக்கது. அவர்களது செயலும், செந்நெறியும்  எல்லோருக்கும்  வழி காட்டக் கூடியன. தலைவனுக்கேற்ற பெருந்தன்மையும் ஒரு சமூகத்தை நடத்திச் செல்லத் தக்க நிர்வாகத் திறமையும், தீயவைகளை துணிந்தெதிர்க்கும்  தறுகண்மையும் அல்லவை துடைத்து நல்லவை செய்யும்   நற்பண்பும், வரையாது வழங்கும் அக் வள்ளற்றன்மையும், ஒருங்கே பெற்றவர்களாதலால், இன்றைய தலைமுறையினருக்கு  அவர்களது வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகும். அவர்களது வாழ்க்கை வரலாற்றினைக் காண்போம். இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்.

தேடும் படலம் தொடர்கின்றது


குழந்தைப் பருவத்தில் விளையாட்டுப் பொருளைத் தேடினேன்
பள்ளிப் பருவத்தில் நண்பர்களைத் தேடினேன்
கல்லூரிப் பருவத்தில் அறிவைத் தேடினேன்
படித்தபின் வேலையைத் தேடினேன்
மணமுடிக்க பெண்ணைத் தேடினேன்
வளமாக வாழ பணத்தை தேடினேன்
தேடும் படலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தேடியதில் சில கிடைத்து தொடர்ந்து வந்தது
தேடியதில் கிடைத்த சில தொல்லையை கொடுத்தது
தேடாததும் சில சேர்த்துக் கொண்டது
தேடுவதில் சில மகிழ்வைத் தந்தது
தேடுவதில் சில வருத்தத்தை தந்தது
தேடவேண்டிய சிலவற்றை தேடாமல் விட்டேன்
தேடவேண்டிய நேரத்தில் தேடாமல்
தேடியது கிடைக்காமல் போனது
தேடுவதே வாழ்க்கையின் பகுதியானது
தேட வேண்டியதை தேடாத நேரமில்லை