Thursday, 27 February 2014

செயலின் நிலையறிந்து வினையறிந்து விலகி நில்

  'என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!'

தவறு செய்தவன்
தப்பிக்க செய்வான்
தவறாக பேசுவான்

சொல்வான்
சொல்லத்தான் செய்வான்
நினைத்தான்
நடத்தி விட்டான்

காதலில் காமமுண்டு
காமத்தில் காதலில்லை

கடிமணம் முடியாமல்
கட்டிலில் படுத்தால்
படுத்தவன் பறந்து போவான்
பேதையை புறம் தள்ளிவிட்டு
பேதையின் மனம் பித்தம் பிடிக்க

பாவையின் விழிகளில் நீர் வழியும்
பாதிக்கப் பட்டவள் பேதளித்து நிற்பாள்
பாவைக்கு வேண்டும் யதார்த்தம்    

-------------------
சிந்தித்து செயல்படுதல் சிறப்பு
உணர்ச்சி சிந்திக்க வைக்காது

செயலின் நிலையறிந்து  
வினையறிந்து செயல்படின் 
வினையறிந்து விலகி நிற்பின்
முடிவில் வேதனையில்லை    

No comments:

Post a Comment