Sunday 17 November 2013

அறியாமையின் நிலை மோசமான நிலை

அறியாமையின் நிலை மோசமான நிலை
இறைவனை அறியும் நிலை உயர்வான நிலை
இறைவனின் ஒளி ஆன்மாவின் அறிதல் நிலை
ஆன்மாவின் ஒளி வழி ஞானத்தை பெறுதல் நிலை

இறைவனின் அருள் இருளைப் போக்கி ஒளியை தருகிறது
இறைவனை அறிதல் ஆன்மீக ஞானம் பெற வைக்கிறது
ஆன்மீக ஞானம் அறியாமையும் மூடநம்பிக்கையும் .போக்குகின்றது
பயத்தை அகற்றி நேர்வழியில் நடை போட வைக்கின்றது


மறைந்து செயல்படும் பொய்யான வாழ்க்கையை போக்குகின்றது
இடையூறுகளை நினைத்து செயலில் தொய்வு விழ வைக்காமல் தொடர்கின்றது
நேர்மையான செயலில் ஈடுபடும் உறுதியான கொள்கையை உருவாக்குகின்றது
ஆன்மாவின் கோட்டை உறுதிப்பாட்டோடு நிலைத்து நிற்கின்றது
---------------------
"அவனுக்கு நிகராக எவரும் இல்லை."

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை."
-----------------------------------

அவன் அருள் பெற்றோர் இருலோக உயர்வு பெற்றோர்

1 comment: