Thursday 21 March 2013

குழந்தையை தாலாட்டு பாடி உறங்க வைக்க.


இசையில் மயங்காதவர் யார் ! நல்ல இசையோடு சிறந்த கருத்துகளை அந்த இசையில் சேர்த்து பாடும்போது மனதுக்கு மகிழ்வைத் தருவது இயல்பு.
குழந்தையை தாலாட்டு பாடி உறங்க வைப்பது நமது பண்பாடு,
தாய்மார்கள் பாடும் தாலாட்டில் மயங்கி தூங்காத குழந்தை இல்லை என்றே சொல்லலாம்.
ஆராரோ ஆரரிரோ என்று தாய் பாடல் பாடி கேட்காத குழந்தை இல்லை.

இப்பொழுது குழந்தைக்கு அருமையான கருத்துகளோடு தாலாட்டு பாடல்களை தாய் பாடுவது இயல்பாகிவிட்டது. முஸ்லிம்கள் வீட்டில் இறைவனது பெயரைச் சொல்லி குழந்தையை தாலாட்ட செய்கின்றனர். அத்துடன் சில நல்ல கருத்துகள் அமைந்த பாடல்களையும் தாலாட்டில் சேர்த்துக் கொள்கின்றனர். அதற்காகவே நல்ல தாலாட்டு பாடல்களை தாய்மார்கள் மனனம் செய்துக் கொள்கின்றனர்.
  தால் + ஆட்டு= தாலாட்டு பாடலாக அமைந்தது
தால் என்ற சொல் தால் என்னும் இயல்பை விளக்க அமைந்த வார்த்தையாகும் .ஆட்டு என்பது ஆட வைப்பது . தொட்டியில் குழந்தையை இட்டு பாட்டு பாடி அக்குழந்தையை உறங்கும்படி உரைக்கும் உறவுப்பாடல் தாலாட்டு பாடல்
இப்பொழுது இந்த காணொளியில் ஒரு அருமையான தாலாட்டு பாடலை கேளுங்கள்

தாலாட்டு... பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.




No comments:

Post a Comment